7th Tamil Unit 7 Questions
31) திருநெல்வேலியின் சிறப்புமிக்க மலை எது?
A) குற்றாலமலை
B) திரிகூடமலை
C) பொதிகைமலை
D) இமயமலை
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டம் மலை வளம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியின் சிறப்புமிக்க மலையாகிய பொதிகை மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டுள்ளது.
32) திருகூடமலை என வழங்கப்படும் மலை எது?
A) குற்றாலமலை
B) ஆனைமலை
C) பொதிகை மலை
D) விந்தியமலை
விளக்கம்: திரிகூடமலை என வழங்கப்படும் மலை குற்றால மலை ஆகும். இது தற்போது திருநெல்வேலியில் புகழ் பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது.
33) “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கொஞ்சும்” என்ற பாடலைப் பாடியவர் யார்?
A) திரிகூட இராசப்பக்கவிராயர்
B) அப்பர்
C) சுந்தரனார்
D) சம்பந்தர்
விளக்கம்: இப்பாடலைப் பாடியவர் திரிகூட இராசப்பக் கவியராயர். தாம் எழுதிய குற்றாலக் குறவஞ்சி நூலில் குற்றால மலையின் புகழைப் பாடியுள்ளார்.
34) திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு எது?
A) பாலாறு
B) முத்தாறு
C) தாமிரபரணி ஆறு
D) காவிரி
விளக்கம்: திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி எனப் பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.
35) திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையாக பங்கு வகிப்பது எது?
A) நெசவுத் தொழில்
B) மீன்பிடித்தொழில்
C) உழவுத்தொழில்
D) வணிகம்
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையாக பங்கு வகிப்பது உழவுத்தொழில். தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு விவசாயம் நடைபெறுகிறது. இங்கு குளத்துப் பாசனமும், கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன.
36) நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகிப்பது எது?
A) நெல்லை
B) மதுரை
C) திருவாரூர்
D) கரூர்
விளக்கம்: நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகிப்பது நெல்லை எனப்படும் திருநெல்வேலி ஆகும். இதேபோல், கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
37) இராதாபுரம, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போனற் பகுதிகளில் பெருமளவில் பயிரிப்படும் பயிர் எது?
A) பருத்தி
B) நெய்
C) கரும்பு
D) வாழை
விளக்கம்: இராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற பகுதிகளில் வாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
38) தாமிரபரணி கடலோடு கலக்குமிடத்தில் எந்த துறைமுகம் இருந்தது?
A) முசிறி
B) பூம்புகார்
C) தொண்டி
D) கொற்கை
விளக்கம்: தாமிரபரணி கடலோடு கலக்குமிடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
39) “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை” என்று கூறும் நூல் எது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) நற்றிணை
D) குறுந்தொகை
விளக்கம்: “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்னுறை” என்று கொற்கையில் முத்துக்குளித்தலை நற்றிணை உரைக்கிறது. கொற்கையில் விளைந்த பாண்டிய நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.
40) “கொற்கையில் பெருந்துறை முத்து” என்று கூறும் நூல் எது?
A) நற்றிணை
B) அகநானூறு
C) புறநானூறு
D) குறுந்தொகை
விளக்கம்: “கொற்கையில் பெருந்துறை முத்து” என்று அகநானூறு உரைக்கிறது