7th Tamil Unit 3 Questions
61) மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் எப்போது நடத்த முத்துராமலிங்கர் திட்டமிட்டார்?
A) 1934
B) 1938
C) 1939
D) 1942
விளக்கம்: அக்காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல ஒரு சாராருக்குத் தடை இருந்தது. அத்தடையை எதிர்த்து 1939 ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 8-ம் நாள் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்த திட்டமிட்டார்.
62) முத்துராமலிங்க தேவர் தமக்கு சொந்தமாக எத்தனை சிற்றூர்களில் இருந்த விளைநிலங்களை உழுபவர்களுக்கே பங்கிட்டுக் கொடுத்தார்?
A) 30
B) 31
C) 32
D) 36
விளக்கம்: விவசாயிகளின் தோழராக விளங்கும் முத்துராமலிங்க தேவர், ஜமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகளின் துயர்துடைக்கப் பாடுபட்டார். உழுபவர்களுக்கே நிலம் என்றார்.
63) பாரதமாத கூட்டுறவுப் பண்டகசாலை பசும்பொன்னரால் எதற்காக நிறுவப்பட்டது?
1. விவசாய உற்பத்தியை அதிகரிக்க
2. விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச் செய்தால்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: கமுதியில் வியாபாரிகள் விவசாய உற்பத்திப் பொருள்களாக் குறைந்த விலைக்கு வாங்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பாரதமாத கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச் செய்தார் முத்துராமலிங்க தேவர்.
64) எந்தக் காலகட்த்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்?
A) 1934
B) 1936
C) 1938
D) 1942
விளக்கம்: 1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்.
65) மதுரையில் நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தேவர் யாருடன் இணைந்து போராட்டம் நடத்தினார்?
A) சிவராமன்
B) கிருட்டிணன்
C) ராஜாஜி
D) பா. ஜீவானந்தம்
விளக்கம்: மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938-ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார் தேவர். அதற்காக 7 ஆண்டுகள் சிறைச் சென்றார்.
66) முத்துராமலிங்கதேவர் பற்றிய தவறான கூற்றைத் தேர்க.
A) 1934-ல் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாடு நடத்தினார்
B) 1939-ல் ஜுன் 8-ல் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்த திட்டம்
C) 1938-ல் தொழிலாளர் சங்கங்களின் தலைவராக திகழந்தார்
D) பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டி போராட்டம் நடத்தினார்
விளக்கம்: 1939-ல் ஜுலை 8-ஆம் நாள் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப்போராட்டம் நடத்த தேவர் திட்டமிட்டார்.
67) 2-ம் உலகப்போரின் போது, மத்திய பிரதேசத்தின் எந்த சிறையில் அடைக்கப்பட்டார் தேவர்?
A) இந்தூர் இராணுவச்சிறை
B) தானே இராணுவச்சிறை
C) அலிப்பூர் இராணுவச்சிறை
D) தாமோ இராணுவச்சிறை
விளக்கம்: 2-ம் உலகப்போரின் போது தேவர் மத்தியப் பிரதேசத்திலுள்ள தாமே என்னும் நகரிலுள்ள இராணுவச்சிறையில் அடைக்கப்டும் போர் முடிந்த பிறகுதான் விடுதலைச் செய்யபட்டார்.
68) தன் வாழ்நாளின் 5-ல் 1 பங்கினைச் சிறையில் கழித்த தியாகி யார்?
A) காந்தி
B) திலகர்
C) கோகலே
D) தேவர்
விளக்கம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர், இம்மண்ணுலகில் வாழ்ந்த நாட்கள் – 20, 075 சிறையில் கழித்த நாட்கள் – 4000 இவர் சுதந்திரப் போரட்டத்தில் மிகத்தீரவிமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர் போன்ற சிறைகளில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
69) எந்த ஊரில் புத்த பிட்சுகளில் உயர்ந்தவர்களுக்குப் பெண்கள் தங்கள் கூந்தலை நிலையானதாக விரித்து வரவேற்பு அளிப்பது வழக்கம்?
A) சீனா
B) பீகார்
C) பர்மா
D) நேபாள்
விளக்கம்: தேவர் 1936, 1955 ஆகிய ஆண்டுகளில் 2 முறை பர்மா சென்றிருந்தார். அப்போது, பெண்கள் தங்கள் கூந்தலை நடைபாதையாக முன்வைத்தார். ஆனால், அது பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது எனக் கூறி தேவர் அவ்வரவேற்பை மறுத்துவிட்டார்.
70) தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் யார்?
A) பெரியார்
B) அண்ணா
C) மு.வ
D) தேவர்
விளக்கம்: பொதுத்தொண்டுக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதித் திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்வு வாழ்ந்தார் தேவர். அவர் தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னரா, நீதிவழுவா நேர்மையாளராக புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கொடையில் கர்ணணாக, பக்தியில் பரமஹம்சராக, இந்திய தாயின் நன் மகனாக விளங்கினார்.