7th Tamil Unit 1 Questions
91) பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.
a) பசு
b) வீடு
c) ஆறு
d) கரு
விளக்கம்: ஆறு என்பது நெடில் தொடர்க் குற்றியலுகரம் பசு, விடு, கரு ஆகியவை முற்றிலுகரச் சொற்கள் ஆகும்.
92) பொருந்தாத சொற்களை எழுதுக.
a) பாக்கு
b) பஞ்சு
c) பாட்டு
d) பத்து
விளக்கம்: பாக்கு, பாட்டு, பத்து ஆகியவை வன்தொடர்க் குற்றிலுகரம். பஞ்சு என்பது மென்தொடர் குற்றியலுகரமாகும்.
93) பொருந்தாத சொற்களை எழுதுக.
a) ஆறு
b) மாசு
c) பாகு
d) அது
விளக்கம்: ஆறு, மாசு, பாகு ஆகியவை நெடில்தொடர்க் குற்றியலுகரங்கள். அது என்பது முற்றியலுகரம் ஆகும்.
94) பொருந்தாத சொல்லை எழுதுக
a) அரசு
b) எய்து
c) மூழ்கு
d) மார்பு
விளக்கம்: அரசு என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் எய்து, மூழ்கு, மார்பு ஆகியவை இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
95) பொருந்தாத சொல்லை எழுதுக.
a) பண்பு
b) மஞ்சு
c) கண்டு
d) எஃகு
விளக்கம்: பண்பு, மஞ்சு, கண்டு மென்தொடர்க் குற்றிலுகரச் சொற்கள். எஃகு என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரமாகும்.
96) கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்போது எவ்வாறு ஒலிக்கும்?
a) ½ மாத்திரை
b) 1 மாத்திரை
c) 1 ½மாத்திரை
d) 2 மாத்திரை
விளக்கம்: கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்போது முழுமையாக 1 மாத்திரை அளவில் ஒலிக்கும். சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரையாகவே ஒலிக்கிறது.
97) ஒன்று என்று குற்றியலுகரச் சொல்லின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்?
a) 1 ½
b) 2 ½
c) 3
d) 2
விளக்கம்: ஒன்று என்ற குற்றியலுகரச் சொல்லின் மாத்திரை அளவு 2. ஒ-1 மாத்திரை. ன்-½ மாத்திரை று-½ மாத்திரை (சொல்லின் இறுதியில் வருவதால று தனது 1 மாத்திரை அளவிலிருந்து ½ மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்)
98) பொருந்தாததைத் தேர்க.
a) கழுகு
b) சிங்கம்
c) மலை
d) ஆண்
விளக்கம்: கழுகு, சிங்கம், மலை ஆகியவை அஃறிணை ஆண் என்பது ஆறறிவுக் கொண்ட மனிதனைக் குறிப்பதால் அது உயர்திணை
99) தவறானைத் தேர்க.
a) மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.
b) எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
c) பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி
d) பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.
விளக்கம்: பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது பேச்சுமொழி. மேலும், பேச்சுமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
100) எனப்படுவது + யாது என்பது எவ்வாறு புணரும்?
a) எனப்படுவதுயாது
b) எனப்படுவதியாது
c) எனப்படுவதாது
d) எனப்படுவதுதியாது
விளக்கம்: எனப்படுவது + யாது = எனப்படுவதியாது. எனப்படுவது என்பதிலுள்ள உகரமானது இகரமாக திரிந்து எனப்படுவதியாது என மாறுகிறது.