7th Tamil Unit 4 Questions
31) “கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
A) திருக்குறள்
B) பட்டினப்பாலை
C) அகநானூறு
D) பதிற்றுப்பத்து
விளக்கம்: திருவள்ளுவர் காலத்திலேயே பெரிய கப்பல்கள் இருந்தன என்பதை “கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து” என்ற குறள் விளக்குகிறது.
32) பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்களின் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை கூறும் நூல் எது?
A) திருக்குறள்
B) பட்டினப்பாலை
C) அகநானூறு
D) பதிற்றுப்பத்து
விளக்கம்: பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
33) “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” என்று குறிப்படும் நூல் எது?
A) பட்டினப்பாலை
B) பதிற்றுப்பத்து
C) அகநானூறு
D) சேந்தன் திவாகரம்
விளக்கம்: “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” என்று பெரிய கப்பலை அகநானூறு குறிப்படுகிறது.
34) “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” என்று உரைக்கும் நூல் எது?
A) பட்டினப்பாலை
B) பதிற்றுப்பத்து
C) அகநானூறு
D) சேந்தன் திவாகரம்
விளக்கம்: “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” என்று உரைக்கும் நூல் பதிற்றுப்பத்து
35) எந்த நிகண்டு நூலில் பலவகையான கப்பலின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
A) பதிற்றுப்பத்து
B) பரிபாடல்
C) திவாகரம்
D) சேந்தன் திவாகரம்
விளக்கம்: “சேந்தன் திவாகரம்” என்னும் நிகண்டு நூலில் பலலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்படப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பரந்துபட்ட அறிவு பெற்றிருந்தார்கள் என்பதை அறியலாம்.
36) எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்துவிட்டு அதை என்னவாகப் பயன்படுத்தினர்?
A) கட்டுமரங்கள்
B) தோணிகள்
C) ஓடம்
D) படகு
விளக்கம்: உட்பகுதி தோண்டபட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன. இதேபோல், மரங்கள் பலவற்றை இணைத்துக் கட்டி கட்டுமரங்களாகப் பயன்படுத்தினர்.
37) பொருத்தமற்றதைத் தேர்க
A) கலம்
B) வங்கம்
C) நாவாய்
D) மிதவை
விளக்கம்: சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்டுத்தப்படுபவை – தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம். கடற்பயணத்திறகுப் பயன்படுத்தப்படுபவை – கலம், வங்கம், நாவாய்
38) எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது?
A) ஐஸ்லாந்து
B) கிரீன்லாந்து
C) நியூசிலாந்து
D) இங்கிலாந்து
விளக்கம்: நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழர்கள் அயல் நாடுகளுக்குக் கப்பல்களில் சென்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்
39) பிற்காலச் சோழர்களில் எந்த அரசன் பெரிய கப்பற்பiடையைக் கொண்டு பல நாடுகளை வென்றார் என வரலாறு கூறுகிறது?
A) இராசராச சோழன்
B) இராசேந்திர சோழன்
C) கரிகாலச் சோழன்
D) A மற்றும் B
விளக்கம்: பிற்காலச் சோழர்களினல் இராசராச சோழனும், இராசேந்திரச் சோழனும் பெரிய கப்பற்படையைக் கொண்டு பல நாடுகளை வென்றனர் என வரலாறு கூறுகிறது.
40) கம்மியர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A) ஓவியக் கலைஞர்
B) இசைக் கலைஞர்
C) நடனக் கலைஞர்
D) கப்பல் கட்டும் கலைஞர்
விளக்கம்: தமிழர்கள் முற்காலத்திலேயே கப்பல் கட்டும் கலையை நன்கு அறிந்திருந்தனர். கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர்.