7th Tamil Unit 1 Questions
11) “கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது……” என்னும் பாடலை இயற்றியவர் யார்?
a) பாரதியார்
b) பாரதிதாசன்
c) கவிமணி
d) வெ. இராமலிங்கனார்
விளக்கம்: விடுதலைப்போராட்ட வீரரான வெ. இராலிங்கனார் பல முறை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டணை பெற்றுள்ளார். இவர் இயற்றியதே “கத்தி யின்றி ரத்த மின்றி” எனத் தொடங்கும் பாடல்.
12) “குரலாகும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
a) குரல் + யாகும்
b) குரல் + ஆகும்
c) குரல் + லாகும்
d) கு + ஆகும்
விளக்கம்: குரல் + ஆகும் = குரலாகும். “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் புணர்ச்சி விதிப்படி “ல்” மற்றும் “ஆ” புணர்ந்து “லா” என மாறியது.
13) வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதுக.
a) வான்ஒலி
b) வானொலி
c) வாவொலி
d) வானொலி
விளக்கம்: வான் + ஒலி = வானொலி. “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் புணர்ச்சி விதிப்படி “ன்” மற்றும் “ஞ” புணர்ந்து “னொ” என மாறியது.
14) “நெறி” என்னும் சொல்லின் பொருள் என்ன?
a) வழி
b) குறிக்கோள்
c) கொள்கை
d) அறம்
விளக்கம்: “நெறி” என்பதன் பொருள் “வழி” ஆகும்.
15) தவறான கூற்றைத் தேர்க.
a) பாடலின் முதல் எழுத்து ஒன்றிவருவது – மோனை
b) பாடலின் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது – எதுகை
c) பாடலின் இறுதி எழுத்து ஒன்றிவருவது – இயைபு
d) பாடலின் இறுதி எழுத்து ஒன்றிவருவது – அந்தாதி
விளக்கம்: ஒரு பாடலின் முடிவிலுள்ள எழுத்து, அசை, சீர் அல்லது அடி ஆனது அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமைந்தால் அது “அந்தாதி” எனப்படும்.
16) சரியானதை தேர்வு செய்க.
a) ஒப்புமை – ஒப்புதல்
b) முகில் – மோதிரம்
c) அற்புதம் – வியப்பு
d) உபகாரி – உதவி
விளக்கம்: ஒப்புமை – இணை, முகில் – மேகம், அற்புதம் – வியப்பு, உபகாரி – வள்ளல்
17) “ஒன்றல்ல இரண்டல்ல” என்னும் பாடலின் ஆசியரியர் யார்?
a) மருதகாசி
b) உடுமலை நாராயணகவி
c) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
d) முடியரசன்
விளக்கம்: தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமின்றிப் பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது. அதேபோல் இலக்கிய வளமும், இலக்கண வளமும் நிறைந்தது. இதுபோல தமிழ்நாட்டின் பெருமைகள் ஒன்றிரண்டல்ல பலவாகும் என்பதை உணர்த்தும் “ஒன்றல்ல இரண்டல்ல” என்னும் பாடலை உடுமலை நாராயணக் கவி இயற்றினார்.
18) “முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான்
முகிலினும் புகழ்படைத்த உபகாரி……” என்னும் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?
a) உடுமலை நாராயணக்கவி
b) மருதகாசி
c) கல்யாணசுந்தரம்
d) பாரதிதாசன்
விளக்கம்: முல்லைக்குத் தேர் தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றான்வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இக்கருத்தை கொண்ட இப்பாடல் வரிகள் உடுமலை நாராணயக்கவி இயற்றிய ஒன்றல்ல இரண்டல்ல பாடலில் இடம்பெற்றுள்ளது.
19) “ஒன்றல்ல இரண்டல்ல” பாடலின் கருத்துப்படி தவறான இணையைத் தேர்க
a) தேன்மணம் கமழுவது – தென்றல்
b) சுவை மிகுந்தது – அமுதம்
c) பொன் போன்றது – தானியக் கதிர்கள்
d) பகைவரை வென்றதைப் பாடுவது – பரணி
விளக்கம்: தேன் மணம் கமழுவது – தென்றது, சுவை மிகுந்தது – கனிகள், பொன் போன்றது – கனிகள், பொன் போன்றது – தானியக் கதிர்கள், பகைவரை வென்றதைப் பாடுவது – பரணி இலக்கியம்.
20) பின்வருவனவற்றுள் எது இசைப்பாடல்?
a) திருக்குறள்
b) பரணி
c) பரிபாடல்
d) அகநானூறு
விளக்கம்: திருக்குறள் – பொதுமை கருத்துக்களை கூறும் நூல்
பரணி – பகைவரை வென்றதைப் பாடுவது
பரிபாடல் – ஓர் இசை பாடல் வடிவிலான நூல்
அகநானூறு – எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.