7th Tamil Unit 5 Questions
41) குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியர் யார்?
A) சுப்பிரமணியம்
B) உ.வே.சா
C) பாரதி
D) சுப்ரபாரதிமணியன்
விளக்கம்: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியவர் சுப்ரபாரதிமணியன் ஆவார்.
42) சுப்ரபாரதிமணியன் நடத்தி வருகிற இதழ் எது?
A) பின்னல்
B) வேட்டை
C) புத்துமண்
D) கனவு
விளக்கம்: சுப்ரபாரதிமணியன் நடத்தி வரும் இதழ் “கனவு”. மற்றவை அவரது நூல்கள் (பின்னல், வேட்டை, புத்துமண், தண்ணீர் யுத்தம், இதை சொல்லும் கலை).
43) தமிழில் மொத்தம் எத்தனை ஓரெழுத்து ஒருமொழி உள்ளது?
A) 40
B) 42
C) 44
D) 46
விளக்கம்: தமிழில் மொத்தம் 42 ஓரெழுத்து ஒருமொழி உள்ளது. ஓர் எழுத்தே பொரும் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.
44) தமிழில் 42 ஓரெழுத்து ஒருமொழி உள்ளது எனக் கூறியவர் யார்?
A) சமணமுனிவர்
B) பவணந்தி முனிவர்
C) தொல்காப்பியர்
D) அகத்தியர்
விளக்கம்: “நன்னூல்” என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர், தமிழில் 42 ஓரெழுத்து ஒரு மொழி உள்ளன எனக் கூறுகிறார்.
45) தமிழில் எத்தனை ஓரெழுத்து ஒருமொழி சொற்கள் நெடில் எழுத்தாக அமைந்துள்ளது?
A) 40
B) 42
C) 38
D) 36
விளக்கம்: நொ, ஆகிய இரண்டு சொற்களைத் தவிர ஏனைய 40 சொற்களும் நெடில் எழுத்தாகவே அமைந்துள்ளது.
46) அம்பு” என்று பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி எது?
A) ஆ
B) ஏ
C) ஊ
D) ஏ
விளக்கம்: ஆ- பசு
ஈ – கொடு
ஊ – இறைச்சி
ஏ- அம்பு
47) “பூமி”-யைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
A) ஐ
B) ஓ
C) கூ
D) கா
விளக்கம்: ஐ – தலைவன்
ஓ – மதகுநீர் தாங்கும் பலகை
கா – சோலை
கூ – பூமி
48) “அரசன்” என்பதை குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
A) கை
B) கோ
C) சா
D) சீ
விளக்கம்: கை – ஒழுக்கம்
கோ – அரசன்
சா – இறந்துபோ
சீ – இகழ்ச்சி
49) “உயர்வு” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
A) சே
B) சோ
C) தா
D) தீ
விளக்கம்: சே – உயர்வு
சோ – மதில்
தா – கொடு
தீ – நெருப்பு
50) “கடவுள்-யைக் குறிக்கும் ஒரெழுத்து ஒருமொழி எது?
A) தூ
B) தே
C) தை
D) நா
விளக்கம்: தூ – தூய்மை
தே – தெய்வம்
தை – தைத்தல்
நா – நாவு