7th Tamil Unit 2 Questions
21) ராஜமார்த்தாண்டன் நடத்திய இதழ் என்ன?
A) நியூ இந்தியா
B) அசோக மித்திரன்
C) காமன் வீல்
D) கொல்லிப்பாவை
விளக்கம்: கொல்லிப்பாவை (சிற்றிதழ்) – ராஜமார்த்தாண்டன்
நியூ இந்தியா – அன்னிபெசண்ட் (தினசரி நாளிதழ்)
அசோக மித்திரன் – ஜெகதீச தியாகராஜன்
காமன் வீல் – அன்னி பெசண்ட் (வார இதழ்)
22) ராஜமார்த்தாண்டனின் எந்த நூல், தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது?
A) கொங்குதேர் வாழ்க்கை
B) அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
C) ராஜ மார்த்தாண்டன் கவிதைகள்
D) கொல்லிப்பாவை
விளக்கம்: ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினை ராஜமார்தாண்டம் பெற்றார்.
23) ராஜமார்த்தாண்டன், எந்தத் தலைப்பின் கீழ் சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்?
A) கொங்குதேர் வாழ்க்கை
B) அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
C) ராஜமார்மார்த்தாண்டன் கவிதைகள்
D) கொல்லிப்பாவை
விளக்கம்: ராஜமார்த்தாண்டன், கொங்குதேர் வாழ்க்கை எனும் தலைப்பின் கீழ் சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். இவர் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
24) குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே வானம் தானாக உருவானது என்ற புதுக்கவிதையின் ஆசிரியர் யார்?
A) நா.பிச்சமூர்த்தி
B) சி.சு.செல்லப்பா
C) சி.மணி
D) கலாப்பிரியா
விளக்கம்: இது கலாப்பிரியா எழுதிய புதுக்கவிதையாகும். மேலும்,
கொப்புகள் விலக்கி
கொத்துக் கொத்தாய்
கருவேலங்காய்
பறித்துப் போடும் மேய்ப்பனை
ஒரு நாளும்
சிராய்ப்பதில்லை
கருவமுட்கள் எனும் புதுக்கவிதையையும் எழுதியுள்ளார்.
25) இரவில் மெல்லிய நிலவொளியில் நாவற்பழ மரங்களை நோக்கி படையெடுத்து வருபவை எவை என ராஜமார்த்தாண்டன் கூறுகிறார்?
A) எலிகள்
B) பறவைகள்
C) வெளவால்
D) ஆந்தை
விளக்கம்: இரவில் மெல்லிய நிலவொளியில் நாவற்பழ மரங்களை நோக்கி வெளவால் கூட்டம் படையெடுத்து வரும் என ராஜமார்த்தாண்டன் கூறுகிறார்.
26) நாவற்பழத்திற்கு உவமையாக ராஜமார்த்தாண்டம் குறிப்பிடுவது எது?
A) பச்சை இலை
B) கோலிக்குண்டு
C) பச்சைக்காய்
D) செங்காய்
விளக்கம்: பளபளக்கும் பச்சை இலைகளுடே கருநீலக் கோலிக்குண்டுகளாய் நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும் என ராஜமார்தாண்டம் கூறுகிறார்
27) சுட்ட பழங்கள் என்ற அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதையில் குறிப்பிடுவது எது?
A) மண் ஒட்டிய பழங்கள்
B) சூடான பழங்கள்
C) வேகவைத்த பழங்கள்
D) சுடப்பட்ட பழங்கள்
விளக்கம்: காக்கை குருவி மைனா கிளிகள்
இன்னும் பெயரறியாப் பறவைகளுடன்
அணில்களும் காற்றில் உதிர்த்திடும்
சுட்ட பழங்கள் பொறுக்க
சிறுவர் கூட்டம் அலைமோதும் – ராஜமார்த்தாண்டன்
28) பிரித்தெழுதுக. பெயரறியா
A) பெயர + றியா
B) பெயர் + ரறியா
C) பெயர் + அறியா
D) பெயர + அறியா
விளக்கம்: பெயரறியா = பெயர + றியா. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி (ர் + அ) பெயர் + அறியா என்பது பெயரறியா என மாறியது.
29) பிரித்தெழுதுக. மனமில்லை
A) மண + மில்லை
B) மனமி + இல்லை
C) மனம் + மில்லை
D) மனம் + இல்லை
விளக்கம்: மனமில்லை = மனம் + இல்லை. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ம் + இ = மி என மாறி மனமில்லை என்றானது.
30) நேற்று + இரவு சேர்த்தெழுதுக
A) நேற்றுஇரவு
B) நேற்றிரவு
C) நேற்றுரவு
D) நேற்இரவு
விளக்கம்: நேற்று + இரவு = நேற்றிரவு. நேற்று + இரவு + நேற்(ற் + உ) + இரவு. “உயிரிவரின் உக்குரல் மெய்விட்டும்” எனும் விதிப்படி, நேற்ற் + இரவு என்றானது. பின் “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி, ற் + இ = றி என மாறி நேற்றிரவு என்றானது.