Science Questions

7th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1

7th Science Lesson 5 Questions in Tamil

5] தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

1) ஒரு தாவரத்தில் விதைகள் மூலம் தாவரத்தை உருவாக்கும் நிகழ்ச்சியே அத் தாவரத்தின் ______ இனப்பெருக்கமாகும்?

A) மியாசிஸ் இனப்பெருக்கம்

B) பால்இனப்பெருக்கம்

C) பாலிலா இனப்பெருக்கம்

D) ஆல்லோ கேமிட்

விளக்கம்: தாவரத்தின் இனப்பெருக்கமானது விதைகள் மூலம் நடைபெற்று உருவாகும் புதிய தாவரம் பால் இனப்பெருக்கத்தின் மூலம் உருவான தாவரமாகும்.

2) தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு?

A) தண்டு

B) வேர்

C) மலர்

D) விதை

விளக்கம்: தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு மலர் ஆகும், தண்டு மற்றும் வேர் முதலியன பாலிலா இனப்பெருக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளது ஆனால் மலரானது பால் இனப்பெருக்கத்திற்கு துணைபுரிவதால் மலரானது தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பாக செயல்படுகிறது.

3) மலரின் வகைகள் எத்தனை ________

A) 2

B) 3

C) 6

D) 8

விளக்கம்: மலர் 2 வகைப்படும் அவையாவன முழுமையான மலர் மற்றும் முழுமையற்ற மலர் என இருவகைப்படும், ஒரு முழுமையான மலரில் புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்ததாள் வட்டம் மற்றும் சூழக வட்டம் என நான்கு பாகங்களும் முழுமையாக காணப்பட்டால் அதனை முழுமையான மலர் என அழைக்கலாம்.

முழுமையற்ற மலரில் மேற்குறிப்பிட்ட நான்கில் ஏதேனும் ஒன்று இல்லாமல் இருந்தால் அதனை முழுமையற்ற மலர் எனப்படும்.

4) ஆண் மலரின் மகரந்த தூளானது பெண் மலரின் சூலகத்தை சென்றடையும் நிகழ்வு _______ எனப்படும்?

A) மஞ்சரி

B) மகரந்தசேர்க்கை

C) சூழ்முடி உருவாகுதல்

D) கனி தோன்றுதல்

விளக்கம்: ஆண் மலரின் மகரந்த தூளானது பெண் மலரின் சூலகத்தை அடையும் நிகழ்வு மகரந்தசேர்க்கை எனப்படும், மகரந்தசேர்க்கை நிகழ்வானது 2 வகைப்படும் அவை தன்மகரந்தசேர்க்கை மற்றும் அயல் மகரந்தசேர்க்கை.

5) 1. கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காயின் அடியில் உள்ள பசுமையான பகுதி அம்மலரின் புல்லிகளாகும்.

2. சீதாபழம் திறள் கனியாகும்.

3. மாம்பழத்தில் பல விதைகள் காணப்படுகிறது.

4. பட்டானியின் கனி சதைப்பற்றுள்ளதாக காணப்படுகிறது, இது பல விதைகரளை உள்ளடக்கிய மூடிய அறை போன்றது.

A) 1 3 சரி

B) 1 3 4 சரி

C) 1 2 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காயின் அடியில் உள்ள பசுமையான பகுதி அம்மலரின் புல்லிகளாகும். சீதாபழம் திறள் கனியாகும். மாம்பழத்தில் ஒரு விதை மட்டுமே காணப்படுகிறது. பட்டானியின் கனி சதைப்பற்றுள்ளதாக காணப்படுவதில்லை, இது பல விதைகளை உள்ளடக்கிய மூடிய அறை போன்றது.

6) இலைபோன்ற பசுமைநிற அமைப்பால் ஆனது மற்றும் மொட்டினை முழுவதுமாக மூடி காணப்படும் இதழ்களை எவ்வாறு அழைக்கிறோம்?

A) புல்லி வட்டம்

B) மகரந்ததாள் வட்டம்

C) அல்லி வட்டம்

D) சூற்பை

விளக்கம்: இலைபோன்ற பசுமைநிற அமைப்பால் ஆனதும் மொட்டினை முழுவதுமாக மூடி காணப்படுவதுமான இதழ்களை புல்லி வட்டம் என்று பெயர்,

7) மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பு_______?

A) புல்லி வட்டம்

B) மகரந்ததாள் வட்டம்

C) அல்லி வட்டம்

D) சூலகம்

விளக்கம்: தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு சூலகம் ஆகும், சூலகமானது சூல்தண்டு மற்றும் சூல்முடியை கொண்டுள்ளது. தாவரத்தின் விதைகள் தோன்றும் பகுதியாக இது விளங்குகிறது.

8) சூரிய காந்தி மலர் எவ்வகை மலராக காணப்படுகிறது?

A) முழுமையான மலர்

B) தனிமலர்

C) மலர்களின் தொகுப்பு

D) எதுவுமில்லை

விளக்கம்: சூரிய காந்தி மலரானது தனி மலர் அன்று இது பல மலர்களின் தொகுப்பு ஆகும் இவ்வாறு பல மலர்களின் தொகுப்பானது மஞ்சரி என அழைக்கப்படுகிறது.

9) தன்மகரந்தசேர்க்கை எத்தாவரத்தில் நடைபெறுகிறது?

A) ஒருபால் மலர்

B) இருபால் மலர்

C) ஆண் மலரில் மட்டும்

D) பெண் மலரில் மட்டும்

விளக்கம்: தன் மகரந்தசேர்க்கையானது பெரும்பாலும் இருபால் மலர்களிலேயே நடைபெறுகிறது. இம்முறையில் உருவாகும் தாவரமானது எவ்வித புதிய மாறுபாடும் அடையாமல் முந்தைய தாவரத்தின் அமைப்பையே கொண்டிருக்கும்.

10) மகரந்த சேர்க்கைக்கு பிறகு ஆண் கேமிட் பெண் கேமிட் இணையும் நிகழ்வுக்கு ______ என்று பெயர்?

A) மதரந்த சேர்க்கையாளர்

B) விதை உருவாக்கம்

C) கனிகளாக தோற்றம் அடைதல்

D) கருவுறுதல்

விளக்கம்: மகரந்த சேர்க்கைக்கு பிறகு ஆண் கேமிட்டானது பெண் கேமிட்டோடு இணையும் நிகழ்வானது கருவுறுதல் எனப்படுகிறது.

11) மலரில் பெரிதாக தெறியும் பாகம் எது?

A) புல்லி வட்டம்

B) அல்லி வட்டம்

C) மகரந்த தாள் வட்டம்

D) சூற்பை

விளக்கம்: மலரின் பெரிதாகவும், பிரகாசமான வண்ணத்துடன் பூச்சிகளை கவர்ந்திழுக்ககூடியதும் இனிய நறுமணத்துடனும் காணப்படும் பகுதி அல்லி வட்டம் எனப்படும், அல்லி வட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் அல்லி இதழ் என அழைக்கப்படுகிறது.

12) மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு எது?

A) புல்லி வட்டம்

B) அல்லி வட்டம்

C) மகரந்த தாள் வட்டம்

D) சூற்பை

விளக்கம்: மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு மகரந்த தாள் வட்டமாகும், ஒவ்வொரு மகரந்ததாள்களும் இரண்டு பாகங்களை கொண்டுள்ளன. அவை மகரந்த கம்பி மற்றும் மகரந்த பை.

13) கீழ்கண்டவற்றில் எது தனிமலர் அன்று?

A) செம்பருத்தி

B) ஊமத்தை

C) வெட்டுக்காய பூண்டு

D) தாமரை

விளக்கம்: மேற்குறிப்பிட்டவற்றில் வெட்டுக்காய பூண்டு மட்டும் தனிமலர் கிடையாது, வெட்டுகாய பூண்டு என்றும் கிணற்றடி பூண்டு எனவும் அழைக்கப்படும் ட்ரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் என்ற தாவரத்தின் மலர் ஒரு மஞ்சரி ஆகும். இதன் இலைச்சாறு வெட்டுக்காயங்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

14) அயல் மகரந்த சேர்க்கையை மட்டுமே நம்பி இருக்கும் தாவரங்களில் எது தவறானது?

A) பூசணி

B) ஆப்பிள்

C) ஸ்ராபெர்ரி

D) எதுவுமில்லை

விளக்கம்: மேற்கண்ட தாவரங்களான பூசணி, ஆப்பிள், ஸ்டாபெர்ரி மற்றும் ஃபிளம்ஸ் போன்ற அனைத்து தாவரங்களும் அயல்மகரந்த சேர்க்கையையே நம்பி இருக்கின்றன.

15) உலகின் மிகப்பெரிய விதை மற்றம் எடையுள்ள விதை எது?

A) கத்தரிக்காய்

B) வெண்டைக்காய்

C) தேங்காய்

D) இரட்டை தேங்காய்

விளக்கம்: உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை இரட்டை தேங்காய் ஆகும், இதன் விதை இரண்டு தேங்காய் ஒன்றோடு ஒன்று இணைந்தது போன்று இருக்கும், இதன் நீளம் 12 அங்குலம் ஆகும் அகலம் 3 அடி எடை 18 கிலோ ஆகும்

16) பாலிலா இனப்பெருக்கத்தின் வகைகள் எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: பாலிலா இனப்பெருக்கமானது 3 முறைகளில் நடைபெறுகிறது, இவைகள் மொட்டு விடுதல், துண்டாதல் மற்றும் ஸ்போர்களை உருவாக்குதல்.

17) 1. சேமிப்பு வேர் – ஆலமரம்

2. துணை வேர் – அவிசினியா

3. வாயு பரிமாற்றம் – பீட்ரூட்

4. உறிஞ்சு வேர் – கஸ்குட்டா

A) 3 1 2 4

B) 2 4 1 3

C) 4 2 1 3

D) 1 4 2 3

விளக்கம்: சேமிப்பு வேர் – பீட்ரூட்

துணை வேர் – ஆலமரம்

வாயு பரிமாற்றம் – அவிசினியா

உறிஞ்சு வேர் – கஸ்குட்டா

18) தரைகீழ்தண்டு எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தரைகீழ்தண்டு 4 வகைப்படும் அவையாவன மட்டநிலத்தண்டு, கந்தம், கிழங்கு மற்றும் குமிழம்

19) சுவாசவேர்கள் எத்தாவரத்தில் காணப்படுகிறது?

A) ஆலமரம்

B) அக்கேன்சியா

C) வில்வமரம்

D) வெற்றிலை

விளக்கம்: சுவாச வேர்கள் அக்கேன்சியா தாவரத்தில் காணப்படுகிறது இது கடல் மற்றும் நிலம் சந்திப்பில் இத்தாவரம் வளருகிறது. கடல் அரிப்பை தடுக்கிறது.

20) மகரந்த சேர்க்கையாளர் என்பவை எவை?

A) காற்று

B) நீர்

C) பூச்சிகள்

D) மேற்கூறிய அனைத்தும்

விளக்கம்: மேற்கண்ட அனைத்தும் மகரந்த சேர்க்கையாளர்கள் ஆகும், நீர், காற்று மற்றும் பூச்சிகள் போன்றன மகரந்த சேர்க்கைக்கு முக்கிய பங்காற்றுகிறது.

21) தாவர உலகின் மிகச்சிறிய எடைகொண்ட விதை எவை?

A) இரட்டை தேங்காய்

B) கத்தரிக்காய்

C) வெண்டைக்காய்

D) ஆர்கிட் விதைகள்

விளக்கம்: தாவர உலகின் மிகச்சிறிய விதைகள் காணப்படும் தாவரம் ஆர்கிட் விதைகள் ஆகும், இதன் விதைகள் 35 மில்லியன் விதைகளை கொண்ட ஆர்கிட் விதைகள் வெறும் 25 கிராம் மட்டுமே.

22) தாவரத்தின் இனப்பெருக்கத்திற்கு உதவும் உறுப்புகள் எவை?

A) வேர்

B) தண்டு

C) இலை

D) அனைத்தும்

விளக்கம்: தாவரத்தின் இனப்பெறுக்கத்திற்கு மேற்கண்ட அனைத்தும் உதவுகின்றன, இவைகள் உடல இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் உறுப்புகள் ஆகும், தாவரத்தின் மலர் ஆனது பால் இனப்பெருக்கத்திற்கு பயன்படும் உறுப்பு ஆகும்.

23) எத்தாவரத்தில் ஆண் மலர் பெண் மலர் என தனித்தனியாக தெளிவாக காணமுடியும்?

A) கத்தரி

B) வெண்டை

C) பூசணி

D) இரட்டைத்தேங்காய்

விளக்கம்: பூசணி தாவரமானது ஒரு இருபால் மலராகும் இதில் ஆண்மலர் மற்றும் பெண் மலர்களை தெளிவாக காண முடியும். இத்தாவரத்தில் தன் மகரந்த சேர்க்கையும் அயல் மகரந்த சேர்க்கையும் நடைபெறுகிறது.

24) 1. ஒரு மலரின் மகரந்த பையில் உள்ள மகரந்த தூளானது அதே மலரின் சூலக முடியையோ அல்லது வேறு மலரின் சூலகத்தையோ அடையும் நிகழ்வு அயல் மகரந்த சேர்க்கை எனப்படும்.

2.தன் மகரந்த சேர்க்கை நடைபெற அதிக அளவு மகரந்த தூள் உற்பத்தி செய்யவேண்டிய அவசியமில்லை.

3. தன் மகரந்த சேர்க்கையில் உருவாகும் புதிய தாவரத்தில் வேறு எவ்வித வேறுபாடும் இருக்காது.

4. பூசணி தாவரமானது தன் மகரந்தசேர்க்கையின் மூலம் கனிகளை உருவாக்குகிறது.

A) 2 3 சரி

B) 1 4 சரி

C) 2 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஒரு மலரின் மகரந்த பையில் உள்ள மகரந்த தூளானது அதே மலரின் சூலக முடியையோ அல்லது வேறு மலரின் சூலகத்தையோ அடையும் நிகழ்வு தன் மகரந்த சேர்க்கை எனப்படும். தன் மகரந்த சேர்க்கை நடைபெற அதிக அளவு மகரந்த தூள் உற்பத்தி செய்யவேண்டிய அவசியமில்லை. தன் மகரந்த சேர்க்கையில் உருவாகும் புதிய தாவரத்தில் வேறு எவ்வித வேறுபாடும் இருக்காது. பூசணி தாவரமானது அயல் மகரந்தசேர்க்கையின் மூலம் கனிகளை உருவாக்குகிறது.

25) தரைமேல் தண்டின் மாற்றுறுக்கள் கீழ்கண்வற்றில் எது?

A) வெங்காயத்தாமரை

B) பட்டாணி

C) சேப்பக்கிழங்கு

D) கள்ளி

விளக்கம்: தரைமேல் தண்டின் மாற்றுறுவாக கள்ளி தாவரம் பயன்படுகிறது,தண்டானது சேமிப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும் பயன்படுகிறது.

26) தாவரத்தின் கூடுதல் ஆதாரத்திற்காக தோன்றும் வேர்கள் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: தாவரத்தின் கூடுதல் ஆதாரத்திற்காக தோன்றும் வேர்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது அவையாவன தூண் வேர்கள், பற்று வேர்கள் மற்றும் முட்டு வேர்கள்

27) 1. ஓடு தண்டு – கிரைசாந்தியம்

2. சக்கர் – ஸ்ட்ராபெரி

3. ஸ்டோலன் – வல்லாரை

4. குட்டையான ஓடு தண்டு – வெங்காய தாமரை

A) 1 3 2 4

B) 4 3 1 2

C) 2 3 4 1

D) 3 1 2 4

விளக்கம்: ஓடு தண்டு – வல்லாரை

சக்கர் – கிரைசாந்தியம்

ஸ்டோலன் – ஸ்ட்ராபெரி

குட்டையான ஓடு தண்டு – வெங்காய தாமரை

28) ஒரு மலரின் மகரந்ததூள் சூலக முடியை வந்தடையும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) கனி உருவாதல்

B) ஆண் இனச்சேர்க்கை

C) பெண் இனச்சேர்க்கை

D) மகரந்த சேர்க்கை

விளக்கம்: ஒரு மலரின் மகரந்த சேர்க்கையானது சூலக முடியை வந்தடையும் நிகழ்வானது மகரந்த சேர்க்கை எனப்படுகிறது, மகரந்த சேர்க்கையானது தாவரத்தின் இன்றியமையாத ஒரு செயலாகும்.

29) தன் மகரந்த சேர்க்கையின் மூலம் மகரந்த சேர்க்கை செய்யும் தாவரங்களில் தவறானது?

