General Tamil

7th Tamil Unit 3 Questions

101) தவறானதைத் தேர்க.

A) நிலம், மரம், வான், எழுது – இலக்கணமுடையது

B) தஞ்சை, நெல்லை, கோவை, குழந்தை, எந்தை, போது, கோணாடு – மரூஉ

C) இல்முன், கிளைநுனி – முன்பின்னாகத் தொக்க போலி

D) கால் கழுவி வந்தான் – இடக்கரடக்கல்

விளக்கம்: இல்முன், கிளைநுனி ஆகியவை இலக்கணமுடையது. அதை முன்றில், நுனிக்கிளை என மாற்றி எழுதினார் மட்டுமே எது முன்பின்னாகத் தொக்க போலி ஆகும்

102) தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும். இது 3 வகைப்படும். அவை இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி

103) பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது எது?

A) இடக்கரடக்கல்

B) மங்கலம்

C) மரூஉ

D) குழுஉக்குறி

விளக்கம்: பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல். ஆகும். (எ.கா) குழந்தை வெளியே போய்விட்டது, ஒன்றுக்கு போய் வந்தேன்.

104) தவறானதைத் தேர்க

A) ஓலை – திருமுகம்

B) கறுப்பு ஆடு – வெள்ளோடு

C) சுடுகாடு – நன்காடு

D) செத்தார் – இறந்தார்

விளக்கம்: மங்கலமில்லாத சொல்லுக்கு இணையாக வழுப்பெறும் மங்கலச் சொல் தரப்பட்டுள்ளது. எனினும் செத்தார் என்பதற்கு இணையாக மங்கலச் சொல் “துஞ்சினார்” அல்லது “இயற்கை எய்தினார்” என்பதாகும்.

105) ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திப்படுத்திக்கொள்ளும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

A) இடக்கரடக்கல்

B) மங்கலம்

C) குழுஉக்குறி

D) எதுவுமில்லை

விளக்கம்: பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்துகொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர். இது குழுஉக் குறி எனப்படும்.

(எ.கா) பொன்னைப் பறி எனல்

ஆடையைக் காரை எனல்

106) போலி எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: சொல்லின் முதலியோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும். போலி என்னும் சொல் “போல இருத்தல்” என்பதிலிருந்து தோன்றியது. இது முதற்போலி, இடைப்போலி , கடைப்போலி என 3 வகைப்படும்.

107) மாறுபட்டதைத் தேர்க.

A) பைசல்

B) மைஞ்சு

C) மையல்

D) பகல்

விளக்கம்: பசல் என்பது சரியான சொல். பைசல், மைஞ்சு, மையல், ஆகியவை முதற்போலி ஆகும்.

சரியான சொல் – முதற்போலி

1. பசல் – பைசல்

2. மஞ்சு – மைஞ்சு

3. மயல் – மையல்

108) மாறுபட்டதைத் தேர்க

A) அமைச்சு

B) இலைஞ்சி

C) அரையர்

D) நிலன்

விளக்கம்: அமைச்சு, இலைஞ்சி, அரையர் – இடைப்போலி

நிலன் – கடைப்போலி

சரியான சொல் – இடைப்போலி

அமச்சு – அமைச்சு

இலஞ்சி – இலைஞ்சி

அரயர் – அரையர்

109) தவறானதைத் தேர்க

A) அகம்-அகன்

B) நிலம்-நிலன்

C) முகம்-முகன்

D) பந்தல்-பைந்தல்

விளக்கம்:

சரியான சொல் – கடைப்போலி

அகம் – அகன்

நிலம் – நிலன்

முகம் – முகன்

பந்தல் – பந்தர்

சாம்பல் – சாம்பர்

110) அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக எது கடைப்போலியாக வரும்?

A) னகரம்

B) லகரம்

C) ரகரம்

D) வகரம்

விளக்கம்: அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரம் கடைப்போலியாக வரும். அதேபோல், லகர எழுத்திற்குப் பதிலாக ரகரம் வரும்.

(எ.கா) அகம் – அகன்

பந்தல் – பந்தர்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!