General Tamil

7th Tamil Unit 2 Questions

91) “வேட்கை” என்னும் சொல்லில் ஒளகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு என்ன?

A) அரை

B) ஒன்று

C) ஒன்றரை

D) இரண்டு

விளக்கம்: ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது 1 மாத்திரை அளவில் ஒலிக்கும்.

92) மகரக்குறுக்கம் இடம்பெறாத சொல் எது?

A) போன்ம்

B) மருண்ம்

C) பழம் விழுந்தது

D) பணம் கிடைத்தது

விளக்கம்: மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வந்தால் மட்டுமே மகர மெய்யானது தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்.

93) சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறுவது எது?

A) ஐகாரக்குறுக்கம்

B) ஒளகாரக்குறுக்கம்

C) மகரக்குறுக்கம்

D) ஆய்தக்குறுக்கம்

விளக்கம்: ஓளகாரக்குறுக்கம் சொல்லின் முதலில் மட்டுமே வரும், இடையிலும் இறுதியிலும் வராது.

94) பால் எத்தனை வகைப்படும்?

A) 4

B) 5

C) 6

D) 12

விளக்கம்: பால் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என 5 வகைப்படும்.

95) பொருத்துக.

அ) மாணவன், செல்வன் – 1. பலர்பால்

ஆ) ஆதினி, மாணவி – 2. ஒன்றன்பால்

இ) மாணவர்கள், மக்கள் – 3. பெண்பால்

ஈ) கல், பசு – 4. ஆண்பால்

A) 4, 3, 1, 2

B) 4, 3, 2, 1

C) 1, 4, 3, 2

D) 1, 3, 4, 2

விளக்கம்: உயர்தினையில், ஆணைக்குறிப்பது – ஆண்பால்

பெண்ணைக் குறிப்பது – பெண்பால்

ஒன்றுக்கு மேற்பட்டவரைக் குறிப்பது – பலர்பால்

அஃறிணையில் ஒன்றைக் குறிப்பது – ஒன்றன்பால்

ஒன்றுக்கு மேற்பட்டவரைக் குறிப்பது – பலவின் பால்

96) ‘மகளிர்’ என்ற சொல்லின் எதிர்பாலுக்குரிய பெயரைத் தேர்க.

A) ஆண்

B) மூத்தோர்

C) ஆடவர்

D) அரசன்

விளக்கம்: எதிர்பாலுக்குரிய பெயர்கள்:

மகளிர் X ஆடவர்

அரசன் X அரசி

பெண் X ஆண்

மாணவன் X மாணவி

சிறுவன் X சிறுமி

தோழி X தோழன்

97) ‘பல்லுயிர் மண்டலம்’ என்பதன் ஆங்கிலச் சொல் என்ன?

A) Poverty

B) Wild Trees

C) Forester

D) Bio diversity

விளக்கம்: தீவு – Island

இயற்கை வளம் – Natural Resource

வனவிலங்குகள் – Wild Animals

வனப் பாதுகாவலர் – Forest Conservator

உவமை-Parable

காடு-Jungle

வனவியல்-Forestry

பல்லுயிர் மண்டலம்-Bio Diversity

98) “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்” என்று திருக்குறளின்

பெருமையை போற்றியவர் யார்?

A) திருவள்ளுவர்

B) காக்கை பாடினியார்

C) ஒளவையார்

D) கம்பர்

விளக்கம்: மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி அல்லது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள் இது போன்ற ஒரு நூல் திருக்குறள். இது போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியில் இதுவரை தோன்றியதில்லை.

99) தமிழ்நூல்களில் “திரு” என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது?

A) திருப்பாவை

B) திருவாஞ்சிக்களம்

C) திருவிளையாடல்

D) திருக்குறள்

விளக்கம்: திருக்குறள் அறத்ததுப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பகுப்புகளைக் கொண்ட “திரு” என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் ஆகும்.

100) பொருத்துக.

அ. அறத்துப்பால் – 1] 70 அதிகாரம்

ஆ. பொருட்பால் – 2] 25 அதிகாரம்

இ. இன்பத்துப்பால் – 3] 38 அதிகாரம்

A) 3, 1, 2

B) 3, 2, 1

C) 1, 3, 2

D) 2, 3, 1

விளக்கம்: அறம் – 38, பொருள் – 70, இன்பம் – 25 என அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள் மொத்தம் 1330 குறள்களை உடையது. இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உண்டு.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin