7th Tamil Unit 1 Questions
21) “பகுத்தறிவுக் கவிராயர்” என்று புகழப்படுபவர் யார்?
a) பாரதியார்
b) பாரதிதாசன்
c) உடுமலை நாரயணகவி
d) கல்யாணசுந்தரம்
விளக்கம்: தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்பியதால் உடுமலை நாராயணக் கவி “பகுத்தறிவுக் கவிராயர்” எனப் போற்றப்படுகிறார்.
22) நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் யார்?
a) முடியரசன்
b) சி.மணி
c) சி.சு. செல்லப்பா
d) உடுமலை நாரயணக்கவி
விளக்கம்: இவர் தமிழ்த் திரைப்பட பாடாலாசிரியராகவும், நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகளை எழுதிய பெருமை இவரையே சாரும்.
23) வானில் கீழ்க்கண்ட எது திரண்டால் மழை பொழியும்?
a) அகில்
b) முகில்
c) துயில்
d) துகில்
விளக்கம்: வானில் மேகக்கூட்டங்கள் திரண்டால் மழை பொழியும். மேகத்தை குறிக்கும் மற்றொரு சொல் முகில்.
24) “இரண்டல்ல” என்னும் செல்லைப் பிரித்து எழுதுக.
a) இரண்டு + டல்ல
b) இரண் + அல்ல
c) இரண்டு + இல்ல
d) இரண்டு + அல்ல
விளக்கம்: இரண்டல்ல = இரண்டு + அல்ல. “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” மற்றும் “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிகளின் படி, இரண்டு + அல்ல என்பது இரண்டல்ல என புணருகிறது.
25) “தந்துதவும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
a) தந்து + உதவும்
b) தா + உதவும்
c) தந்து + தவும்
d) தந்தூ + உதவும்
விளக்கம்: தந்துதவும் = தந்து + உதவும். தந்து + உதவும் என்பது “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” மற்றும் “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிகளின் படி, என்பது தந்துதவும் என புணரும்.
26) ஒப்புமை + இல்லாத என்பதைச் சேர்த்தெழுதுக.
a) ஒப்புமைஇல்லாத
b) ஒப்பில்லாத
c) ஒப்புமையில்லாத
d) ஒப்புஇல்லாத
விளக்கம்: ஒப்புமை + இல்லாத = ஒப்பில்லாத. “ஈறு போதல்” விதிப்படி ‘மை’ விதி கெட்டு ஒப்பு இல்லாத என்றானது. பின் “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” என்னும் விதிப்படி ஒப்(ப் + உ) + இல்லாத என்பது ஒப்ப் + இல்லாத என்றாது. இறுதியாக “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி, ஒப்பில்லாத என்றானது.
27) எதன் மூலம் மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது?
a) ஓலைச்சுவடி
b) இலக்கியங்கள்
c) மொழி
d) நூலகம்
விளக்கம்: தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி. அதுவே மனிதரின் சிந்தனையை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.
28) தமிழ்மொழி எத்தனை கூறுகளைக் கொண்டது?
a) 2
b) 3
c) 4
d) 5
விளக்கம்: தமிழ்மொழி பழமையும் புதுமையும் நிறைந்த சிறந்த மொழி. இது பேச்சுமொழி, எழுத்துமொழி என இரு கூறுகளைக் கொண்டது. இவ்விரண்டு கூறுகளுக்கும் இடையே பல ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் உள்ளன.
29) கூற்று: தற்போது பல மொழிகள் உலகில் உள்ளன.
காரணம்: தொடக்க காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்தனர். அவர்கள் தங்களுக்குள் தனித்தனியாக ஒலிக்குறியீடுகளை உருவாக்கினர்.
a) கூற்று சரி, காரணம் தவறு.
b) கூற்று தவறு, காரணம் சரி
c) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் கூற்றுக்கு காரணம் சரியான விளக்கம்
d) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விளக்கம்: பல குழுக்களாக வாழ்ந்த மக்கள் அவர்களுக்குள் தனித்தனியான ஒலிக் குறியீடுகளை உருவாக்கிக் கொண்டனர். இதன் காரணமாகவே மொழிகள் பல தோன்றின.
30) மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமானது எது?
a) மொழி
b) பேச்சு மொழி
c) இலக்கியம்
d) எழுத்துமொழி
விளக்கம்: நேரில் காண இயலாத நிலையில் செய்திகளைத் தெரிவிக்க எழுத்துமொழி உதவுகிறது. மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்து மொழியே காரணமாகிறது.