7th Tamil Unit 2 Questions
81) ஜாதவ்பயேங்-ன் காட்டை பற்றி எந்த இதழில் செய்தி வெளிவந்தது?
A) டைம்ஸ்
B) டெக்கான் கிரானிக்கல்
C) ஹிந்த்
D) தினகரன்
விளக்கம்: ஜாதவ்பயேங்-ன் காட்டைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா என்ற இதழில் செய்தி வெளியானது.
82) ஐ, கை, பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
A) 2
B) 1 ½
C) 1
D) ½
விளக்கம்: ஐ, கை, பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய 2 மாத்திரை அளவில் முழுமையாக ஒலித்தது.
83) சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது தனக்குரிய 2 மாத்திரை அளவிலிருந்து ஒலிக்கும் ஐகாரம் எது?
A) ஒளகாரக்குறுக்கம்
B) மகரக்குறுக்கம்
C) ஐகாரக்குறுக்கம்
D) எதுவுமில்லை
விளக்கம்: வையம், சமையல், பறவை என சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கும் எனப்படும்.
84) ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
A) 2
B) 1 ½
C) 1
D) ½
விளக்கம்: ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது 1 ½ மாத்திரை அளவில் ஒலிக்கும். இடையிலும், இறுதியிலும் வரும்போது 1 மாத்திரை அளவில் ஒலிக்கும்.
85) ஒளகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்
A) 2
B) 1½
C) 1
D) ½
விளக்கம்: ஒள, வெள என ஒளகார எழுத்து தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது. ஒளவையால், வெளவால் எனச் சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய 2 மாத்திரையிலிருந்து குறைந்து 1 ½ மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
86) ஒளகாரம் சொல்லின் இடையிலும், இறுதியிலும் வரும்போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
A) 2
B) 1 ½
C) 1
D) எதுவுமில்லை
விளக்கம்: ஒளகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.
87) “வலம் வந்தான்” என்பதில் மகர மெய்யெழுத்தானது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
A) 2
B) ½
C) ¼
D) 1
விளக்கம்: “வலம் வந்தான்” என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகர மெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்த குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
88) பொருந்தாதைத் தேர்க
A) அம்மா
B) வலம்வந்தான்
C) போலும்
D) மருளும்
விளக்கம்: அம்மா என்பதில் மகர மெய்யெழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது. மற்றவற்றில் ¼ மாத்திரையாக குறைந்து ஒலிக்கிறது.
89) அஃகு, எஃகு ஆகியவை எவ்வகை குறுக்கம்?
A) ஐகாரக்குறுக்கம்
B) ஒளகாரக்குறுக்கம்
C) குறுக்கமில்லை
D) ஆய்தக்குறுக்கம்
விளக்கம்: அஃகு, எஃகு ஆகிய சொற்களில் ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
90) முஃடீது, கஃறீது என்பவை எவ்வகை குறுக்கம்?
A) ஐகாரக்குறுக்கம்
B) ஒளகாரக்குறுக்கம்
C) மகரக்குறுக்கம்
D) ஆய்தக்குறுக்கம்
விளக்கம்: முள் + தீது = முஃடீது, கல் + தீது = கஃறீது. இச்சொற்களிலுள்ள ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்த கால் மாத்திரை அளவில் ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம்.