7th Tamil Unit 7 Questions
41) யவனர்கள் எனப்படுவோர்கள் யார்?
A) கிரேக்க நாட்டவர்
B) ரோம் நாட்டவர்
C) அரேபிய நாட்டவர்
D) A மற்றும் B
விளக்கம்: கிரேக்கம், உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் கொற்கை முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.
42) “திங்கள் நாள்விழா மல்கு திருநெல்
வேலியுறை செல்வர் தாமே” என்ற வரிகளைப் பாடியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) திருஞானசம்பந்தர்
D) மாணிக்க வாசகர்
விளக்கம்: பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நெல்லை மாநகரின் அமைப்பு சிறப்பானது. நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி 4 பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்துள்ளன. அவற்றைச் சுற்றித் தேரோடும் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. இங்குத் திங்கள்தோறும் திருவிழா நடைபெறும் என்பதை மேற்கண்ட தேவாரப் பாடலில் சம்பந்தர் கூறியுள்ளார்.
43) அரசனால் தண்டிக்கப்பட்டவர்கள் சிறை வைக்கப்பட்டதாகத் திருநெல்வேலியில் கூறப்படும் இடம் எது?
A) கூழைக்கடைத் தெரு
B) காவற்புரைத் தெரு
C) அக்கசாலைத் தெரு
D) பேட்டைத் தெரு
விளக்கம்: அரசால் தண்டிகப்பட்டவர்கள் சிறை வைக்கப்படும் இடம் காவற்புரைத் தெரு ஆகும். திருநெல்வேலியில் இது போன்ற பல தெருக்கள் பழமைக்குச் சான்றாக உள்ளன.
44) பொருத்துக
அ. காவற்ப்புரைத் தெரு – 1. தானியக் கடைத்தெரு
ஆ. அக்கசாலைத் தெரு – 2. வணிகம்
இ. பேட்டை – 3. அணிகள் மற்றும் நாணயம்
ஈ. கூழைக்கடைத் தெரு – 4. சிறைச்சாலை
A) 1, 2, 3, 4
B) 2, 3, 4, 1
C) 3, 4, 1, 2
D) 4, 3, 2, 1
விளக்கம்: காவற்புரைத்தெரு – சிறைச்சாலை
அக்கசாலைத்தெரு – தானியக் களஞ்சியம்
பேட்டைத்தெரு – வணிகம் நடைபெற்ற இடம்
கூழைக்கடைத் தெரு – தானியக் கடைத்தெரு
45) ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தது?
A) தூத்துக்குடி
B) திருநெல்வேலி
C) புதுக்கோட்டை
D) கரூர்
விளக்கம்: திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ன. இவ்வூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.
46) இரட்டை நகரங்கள் எனப்படுபவை எவை?
A) திருநெல்வேலி, பாளையங்கோட்டை
B) திருநெல்வேலி, தூத்துக்குடி
C) திருநெல்வேலி, புதுக்கோட்டை
D) பாளையங்கோட்டை, தூத்துக்குடி
விளக்கம்: தாமிரபரணி ஆற்றில் மேற்குக் கரையில் திருநெல்வேலியும், கிழக்குக் கடற்கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவை ‘இரட்டை நகரங்கள்’ எனப்படுகின்றன.
47) தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எனப்படுவது எது?
A) பாளையங்கோட்டை
B) திருநெல்வேலி
C) ஆதிச்சநல்லூர்
D) தூத்துக்குடி
விளக்கம்: பாளையங்கோட்டையில் அதிகளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் இது “தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு” எனப்படுகிறது.
48) தவறானக் கூற்றைத் தேர்க.
A) பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறானை நெல்லை நகர மக்கள் வரவேற்ற இடம் பாண்டியாபுரம் எனப் பெயர் பெற்றது.
B) பாண்டிய மன்னனின் மனைவி மங்கையர்கரசியை மகளின் வரவேற்ற இடம் திருமங்கை நகர் எனப் பெயர் பெற்றது.
C) நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய ஆரியநாதரின் வழித் தோன்றல் வீரராகவர். இவரது பெயரில் அமைந்து ஊர் வீரராகவபுரம்.
D) வீரராகவரின் துணைவியார் பெயரில் அமைந்த ஊர் திருமங்கை நகர் விளக்கம்: வீரராகவரின் துணைவியார் பெயரில் அமைந்த ஊர் மீனாட்சிபுரம். துணைவியார் பெயர் மீனாட்சி அம்மையார்
49) குலசேகரப் பட்டினம் எங்கு உள்ளது?
A) திருநெல்வேலி
B) தூத்துக்குடி
C) கரூர்
D) திருச்சி
விளக்கம்: சேரன்மாதேவி, கங்கைகொண்டான், திருமலையப்புரம், வீரபாண்டியப்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற ஊர்கள் பண்டைய வரலாற்றை நினைவூட்டும் வகையிலும், பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை,
செங்கோட்டை என்னும் பெயர்கள் திருநெல்வேலியில் கோட்டைகள் பல இருந்தமைக்கும் சான்றாக விளங்குகின்றன.
50) அகத்தியர் வாழ்ந்த மலை எது?
A) குற்றால மலை
B) திரகூட மலை
C) பொதிகை மலை
D) ஆனை மலை
விளக்கம்: அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார். சங்கப் புலவரான மாறோகத்தது நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர்.