7th Tamil Unit 1 Questions
51) தமிழ் எவ்வகை மொழி?
a) இரட்டை வழக்கு மொழி
b) உலக வழக்கு மொழி
c) செய்யுள் வழக்கு மொழி
d) அனைத்தும்
விளக்கம்: மேடைப்பேச்சு, வானொலி, ஊடகம் போன்றவற்றில் தமிழ் பேச்சு மொழியாகவும், நாளேடுகள், பருவ இதழ்கள் போன்றவற்றில் எழுத்து மொழியாகவும் செயல்பட்டு வருவதால் தமிழ் இரட்டை வழக்கு மொழி ஆகும்.
52) மேடைப்பேச்சிலும், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் எது அக்காலத்தில் பயன்பட்டு வந்தது?
a) இயற்றமிழ்
b) இசைத்தமிழ்
c) நாடகத் தமிழ்
d) இலக்கியத் தமிழ்
விளக்கம்: அக்காலத்தில் மேடைப் பேச்சிலும், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் எழுத்துமொழியாகிய இலக்கியத்தமிழே பயன்பட்டு வந்தது. ஆனால் இக்காலத்தில் அந்நிலை பெரும்பாலும் மாறி பேச்சுத் தமிழே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
53) பேச்சுமொழி நீண்ட காலம் நிலைத்து நிற்க காரணமாக அமைவது எது?
a) ஒலிப்பதிவு
b) ஒளிப்பதிவு
c) a மற்றும் b
d) பேச்சுமொழி நீண்ட காலம் நிலைக்காது
விளக்கம்: இக்காலத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சான்றோர்களின் உரைகள் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாக பேச்சுமொழியும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
54) “எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” என்பது யாருடைய ஆசை?
a) பாரதியார்
b) பாவேந்தர் பாரதிதாசன்
c) முடியரசன்
d) வாணிதாசன்
விளக்கம்: எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும், இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும், வெளியுலகில் சிந்தனையில் புதிதுபுதிதாக விளைந்துள்ள அனைத்திற்கும் தமிழில் பெயர்கள் காணவும், செந்தமிழைச் செழுந்தமிழாய் செய்வதுவும் வேண்டும் என பாரதிதாசன் ஆசை கொண்டார்.
55) மொழியின் முதல் நிலை பேசுதல் மற்றும் _________ ஆகியனவாகும்?
a) படித்தல்
b) கேட்டல்
c) எழுதுதல்
d) வரைதல்
விளக்கம்: மொழியின் முதல் நிலை, பேசுதல், கேட்டல் மொழியின் இரண்டாம் நிலை, படித்தல், எழுதுதல்
56) சிறு சிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை எவை?
a) கிளை மொழிகள்
b) எழுத்து மொழி
c) பேச்சு மொழி
d) சொலவடைகள்
விளக்கம்: சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வருபவை. இவை பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும்.
57) பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை யார் தம் பேச்சில் இயல்பாய் பயன்படுத்துகின்றனர்?
a) மருத நில மக்கள்
b) நகர்புற மக்கள்
c) தேவர்கள்
d) நாட்டுப்புற மக்கள்
விளக்கம்: பொருட்செறிவுமிக்க சொலடைகளை நாட்டுப்புற மக்கள தம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்துவது தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய சிறப்பாகும்.
58) பொருத்துக.
a. அணை உடைஞ்சு போனாலும் வெள்ளம் அழுதாலும் வராது – 1. எதிர்ப்பு
b. வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்ம பகை – 2. ஓட்டம் பிடித்தல்
c. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும் – 3. திரும்பி வராது
d. நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டம் – 4. மதிப்பு
a) 3, 1, 4, 2
b) 1, 3, 4, 2
c) 3, 1, 2, 4
d) 3, 4, 1, 2
விளக்கம்: 1. அணை உடைஞ்சு போனாலும் வெள்ளம் அழுதாலும் வராது – திரும்பி வராது
2. வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்ம பகை – எதிர்ப்பு
3. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும் – மதிப்பு
4. நினைச்சதாம் கழுதை எழுத்ததாம் ஓட்டம் – ஓட்டம் பிடித்தல்
59) “ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்” என்ற சொலவடை கூறும் கருத்து என்ன?
a) வேகம்
b) கெட்டுபோதல்
c) பதுங்குதல்
d) நஷ்டம்
விளக்கம்: ஒரு அந்துப்பூச்சி இருந்தால் போதும், அது பல்கி பெருகி மொத்த நெல்லையும் கெடுத்துவிடும் என்பதே இதன் பொருள்.
60) தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
a) 2
b) 3
c) 4
d) 10
விளக்கம்: தமிழ் எழுத்து முதலெழுத்து சார்பெழுத்து என இருவகைப்படும். முதலெழுத்தில் 30 எழுத்துக்களும், சார்பெழுத்தில் 10 வகையும் உள்ளன.