7th Tamil Unit 2 Questions
41) ஒரு யானைக்கு ஒரு நாளைக்கு எத்தனை கிலோ உணவு தேவைப்படுகிறது?
A) 300 கிலோ
B) 250 கிலோ
C) 350 கிலோ
D) 280 கிலோ
விளக்கம்: யானைகள் தங்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு ஆகியவற்றுக்காக இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உணவாக உட்கொள்ளும்.
42) ஒரு யானைக்கு ஒரு நாளுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படும்?
A) 63
B) 64
C) 65
D) 66
விளக்கம்: ஒரு யானைக்கு ஒரு நாளைக்கு 250 கிலோ உணவும் 65 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.
43) எது மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு?
A) புலி
B) சிங்கம்
C) கரடி
D) யானை
விளக்கம்: யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு. அது பாசம் நிறைந்த விலங்கும் கூட.
44) சரியான கூற்றைத் தேர்க.
1. யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்கும்
2. யானைக்கு கண்பார்வை குறைவு. ஆனால் கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: பொதுவாக யானைகள் மனிதர்களைத் தாக்குவதில்லை. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும்போது தான் மனிதர்களைத் தாக்குகிறது.
45) தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?
A) சத்தியமங்கலம்
B) கோவை
C) கோடியக்கரை
D) பிச்சாவரம்
விளக்கம்: தமிழ்நாட்டில் மேட்டுப்பாளையத்தில்(கோவை மாவட்டம்) வனக் கல்லூரி அமைந்துள்ளது.
46) தமிழ்நாட்டில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
A) சென்னை
B) தஞ்சாவூர்
C) திருநெல்வேலி
D) கோவை
விளக்கம்: தமிழ்நாட்டில், வேளாண்மைப் பல்லைக்கழகம் கோவையில் அமைந்துள்ளது. அங்கு இளநிலை வனவியல், முதுநிலை வனவியல் ஆகிய படிப்புகள் உள்ளன.
47) கரடி எவ்வகை உண்ணி?
A) தாவர உண்ணி
B) விலங்குண்ணி
C) அனைத்துண்ணி
D) எதுவுமில்லை
விளக்கம்: கரடி ஓர் அனைத்துண்ணி. அது பழம், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கறையான் போன்றவற்றை உண்ணும்.
48) கரடிக்கு மிகவும் பிடித்த உணவு எது?
A) பழங்கள்
B) தேன்
C) புற்றீசல்
D) கறையான்
விளக்கம்: கரடிக்கு மிகவும் பிடித்த உணவு கரையான். அது பழம், தேன் போன்றவற்றை உண்ண மரங்களில் ஏறும்.
49) நன்கு வளர்ந்த கரடி எத்தனை கிலோ வரை இருக்கும்?
A) 100
B) 140
C) 180
D) 160
விளக்கம்: நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ வரை இருக்கும். கரடியின் உடலைப் போர்த்தி இருக்கும் அடர்ந்த முடிகள் தேனீக்களிடமிருந்து அதனை காப்பாற்றிவிடும்.
50) எந்த விலங்கு இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மைக் கொண்டது?
A) சிங்கம்
B) கரடி
C) காட்டெருமை
D) புலி
விளக்கம்: புலிகள் இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மை கொண்டது. அது தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை.