7th Tamil Unit 3 Questions
21) மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கநற்து வைத்த பாலைக்கூட எது குடிக்காது என “பாஞ்சை வளம்” பாடல் கூறுகிறது?
A) குயில்
B) மயில்
C) காகம்
D) நாய்
விளக்கம்: மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது. “கறந்து பாலையுங் காகங் முடியாது – எங்கள் கட்டபொம்மு துரை பேரு சொன்னால்”
22) “பாஞ்சை வளம்”எனும் வரலாற்றுக் கதைப்பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது?
A) வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்
B) வானமாமாலைக் கதைப்பாடல்
C) வீரபாண்டியார் கதைப்பாடல்
D) எதுவுமில்லை
விளக்கம்: கட்டபொம்மன் கதைப்பாடல் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன. எனினும் “பாஞ்சைவளம்” எனும் கதைப்பாடல் வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
23) “வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்” என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
A) கட்டபொம்மன்
B) பாரதியார்
C) பாரதிதாசன்
D) நா. வனமாமலை
விளக்கம்: “வீரபாண்டிய கட்டபொம்மு கதைப் பாடல்” என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டவர் நா. வானமலை
24) ஊர்வலத்தின் முன்னால் எது அசைந்து வந்தது?
A) தோரணம்
B) வானரம்
C) வாரணம்
D) சந்தனம்
விளக்கம்: ஊர்வலத்தின் முன்னால் தோரணம் அசைந்து வந்தது.
25) மெத்தை வீடு என்று குறிபிடப்படுவது எது?
A) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
B) படுக்கையறை உள்ள வீடு
C) மேட்டுப் பகுதியிலுள்ள வீடு
D) மாடி வீடு
விளக்கம்: “வீட்டிலுள்ள மணிமேடைகளாம் – மெத்தை வீடுகளா மதிலோடை களாம்” இதில் மெத்தை வீடு என்பது மாடி வீட்டைக் குறிக்கும்.
26) “பூட்டுக்கதவுகள்” பிரித்தெழுதுக
A) பூட்டு + கதவுகள்
B) பூட்டும் + கதவுகள்
C) பூட்டின் + கதவுகள்
D) பூட்டி + கதவுகள்
விளக்கம்: பூட்டுங்கதவுகள் = பூட்டு + கதவுகள் எனப் புணரும்
27) ‘தோரணமேடை’- பிரித்தெடுதுக
A) தோரணம் + மேடை
B) தோரணூ + மேடை
C) தோரணம் + ஒடை
D) தோரணம் = ஓடை
விளக்கம்: தோரணமேடை = தோரணம் + மேடை எனப் பிரியும்
28) வாசல் + அலங்காரம் சேர்த்தெழுதுக
A) வாசல்அலங்காரம்
B) வாசலங்காரம்
C) வாசலயங்காரம்
D) வாசலிங்காரம்
விளக்கம்: வாசல் + அலங்காரம்=வாசலலங்காரம் எனப்புணரும்
29) தேசியம் உடல், தெய்வீகம், உயிர் எனக் கருதி மக்கள் தொணடு செய்தவர் யார்?
A) பசும்பொன் உ. முத்துராமலிங்கர்
B) ஈ.வெ.ரா. பெரியார்
C) உக்கிர பாண்டித்தேவர்
D) சுபாஷ் சந்திரபோஸ்
விளக்கம்: தேசியம் – உடல், தெய்வீகம் – உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் பசும்பொன் உ. முத்துராமலிங்கதேவர். இவர் ‘வீரப்பேச்சால்’ எத்தனையோ தியாகிகளையும் விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர்.
30) “சுத்தத் தியாகி” எனப் போற்றப்பட்டவர் யார்?
A) பெரியார்
B) உக்கிரப் பாண்டித்தேவர்
C) பசும்பொன்
D) மு.வ
விளக்கம்: ‘சுத்தத் தியாகி’ எனப் போற்றப்பட்டவர் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்