Science Questions

7th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1

7th Science Lesson 7 Questions in Tamil

7] வெப்பம் மற்றும் வெப்பநிலை

1. ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு ______________ என அழைக்கப்படுகிறது.

அ) வெப்பநிலை

ஆ) ஆற்றல்

இ) அலகுகள்

ஈ) சராசரி

விளக்கம்:

நமது உடல் இயக்க செயல்பாடுகள், காலநிலை மற்றும் உணவு சமைத்தல் போன்ற பல நிகழ்வுகள் வெப்பநிலையினை பொருத்து மாறுபடுகின்றன. ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு வெப்பநிலை என அழைக்கப்படுகிறது.

2. ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி ______________ மதிப்பே வெப்பநிலை ஆகும்.

அ) மூலக்கூறுகள்

ஆ) இயக்க ஆற்றல்

இ) நிலை ஆற்றல்

ஈ) வெப்ப ஆற்றல்

விளக்கம்:

3. வெப்பநிலையினை அளக்கும் அலகுகள்

அ) oC, oF, K

ஆ) oC, oF, S

இ) oC, oR, S

ஈ) oC, SI, oRa

விளக்கம்: வெப்பநிலையினை அளக்க மூன்று வகையான அலகுகள் பயன்படுத்தபடுகின்றன.

செல்சியஸ் : oC

பாரன்ஹீட் : oF

கெல்வின் : K

4. ஒரு பொருள் அதிக வெப்பநிலையினை கொண்டிருந்தால் அப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் ____________ இயங்கிக் கொண்டிருக்கும்.

அ) குளிர்ச்சியாக

ஆ) நிலையாக

இ) அதிக வேகத்தில்

ஈ) மிதமான வேகத்தில்

விளக்கம்: வெப்பநிலையானது ஒரு பொருளில் உள்ள அணுக்கள் எவ்வளவு வேகமாக இயங்குகின்றது என்பதோடு தொடர்புடையது.

5. எல்லா பொருளின் மூலக்கூறுகளும் ____________

அ) நிலையற்றது

ஆ) நிலையானது

இ) மிகப் பெரியது

ஈ) மிகச் சிறியதாகும்

விளக்கம்: எந்த ஒரு பொருளின் மூலக்கூறுகளும் மிகச்சிறியதாகும். எனவே அவற்றினை பகுப்பாய்வு செய்து, இயக்கத்தினை (இயக்க ஆற்றல்) கணக்கிட்டு அதன்மூலம் வெப்பநிலையினை அளப்பது கடினமான ஒன்றாகும்.

6. திண்மப் பொருள்களுக்கு வெப்பத்தினை அளிக்கும்போது அவை ___________.

அ) சுருங்கும்

ஆ) வெடிக்கும்

இ) விரிவடையும்

ஈ) வாயுக்களாகும்

விளக்கம்: திண்மப் பொருள்களுக்கு வெப்பத்தினை அளிக்கும்போது அவை விரிவடையும் அதுபோல் திரவமும் வெப்பத்தினால் விரிவடையும்.

7. வெப்ப நிலைமானியினியில் உள்ள திரவமானது வெப்பபடுத்தும்போது விரிவடைகிறது. குளிர்ச்சியடையும்போது _______________

அ) சுருங்கும்

ஆ) உறையும்

இ) வாயுக்களாகும்

ஈ) எதுவும் இல்லை

விளக்கம்: வெப்ப நிலைமானியினியில் உள்ள திரவமானது வெப்ப படுத்தும்போது விரிவடைகிறது. குளிர்ச்சியடையும்போது சுருங்குகிறது.

8. திண்மம் மற்றும் திரவங்களில் வெபத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் ____________ காணமுடியும்.

அ) வாயுக்களில்

ஆ) நீரில்

இ) வெபத்தில்

ஈ) விரிவடைவதன் மூலம்

விளக்கம்: திண்மம் மற்றும் திரவங்களில் வெப்பத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் வாயுக்களில் காணமுடியும்.

9. வெப்பநிலையினை அளக்கப் பயன்படுத்தப்படும் கருவி வெப்பநிலைமானியாகும்.

அ) தணிக்கைமானியகும்

ஆ) ஆம்பியர்

இ) திரவமானியகும்

ஈ) வெப்பநிலைமானியகும்

விளக்கம்: வெப்பநிலையினை அளக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் கருவி வெப்பநிலைமானியாகும். பெரும்பாலும் பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலைமானிகளில் பயன்படுகின்றன.

10. ஏன் பாதரசம் அல்லது ஆல்கஹால் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தபடுகிறது?

அ) திரவநிலையில் நீடிக்கும்

ஆ) வாயுக்களாகிவிடும்

இ) உறையும்

ஈ) திண்மமாகும்

விளக்கம்: பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் அவற்றின் வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அவை திரவநிலையிலே தொடர்ந்து காணப்படுகின்றன.

11. ஒரே அளவு வெப்ப மாற்றத்திற்கு அதன் _________ ஏற்படும் மாற்றமும் ஒரே அளவுடையதாக இருக்கிறது.

அ) பக்கவாட்டில்

ஆ) பகுதியில்

இ) அளவில்

ஈ) நீளத்தில்

விளக்கம்: பாதரசம் சீராக விரிவடைகிறது மேலும் ஒரே அளவு வெப்ப மாற்றத்திற்கு அதன் நீளத்தில் ஏற்படும் மாற்றமும் ஒரே அளவுடையதாக இருக்கிறது.

12. ஒளி _________ மற்றும் பளபளப்பானது.

அ) விலகும்

ஆ) சிதைவடையும்

இ) ஊடுருவாது

ஈ) ) ஊடுருவும்

விளக்கம்: ஒளி ஊடுருவாது மற்றும் பளபளப்பானது. இது கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டாது.

13. பாதரசத்தின் அதிக பட்ச கொதிநிலை _______

அ) 357oC

ஆ) 30oC

இ) 120oC

ஈ) 100oC

விளக்கம்:

14. மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்க பயன்படும் திரவம்.

அ) பாதரசம்

ஆ) ஆல்கஹால்

இ) திரவ நைட்ரஜன்

ஈ) அமிலம்

விளக்கம்: ஆல்கஹால் -100oC க்கும் குறைவான உறைநிலையை கொண்டுள்ளது. மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்க பயன்படுகிறது. இதனை அதிக அளவிற்கு வண்ணமூட்ட முடியும். ஆதலால், கண்ணாடி குழாய்க்குள் இத்திரவத்தினை தெளிவாக காண இயலும்.

15. மருத்துவ வெப்பநிலைமானியில் குறைந்தபட்ச வெப்பநிலையின் அளவு ______________

அ) 35oC அல்லது 94oF

ஆ) 39oC அல்லது 99oF

இ) 39.5oC அல்லது 99oF

ஈ) 36oC அல்லது 98oF

விளக்கம்: மருத்துவ வெப்பநிலைமானியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 35oC அல்லது 94oF வெப்பநிலையையும் அதிகபட்ச வெப்பநிலையாக 42oC அல்லது 108oC வெப்பநிலையையும் அளக்கக்கூடியது.

16. ஆய்வக வெப்பநிலைமானியில் ___________ வரையிலான செல்சியஸ் பயன்படுத்தப்படுகிறது.

அ) 35oC முதல் 94oF

ஆ) -10oC முதல் 110oC

இ) 0.9oC முதல் 99oF

ஈ) 10oC முதல் -110oF

விளக்கம்: ஆய்வக வெப்பநிலைமானியில் -10oC முதல் 110oC வரையிலான செல்சியஸ் அளவுகோலினைக் கொண்டுள்ளது.

17. மனிதர்களின் சராசரி உடல் வெப்பநிலை ______ அல்லது 98.6oF ஆகும்.

அ) 37oC

ஆ) 30oC

இ) 49oF

ஈ) 45oF

விளக்கம்: மனிதர்களின் சராசரி உடல் வெப்பநிலை 37oC அல்லது 98.6oF ஆகும்.

18. செல்சியஸ் என்ற சொல் எவ்வாறு இதற்கு முன் அழைக்கப்பட்டது?

அ) பாரன்ஹீட்

ஆ) அலகுகள்

இ) சராசரி

ஈ) சென்டிகிரேடு

விளக்கம்: சுவீடன் நாட்டு வானியலளாளர் ஆண்ட்ரஸ் செல்சியஸ் என்பவரின் பெயரினால் 1742 முதல் இந்த அலகீட்டு முறையானது செல்சியஸ் என அழைக்கப்படுகிறது. அதற்கு முன்னால் சென்டிகிரேடு என அழைக்கப்பட்டது.

19. நீரின் உறைநிலை வெப்பநிலையின் ஆரம்ப மதிப்பு ________

அ) 10oC

ஆ) 0oC

இ) -100oC

ஈ) -10oC

விளக்கம்: நீரின் உறைநிலை வெப்பநிலையினை 0oC ஆரம்ப மதிப்பாகவும் நீரின் கொதிநிலை வெப்பநிலையினை 100oC இறுதி மதிப்பாகவும் கொண்டு அளவிடப்பட்டுள்ளது.

20. கிரேட்ஸ் என்பது _________ என்பதனை குறிக்கும்.

அ) படிகள்

ஆ) அலகுகள்

இ) 100-ன் மதிப்பு

ஈ) சென்டிகிரேடு

விளக்கம்: கிரேக்க மொழியில் சென்டம் என்பது 100 என்ற மதிப்பினையும் கிரேட்ஸ் என்பது படிகள் என்பதனையும் குறிக்கும்.

21. __________ என்பவரின் பெயரினால் பாரன்ஹீட் அழைக்கப்படுகிறது.

அ) டேனியல் பாரன்ஹீட்

ஆ) ஆண்ட்ரஸ் செல்சியஸ்

இ) பாரன்ஹீட்

ஈ) ஆண்ட்ரஸ் பாரன்ஹீட்

விளக்கம்: ஜெர்மன் மருத்துவர் டேனியல் பாரன்ஹீட் என்பவரின் பெயரினால் அழைக்கப்படுகிறது.

22. பாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் உறைநிலை மற்றும் கொதிநிலை ஆகும்?

அ) -32oF, -212oF

ஆ) 30oF, 222oF

இ) 32oF, 212oF

ஈ) 22oF, 212oF

விளக்கம்: பாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் உறைநிலை 32oF மற்றும் கொதிநிலை 212oF ஆகும்.

23. _______________ என்பவரின் பெயரினால் கெல்வின் அளவீட்டு முறை அழைக்கப்படுகிறது.

அ) டேனியல் பாரன்ஹீட்கெல்வின்

ஆ) ஆண்ட்ரஸ் கெல்வின்

இ) டேனியல் லார்டு கெல்வின்

ஈ) வில்லியம் லார்டு கெல்வின்

விளக்கம்: வில்லியம் லார்டு கெல்வின் என்பவரின் பெயரினால் இந்த அளவீட்டு முறை அழைக்கப்படுகிறது. இது வெப்பநிலையினை அளக்கக்கூடிய SI அளவீட்டு முறையாகும். இது K என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.

24. ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப்பயன்படும் வெப்பநிலைமானி?

அ) பெரும சிறும

ஆ) பெரும

இ) பாரன்ஹீட்

ஈ) சென்டிகிரேடு

விளக்கம்: ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப்பயன்படுத்தபடும் வெப்பநிலைமானி பெரும சிறும வெப்பநிலைமானி என அழைக்கப்படுகிறது.

25. 1oC வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டால் 1K வெப்பநிலை மாறுபாடு ஏற்படும் வகையில் ___________ அளவீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அ) பெரும சிறும

ஆ) கெல்வின்

இ) பாரன்ஹீட்

ஈ) செல்சியஸ்

விளக்கம்: 1oC வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டால் 1K வெப்பநிலை மாறுபாடு ஏற்படும் வகையில் கெல்வின் அளவீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 273.15 என்ற மதிப்பினை செல்சியஸ் அளவீட்டுடன் கூட்டுவதன் மூலமாகவோ அல்லது கழிப்பதன் மூலமாகவோ மிக எளிமையாக செல்சியஸ் அளவீட்டு முறையினை தனிச்சுழி அளவீட்டு மாற்றிக்கொள்ள இயலும்.

26. கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலைகளை அவற்றின் சரியான இணையுடன் பொருத்தவும்.

  1. 45oC = a) oF
  2. 68oF = b) oC
  3. 0oC = c) K
  4. 100 K = d) oC

அ) b, a, d, c

ஆ) a, b, d, c

இ) a, d, c, b

ஈ) b, d, a, c

விளக்கம்:

செல்சியஸ் : செல்சியஸ் அலகானது °C என எழுதப்படுகிறது.

பாரன்ஹீட் : பாரன்ஹீட் அலகானது °F என எழுதப்படுகிறது.

கெல்வின் : கெல்வின் அலகானது K என எழுதப்படுகிறது.

27. எந்த வெப்பநிலையில் செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் அளவீடுகள் ஒரே மதிப்பினை கொண்டிருக்கும்.

அ) -30

ஆ) –40

இ) 50

ஈ) 0

விளக்கம்:

28. 68 °F வெப்பநிலை மதிப்பினை செல்சியஸ் மற்றும் கெல்வின் மதிப்பிற்கு மாற்றுக. வெப்பநிலையின் மதிப்பானது பாரன்ஹீட்டில் = F = 68, செல்சியஸ் அளவீட்டு முறையில் வெப்பநிலையின் மதிப்பு = C = ?

அ) 50°C

ஆ) 500°C

இ) 20°C

ஈ) 100°C

விளக்கம்:

29. 20°C வெப்பநிலை கெல்வின் மதிப்பிற்கு மாற்றுக. கெல்வின் அளவீட்டு முறையில் வெப்பநிலையின் மதிப்பு = K = ?

அ) 583.12

ஆ) 430.60

இ) 283.15

) 293.15

விளக்கம்:

30. கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவீட்டு முறைகளில் நீரின் சரியான உறைநிலை வெப்பநிலையை தேர்ந்தெடுக்க.

அ) 10°C, 32 oF , 273.15 K

ஆ) 0°C, 32 oF , 273.15 K

இ) 0°C, 32 oF , 373.15 K

ஈ) 20°C, 30oF , 273.15 K

விளக்கம்:

31. புவியில் பதிவு செய்யப்பட்ட மிக உயர் இயற்கை வெப்பநிலை என்ன?

அ) 100°C

ஆ) 56.7°C

இ) 80°C

ஈ) 90°C

விளக்கம்: புவியில் பதிவு செய்யப்பட்ட மிக உயர் இயற்கை வெப்பநிலை 56.7°C, 329.85 கெல்வின், 134.06oF

32. கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது

K (கெல்வின்) = °C – (செல்சியஸ்) + 273.15°C) K

a) – 273.15 – 0

b) – 123 – +150.15

c) + 127 – +400.15

d) + 450 – +733.15

அ) c

ஆ) b

இ) a

ஈ) d

விளக்கம்:

33. பொருத்துக.

1. மருத்துவ வெப்பநிலைமானி ஆற்றல்
2. சாதாரண மனிதனின் உடல்

வெப்பநிலை

100°C
3. வெப்பம் 37°C
4. நீரின் கொதிநிலை 0°C
5. நீரின் உறைநிலை உதறுதல்

அ) 3, 1, 2, 4, 5

ஆ) 1, 2, 4, 5, 3

இ) 5, 3, 1, 2, 4

) 5, 3, 4, 1, 2

விளக்கம்:

1. பாதரசத்தின் திரவத்தினை கீழே கொண்டு வர வெப்பநிலைமானியினை உதற வேண்டும்.

2. சராசரி உடல் வெப்பநிலை 37°C (98.6°F) ஆகும்.

3. ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலின் மதிப்பே வெப்பநிலை ஆகும்.

4.

34. புவியில் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைந்த இயற்கை வெப்ப நிலை.

அ) -150°C

ஆ) -21.4°C

இ) -94.7°C

) -100°C

விளக்கம்:

35. தனிச்சுழி வெப்பநிலையின் மதிப்பு யாது?

அ) 0 K

ஆ) -283.15 K

இ) -293.15 K

ஈ) -15.15 K

விளக்கம்:

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin