7th Tamil Unit 5 Questions
61) “உழவன்” என்பது என்ன வகை பெயர்பகுபதம்?
A) பண்பு
B) இடம்
C) காலம்
D) தொழில்
விளக்கம்: உழவன் என்பதை உழவு + அன் எனப் பிரிக்கலாம். இது ‘உழவு’ என்னும் தொழிலை அடிப்படையாகக் கொண்டது.
62) “உண்கின்றான்” என்பது எவ்வகை சொல்?
A) பகுபதம்
B) பெயர்ப்பகுபதம்
C) வினைப்பகுபதம்
D) பகாப்பதம்
விளக்கம்: உண்கின்றான் என்பதை உண் + கின்று + ஆன் எனப் பிரிக்கலாம். மேலும் இது உணவு உண்பதைப் பற்றிய வினையைப் பேசுவதால் இது வினைப்பகுபதம் ஆகும்.
63) பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
A) 4
B) 5
C) 6
D) 7
விளக்கம்: பகுபத உறுப்புகள் 6 வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.
64) எப்போதும் கட்டளையாகவே அமையும் பகுபத உறுப்பு எது?
A) பகுதி
B) விகுதி
C) சந்தி
D) சாரியை
விளக்கம்: பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும். இது கட்டளையாகவே அமையும்.
65) பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது எது?
A) சந்தி
B) இடைநிலை
C) சாரியை
D) விகாரம்
விளக்கம்: பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.
66) பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் அமையும் மெய்யெழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?
A) சந்தி
B) இடைநிலை
C) சாரியை
D) விகாரம்
விளக்கம்: பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.
67) பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
A) சந்தி
B) விகாரம்
C) சாரியை
D) பகுதி
விளக்கம்: பெரும்பாலும் இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.
68) பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்
A) சந்தி
B) விகாரம்
C) சாரியை
D) பகுதி
விளக்கம்: பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்
69) பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் அல்லது முற்று, எச்சம் ஆகியவற்றை காட்டுவது எது?
A) பகுதி
B) சந்தி
C) விகுதி
D) சாரியை
விளக்கம்: பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.
70) வந்தான்-இச்சொல்லில் பகுபதத்தின் சாரியை உறுப்பு எது எனக் காண்க?
A) வா
B) த்
C) அன்
D) வ
விளக்கம்: வந்தான் – வா(வ) + த்(ந்) + த் + அன் + ஆன்
வா – பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்
த் – சந்தி, இது ‘ந்’ எனத் திரிந்து இருப்பது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி