Science Questions

7th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1

7th Science Lesson 6 Questions in Tamil

6] உடல் நலமும் சுகாதாரமும்

1) எண்ணற்றோரின் உயிரைக் காப்பாற்றிய பெனிசிலின் மருந்து எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

A) 1929

B) 1927

C) 1921

D) 1928

விளக்கம்: 1928ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முதலில் கண்டறியப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பென்சிலின் தான். இது எண்ணற்றோரின் உயிரைக் காப்பாற்றியது.

2) சளி மற்றும் காய்ச்சல் பொதுவான தொற்று நோய்களாகும். இவை கீழ்க்கண்ட எந்த நுண்ணுயிரியால் பரவும்?

A) வைரஸ்

B) பாக்டீரியா

C) பூஞ்சை

D) A மற்றும் B

விளக்கம்: சளி மற்றும் காய்ச்சல் பொதுவான தொற்று நோய்களாகும். இவை பாக்டீரியாவால் மட்டுமல்ல வைரஸ் மூலமாகவும் ஏற்படுகிறது.

3) டெங்கு என்பது எந்த நுண்ணுயிரியால் ஏற்படுகிறது?

A) வைரஸ்

B) பாக்டீரியா

C) பூஞ்சை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் வகையைச் சேர்ந்த DEN-1,2 வைரஸ் (இது பிலெவி வைரஸ் வகையைச் சார்ந்தது), ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்களினால் பரவுகிறது.

4) கூற்றுகளை ஆராய்க.

1. பற்கள் மூலம் அரைக்கும் அல்லது ருசிக்கும் செயல் மாஸ்டிகேசன் அல்லது மெல்லுதல் என்று அழைக்கப்படுகிறது.

2. ஈறுகளில் இரத்த கசிவு என்பது வைட்டமின் குறைபாட்டின் காரணமாக ஏற்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பற்கள் மூலம் அரைக்கும் அல்லது ருசிக்கும் செயல் மாஸ்டிகேசன் அல்லது மெல்லுதல் என்று அழைக்கப்படுகிறது.

2. ஈறுகளில் இரத்த கசிவு என்பது வைட்டமின் குறைபாட்டின் காரணமாக ஏற்படுகிறது. இதனால் ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படும். இதனைத் தவிர்க்க சிட்ரஸ் பழங்கள் சாப்பிடலாம்.

5) இரவு குருட்டுத்தன்மை கீழக்காணும் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) வைட்டமின் ஏ

B) வைட்டமின் பி

C) வைட்டமின் சி

D) வைட்டமின் டி

விளக்கம்: இரவு குருட்டுத்தன்மை என்பது வைட்டமின் ஏ குறைபாடு காரணமாகவும், விழித்திரை செல்களின் குறைபாடு காரணமாகவும் ஏற்படுகிறது. இதன் காரணமாக இரவில் மங்கலான ஒளியில் நன்கு பார்ப்பது கடினமாகும்.

6) கீழ்க்காண்பனவற்றில் எது வைரஸ் நோய் அல்ல?

A) மஞ்சள் காமாலை

B) சின்னம்மை

C) ரேபீஸ்

D) சால்மோனெல்லா டைபி

விளக்கம்: சால்மோனெல்லா டைபி என்பது பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆகும். மஞ்சள் காமாலை, சின்னம்மை மற்றும் ரேபீஸ் போன்றவை வைரஸ்களால் ஏற்படும் நோய் ஆகும்.

7) மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் எது?

A) காசநோய்

B) காலரா

C) டைபாய்டு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: காசநோய் எனப்படும் டி.பி ஒரு தொற்று நோய் ஆகும். மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இவை ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகக் காற்றின் மூலமாகவும் நோயாளியின் சளி, எச்சில் மற்றும் உடைமைகள் மூலமும் பரவுகின்றன. காய்ச்சல், எடை இழப்பு, தொடர்ந்து இருமல், சளியுடன் இரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

8) கீழ்காண்பவனவற்றுள் எது டைபாய்டு நோயின் அறிகுறி அல்ல?

A) விரிவடைந்த கல்லீரல்

B) நாக்கின் மீது வெள்ளைக் கோடுகள்

C) விரிவடைந்த மண்ணீரல்

D) சுவாசிப்பதில் சிரமம்

விளக்கம்: காய்ச்சல், எடை இழப்பு, தொடர்ந்து இருமல், சளியுடன் இரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை காசநோயின் அறிகுறிகளாகும்.

டைபாய்டு நோயின் அறிகுறிகள்: நாக்கின் மீது வெள்ளைக் கோடுகள், விரிவடைந்த கல்லீரல் மற்றும் மண்ணீரல், குடல் புண், உடல் தடிப்புகள்.

9) ஹெபாடிட்டிஸ் வைரஸ் – A,B,C,D யினால் ஏற்படும் நோய் எது?

A) மஞ்சள் காமாலை

B) தட்டம்மை

C) ரேபீஸ்

D) சின்னம்மை

விளக்கம்: மஞ்சள் காமாலை என்பது ஹெபாடிட்டிஸ் வைரஸ் – A,B,C,D யினால் ஏற்படும் ஆபத்தான மற்றும் இறப்பு ஏற்படுத்தும் நோயாகும். அசுத்தமான நீர். பாதிக்கப்பட்டவருக்குப் போடப்பட்ட ஊசிகள் மூலம், பாதிக்கப்பட்டவரின் இரத்தம் பகிர்ந்து கொள்வது போன்றவற்றின் மூலமாக இந்நோய் பரவுகிறது.

10) கீழ்க்காணும் எதனுடைய ஆரோக்கியம் உடலின் ஊட்டச்சத்து நிலை மற்றும் பொது உடல்நலத்தை ஓரளவிற்குப் பராமரிக்கிறது?

A) கண்

B) தலைமுடி

C) பற்கள்

D) தோல்

விளக்கம்: தலைமுடியின் ஆரோக்கியமானது உடலின் ஊட்டச்சத்து நிலை மற்றும் பொது உடல்நலத்தை ஓரளவிற்குப் பராமரிக்கிறது. மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் ஆகியவை முடியின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிக்கின்றன. ஊட்டசத்து குறைபாடுகள், பல்வேறு உடல் மற்றும் மன நலக்குறைபாடுகள் ஆகியவை இளநரைக்கு வழிவகுக்கின்றன.

11) இரவு குருட்டுத்தன்மை பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படுகிறது

B) விழித்திரை செல்களின் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது

C) இரவில் மங்கலான ஒளியில் நன்கு பார்ப்பது கடினம்

D) இதற்கு தனியான சிகிச்சை முறை இல்லை.

விளக்கம்: இரவு குருட்டுத் தன்மை:

1. வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக ஏற்படுகிறது.

2. விழித்திரை செல்களின் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது.

3. இரவில் மங்கலான ஒளியில் நன்கு பார்ப்பது கடினம்.

4. ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுதலே இதற்கு தீர்வாகும்.

12) 104 பாரன்ஹீட் வரை காய்ச்சல் அறிகுறி உள்ள பாக்டீரிய நோய் எது?

A) காசநோய்

B) காலரா

C) டைபாய்டு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியம் அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் இந்நோயை ஏற்படுத்துகிறது. பசியின்மை, தீவிரத் தலைவலி அடிவயிற்றில் புண் அல்லது தடிப்புகள் மற்றும் தீவிரக் காய்ச்சல் அதாவது 104 பாரன்ஹீட் வரை காய்ச்சல் இந்நோயின் அறிகுறிகளாகும்.

13) இளம் சிவப்புக் கண் நோய் எதனால் ஏற்படுகிறது?

