7th Tamil Unit 4 Questions
41) ‘கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஒய்’ என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) மணிமேகலை
B) சீவக சிந்தாமணி
C) சிலப்பதிகாரம்
D) குண்டலகேசி
விளக்கம்: “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்” என்னும் வரிகள் மணிமேகலை நூலில் இடம்பெற்றுள்ள. இது கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர்கள் என அழைக்கப்படுவர் என்பதைக் குறிப்பிடுகிறது.
42) நீர்மட்ட வைப்பிற்கு எவ்வகை மரங்களை கம்மியர் பயன்படுத்தினர்?
A) வேம்பு, இலுப்பை, புன்னை, தேக்கு
B) வேம்பு, இலுப்பை, தேக்கு, வெண்தேக்கு
C) புன்னை, நாவல், வேம்பு, இலுப்பை
D) புன்னை, நாவல், தேக்கு, இலுப்பை
விளக்கம்: நீர்மட்ட வைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் போன்ற மரங்களையும், பக்கங்களுக்குத் தேக்கு, வெண்தேக்கு, போன்ற மரங்களையும் பயன்படுத்தினர் கப்பல் கலைஞர்கள்
43) மரத்தின் வெட்டுவாயின் நிறத்தைக் கொண்டு அதன் தன்மையை அறியும் திறன் பெற்றவர்கள் யார்?
A) யவனர்கள்
B) எகிப்தியர்கள்
C) சீனர்கள்
D) தமிழர்கள்
விளக்கம்: மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை வெட்டுவாய் என்பர். அதன் நிறத்தைக் கொண்டு மரத்தின் தன்மையை அறிந்தவர்கள் தமிழர்கள்
44) இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
A) தச்சுமுழம்
B) பதுமை
C) கரிமுக அம்பி
D) கண்ணடை
விளக்கம்: இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் கண்ணடை என அழைக்கப்படும். தமிழர்கள், கப்பல் கட்டுமானத்திற்கு சுழி உள்ள மரங்களைப் பயன்படுத்தாமல் தவிர்த்தனர்.
45) கப்பல் கட்டும்போது, அதன் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை அளக்க எந்த நீட்டலளவையை பயன்படுத்தினர்?
A) கண்டை
B) தச்சுமுழம்
C) கரிமுக அம்பி
D) பரிமுக அம்பி
விளக்கம்: அக்காலத்தில் தமிழர்கள் கப்பலைக் கட்டும் போது அதன் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைச் சரியான முறையில் கணக்கிட்டுக் கப்பல்களை உருவாக்கினர். இவற்றை தச்சுமுழம் என்னும் நீட்டலளவையல் கணக்கிட்டனர்.
46) பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைப்பதும் உண்டு. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) கரிமுக அம்பி
B) பரிமுக அம்பி
C) A மற்றும் B
D) கண்ணடை
விளக்கம்: பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைப்பதும் உண்டு. இது கரிமுக அம்பி, பரிமுக அம்பி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
47) கம்மியர்கள், சுண்ணாம்பையும், சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இம்முறையைப் பாராட்டியர் யார்?
A) பார்த்தலோமியா டயஸ்
B) மார்க்கோபோலோ
C) வாஸ்கோடகாமா
D) யுவான் சுவாங்
விளக்கம்: மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்கும்போது அவற்றுக்கு இடையே தேங்காய் நார், பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர். சுண்ணாம்பு மற்றும் சணலைக் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல் பழுதடையாமல் நெடுங்காம் உழைத்தன. இம்முறையை இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோபோலோ என்னும் கடற்பயணி வியந்து பாராட்டியுள்ளார்.
48) கம்மியர்கள் பயன்படுத்திய மர ஆணிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) மரஆணி
B) கட்டுமர ஆணி
C) தொகுதி
D) பகுதி
விளக்கம்: இரும்பு ஆணிகள் துருப்பிடித்துவிடும் என்பதால் மரத்தினாலான ஆணிகளையே பயன்படுத்தினர். இந்த ஆணிகளைத் தொகுதி என்பர்.
49) ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பலை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய ஆங்கிலேயர் யார்?
A) ராபர்ட் கிளைவ்
B) மாரக்கோபோலோ
C) ஏ.ஓ. ஹீயூம்
D) வாக்கர்
விளக்கம்: ஆங்கிலேயரது கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுது பார்க்க வேண்டும். ஆனால், தமிழர்கள் கப்பல் 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டியதில்லை என ஆங்கில அறிஞர் வாக்கர் கூறினார்.
50) காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A) பாய்மரம்
B) தோணி
C) ஓடம்
D) படகு
விளக்கம்: காற்றின் உதவியால் செலுத்தப்பட்டும் கப்பல்கள் பாய்மரக் கப்பல்கள் எனப்பட்டன. பெரிய பாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம், பாணப்பாய்மரம், கோசுப் பாய்மரம் போன்ற பாய் மரங்களை தமிழர்கள் பயன்படுத்தினர்.