7th Tamil Unit 2 Questions
101) திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்?
A) 1500
B) 2500
C) 2000
D) 3000
விளக்கம்: திருவள்ளுவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். இவர் முதற்பாவலர், பொய்யில் புலவர், சொந்நாப்போதார் என்றும் அழைப்பர்.
102) ‘வாய்மை’ எனப்படுவது எது?
A) அன்பாகப் பேசுதல்
B) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
C) தமிழில் பேசுதல்
D) சத்தமாக பேசுதல்
விளக்கம்: “வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இலாத சொலல்” என்னும் குறளில் வாய்மை என்பது தீங்குதராத சொற்களைப் பேசுதல் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
103) யாருடைய செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்?
A) மன்னன்
B) பொறாமை இல்லாதவன்
C) பொறாமை உள்ளவன்
D) செல்வந்தன்
விளக்கம்: “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செல்வியான்
கேடும் நினைக்கப் படும்”
பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய
வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்.
104) பொருட்செல்வம்
A) பொரு + செல்வம்
B) பொருட் + செல்வம்
C) பொருள் + செல்வம்
D) பொரும் + செல்வம்
விளக்கம்: பொருட்செல்வம் = பொருள் + செல்வம் எனப் பிரியும்.
105) யாதெனின் பிரித்தெழுதுக.
A) யா + எனின்
B) யாது + தெனின்
C) ய + தெனின்
D) யாது + எனின்
விளக்கம்: யாதெனின் = யாது + எனின் எனப் பிரியும்.
106) தன் + நெஞ்சு சேர்த்தெழுதுக.
A) தன்நெஞ்சு
B) தன்னெஞ்சு
C) தானெஞ்சு
D) தனெஞ்சு
விளக்கம்: தன் + நெஞ்சு = தன்நெஞ்சு எனப் புணரும்.
107) தீது + உண்டோ-சேர்த்தெழுதுக.
A) தீதுண்டோ
B) தீதுஉண்டோ
C) தீதிண்டே
D) தீயுண்டோ
விளக்கம்: தீது + உண்டோ = தீதுண்டோ எனப் புணரும்.