General Tamil

7th Tamil Unit 2 Questions

51) சரியான கூற்றைத் தேர்க

1. புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை.

2. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: புலிகள் தனித்து வாழும் இயல்புடையது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும் மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது.

52) கருவுற்ற புலி எத்தனை நாட்களில் குட்டியை ஈனும்?

A) 70

B) 80

C) 90

D) 100

விளக்கம்: கருவுற்ற புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும். அந்தக் குட்டிகளை 2 ஆண்டுகள் வரை வளர்த்து. வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லையை வகுத்துத் தனியாக அளிக்கும்.

53) ஒரு காட்டின் வனத்தைக் குறிக்கும் குறியீடாக விளங்கும் விலங்கு எது?

A) சிங்கம்

B) புலி

C) மான்

D) யானை

விளக்கம்: புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடாக விளங்குகிறது.

54) ”பண்புள்ள விலங்கு” எனப்படுவது எது?

A) சிங்கம்

B) கரடி

C) யானை

D) புலி

விளக்கம்: புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே தான் புலி பண்புள்ள விலங்கு எனப்படும்.

55) காட்டின் அரசனாக விளங்கும் விலங்கு எது?

A) சிங்கம்

B) புலி

C) கரடி

D) யானை

விளக்கம்: காட்டின் அரசனாக விளங்குவது சிங்கம், உலகில் ஆசியச் சிங்கம், ஆப்பிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கம் வாழ்கின்றன.

56) “கிர் சரணாலயம்” எங்கு அமைந்துள்ளது?

A) மகாராஷ்டிரா

B) மேற்கு வங்காளம்

C) மத்திய பிரதேசம்

D) குஜராத்

விளக்கம்: இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கிர் சராணலயத்தில் மட்டுமே ஆசிய சிங்கங்கள் உள்ளன.

57) இயற்கை விஞ்ஞானிகள் எந்த விலங்கை காட்டின் அரசன் என்கிறார்கள்?

A) கரடி

B) மான்

C) சிங்கம்

D) புலி

விளக்கம்: நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது. எனவே தான் இயற்கை விஞ்ஞானிகள் காட்டின் அரசன் புலி என்கிறார்கள்.

58) அழகில் சிறந்த மான் வகை எது?

A) புள்ளிமான்

B) சருகுமான்

C) மிளாமான்

D) வெளிமான்

விளக்கம்: எல்லா வகை மான்களிலும் நம் நாட்டுப் புள்ளி மான்களே அழகில் சிறந்தவை என்பர். சருகுமான், மிளாமான், வெளிமான், எனப் பல வகையான மான்கள் இந்தியாவில் உள்ளன.

59) ஆசிய யானைகளில் ஆண்-பெண் யானைகளை வேறுபடுத்துக.

A) காது

B) தந்தம்

C) கண்

D) கால்நகம்

விளக்கம்: ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் உண்டு. பெண் யானைக்கு இல்லை.

60) காட்டாறு பிரித்தெழுதுக.

A) காடு + ஆறு

B) காட்டு + ஆறு

C) காட் + ஆறு

D) காட் + டாறு

விளக்கம்: காட்டாறு = காடு + ஆறு. காடு + ஆறு – இதில் “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” எனும் விதப்படி கா(ட் + உ) + ஆறு என்பது காட் + ஆறு என்றானது.

பின் தன்னொற்றிரட்டல் எனும் விதிப்படி காட்(ட்) + ஆறு என்றானது. இறுதியாக “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி ட் + ஆ = டா என மாறி காட்டாறு என்றானது.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin