7th Tamil Unit 4 Questions
11) கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன எவை?
A) மீன்கள்
B) மரங்கலங்கள்
C) தூண்கள்
D) மாடங்கள்
விளக்கம்: ‘உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்’ என்னும் வரிகளில், கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன மரக்கலங்கள் என்பதை குறிப்பிடுகிறது.
12) எவை கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றன?
A) கடல்
B) கப்பல்
C) மீன்
D) A மற்றும் B
விளக்கம்: கடலும், கப்பலும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிப்பவை. அலைவீசும் கடலில் அசைந்தாடிச் செல்லும் கப்பலைக் காணக்கான உள்ளம் உவகையில் துள்ளும்.
13) “உலகுகிளர்ந்த தன்ன உருகெழு வங்கம்” எனத் தொடங்கும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
A) புறநானூறு
B) ஐங்குறுநூறு
C) அகநானூறு
D) கலித்தொகை
விளக்கம்: ‘உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்’ எனத் தொடங்கும் பாடல் அகநானூற்றின் 255-ம் பாடல் ஆகும்
14) அகநானூற்றின் 255-ஆவது பாடல் யாரால் பாடப்பட்டது?
A) நக்கீரர்
B) ஒளவையார்
C) முடத்தாமக்கண்ணியார்
D) மருதன் இளநாகனார்
விளக்கம்: ‘உலகுகிளர்ந்த தன்ன உருகெழு வங்கம்’ எனத் தொடங்கும், அகநானூற்றின் 255-வது பாடல் மருதன் இளநாகனாரால் பாடப்பட்டது. இவர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
15) “நெடுந்தொகை” என அழைக்கப்படும் நூல் எது?
A) ஐங்குநூறு
B) அகநானூறு
C) கலித்தொகை
D) பரிபாடல்
விளக்கம்: ‘நெடுந்தொகை’ என அழைக்கப்படுவது அகநானூறு. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலவரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது.
16) கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள எத்தனைப் பாடல்களை இளநாகனார் பாடினார்?
A) 25
B) 30
C) 35
D) 40
விளக்கம்: கலித்தொகையின் மருத்திணையிலுள்ள 35 பாடல்களையும் பாடியவர். இளநாகனார். இவர் மருதத்திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்
17) உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது எது?
A) கலம்
B) ஓடம்
C) படகு
D) நாவாய்
விளக்கம்: உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய். அது புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்.
18) பொருத்துக.
அ. உரு – 1. அழகு
ஆ. போழ – 2. காற்று
இ. வங்கூழ் – 3. நாவாய் ஓட்டுபவன்
ஈ. நீகான் – 4. பிளக்க
A) 1, 4, 3, 2
B) 1, 3, 4, 2
C) 1, 4, 2, 3
D) 1, 2, 4, 3
விளக்கம்: உரு – அழகு
போ – பிளக்க
வங்கூழ் – காற்று
நீகான் – நாவாய் ஓட்டுபவன்
19) பொருத்துக
அ. வங்கம் – 1. கனரக உயர்ந்த
ஆ. எல் – 2. கலங்கரை விளக்கம்
இ. கோடு உயர் – 3. கப்பல்
ஈ. மாட ஒள்ளெரி – 4. பகல்
A) 3, 4, 1, 2
B) 3.4, 2, 1
C) 4, 3, 1, 2
D) 4, 3, 2, 1
விளக்கம்: வங்கம் – கப்பல்
எல் – பகல்
கோடு உயர் – கரை உயர்ந்த
மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்
20) பொருத்தமற்றதைத் தேர்க.
A) நற்றிணை
B) குறுந்தொகை
C) பரிபாடல்
D) நெடுநல்வாடை
விளக்கம்: நெடுநல்வாடை என்பது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. மற்றவை எட்டுத்தொகை நூல்களாகும். எட்டுத்தொகை நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.