7th Tamil Unit 5 Questions
11) துயின்றிருந்தார் பிரித்தெழுதுக.
A) துயின்று + இருந்தார்
B) துயில் + இருந்தார்
C) துயின்றி + இருந்தார்
D) துயின் + இருந்தார்
விளக்கம்: துயின்றிருந்தார் – துயின்று + இருந்தார் எனப் பிரியும்
12) என்று + உரைக்கும் சேர்த்தெழுதுக.
A) என்றுஉரைக்கும்
B) என்றிரைக்கும்
C) என்றரைக்கும்
D) என்றுரைக்கும்
விளக்கம்: என்று + உரைக்கும் என்பது என்றுரைக்கும் எனப் புணரும்
13) சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் எது?
A) நற்றிணை
B) குறுந்தொகை
C) நாலடியார்
D) திரிகடுகம்
விளக்கம்: சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் நாலடியார். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
14) “வேளாண்மை வேதம்” என்று அழைக்கப்படும் நூல் எது?
A) திருக்குறள்
B) ஏலாதி
C) திரிகடுகம்
D) நாலடியார்
விளக்கம்: நாலடியார் நூலானது வேளாண்வேதம், குட்டித்திருக்குறள் எனவும் அழைக்கப்படும்
15) நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது?
A) 300
B) 400
C) 180
D) 120
விளக்கம்: நாலடியார் நானூறு வெண்பாக்களால் ஆனது. இதனை நாலடி நானூறு என்றும் அழைப்பர்.
16) நாலடியார் எத்தனை பகுப்புகளைக் கொண்டது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: நாலடியார் நூலானது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
17) நாலடியார் எந்த நூலுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது?
A) திருக்குறள்
B) ஏலாதி
C) திரிகடுகம்
D) நாண்மணிக்கடிகை
விளக்கம்: நாலடியார், திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்னும் தொடர் மூலம் அறியலாம்.
18) பொருத்துக
அ. வைப்புழி – 1. வாய்க்கும்படி கொடுத்தாலும்
ஆ. கோட்படா – 2. கல்வி
இ. வாய்த்து ஈயில் – 3. பொருள் சேமித்து வைக்குமிடம்
ஈ. விச்சை – 4. ஒருவரால் கொள்ளப்படாது
A) 4, 3, 2, 1
B) 4, 2, 3, 1
C) 3, 4, 1, 2
D) 3, 2, 1, 4
விளக்கம்: வைப்புழி – பொருள் சேமித்து வைக்குமிடம்
கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
வாய்த்து ஈயில் – வாய்க்கும்படி கொடுத்தாலும்
விச்சை – கல்வி
19) ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது?
A) அன்பு
B) பொருள்
C) புண்ணியம்
D) கல்வி
விளக்கம்: ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.
20) “வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?
A) திருக்குறள்
B) வேளாண்வேதம்
C) ஏலாதி
D) திரிகடுகம்
விளக்கம்: “வைப்பழி கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிகச் சிறப்பின் அரசர் செறின் வல்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற” – நாலடியார்