7th Tamil Unit 3 Questions
91) “பாயக் காண்பது சுதந்திரவெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்” எனப் பாடியவர் யார்?
A) வ.உ.சி
B) பாரதி
C) பாரதிதாசன்
D) திருப்பூர் குமரன்
விளக்கம்: பாயக்கண்டது சுதந்திரவெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் என வ.உ.சி உருக்கமாகப் பேசினார்.
92) சொல்லின் செல்வர் எனப் போற்றப்படுபவர் யார்?
A) இரா.பி.சேதுபிள்ளை
B) மௌலி
C) அகிலன்
D) ஜெயகாந்தன்
விளக்கம்: இரா.பி.சேதுபிள்ளை தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர். இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர்.
93) எதுகை, மோனை போன்ற நயங்களை உரைநடையில் புகுத்தியவர் யார்?
A) இரா.பி.சேதுபிள்ளை
B) மௌலி
C) அகிலன்
D) ஜெயகாந்தன்
விளக்கம்: செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இரா.பி.சேதுபிள்ளை ஆவார்.
94) இந்திய அரசின் சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் நூல் எது?
A) தமிழ் விருந்து
B) தமிழகம்-ஊரும் பேரும்
C) தமிழின்பம்
D) ஆற்றங்கரையினிலே
விளக்கம்: இரா.பி.சேதுப்பிள்ளை இயற்றிய தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் நூலாகும்.
95) வ.உ.சி. பேசுவதாக அமைந்த ‘கப்பலோட்டிய தமிழர்’ என்ற பாடப்பகுதி எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
A) தமிழ் விருந்து
B) தமிழின்பம்
C) கடற்கரையினிலே
D) ஆற்றங்கரையினிலே
விளக்கம்: வ.உ.சிதம்பரனார் பேசுவதாக அமைந்த கப்பலோட்டிய தமிழர் என்ற பாடப்பகுதி இரா.பி.சேதுப்பிள்ளை இயற்றிய ‘கடற்கரையினிலே’ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. தமிழின்பம், ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்-ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
96) நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னப் பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை__________என்பர்?
A) இடக்கரடக்கல்
B) குழுஉக்குறி
C) மங்கலம்
D) வழக்கு
விளக்கம்: எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு என்பர்.
97) வழக்கு எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: வழக்கு இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இரு வகைப்படும்.
98) இயல்பு வழக்கு என்பது எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இது இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என 3 வகைப்படும்.
99) தவறானதைத் தேர்க.
A) இலக்கண முறைப்படி முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது
B) இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையது போல ஏற்றுக் கொள்ளப்படுவது இலக்கணப்போலி
C) இலக்கணப்போலி முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்
D) இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் குழுஉக்குறி எனப்படும்
விளக்கம்: இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
100) மாறுபட்டதைத் தேர்க
A) முன்றில்
B) நுனிக்கிளை
C) புறநகர்
D) வாசல்
விளக்கம்: முன்றில், நுனிக்கிளை, புறநகர், கால்வாய், தசை, கடைக்கண் ஆகியவை இலக்கணப் போலி.
வாயில் என்பது இலக்கணப் போலி. வாசல் என்பது மரூஉ.