General Tamil

7th Tamil Unit 5 Questions

71) சரியான கூற்றைத் தேர்க.

1. பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் ஆகும். இது எப்போதும் அடிச்சொல் அல்லது வேர்ச்சொல் ஆக அமையும்.

2. இது 6 வகைப்படும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1 மட்டும் தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொற்கள் பகாப்பதம் ஆகும். (எ.கா) மரம், கழனி, உண், எழுது. இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும். இது 4 வகைப்படும்.

72) பொருத்துக.

அ. பெயர்ப்பகாப்பதம் – 1. உறு, தவ, நனி, கழி

ஆ. வினைப்பகாப்பதம் – 2. நட, வா, படி, வாழ்

இ. இடைப்பகாப்பதம் – 3. நிலம், நீர், நெருப்பு, காற்று

ஈ. உரிப்பகாபதம் – 4. மன், கொல், தில், போல்

A) 3, 2, 1, 4

B) 2, 3, 4, 1

C) 2, 3, 1, 4

D) 3, 2, 4, 1

விளக்கம்: உரிப்பகாப்பதம் – உறு, தவ, நனி, கழி

வினைப்பகாப்பதம் – நட, வா, படி, வாழ்

பெயர்ப்பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று

இடைப்பகாபதம் – மன், கொல், தில், போல்

73) எழுதினான் என்பது_________

A) பெயர் பகுப்பதம்

B) வினைப்பகுபதம்

C) பெயர்ப்பகாபதம்

D) வினைப்பகாப்பாம்

விளக்கம்: எழுதுதால் என்னும் வினையைக் குறிக்கிறது. மேலும், பிரிக்க முடிந்த சொல்லாக அமைந்தால் எழுதினான் என்பது வினைப்பகுபதம் ஆகும்.

74) காலத்தைக் காட்டும் பகுபத உறுப்ப எது?

A) பகுதி

B) விகுதி

C) இடைநிலை

D) சந்தி

விளக்கம்: இடைநிலை என்பது பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவதாகும்.

75) பொருத்துக

அ. பெயர் பகுபதம் – 1. வாழ்ந்தான்

ஆ. வினை பகுபதம் – 2. மன்

இ. இடை பகுபதம் – 3. நனி

ஈ. உரி பகுபதம் – 4. பெரியார்

A) 4, 1, 2, 3

B) 4, 2, 1, 3

C) 4, 3, 2, 1

D) 4, 1, 3, 2

விளக்கம்: பெயர் பகுபதம் – பெரியார்

வினை பகுபதம் – வாழ்ந்தான்

இடை பகுபதம் – மன்

உரி பகுபதம் – நனி

76) இடம் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இடம் 3 வகைப்படும். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை

77) பொருத்துக

அ. தன்மை – 1. அலை

ஆ. முன்னிலை – 2. நாம்

இ. படர்க்கை – 3. நீங்கள்

A) 3, 2, 1

B) 1, 2, 3

C) 2, 3, 1

D) 2, 1, 3

விளக்கம்: தன்மை – தன்னைக் குறிப்பது – நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்

முன்னிலை – முன்னால் இருப்பவரைக் குறிப்பது – நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்

படர்க்கை – தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது – அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இலை

78) பொருத்துக

அ. புல்லை மேய்வது – 1. தீ

ஆ. சுடுவது – 2. ஆ

இ. மணம் வீசுவது – 3. ஏ

ஈ. பறப்பது – 4. வீ

A) 2, 1, 3, 4

B) 2, 3, 4, 1

C) 3, 2, 4, 1

D) 2, 1, 4, 3

விளக்கம்: புல்லை மேய்வது – ஆ (பசு)

சுடுவது – தீ (நெருப்பு)

மணம் வீசுவது – வீ (மலர்)

ஈ. பறப்பது – ஏ (அம்பு)

79) பொருத்துக.

அ. கோடை விடுமுறை – 1. Degree

ஆ. குழந்தை தொழிலாளர் – 2. Child Labour

இ. பட்டம் – 3. Summer Vacation

ஈ. கல்வியறிவு – 4. Literacy

A) 2, 4, 3, 1

B) 2, 3, 4, 1

C) 3, 2, 4, 1

D) 3, 2, 1, 4

விளக்கம்: கோடை விடுமுறை – Summer Vacation

குழந்தைத் தொழிலாளர் – Child Labour

பட்டம் – Degree

கல்வியறிவு – Literacy

80) பொருத்தமற்றதைத் தேர்க

A) நீதி – Moral

B) சீருடை – Uniform

C) வழிகாட்டுதல் – Way

D) ஒழுக்கம் – Discipline

விளக்கம்: வழி – Way

வழிகாட்டுதல் – Guidance

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin