7th Tamil Unit 2 Questions
61) ”அனைத்துண்ணி” பிரித்தெழுதுக.
A) அனைத்து + துண்ணி
B) அனை + துண்ணி
C) அனைத் + துண்ணி
D) அனைத்து + உண்ணி
விளக்கம்: அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி. அனைத்(த + உ) + உண்ணி. இதில் “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” எனும் விதிப்படி ‘உ’ கெட்டு அனைத்த் + உண்ணி என்றானது. பின் “உடல்மேல்வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி த் + உ என மாறி அனைத்துண்ணி என்றானது.
62) நேரம் + ஆகி சேர்த்தெழுதுக.
A) நேரமாகி
B) நேராகி
C) நேரம்ஆகி
D) நேர்ஆகி
விளக்கம்: நேரம் + ஆகி = நேரமாகி. “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி ம் + ஆ = மா என மாறி நேரமாகி என்றானது.
63) வேட்டை + ஆடிய சேர்த்தெழுதுக.
A) வேட்டைஆடிய
B) வேட்டையாடிய
C) வேட்டாடிய
D) வேடாடிய
விளக்கம்: வேட்டை + ஆடிய = வேட்டையாடிய எனப் புணரும்
64) பல்வகை மரங்கள் நிறைந்த ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட காடு எங்கு அமைந்துள்ளது?
A) அந்தமான் தீவு
B) நிக்கோபார் தீவு
C) பிஜிலி தீவு
D) மணல் தீவு
விளக்கம்: ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வகை மரங்கள் நிறைந்த காடானது மணல் தீவில் அமைந்துள்ளது.
65) மணல் தீவில், தனி மனிதனால் உருவாக்கப்பட்ட காடானது எந்த ஆற்றின் நடுவே அமைந்துள்ளது?
A) ஜமுனா
B) கங்கா
C) பிரம்மபுத்திரா
D) தபதி
விளக்கம்: பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள மணல் தீவில் தனி மனிதனால் உருவாக்கப்பட்ட காடு அமைந்துள்ளது.
66) மணல் தீவில் எவ்வகை மரம் மட்டுமே வளரும்?
A) வாழை
B) கரும்பு
C) மூங்கில்
D) முந்திரி
விளக்கம்: மணல் தீவிகளில் மூங்கில் மட்டுமே வளரும் எனினும் பிரம்மபுத்திரா நதியின் நடுவே அமைந்த மணல் தீவில் பல்வகை மரங்கள் வளருகின்றன.
67) இந்தியாவின் வனமகன் என்ற அழைக்கப்படுபவர் யார்?
A) ஜாதவ் பயோங்
B) யூசப் அலி
C) யூசப் கான்
D) முகமது அலி
விளக்கம்: தனி மனிதராக ஜாதவ்பயோங் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். இதனால் இவர் “இந்தியாவின் வனமகன்” எனப்படுகிறார்.
68) “ஜாதவ்பயோங்” எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்?
A) உத்திரப்பிரதேசம்
B) பீகார்
C) அஸ்ஸாம்
D) மேகாலயா
விளக்கம்: இந்தியாவின் வனமகனான ஜாதவ்பயோங் அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
69) “ஜாதவ்பயேங்” தனி மனிதனாக ஒரு காட்டை உருவாக்க எத்தனை ஆண்டுகள் ஆனது?
A) 25
B) 30
C) 35
D) 40
விளக்கம்: ஜாதவ்பயோங் மணல் தீவில் தனி மனிதனாக ஒரு காட்டை உருவாக்க 30 ஆண்டுகள் ஆனது.
70) பிரம்மபுத்திரா ஆற்றில் எந்த ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளம், ஜாதவ்பயோங்-யை காடு உருவாக்க தூண்டியது?
A) 1969
B) 1979
C) 1974
D) 1989
விளக்கம்: 1979-ஆம் ஆண்டு பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், அடித்து வரப்பட்ட பாம்புகள், மரங்கள் இல்லாத தீவில் கரை ஒதுங்கி மடிந்தன. இதனைக் கண்ட ஜாதவ்பயேங் அங்கே ஒரு காட்டை உருவாக்க வேண்டுமென முடிவெடுத்தார்.