7th Tamil Unit 7 Questions
11) மாரி + ஒன்று சேர்த்தெழுதுக
A) மாரியொன்று
B) மார் ஒன்று
C) மாரியின்று
D) மாரியன்று
விளக்கம்: மாரி + ஒன்று – மாரியொன்று எனப் புணரும்
12) உலகிலுள்ள பலவகையான தொழில்களில் முதன்மையானது எது?
A) நெசவுத்தொழில்
B) கட்டுமானத் தொழில்
C) உழவுத்தொழில்
D) சுரங்கத்தொழில்
விளக்கம்: உலகிலுள்ள பலவகையான தொழில்களில் முதன்மையானது பசி தீர்க்கும் தொழிலாகிய உழவுத் தொழிலாகும்.
13) “ஓடை எல்லாம் தாண்டிப்போயி-ஏலோலங்கிடி ஏலோலோ” எனத் தொடங்கும் பாடலின் தொகுப்பு ஆசிரியர் யார்?
A) மு.வ
B) கி.வா. ஜகந்நாதன்
C) நா. பிச்சமூர்த்தி
D) மௌலி
விளக்கம்: உழவுத்தொழில் குறித்த இந்த நாட்டுப்புறப் பாடலின் தொகுப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன் ஆவார்.
14) பொருத்துக.
அ. குழி – 1. முற்றிய நெல்
ஆ. சாண் – 2. நில அளவையாளர்
இ. சும்மாடு – 3. நீட்டல் அளவைப் பெயர்
ஈ. மணி – 4. பாரம் சுமப்பவர் தலையிலுள்ள துணிச் சுருள்
A) 4, 3, 2, 1
B) 2, 3, 4, 1
C) 2, 4, 3, 1
D) 4, 3, 1, 2
விளக்கம்: குழி – அளவைப் பெயர்
சாண் – நீட்டல் அளவைப் பெயர்
சும்மாடு – பாரம் சுமப்பவர் தலையிலுள்ள துணிச் சுருள்
மணி – முற்றிய நெல்
15) பொருத்துக.
அ. சீலை – 1. உதிர்தல்
ஆ. கழலுதல் – 2. வயலுக்கு நீர் வரும் வழி
இ. மடை – 3. புடவை
A) 3, 1, 2
B) 3, 2, 1
C) 2, 3, 1
D) 1, 3, 2
விளக்கம்: சீலை- புடவை
கழலுதல் – உதிர்தல்
மடை – வயலுக்கு நீர் வரும் வழி
16) நாற்றுப் பறிக்கும் போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பிலுள்ள எதை பிதடித்தனர் என்ற வயலும் வாழ்வும் நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது?
A) மீன்
B) பாம்பு
C) நண்டு
D) எலி
விளக்கம்: நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பிலுள்ள நண்டுகளை பிடித்தனர் என்று வயலும் வாழ்வும் நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது.
17) சரியான கூற்றைத் தேர்க
1. அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். பின் எஞ்சியருக்கும் நெல்மணிகளைப் பிரிக்க மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.
2. “மாடுகட்டிப் போராடித்தில் மாளாது
செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
தென்மதுரை” என்பது பழமொழி
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: “மாடுகட்டிப் போராடித்தில் மாளாது
செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
தென்மதுரை”என்பது நாட்டுப்புறப் பாடல் ஆகும்.
18) வாய்மொழி இலக்கியம் எனப்படுவது எது?
A) பழமொழி நானூறு
B) நாட்டுப்புறப் பாடல்
C) சங்க இலக்கியம்
D) A மற்றும் B
விளக்கம்: நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடல் எனப்படுகிறது. இதனை “வாய்மொழி இலக்கியம்” என்றும் வழங்குவர்.
19) “மலை அருவி” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A) நா. பிச்சமூர்த்தி
B) சி.சு. செல்லப்பா
C) கி.வா. ஜகந்நாதன்
D) முடியரசன்
விளக்கம்: பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை “மலை அருவி” என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
20) தேர்ந்தெடுத்து – பிரித்தெழுதுக
A) தேர் + எடுத்து
B) தேர்ந்து + தெடுத்து
C) தேர்ந்தது + அடுத்து
D) தேர்ந்து + எடுத்து
விளக்கம்: தேர்ந்தெடுத்து – தேர்ந்து + எடுத்து எனப் பிரியும்