7th Tamil Unit 1 Questions
31) மொழியின் முதல்நிலை எனப்படுவது எது?
a) கேட்பது
b) பேசுவது
c) எழுதுவதும், படிப்பதும்
d) பேசுவதும், கேட்பதும்
விளக்கம்: வாயினால் பேசப்பட்டு பிறரால் கேட்டு உணரப்படுவதே பேச்சு மொழியாகும். இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியில் முதல் நிலை. கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்துமொழி.எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் 2ம் நிலை ஆகும்.
32) எந்த வடிவில் அமையும் பேச்சுமொழியானது உடனடி பயன்பாட்டிற்கு உரியது?
a) பாடல்
b) இசை
d) வரி
d) ஒலி
விளக்கம்: வரிவடிவில் அமையும் எழுத்து மொழியானது நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உரியது. இதேபோல், ஒலி வடிவில் அமையும் பேச்சுமொழி உடனடி பயன்பாட்டிற்கு உரியது.
33) மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது?
a) எழுத்து
b) கருத்து
c) பேச்சு மொழி
d) எழுத்துமொழி
விளக்கம்: மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழி ஆகும். இது உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும். பேச்சுமொழி, அதன் கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.
34) சரியான விடையை தேர்வு செய்க.
1. பேச்சுமொழி மொழியின் உயிர்நாடி ஆகும்.
2. பேசப்படும் சொற்கள் மட்டுமின்றிப் பேசுபவரின் உடல்மொழி ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்பு கூறுகள்.
a) 1 மட்டும் சரி
b) 2 மட்டும் சரி
c) இரண்டும் தவறு
d) இரண்டும் சரி
விளக்கம்: பேச்சுமொழியில் ஒரு சொல்லை அழுத்திக் கூறும்போது ஒரு பொருளையும், சாராணமாக கூறும் போது வேறு பொருளையும் உணர்த்துகிறது. அதே போல் பேசுபவரின் உடல்மொழி மற்றும் முகப்பாவனை போன்றவை நினைத்த கருத்தை சரியாக உணர்த்த உதவுகிறது.
35) “குழந்தையை நல்லா கவனிங்க” என்னும் கூற்றிலுள்ள “கவனி” என்னும் சொல்லின் பொருள் என்ன?
a) பார்
b) பேணுதல்
c) உதவு
d) பாதுகாப்பு
விளக்கம்: இதேபோல் “நில் கவனி செல்” என்ற கூற்றில் “கவனி” என்பது கவனித்துச் செல் என்னும் “பாதுகாப்பு பொருளை உணத்துகிறது”.
36) “என்னால் போக முடியாது” என்னும் தொடரை ஓங்கி ஒலிக்கும் போது அது உணர்த்துவது என்ன?
a) மறுப்பு
b) இயலாமை
c) அறியாமை
d) அ மற்றும் ஆ
விளக்கம்: இதை மென்மையாக “என்னால் போக முடியாது” என்று கூறும் போது அது இயலாமையை உணர்த்துகிறது. ஒலியின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப அதன் பொருள் மாறுபடுகிறது.
37) “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
a) புறநானூறு
b) திருக்குறள்
c) அகநானூறு
d) நன்னூல்
விளக்கம்: இவ்வரிகள் நன்னூல் நூற்பாவில் இடம்பெற்றுள்ளன. இதன் பொருள், சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடும் என்பதாகும்.
38) எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காண்பது ஆகியனவும் மொழியே எனக் கூறியவர் யார்?
a) சி.சு. செல்லப்பா
b) துரை ராசு
c) நா. பிச்சமூர்த்தி
d) மு. வரதராசனார்
விளக்கம்: “பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி, எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அந்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவை அன்றி வேறுவகையான மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது , நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியனவும் மொழியே” என மு. வரதராசனார் கூறுகிறார்.
39) பேச்சு வழக்கில் மாறுபடக்கூடிய ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
a) கிளைமொழி
b) வட்டார மொழி
c) எழுத்துமொழி
d) a மற்றும் b
விளக்கம்: பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். (எ.கா) “இருக்கிறது” என்னும் சொல்லை ‘இருக்கு’, ‘இருக்குது’இ ‘கீது’ என்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்படுகிறது.
40) வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கை தடைகள் போன்றவற்றால் பேசும் மொழியில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டு பதிய மொழி உருவாதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) கிளை மொழி
b) வட்டார மொழி
c) மூலமொழி
d) எழுத்துமொழி
விளக்கம்: ஒரே மொழியை பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்வதுண்டு. வாழும் இடத்தில் நில அமைப்பு, இயற்கைத் தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்படும். அவ்வாறு உருவாகும் புதிய மொழிகள் கிளைமொழிகள் எனப்படும்.