7th Tamil Unit 5 Questions
21) கல்வியைப் போல் ________ செல்வம் வேறில்லை
A) விலையில்லாத
B) கேடில்லாத
C) உயர்வில்லாத
D) தவறில்லாத
விளக்கம்: கல்வியைப் போல் கேடில்லாத செல்வம் வேறில்லை என்பதை “வைப்புழி கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை” என்ற வரிகள் மூலம் அறியலாம்.
22) “வாய்த்தீயின்” பிரித்தெழுதுக
A) வாய்த்து + ஈயின்
B) வாய் + தீயின்
C) வாய்த்து + தீயின்
D) வாய் + ஈயின்
விளக்கம்: வாய்த்தீயின் – வாய்த்து + ஈயின் எனப் பிரியும்
23) கேடில்லை-பிரித்தெழுதுக
A) கேடி + இல்லை
B) கே + இல்லை
C) கேள்வி + இல்லை
D) கேடு + இல்லை
விளக்கம்: கேடில்லை – கேடு + இல்லை எனப் பிரியும் .
24) எவன் + ஒருவன்-சேர்த்தெழுதுக.
A) எவன்ஒருவன்
B) எவனொருவன்
C) எவ்னொருவன்
D) ஏன்னொருவன்
விளக்கம்: எவன் + ஒருவன் – எவனொருவன் எனப் புணரும்
25) “வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
வேகாது வேந்த ராலும்______” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A) ஏலாதி
B) நாலடியார்
C) தனிப்பாடல் திரட்டு
D) திரிகடுகம்
விளக்கம்: “வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
வேகாது வேந்த ராலும்
கொள்ளத்தான் முடியது கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறைவு றாது
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
மிகஎளிது கல்வி என்னும்
உள்ளப்பொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்
பொருள்தேடி உலகின் றீரே” – தனிப்பாடல் திரட்டு
26) அழியாத செல்வம் எது?
A) பணம்
B) பொருள்
C) கல்வி
D) நகை
விளக்கம்: உலகில் பலவகையான செல்வங்கள் உள்ள. அவற்றுள் அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும். பிற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மை உடையது.
27) உலகிலுள்ள உயிரினங்களுள் தனித்தன்மை உடையது எது?
A) தாவரம்
B) விலங்கு
C) பூஞ்சை
D) மனிதன்
விளக்கம்: உலகிலுள்ள உயிரினங்களுள் தனித்தன்மை உடையது மனிதன் ஆகும். ஏனெனில் மனிதனுக்கு தான் எதிர்காலம் சொல்ல முடியது.
28) “கேடில் விழுச்செல்வம் _______ ஒருவற்கு”
மாடல்ல மற்ற யவை” – குறளை நிறைவு செய்க.
A) கல்வி
B) அன்பு
C) அறம்
D) ஒழுக்கம்
விளக்கம்: “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற யவை” என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது கல்வி, மட்டுமே அழியாச் செல்வம் மற்ற அனைத்து செல்வங்களும் அழிந்துவிடும் என்பது இதன் பொருள்.
29) எது ஓர் ஒளிவிளக்கு போன்றது?
A) அன்பு
B) அறம்
C) ஒழுக்கம்
D) கல்வி
விளக்கம்: கல்வி ஓர் ஒளிவிளக்கு. ஏனெனில், கல்வி, இருக்கும் இடத்தை ஒளிமயமாக ஆக்குவது ஆகும். கல்வி கற்ற ஒருவர். அதை பலருக்கும் கற்றுக் கொடுக்கும் போது கல்வி பலருக்கு ஒளி தருவதாக அமைகிறது.
30) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர் – இப்பாடல் வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?
A) நாலடியார்
B) நான்மணிக்கடிகை
C) ஏலாதி
D) திருக்குறள்
விளக்கம்: இது திருக்குறள் ஆகும். இதன் பொருள், கல்வி அறிவு பெறாதவர் விலங்கிற்கு ஒப்பானவர் என்று வள்ளுவர் உரைக்கின்றார்.