7th Tamil Unit 8 Questions
41) திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் முழுவதும் கடமையாகக் கொண்டவர் யார்?
A) பரிமேலகழகர்
B) குன்றக்குடி அடிகளார்
C) கவிமணி
D) ஜி.யு.போப்
விளக்கம்: மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணி தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். இவர் திருக்குறள் நெறியைப் பரப்புதவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டார்.
42) குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ் எது?
A) நாயன்மார் அடிச்சுவட்டில்
B) அறிக அறிவியல்
C) குறட்செல்வம்
D) ஆலயங்கள் சமுதாய மையங்கள்
விளக்கம்: குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் 1. அருளோசை 2. அறிக அறிவியல்
43) செல்வத்தின் பயன்_______வாழ்வு
A) ஆடம்பர
B) நீண்ட
C) ஒப்புரவு
D) நோயற்ற
விளக்கம்: செல்வத்தின் பயன் என்பது மற்றவருக்குக் கொடுத்து உதவி மகிழும் ஒப்புரவு வாழ்வாகும்.
44) பொருத்துக (எதிர்ச்சொற்களை பொருத்துக).
அ. எளிது – 1. புரவலர்
ஆ. ஈதல் – 2. அரிது
இ. அந்நியர் – 3. ஏற்றல்
ஈ. இரவலர் – 4. உறவினர்
A) 4, 3, 2, 1
B) 2, 4, 3, 1
C) 2, 3, 4, 1
D) 4, 3, 1, 2
விளக்கம்: எளிது X அரிது
ஈதல் X ஏற்றல்
அந்நியர் X உறவினர்
இரவலர் X புரவலர்
45) ‘எஜன்’ என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு என்ன பொருள்?
A) அறிவு
B) கடவுள்
C) குரு
D) தியானம் செய்
விளக்கம்: ‘ஜென்’ என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு ‘தியானம் செய்’ என்பது பொருள். புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள்
46) ஜென் துறவியர் பெரும்பர்லும் எந்நாட்டில் வசிப்பர்?
A) ஜப்பான்
B) சீனா
C) A மற்றும் B
D) இலங்கை
விளக்கம்: இவர்கள் பெரும்பாலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர்.
47) இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டதை எந்த நொடியில் உணர முடியும் என ஜென் குரு, உண்மை ஒளி என்ற கதையில் கூறுகிறார்?
A) சூரியன் உதிப்பு
B) தொலைவில் நிற்பது கழுதையா குதிரையா என அறியும் போது
C) தூரத்திலுள்ளது ஆலமரமா அல்லது அரசமரமா என்பதை உணரும்போது
D) ஒரு மனிதனைக் காணும்போது, இவர் என் உடன்பிறந்தவர் என்ற எண்ணம் வரும்போது
விளக்கம்: ஒரு மனிதரைக் காணும்போது இவர் என் உடன்பிறந்தவர் என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதுதான் உண்மையான ஒளி உங்களுக்கு ஏற்படுகிறது என்று ஜென் குரு கூறுகிறார்.
48) கூற்றுகளை ஆராய்க.
1. உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்ற இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி
2. உருவக அணியில் உவமிக்கப்படும் பொருள் பின்னும் உவகை முன்னுமாக அமையும்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: உருவக அணியில் உவமிக்கப்படும் பொருள் முன்னும், உவமை பின்னுமாக அமையும்.
49) கூற்றுகளை ஆராய்க.
1. தேன் போன்ற தமிழ் – உவமை
2. வெள்ளம் போன்ற இல்லம் – உருவகம்
A) 1 சரி
B) 2 சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: தேன் போன்ற தமிழ் – உவமை
தமித்தேன் – உருவகம்
வெள்ளம் போன்ற இல்லம் – உவமை
இன்ப வெள்ளம் – உருவகம்
கடல் போன்ற துன்பம் – உவமை
துன்பக்க கடல் – உருவகம்
50) “வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய…….” இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?
A) உவமை அணி
B) உருவக அணி
C) ஏகதேச உருவக அணி
D) வஞ்சப்புகழ்ச்சி அணி
விளக்கம்: இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும் கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.