7th Tamil Unit 3 Questions
11) “கல் + அளை” சேர்த்தெழுதுக
A) கல்லளை
B) கல்அளை
C) கலலளை
D) கல்லுளை
விளக்கம்: கல் + அளை=கல்லளை எனப் புணரும்
12) சமூகத்தைப் பற்றிய கதையைக் கூறும் பாடல் எது?
A) கதைப்பாடல்
B) சமூகக்கதைப்பாடல்
C) வரலாற்றுக்கதைப்பாடல்
D) புராணக்கதைப்பாடல்
விளக்கம்: தமிழ்நாட்டில் பல வகையான நாட்டுப்புற இலக்கியங்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் கதைப்பாடல் என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும். இதில் சமூகத்தைப் பற்றி பாடும் பாடல் சமூகப்பாடல் ஆகும்.
13) “பாஞ்சை வளம்” என்பது எவ்வகை கதைப்பாடல்
A) வரலாற்றுக்கதைப் பாடல்
B) புராணக் கதைப்பாடல்
C) சமூகக்கதைப்பாடல்
D) எதுவுமில்லை
விளக்கம்: “பாஞ்சை வளம்” என்பது வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைக் கூறுவதால் இது “வரலாற்றுக்கதைப் பாடல்” ஆகும்.
14) பொருத்துக
அ. சூரன் – 1. மிகுதி
ஆ. பொக்கிஷிம் – 2. செல்வம்
இ. சாஸ்தி – 3. பெரும்பரப்பு
ஈ. விஸ்தாரம் – 4. வீரன்
A) 4231
B) 4321
C) 1432
D) 4213
விளக்கம்: சூரன் – வீரன்
பொக்கிஷம் – செல்வம்
சாஸ்தி – மிகுதி
சாஸ்திரம் – பெரும்பரப்பு
15) பொருத்துக.
அ. வாரணம் – 1. குதிரை
ஆ. பரி – 2. பாக்கு
இ. சிங்காரம் – 3. யானை
ஈ. கழுகு – 4. அழகு
A) 4123
B) 4321
C) 3142
D) 3124
விளக்கம்: வாரணம் – யானை
பரி – குதிரை
சிங்காரம் – அழகு
கமுகு – பாக்கு
16) கட்டபொம்மன் ஆட்சி செய்த ஊர் எது?
A) சிவகங்கை
B) தேனி
C) மதுரை
D) பாஞ்சாலகுறிச்சி
விளக்கம்: குறையில்லாத வீரனாகிய கட்டபொம்மன் ஆட்சி செய்த ஊர்
பாஞ்சாலங்குறிச்சி
17) பொருத்துக
அ. யானை – 1. கூவும்
ஆ. குதிரை – 2. அகவும்
இ. மயில் – 3. கூடம்
ஈ. குயில் – 4. கொட்டில்
A) 3421
B) 4321
C) 3412
D) 4312
விளக்கம்: யானை – கூடம்
குதிரை – கொட்டில்
மயில் – அகவும்
குயில் – கூவும்
18) “பாஞ்சை வளம்” எனும் பாடலில், நாட்டின் வளத்தைக் கூறி விளையாடுவது எது?
A) மயில்
B) முயல்
C) குயில்
D) பசு
விளக்கம்: “சோலையில் மாங்குயில் கூப்பிடுமாம் – வளம் சொல்லி மயில் விளையாடுமாம்” என்ற வரிகள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடுவது மயில் என்கிறது.
19) “பஞ்சை வளம்” எனும் பாடலில், முயலானது தன்னைப் பிடிக்கவரும் எந்த விலங்கை விரட்டிவிடும்?
A) மயில்
B) புலி
C) குயில்
D) நாய்
விளக்கம்: “முயல் நாயை விரட்டிடுமாம் – நல்ல முனைப்புள்ள பாஞ்சால நாட்டினிலே” என்னும் வரிகள். வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும்.
20) எவை நீர்நிலையின் ஒரே துறையில் நின்று நீர்க் குடிக்கும் என்று “பாஞ்சை வளப்”பாடல் கூறுகிறது?
A) முயல், குயில்
B) முயல், நாய்
C) பசு, புலி
D) எதுவுமில்லை
விளக்கம்: “பசுவும் புலியும் ஒரு துறையில் – வந்து பால்குடிக்குந் தண்ணீர் தான் குடிக்கும்” அதாவது, பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.