7th Tamil Unit 2 Questions
31) மனிதனின் முதல் இருப்பிடம் எது?
A) பூஞ்சோலை
B) வீடு
C) குடிசை
D) காடு
விளக்கம்: மனிதனின் முதல் இருப்பிடம் காடுதான் வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி, கொடிகள், நன்னீர், நறுந்காற்று என அனைத்தும் நிரம்பியது காடாகும்.
32) எது பறவைகள், விலங்குள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது?
A) சரணாலயம்
B) விலங்குகள் காப்பகங்கள்
C) காடுகள்
D) நீர்நிலைகள்
விளக்கம்: பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாக காடுகள் திகழ்கிறது. காடுகளின் செழிப்புக்குக் காட்டுயிர்கள் உதவுகின்றன.
33) பின்வருவனவற்றுள் புலிகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
A) முண்டந்துறை
B) விராலி மலை
C) முதுமலை
D) வேடந்தாங்கல்
விளக்கம்: முண்டந்துறை – புலிகள் சராணலயம்
விராலி மலை – மயில்கள் சராணயலம்
முதுமலை – யானைகள் சரணாலயம்
வேடந்தாங்கல் – பறவைகள் சரணாலயம்
34) “முன் இசைவு” என்பதன் பொருள் என்ன?
A) முன்னோர் சொத்து
B) முன் பணம் பெறுதல்
C) முன் அனுமதி பெறுதல்
D) முன்னோர் வாக்கு
விளக்கம்: அனுமதி என்பதன் தமிழ் சொல் “இசைவு” ஆகும். எனவே முன் இசைவு என்பது முன் அனுமதியை குறிக்கும்
35) தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் எது?
A) முண்டந்துறை புலிகள் காப்பகம்
B) விராலி மலை மயில்கள் சரணாலயம்
C) சத்தியமங்கலம் வனப்பகுதி
D) வேடந்தாங்கல்
விளக்கம்: முண்டந்துறை புலிகள் காப்பகம், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பமாகும். இது திருநெல்வேலியில் அமைந்துள்ளது.
36) முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு என்ன?
A) 865 கி.மீ2
B) 840 கி.மீ2
C) 900 கி.மீ2
D) 895 கி.மீ2
விளக்கம்: முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு 895 கி.மீ2. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டு மான் போன்ற அரிய விலங்குகள் வாழ்கின்றன.
37) உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?
A) 3
B) 4
C) 2
D) 5
விளக்கம்: உலகில் 2 வகையான யானைகள் உள்ளன. அவை ஆசிய யானைகள் மற்றும் ஆப்பிரிக்க யானை
38) ஆசிய யானைகளில் எந்த யானைக்கு தந்தம் உண்டு?
A) ஆண் யானை
B) பெண் யானை
C) ஆண் மற்றும் பெண் யானை
D) எதற்குமில்லை
விளக்கம்: ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் உண்டு. பெண் யானைக்கு இல்லை.
39) ஆப்பிரிக்க யானைகளில் எந்த யானைக்கு தந்தம் உண்டு?
A) ஆண் யானை
B) பெண் யானை
C) ஆண் மற்றும் பெண் யானை
D) எதற்குமில்லை
விளக்கம்: ஆப்பரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் யானை இரண்டிற்குமே தந்தம் உண்டு. மேலும் ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரிதாக இருக்கும்.
40) யானைக் கூட்டத்திற்கு எந்த யானை தலைமைத் தாங்கும்?
A) ஆண் யானை
B) பெண் யானை
C) குட்டி யானை
D) A மற்றும் B
விளக்கம்: யானைகள் எப்போதும் கூட்டமாகவே வாழும். இந்தக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும்.