7th Tamil Unit 1 Questions
41) தமிழின் கிளைமொழிகளில் பொருந்தாது எது?
a) மலையாளம்
b) கன்னடம்
c) தெலுங்கு
d) மராத்தி
விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகளாகும்.
42) ஒரு மொழி நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எது இன்றியமையாதது?
a) வரி வடிவம்
b) எழுத்து வடிவம்
c) ஒலி வடிவம்
d) அனைத்தும்
விளக்கம்: பேச்சு மொழிக்கு நாம் தந்த வரி வடிவமே எழுத்து மொழியாகும். ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எழுத்து வடிவம் இன்றியமையாதது. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதால் தான் நம்மால் இன்றும் படிக்க முடிகிறது.
43) எழுத்து மொழியில் காலம், இடம் ஆகியவற்றிற்கு ஏற்ப சொற்கள் சிதைவதில்லை. ஆனால் எது மாறுபடும்?
a) பேச்சு வழக்கு
b) கருத்து
c) சொல்
d) வரி வடிவம்
விளக்கம்: எழுத்துமொழியில் காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்ப சொற்கள் சிதைவதில்லை. ஆனால் அதன் வரி வடிவம் மாறுபடும்.
44) தவறானதைத் தேர்க
a) பேச்சுமொழியில் சொற்கள் குறுகி ஒலிக்கும். எழுத்துமொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும்
b) பேச்சுமொழியில் உணர்ச்சிக்கூறுகள் அதிகம். எழுத்துமொழியில் உணரச்சிக்கூறுகள் குறைவு.
c) பேச்சுமொழியில் உடல்மொழியும் குரல் ஏற்றத்தாழ்வும் இணைவதால் அல்லது எழுத்துமொழியை விட எளிமையாகக் கருத்தை உணர்த்துகிறது.
d) பேச்சுமொழி திருக்குறளை மொழிநடையில் அமைக்கிறது.
விளக்கம்: எழுத்துமொழி சிந்தித்து எழுதப்படுவதாலும் பிழைகள் ஏற்பட்டால் திருத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாலும் திருத்தமான மொழிநடையில் அமைகிறது. ஆனால் பேச்சுமொழியில் சிந்திக்க நேரம் குறைவு மற்றும் திருத்த இயலாததால் திருத்தமான இலக்கிய நடையில் அமைவதில்லை.
45) இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன?
1. பேச்சு மொழிக்கும் மற்றும் எழுத்து மொழிக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கும்.
2. பேச்சு மொழிக்கும் மற்றும் எழுத்து மொழிக்கும் இடையேயான பெரிய வேறுபாடு இருக்கும்.
a) 1 சரி
b) 2 சரி
c) இரண்டும் சரி
d) இரண்டும் தவறு
விளக்கம்: பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும்.
46) இரட்டை வழக்கு மொழியை, “உலக வழக்கு” எனக் கூறியவர் யார்?
a) தொல்காப்பியர்
b) அகத்தியர்
c) திருவள்ளுவர்
d) நக்கீரர்
விளக்கம்: இரட்டை வழக்கு மொழியை உலக வழக்கு செய்யுள் வழக்கு என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்
47) குழந்தைகளுக்குத் தாய்மொழி எப்போது அறிமுகமாகிறது?
a) கேட்டல், பேசுதல்
b) பேசுதல், எழுதுதல்
c) படித்தல், எழுதுதல்
d) கேட்டல், எழுதுதல்
விளக்கம்: கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையில் குழந்தைகளுக்கு தாய்மொழி அறிமுகமாகிறது. படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமாகின்றன.
48) மொழித்தூய்மை எதில் பேணப்படுகிறது?
a) பேச்சுமொழி
b) வட்டார மொழி
c) கிளைமொழி
d) எழுத்துமொழி
விளக்கம்: பேச்சுமொழி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அமைவதால் விரைந்து மாற்றமடைகிறது. எழுத்துமொhழி பெரும்பாலும் மாறுவதில்லை. மேலும், பேச்சுமொழியில் பிறமொழிச் சொற்கள் மிகுதியாக இடம்பெறுகின்றன.
49) பேச்சுமொழியில் ‘இ’ என்பது எவ்வாறு மாற்றி ஒலிக்கப்படுகிறது?
a) ஈ
b) ஐ
c) எ
d) a மற்றும் b
விளக்கம்: பேச்சுமொழியில் ‘இ’ என்பதை ‘எ’ என்றும் ‘உ’ என்பதை ‘ஒ’ என்றும் ஒலிப்பர்.
(எ.கா) ‘இலை’ என்பதை ‘எல’ என்றும் ‘உலகம்’ என்பதை ‘ஒலகம்’ என்றும் ஒலிப்பர்.
50) ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு எது தேவை?
a) ஒலி வடிவம்
b) வரி வடிவம்
c) எழுத்து வடிவம்
d) பேச்சு மொழி
விளக்கம்: ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு பேச்சு மொழியும், காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்து மொழியும் தேவைப்படுகிறது.