7th Tamil Unit 3 Questions
71) யார் விவேகானந்தரின் தூதவராக நேதாஜின் தளபதியாக விளங்கினார்?
A) திரு.வி.க
B) மு.வ
C) தேவர்
D) A மற்றும் C
விளக்கம்: தேவர், விவேகானந்தரின் தூதராகவும், நேதாஜியின் தளபதியாகவும், சத்தியசீலராகவும், முருகப்பக்தராகவும், ஆன்மீகப் புத்திரராகவும், தமிழ்பாடும் சித்தராகவும் விளங்கினார்.
72) முத்துராமலிங்க தேவர் எப்போது மறைந்தார்?
A) 1963 அக்டோபர் 30
B) 1964 அக்டோபர் 30
C) 1959 அக்டோபர் 30
D) 1953 அக்டோபர் 30
விளக்கம்: முத்துராமலிங்க தேவர் கி.பி(பொ.ஆ) 1963 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ஆம் நாளில் இவ்வுலகை விட்டு நீக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
73) தூத்துக்குடி நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டவர் யார்?
A) பாரதியார்
B) வ.உ.சி
C) பாரதிதாசன்
D) மோகனரங்கன்
விளக்கம்: வ.உ.சிதம்பரனார் தன்னலம் துறந்து, இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் இவரே.
74) பாண்டியனுடைய துறைமுகம் எது?
A) கொற்கை
B) தொண்டி
C) முசிறி
D) A மற்றும் B
விளக்கம்: கொற்கை துறைமுகமே பாண்டியனுடைய துறைமுகம் ஆகும். கொற்கை கடல் முத்துவளம் கொழித்தது. பழங்குடிகளாகிய பரதவர் மரக்கல வணிகத்தாலட வளம்பெற்றது. மாடமளிகையில் வாழ்ந்தார்கள்.
75) பாண்டியர்களின் கொடியில் என்ன உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்?
A) வில்
B) அம்பு
C) புலி
D) மீன்
விளக்கம்: சேரரின் கொடி – வில், அம்பு உருவம்
சோழரின் கொடி – புலி உருவம்
பாண்டியரின் கொடி – மீன் உருவம்
76) சுதேசக் கப்பல் கம்பெனியின் தலைவர் யார்?
A) பாரதியார்
B) வ.உ.சி
C) பான்டித்துறையார்
D) பாரதிதாசன்
விளக்கம்: பழங்காலப் பாண்டியரைப் போல மதுரை மாநகரிலே தமிழ்ச் சங்கம் அமைத்துப் புலவர் பாடும் புகழ் உடையவராய் விளங்கிய பாண்டித்துரையார், சுதேசக் கப்பல் கம்பெனியின் தலைவர் ஆவார்.
77) வெள்ளோட்டம் பார்ப்பதற்காக சுதேசி கப்பல் தூத்துக்குடியிலிருந்து எந்த துறையை நோக்கி புறப்பட்டது?
A) மும்பை
B) கொல்கத்தா
C) கொச்சின்
D) கொழும்பு
விளக்கம்: வெள்ளோட்டம் பார்ப்பதற்காக சுதேசி கப்பல் தூத்துக்குடியிலிருந்து கொழும்புத் துறையை நோக்கிப் புறப்பட்டது.
78) சுதேசிக் கம்பெனி வேலையினின்று வ.உ.சி விலகிச் கொண்டால் எவ்வளவு ரூபாய் கையடக்கம் தருவதாக ஆங்கிலேயர் மறைமுகமாகக் கூறினார்?
A) பத்தாயிரம்
B) ஐம்பதாயிரம்
C) அறுபதாயிரம்
D) நூறாயிரம்
விளக்கம்: சுதேசிக் கம்பெனி வேலையினின்று வ.உ.சிதம்பரனார் விலகிக் கொண்டால் நூறாயிரம் ரூபாய் கையடக்கம் தருவதாக ஆங்கிலேயர் மறைமுகமாக உரைத்தனர்.
79) சுதேசிக் கப்பல் கம்பெனியின் செயலாளர் யார்?
A) பாண்டித்துரையார்
B) திரு.வி.க
C) உ.வே.சா
D) வ.உ.சி
விளக்கம்: சதேசக் கப்பல் கம்பெனியின் தலைவர் – பாண்டித்துறையார்
சுதேசக் கப்பல் கம்பெனியின் செயலாளர் – வ.உ.சி
80) “வந்தே மாதரம்” என்ற சுதேச மந்திரம் எங்கு பிறந்தது?
A) மராட்டியம்
B) தமிழ்நாடு
C) குஜராத்
D) வங்காளம்
விளக்கம்: வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் வங்க நாட்டிலே பிறந்தது. காட்டுக்கனல் போல் எங்கு பரவிற்று.