7th Tamil Unit 1 Questions
81) குற்றியலிகரம் – பிரித்தெழுதுக.
a) குறு + இயல் + இகரம்
b) குறுமை + இயல் + இகரம்
c) குறுமை + இயல் + உகரம்
d) குறுமை + இயல் + உகரம்
விளக்கம்: குற்றியலிகரம் = குறுமை + இயல் + கரம் ஈறுபோதல் விதிப்படி மை விகுதி கெட்டு குறு + இயல் + இகரம் என்றானது. பின் உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி. கு(ற் + உ) + இயல் + இகரம் = குற் + இயல் + இகரம் என்றானது. பின் தன்றொட்டிரட்டல் என்னும் விதிப்படி குற்(ற்) + இயல் + இகரம் என்றானது. இறுதியாக உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி குற்றியலிகரம் என்றானது.
82) குற்றியலுகரம் தனது ஒரு மாத்திரைலிருந்து எத்தனை மாத்திரையாக மாறி ஒலிக்கும்?
a) 2 மாத்திரை
b) 1½ மாத்திரை
c) ½ மாத்திரை
d) 1 மாத்திரை
விளக்கம்: குற்றியலிகரம் தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறுகி அரை மாத்தரை அளவில் ஒலிக்கும். இங்கு உகரம் ஆனது இகரமாக மாறி குறைந்து ஒலிக்கிறது.
83) தவறானதைத் தேர்க.
a) நாடியாது
b) கேண்மியா
c) சென்மியா
d) சால்பு
விளக்கம்: நாடியாது, கேண்மியா, சென்மியா ஆகியவை குற்றியலிகரச் சொற்கள், சால்பு என்பது குற்றியலுகரச் சொல்
84) எந்த சார்பெழுத்து தற்போது உரைநடை வழக்கில் இல்லை. ஆனால் இலக்கியங்களில் மட்டுமே உள்ளது?
a) குற்றியலுகரம்
b) குற்றியலிகரம்
c) ஐகாரகுறுக்கம்
d) ஒளகாரக் குறுக்கம்
விளக்கம்: குற்றியலிகரத்தில் பயன்படுத்தப்படும் சார்பெழுத்தானது தற்போது உரைநடை வழக்கிழந்து இலக்கிய வழக்கில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
85) தவறானதைத் தேர்க.
a) கேண்மியா = கேள் + மியா
b) செல்மியா = செல் + மியா
c) குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம்
d) குற்றியலுகரம் = குறு + இயல் + உகரம்
விளக்கம்: குற்றியலுகரம் = குறு + இயல் + உகரம் எனப்பிரியும்.
86) திணை எத்தனை வகைப்படும்?
a) 2
b) 3
c) 4
d) 6
விளக்கம்: திணை 2 வகைப்படும். அவை உயர்திணை மற்றும் அஃறிணை. ஆறு அறிவுடைய மனிதர்களை உயர்திணை என்பர். பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருள்களை அஃறிணை என்பர்
87) முக்கனிகள் எனப்படுபவை யாவை?
a) மா, பலா, தென்னை
b) பலா, வாழை, ஆப்பிள்
c) திராட்சை, பலா, மா
d) மா, வாழை, பலா
விளக்கம்: மா, பலா, வாழை ஆகிய மூன்று கனிகளும் முக்கனிகள் எனப்படுகின்றன.
88) பொருந்தாததை தேர்க
a) முத்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், பைந்தமிழ்
b) நாற்றிசை – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
c) ஐவகை நிலம் – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
d) அறுசுவை – இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, கசப்பு, துவர்ப்பு
விளக்கம்: முத்தமிழ் எனப்படுபவை இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகியவை ஆகும்.
89) ஒலியியல் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் எது?
a) Journalism
b) Puppetry
c) Orthography
d) Phonology
விளக்கம்: Journalism – இதழியல்
Puppetry – பொம்மலாட்டம்
Orthography – எழுத்திலக்கணம்
90) “Linguistics” என்பதன் பொருள் என்ன?
a) ஊடகம்
b) பருவ இதழ்
c) உரையாடல்
d) மொழியியல்
விளக்கம்: ஊடகம் – Media, பருவ இதழ் – Magazine, உரையாடல் – Dialogue, மொழியியல் – Linguistics