7th Tamil Unit 3 Questions
41) தேசியம் காத்த செம்மல் எனப்படுபவர் யார்?
A) காந்தி
B) பசும்பொன்னார்
C) திலகர்
D) சுபாஷ் சந்திர போஸ்
விளக்கம்: தேசியம் காத்த செம்மல் எனப் பாராட்டப்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
42) தேசியம் காத்த செம்மல் என முத்தராமலிங்கத் தேவரை பாராட்டியவர் யார்?
A) மு.வ
B) திரு.வி.க
C) ஆனந்தரங்கன்
D) பாரதியார்
விளக்கம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் விடுதலை வேட்கையை அறிந்த திரு.வி.கலியாணசுந்தனார் அவரை தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியுள்ளார்.
43) வங்கச் சிங்கம் என்று போற்றப்பட்டவர் யார்?
A) நேதாஜி
B) தாகூர்
C) தேவேந்திரநாத் தாகூர்
D) எவருமில்லை
விளக்கம்: வங்கச் சிங்கம் என்று போற்றப்பட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
44) பசும்பொன்னாரின் அரசியல் குரு யார்?
A) நேதாஜி
B) இராஜாஜி
C) திலகர்
D) காந்தி
விளக்கம்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-யை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.
45) நேதாஜி எப்போது மதுரைக்கு வந்தார்?
A) 1934
B) 1936
C) 1939
D) 1942
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்றுக் கி.பி(பொ.ஆ) 1939-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 6-ஆம்நாள் நேதாஜி மதுரைக்கு வருகைத் தந்தார்.
46) இந்திய தேசிய இராணும் யாரால் தொடங்கப்பட்டது?
A) சுபாஷ் சந்திரபோஷ்
B) பசும்பொன்னார்
C) திலகர்
D) A மற்றும் B
விளக்கம்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய இராணுவத்தை துவங்கினார். முத்துராமலிங்கத் தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் அதில் இணைந்தனர்.
47) ‘நேதாஜி’ என்னும் பெயரில் வார இதழை நடத்தியவர் யார்?
A) சுபாஷ் சந்திரபோஸ்
B) பசும்பொன்னார்
C) திலகர்
D) தாகூர்
விளக்கம்: விடுதலைக்குப்பின் முத்துராமலிங்கத்தேவர் “நேதாஜி” என்னும் பெயரில் வார இதழ் ஒன்றை நடத்தினார்.
48) பசும்பொன்னார் சாயல்குடி என்னும் ஊரில் எந்த தலைப்பில் 3 மணிநேரம் உரையாற்றினார்?
A) பெருந்தலைவர் காமராசர்
B) விடுதலை வேட்கை
C) விவேகானந்தரின் பெருமை
D) நேதாஜியின் பெருமை
விளக்கம்: தமது பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்த முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் சாயல்குடி என்னும் ஊரில் விவேகானந்தரின் பெருமை எனும் தலைப்பில் 3 மணிநேரம் உரையாற்றினார்.
49) பசும்பொன்னார் சாயல்குடியில் முதன் முதலில் உரையாற்றில் போது அவருடன் இருந்த பெருந்தலைவர் யார்?
A) விவேகானந்தர்
B) நேதாஜி
C) இராஜாஜி
D) காமராசர்
விளக்கம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் சாயல்குடியில் உரையாற்றும் போது அவருடன் பெருந்தலைவர் காமராசர் உடன் இருந்தார்.
50) “இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை முத்துராமலிங்கரின் பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்” என்று புகழ்ந்தவர் யார்?
A) விவேகானந்தர்
B) நேதாஜி
C) இராஜாஜி
D) காமராசர்
விளக்கம்: சாயல்குடியில் முதன் முதலில் பசும்பொன்னார் ஆற்றிய உரையை கேட்டு மேற்கண்டவாறு கூறி காமராசர் மகிழ்ந்தார்.