7th Tamil Unit 2 Questions
11) காடு என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட சுரதாவின் பாடல் அவரது எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
A) அமுதும் தேனும்
B) தேன்மழை
C) துறைமுகம்
D) எதுவுமில்லை.
விளக்கம்: காடு என்னும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பாடல் சுரதாவின் தேன்மழை என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்
12) பச்சை மயில் நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும் – என்ற பாடல் எப்பாடலைச் சார்ந்தது?
A) வெண்பா
B) ஆசிரியப்பா
C) கலிப்பா
D) கிளிக்கண்ணி
விளக்கம்: இது கிளிக்கண்ணி எனும் பாவகையைச் சேர்ந்தது. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை கிளிக்கண்ணி ஆகும்.
13) பின்வருவனவற்றுள் காட்டைக் குறிக்காத சொல் எது?
A) அடவி
B) கால்
C) மிளை
D) வானகம்
விளக்கம்: வானகம் என்பது வானத்தை அதாவது விண்வெளியைக் குறிக்கிறது. அடவி, கால், மிளை, கா, கான், கானகம், அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம் ஆகியவை காட்டைக் குறிக்கும் பிறச்சொற்களாகும்.
14) நெஞ்சில் உரமுமின்றி
நேர்மை திறமுமின்றி என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A) பாரதியார்
B) சுரதா
C) பாரதிதாசன்
D) மு.வ
விளக்கம்: நெஞ்சில் உரமுமின்றி
நேர்மை திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ – கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி
கூட்டத்தில் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ கிளியே
நாளில் மறப்பாரடீ
இப்பாடலை பாரதியார் பாடியுள்ளார். இது கிளிக்கண்ணிப் பாடலாகும்.
15) சரியான விடையைத் தேர்க.
வாழை, கன்றை ___________
A) ஈன்றது
B) வழங்கியது
C) கொடுத்தது
D) தந்தது
விளக்கம்: வாழை கன்றை ஈன்றது என்பதே சரி
16) காடடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக.
A) காடு + டெல்லாம்
B) காடு + எல்லாம்
C) கா + டெல்லாம்
D) கான் + எல்லாம்
விளக்கம்: காடு + எல்லாம் = காடெல்லாம். காடு + எல்லாம் = கா(ட் + உ) + எல்லாம். உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி காட் + எல்லாம் என மாறிற்று. பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி காட் + எல்லாம் என்பது காடெல்லாம் என மாறியது.
17) கிழங்கு + எடுக்கும் என்பதை சேர்த்து எழுதுக.
A) கிழங்குஎடுக்கும்
B) கிழங்கெடுக்கும்
C) கிழங்குடுக்கும்
D) கிழங்கொடுக்கும்
விளக்கம்: கிழங்கு + எடுக்கும் = கிழங்கெடுக்கும். கிழங்கு + எடுக்கும் = கிழங்(க் + உ) + எடுக்கும். உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் எனும் விதிப்படி, கிழங்க் + எடுக்கும் என்றானது. பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி கிழங்கெடுக்கும் என்றானது.
18) நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடமாக திகழ்வது?
A) காடு
B) மரம்
C) மலை
D) கடல்
விளக்கம்: நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள். அவை மனித வாழிவியலோடு பின்னிப் பிணைந்தவை.
19) அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதையில் ஆசிரியர் யார்?
A) சுரதா
B) இராமச்சந்திரக் கவிராயர்
C) ராஜமார்த்தாண்டன்
D) மௌலி
விளக்கம்: அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதையின் ஆசிரியர் ராஜமார்த்தாண்டன். கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம். ஆனால் அவற்றைப் பற்றிய நினைவுகள் மறையாது என்பதை விளக்கும் கவிதை இது.
20) பொருள் கூறுக – துஷ்டி கேட்டல்
A) வட்டி கேட்டல்
B) பணம் கேட்டல்
C) பரவசப்படுதல்
D) துக்கம் விசாரித்தல்
விளக்கம்: துஷ்டி கேட்டல் என்பதன் பொருள் துக்கம் விசாரித்தல் என்பதாகும்.