7th Tamil Unit 3 Questions
111) ஒரு சொல்லில் இயல்பாக அமைந்து எழுத்திற்குப் பதிலாக எழுத்துக்கள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது எவ்வகைப் போலி?
A) முதற்போலி
B) இடைப்போலி
C) கடைப்போலி
D) முற்றுப்போலி
விளக்கம்: சரியான சொல் – முற்றுப்போலி
ஐந்து – அஞ்சு
112) சரியானதைத் தேர்க.
1. இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி, மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்
2. நாகரிகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டாம் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: இடக்கரடக்கல் – நாகரிகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுதல்
மங்கலம் – மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல்
குழுஉக்குறி – பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கும் மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுவது
113) பொருத்துக.
அ. பந்தர் – 1. முதற்போலி
ஆ. மைஞ்சு – 2. முற்றுப்போலி
இ. அஞ்சு – 3. இடைப்போலி
ஈ. அரையர் – 4. கடைப்போலி
A) 4, 1, 2, 3
B) 4, 1, 3, 2
C) 4, 3, 2, 1
D) 4, 3, 1, 2
விளக்கம்: பந்தர் – கடைப்போலி
மைஞ்சு – முதற்போலி
அஞ்சு – முற்றுப்போலி
அரையர் – இடைப்போலி
114) ஒரு தொடரில் எத்தனைப் பகுதிகள் இடம்பெறும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: ஒரு தொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என 3 பகுதிகள் உள்ளன.
115) ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எது?
A) எழுவாய்
B) பயனிலை
C) செயப்படுபொருள்
D) A மற்றும் B
விளக்கம்: பாரி பாடத்தைப் படித்தான்
இதில் பாரி – எழுவாய்
பாடம் – செயப்படுபொருள்
படித்தான் – பயனிலை
116) பொருத்துக
அ. யார்? எது? எவை? என்ற கேள்விக்கு பதிலளிப்பது – 1. செயப்படுபொருள்
ஆ. வினை, வினா, பெயர் ஆகிய ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடிவது – 2. எழுவாய்
இ. யாரை, எதை, எவற்றை, என்ற கேள்விக்குப் பதிலாக – 3. பயனிலை
A) 1, 2, 3
B) 2, 1, 3
C) 2, 3, 1
D) 3, 2, 1
விளக்கம்: ஒரு தொடரில்
யார்? எது? எவை? என்ற கேள்விக்கு பதிலளிப்பது – எழுவாய்
வினை, வினா, பெயர் ஆகிய ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடிவது – பயனிலை
யாரை, எதை, எவற்றை, என்ற கேள்விக்குப் பதிலாக – செயப்படுப்பொருள்
117) Sacrifice என்பதன் தமிழ்ச் சொல் என்ன?
A) துணிவு
B) தியாகம்
C) கதைப்பாடல்
D) அரசியல் மேதை
விளக்கம்: Carage – துணிவு
Sacrifice – தியாகம்
Ballad – கதைப்பாடல்
Polutial Genius – அரசியல் மேதை
118) Elocution தமிழ்ச் சொல் என்ன?
A) ஒற்றுமை
B) முழக்கம்
C) சமத்துவம்
D) பேச்சாற்றல்
விளக்கம்: பேச்சாற்றல் – Elocution
ஒற்றுமை – Unity
முழக்கம் – Slogan
சமத்துவம் – Equality
119) திருக்குறள் எத்தனைப் பால்களைக் கொண்டது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: திருக்குறள் அறத்துபால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பால் கொண்ட நூலாகும்.
120) தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
A) 4
B) 5
C) 6
D) 7
விளக்கம்: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.