A) வைரஸ்

B) பாக்டீரியா

C) புரோட்டோசோவா

D) A மற்றும் B

விளக்கம்: இளம் சிவப்புக் கண் நோய் (விழிவெண்படல அழற்சி) என்பது வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகிறது. இதனால் ஒன்று அல்லது இரண்டு கண்கள் பாதிக்கப்படலாம். மிகவும் தொற்று இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கண் சொட்டு மருந்து ஆகியவை இந்நோய்கான தீர்வு ஆகும்.

14) கீழ்க்காண்பனவற்றில் எது பாக்டீரியாவால் ஏற்படும் நோய் அல்ல?

A) காலரா

B) டைபாய்டு

C) காசநோய்

D) மஞ்சள் காமாலை

விளக்கம்: வைரஸால் ஏற்படும் நோய்கள்: மஞ்சள் காமாலை, சின்னம்மை, ரேபீஸ். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்: காசநோய், காலரா, டைபாய்டு.

15) அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவும் பரவும் நோய் எது?

A) காசநோய்

B) காலரா

C) மஞ்சள் காமாலை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: விப்ரியோ காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் காலரா ஆகும். இது அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவக்கூடியது. வயிற்றுப்போக்கு, தசை வலி மற்றும் வாந்தி ஆகியவை அதன் முக்கிய அறிகுறிகளாகும்.

16) லுக்கோடெர்மா என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) தோல்

B) சிறுநீரகம்

C) இதயம்

D) நுரையீரல்

விளக்கம்: லுகோடெர்மா தோலில் சில பகுதி அல்லது மொத்தப் பகுதியில் நிறமி (மெலனின் நிறமி) இழப்புகளால் ஏற்படும் ஒரு தொற்றா நோயாகும். இந்த நிலை அனைத்து வயது, பாலினம் மறறும் இனத்தைப் பாதிக்கிறது. இதற்கு எவ்விதச் சிகிச்சையும் இல்லை. இது தொடுதல், உணவு பகிர்தல் மற்றும் ஒன்றாக உட்கார்வதால் பரவாது.

17) அனோரெக்ஸியா என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) பசியின்மை

B) மஞ்சள் நிறமுடைய சிறுநீர்

C) கண்களில் மஞ்சள் நிறம் குறைவான செறித்தல்

D) வாந்தி

விளக்கம்: மேற்காண் அனைத்தும் மஞ்சள் காமாலையின் அறிகுறிகளாகும். இதில் அனோரெக்ஸியா என்பது பசியின்மையை குறிக்கும்.

18) வாரிசெல்லா என்று அழைக்கப்படுவது எது?

A) காசநோய்

B) காலரா

C) மஞ்சள் காமாலை

D) தட்டம்மை

விளக்கம்: தட்டம்மை வாரிசெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. இது வாரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸால் ஏற்படும் தீவிரத் தொற்று நோய் ஆகும்.

19) இரத்த சோகை கீழ்க்காணும் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) கால்சியம்

B) மெக்னீசியம்

C) இரும்புச்சத்து

D) வைட்டமின்

விளக்கம்: இரத்த சோகை இரும்புச் சத்து குறைவான உணவுகளைச் சாப்படுவதால் ஏற்படும். மேலும் குழந்தைக்குத் தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு சில உணவுகளைக் கொடுப்பதாலும் ஏற்படுகிறது.

20) கூற்று: தமிழக அரசு, பள்ளிகளில் அனைத்து மாணவிகளுக்கும் வாரந்தோறும் இரும்புச்சத்து மாத்திரைகள் கொடுக்கிறது.

காரணம்: கிராமப்புற பெண் குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: தற்பொழுது பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு குறிப்பாக கிராமப்புற பெண் குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அனைத்து மாணவிகளுக்கும் வாரந்தோறும் இரும்புச்சத்து மாத்திரைகள் கொடுக்கிறது.

21) கீழ்க்காண்பவர்களில் யாருக்கு பொதுவாக இரத்தசோகை காணப்படுகிறது?

