7th Tamil Unit 3 Questions
51) பசும்பொன்னாருக்கு எப்போது இந்திய அரசால் தபால் தலை வெளியிடப்பட்டது?
A) 1995
B) 2006
C) 1999
D) 1994
விளக்கம்: பசும்பொன்னாரின் நினைவிடத்தில் அவர் தோன்றி மறைந்த அக்டோபர் 30-ஆம் நாள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழா எடுக்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அரசு சார்பாகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்டத்திலும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
52) “தென்னாட்டு சிங்கம்” என்று அழைக்கப்படுபவர் யார்?
A) அண்ணா
B) பெரியார்
C) நேதாஜி
D) முத்துராமலிங்கத்தேவர்
விளக்கம்: “தென்னாட்டு சிங்கம்” என்று அழைக்கப்படுபவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
53) முத்துராமலிங்கத்தேவரின் பேச்சு, சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று கூறியவர்?
A) அறிஞர் அண்ணா
B) பெரியார்
C) இராஜாஜி
D) வட இந்திய இதழ்கள்
விளக்கம்: “தென்னாட்டுச் சிங்கம்” என்று தேவரைச் சொல்லுகிறார்களே, அது சாலப்பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று அறிஞர் அண்ணா உரைத்தார்.
54) “முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது. உதடுகளிலிருந்து அல்ல” என்று உரைத்தவர் யார்?
A) அறிஞர் அண்ணா
B) பெரியார்
C) இராஜாஜி
D) வட இந்திய இதழ்கள்
விளக்கம்: “முத்துராமலிங்கரின் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது. உதடுகளிலிருந்து அல்ல. உள்ளதால் எதிலும் பற்றற்று உண்மையெனப்பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது அவர் வழக்கம்” என்று மூதறிஞர் இராஜாஜி பாராட்டியுள்ளார்.
55) “முத்துராமலிங்கர் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபாய் படேல் போன்றவர்களின் பேச்சைப் போல் இருந்தது” எனக் கூறியது யார்?
A) அறிஞர் அண்ணா
B) பெரியார்
C) இராஜாஜி
D) வட இந்திய இதழ்கள்
விளக்கம்: பாராளுமன்றத்தில் முத்துராமலிங்கர் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல்பால், வல்லபாய் பட்டேல் போனற் மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டின.
56) தொடர்ந்து 5 முறை தேர்தலில் வெற்றி பெற்றவர் யார்?
A) நேதாஜி
B) பெரியார்
C) இராஜாஜி
D) முத்துராமலிங்கத்தேவர்
விளக்கம்: மக்களின் பேராதரவு பெற்ற தலைவராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். இவர், தொடர்ந்து 5 முறை 1937, 1946, 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
57) எந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியின்றி வெற்றிபெற்றார்?
A) 1937
B) 1946
C) 1957
D) 1962
விளக்கம்: 1946-ல் நடைபெற்ற தேர்தலில், முத்துராமலிங்கத் தேவர் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
58) குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை முத்துராமலிங்கத்தேவர் எப்போது, எங்கு நடத்தினார்
A) 1934, கமுதி
B) 1934, இராமநாதபுரம்
C) 1932, கமுதி
D) 1932, இராமநாதபுரம்
விளக்கம்: ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது குற்றப்பரம்பரைச் சட்டம் ஆகும். பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதும் அச்சட்டத்தை நீக்க 1934, மே 12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்.
59) குற்றப்பரம்பரைச் சட்டம் எப்போது நீக்கப்பட்டது?
A) 1934
B) 1938
C) 1939
D) 1948
விளக்கம்: 1934, மே 12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை முத்துராமலிங்கத்தேவர் நடத்தியதை அடுத்து 1948-ல் அச்சட்டம் நீக்கப்பட்டது.
60) “இந்து புத்தசமய மேதை” என அழைக்கப்பட்டவர் யார்?
A) முத்துராமலிங்கத்தேவர்
B) இராஜாஜி
C) நேதாஜி
D) சுபாஷ் சந்திர போஸ்
விளக்கம்: முத்துராமலிங்கரின் வேறு பெயர்கள்: தேசியம் காத்த செம்மல், வித்யா பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்தசமயம் மேதை.