7th Tamil Unit 3 Questions
31) ‘சுத்தத் தியாகி’ எனப் பசும்பொன்னாரை பாராட்டியவர் யார்?
A) மு.வ
B) திரு.வி.க
C) நேதாஜி
D) பெரியார்
விளக்கம்: சுத்தத் தியாகி எனப் பசும்பொன்னாரை பாராட்டியவர் தந்தை பெரியார். ஏனெனில் உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சால் பெற்றவர் பசும்பொன்னார்.
32) முத்துராமலிங்கத்தேவர் எப்போது பிறந்தார்?
A) 1905
B) 1908
C) 1909
D) 1916
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவர் கி.பி(பொ.ஆ) 1908 ஆம்ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் பிறந்தார்
33) முத்துராமலிங்கத்தேவர் எந்த ஊரில் பிறந்தார்?
A) மதுரை
B) கமுதி
C) வேலூர்
D) இராமநாதபுரம்
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவர் கி.பி(பொ.ஆ) 1908-ஆம் அண்டு அக்டோபர் 30- ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில் செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தார்.
34) முத்துராமலிங்கத்தேவரின் பெற்றோர் யார்?
A) உக்கிர பாண்டியத்தேவர் – இந்திராணி அம்மையார்
B) வெங்கடாசலம் – இந்திராணி அம்மையார்
C) சுப்புரத்தினம் – கண்ணம்மாள்
D) உக்கிர பாண்டித்தேவர் – மங்கையர்கரசியார்
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவரின் பெற்றோர் உக்கிர பாண்டித்தேவர்- இந்திராணி அம்மையார் ஆவார். இவர் இளைமையிலேயே அன்னையை இழந்தவரால் இசுலாமியர் தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்.
35) முத்துராமலிங்கத்தேவர் தன் தொடக்கக் கல்வியை எங்கு பயின்றார்?
A) கமுதி
B) மதுரை
C) இராமநாதபுரம்
D) பசுமை
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவர் தன் தொடக்கக்கல்வியைக் கமுதியிலும், உயர்நிலைக் கல்வியை மதுரை பசுமலைப் பள்ளியிலும், இராமநாதபுரத்திலும் பயின்றார்.
36) முத்துராமலிங்கத்தேவர், இராமநாதபுரத்தில் படித்துக்கொண்டிருக்கும் அங்கு என்ன நோய் பரவியது?
A) H1N1
B) HIV
C) பிளேக்
D) அம்மை நோய்
விளக்கம்: முத்துராமலிங்கத் தேவர், இராமநாதபுரத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது அவ்வூரில் பிளேக், நோய் பரவியது. அவரது படிப்பும் பாதியில் நின்றது. பின் தாமாகவே நிறைய நூல்களைப் படித்துத் தமது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார்.
37) முத்துராமலிங்கத் தேவர் எந்த இருமொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்?
A) தமிழ், சமஸ்கிருதம்
B) தமிழ், இந்தி
C) தமிழ், தெலுங்கு
D) தமிழ், ஆங்கிலம்
விளக்கம்: பசும்பொன்னார் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.
38) சரியான கூற்றைத் தேர்க.
1. முத்துராமலிங்கத்தேவர் இளமையிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.
2. மேலும், அவர் சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்றவற்றில் ஆற்றல் உடையவர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவர், சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற பல துறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார். மேலும் இவர் இளமையிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.
39) தென்னாட்டில் “வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கு” ஆட்படுத்தப்படும் தலைவர் யார்?
A) பாரதி
B) சுப்பிரமணி பாரதியார்
C) அண்ணா
D) முத்துராமலிங்கத் தேவர்
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். இதனால் ஆங்கில அரசு, இவருக்கு வாய்ப்பூட்டு சட்ம் போட்டு மேடைகளில் அரசியல் பேச தடை விதித்தது.
40) வட இந்தியாவில் “வாய்ப்பூட்டு சட்டத்திற்கு” ஆட்படுத்தப்பட்ட தலைவர் யார்?
A) கோகலே
B) திலகர்
C) காந்தி
D) சுபாஷ் சந்திர போஸ்
விளக்கம்: சுதந்திர போராட்ட தீவிரவாதிகளின் தலைவரான பல கங்காதர திலகருக்கு ஆங்கில அரசு வாய்பப்பூட்டுச் சட்டம் போட்டது.