A) பெண்கள்

B) ஆண்கள்

C) ஆண் குழந்தைகள்

D) பெண் குழந்தைகள்

விளக்கம்: இரத்த சோகை என்பது இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ஒருவகை நோயாகும். இது பெண்கள் மற்றும் மண் சாப்பிடும் குழந்தைகளுக்குப் பொதுவாக ஏற்படும் நோயாகும்.

22) கூற்று: பெனிசிலின் மருந்துகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது

காரணம்: பெனிசிலின் மருத்துவத்துறையில் மிகப்பெரிய பயனைத் தந்தது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: மருந்துகளின் இராணி என்று அழைக்கப்படுவது பெனிசிலின் ஆகும். இது மருத்துவத்துறையில் மிகப்பெரிய பயனைத் தந்ததால், இதனை மருந்துகளின் இராணி என்று அழைக்கிறோம்.

23) டெங்கு காய்ச்சல் கீழ்க்காணும் எந்த கொசு மூலம் பரவுகிறது?

A) ஏடிஸ் எஜிப்டி

B) பெண் அனாபிலஸ்

C) கியூலக்ஸ்

D) ஆண் அனாபிலஸ்

விளக்கம்: டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் வகையைச் சேர்ந்த DEN-1,2 வைரஸ் (இது பிலெவி வைரஸ் வகையைச் சார்ந்தது), ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்களினால் பரவுகிறது.

24) டெங்கு காய்ச்சல் ஏற்படுவதினால் கீழ்க்கண்ட எதன் எண்ணிக்கை குறைகிறது?

A) இரத்த தட்டுக்கள்

B) இரத்த சிவப்பணுக்கள்

C) இரத்த வெள்ளையணுக்கள்

D) மேற்காணு எதுவுமில்லை

விளக்கம்: டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் வகையைச் சேர்ந்த DEN-1,2 வைரஸ் (இது பிலெவி வைரஸ் வகையைச் சார்ந்தது), ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்களினால் பரவுகிறது. இது இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.

25) மருந்துகளின் இராணி என்று அழைக்கப்படும் பெனிசிலின் என்ற மருந்தை கண்டுபிடித்தவர் யார்?

A) அலெக்சாண்டர் கன்னிங்காம்

B) அலெக்சாண்டர் பிளமிங்

C) அலெக்சாண்டர் மார்டின்

D) மேற்காண் யாருமில்லை

விளக்கம்: மருத்துவத்துறையில் மிகப்பெரிய பயனைத் தந்த பெனிசிலின் மருந்தை அலெக்சாண்டர் பிளமிங் என்பவர் கண்டுபிடித்தார்.

26) பெனிசிலின் மருந்து கீழக்காணும் எதற்கு பொருத்தமானது அல்ல?

A) நிமோனியா

B) டிப்தீரியா

C) காயங்கள்

D) மலேரியா

விளக்கம்: பெனிசிலின் எனும் நோய்எதிர்ப்பு மருந்து நிமோனியாஇ டிப்தீரியா போன்ற பல்வேறு நோய்கள் மற்றும் காயங்களைக் குணமாக்கியது.

27) டெங்கு பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) இது அனாபிலஸ் கொசு மூலம் பரவுகிறது.

B) இது கொசுக்கள் இருக்கும் இடத்திலிருந்து அதிகபட்சமாக 50-100 மீட்டர் சுற்றளவைச் சுற்றி இருப்பவர்களுக்கு வரக்கூடியது

C) இந்நோய் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை குறைக்கும்

D) இது DEN-1,2 வைரஸால் ஏற்படுகிறது

விளக்கம்: டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் வகையைச் சேர்ந்த DEN-1,2 வைரஸ் (இது பிலெவி வைரஸ் வகையைச் சார்ந்தது), ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்களினால் பரவுகிறது. இ;ந்த கொசுக்கள் இருக்கும் இடத்திலிருந்து அதிகபட்சமாக 50-100 மீட்டர் சுற்றளவைச் சுற்றி இருப்பவர்களுக்கு வரக்கூடியது. இது இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை குறைக்கும்.

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin