7th Tamil Unit 5 Questions
51) “வறுமை”-யைக் குறிக்கும் ஒரெழுத்து ஒருமொழி எது?
A) நீ
B) நே
C) நை
D) நோ
விளக்கம்: நீ – முன்னிலை ஒருமை
நே – அன்பு
நை – இழிவு
நோ – வறுமை
52) “மேகம்” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
A) பா
B) பூ
C) பே
D) பை
விளக்கம்: பா- பாடல்
பூ – மலர்
பே – மேகம்
பை – இளமை
53) “வான்” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
A) போ
B) மா
C) மீ
D) மூ
விளக்கம்: போ – செல்
மா – மாமரம்
மீ – வான்
மூ – மூப்பு
54) “அன்பு” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
A) மே
B) மை
C) மோ
D) யா
விளக்கம்: மே – அன்பு
மை – அஞ்சனம்
மோ – மோத்தல்
யா – அகலம்
55) “மலர்” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
A) வா
B) வீ
C) வை
D) வெள
விளக்கம்: வா – அழைத்தல்
வீ – மலர்
வை – புல்
வெள – கவர்
56) ‘து’ என்னும் ஓரெழுத்து ஒருமொழி உணர்த்தும் பொருள் என்ன?
A) உண்
B) நோய்
C) அம்பு
D) பசு
விளக்கம்: து – உண்
நொ – நோய்
ஏ – அம்பு
ஆ – பசு
57) பகுபதம் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்கள் பகுபதங்கள் ஆகும். இது பெயர் பகுபதம், வினைப்பகுபதம் என 2 வகைப்படும்.
(எ.கா) வேலன் – இதை வேல் + அன் எனப் பிரிக்க இயலும்.
58) பெயர்பகுபதத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும். இதனை பொருள், இடம், காலம், சினை, குணம்(அல்லது) பண்பு, தொழில் என 6 வகையாகப் பிரிக்கலாம்.
59) பொருத்துக.
அ. பொன்னன் – 1. இடம்
ஆ. நாடன் – 2. பொருள்
இ. கண்ணன் – 3. காலம்
ஈ. சித்திரையான் – 4. சினை
A) 2, 1, 4, 3
B) 2, 1, 3, 4
C) 1, 2, 3, 4
D) 1, 2, 4, 3
விளக்கம்: (பொன் + அன்) பொன்னன் – பொருள்
(நாடு + அன்) நாடன் – இடம்
(கண் + அன்) கண்ணன் – சினை
(சித்திரை + அன்) சித்திரையான் – காலம்
60) “இனியன்” என்பது என்ன வகை பெயர்பகுபதம்?
A) சினை
B) பொருள்
C) பண்பு
D) இடம்
விளக்கம்: இனியன் என்பதை இனிமை + அன் எனப் பிரிக்கலாம். இனிமை என்பது பண்பைக் குறிக்கும்.