A) தக்காளி

B) நெல்

C) ஸ்ட்ராபெரி

D) அவரை

விளக்கம்: மேற்கண்டவைகளில் ஸ்ட்ராபெரி மட்டும் அயல் மகரந்த சேர்க்கையை நம்பி மகரந்த சேர்க்கை செய்கிறது, மற்ற தாவரங்கள் தன் மகரந்த சேர்க்கையின் மூலம் கூட மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகிறது.

30) சில தாவரங்களின் வேர் தண்டு மற்றும் இலைகள் சிறப்பான பணிகளான உணவு சேமித்தல், கூடுதல் ஆதாரம், பாதுகாத்தல் மற்றும் இன்னும் முக்கியமான பணிகளை செய்ய தாவரம் தன் வடிவம் மற்றும் அமைப்பை மாற்றிக்கொள்கின்றன அதனை எவ்வாறு அழைக்கலாம்?

A) மாற்றுறுக்கள்

B) சேமிப்பு

C) மாற்றிட புவிச்சார்பு

D) கவரும் தன்மை

விளக்கம்: சில தாவரங்களின் வேர் தண்டு மற்றும் இலைகள் சிறப்பான பணிகளான உணவு சேமித்தல், கூடுதல் ஆதாரம், பாதுகாத்தல் மற்றும் இன்னும் முக்கியமான பணிகளை செய்ய தாவரம் தன் வடிவம் மற்றும் அமைப்பை மாற்றிக்கொள்கின்றன அதற்கு மாற்றுறுக்கள் என அழைக்கிறோம் இதனை 3 வகையாக பிரிக்கலாம் அவை வேர் மாற்றுறுக்கள், தண்டின் மாற்றுறுக்கள் மற்றும் இலையின் மாற்றுறுக்கள்

31) பொதுவாக வாயுப்பறிமாற்றத்திற்காக உதவும் வேர்கள் எந்த இடத்தில் வளரும் தாவரங்களில் காணப்படுகிறது?

A) வறண்ட நிலம்

B) சதுப்பு நிலம்

C) நன்னீர் பரப்பில்

D) மலைகளில்

விளக்கம்: வாயுப்பறிமாற்றத்திற்கு உதவும் வேர்கள் சதுப்பு நிலத்தில் வளரும் தாவரங்களில் காணப்படுகிறது இதற்கு உதாரணம் அவிசீனியா தாவரம்

32) மகரந்த சேர்க்கையானது எத்தனை வகைப்படுகிறது?

A) 1

B) 2

C) 3

D) 4

விளக்கம்: மகரந்த சேர்க்கையானது 2 வகைப்படும் அவைகளில் இயற்கையான மகரந்த சேர்க்கை மற்றும் அயல் மகரந்த சேர்க்கையாகும். இருபால் மலர்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கையானது தன் மகரந்த சேர்க்கையாகும்.

33) கூற்று: கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய்களில் அடிப்பகுதியில் உள்ள பசுமை நிற பகுதி அம்மலரின் புல்லிகளாகும்.

காரணம்: சில மலர்களில் கருவுருதலுக்கு பின் புல்லி இதழ் உதிராமல் கனியிலேயே தங்கிவிடுகிறது

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று சரி

C) காரணம் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய்களில் அடிப்பகுதியில் உள்ள பசுமை நிற பகுதி அம்மலரின் புல்லிகளாகும். சில மலர்களில் கருவுருதலுக்கு பின் புல்லி இதழ் உதிராமல் கனியிலேயே தங்கிவிடுகிறது.

34) 1. சீதாபழம் திரள் கனியாகும்.

2. பட்டானியின் கனி சதைப்பற்றுள்ளதாக இருக்காது

3. மாம்பழத்தில் ஒரே ஒரு விதை மட்டும் காணப்படுகிறது.

4. கத்தரிக்காயிள் சதைப்பற்றுள்ள பகுதி உணவாக உண்ண பயன்படுகிறது.

A) 1 3 சரி

B) 1 3 4 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: சீதாபழம் திரள் கனியாகும். பட்டானியின் கனி சதைப்பற்றுள்ளதாக இருக்காது. மாம்பழத்தில் ஒரே ஒரு விதை மட்டும் காணப்படுகிறது. கத்தரிக்காயிள் சதைப்பற்றுள்ள பகுதி உணவாக உண்ண பயன்படுகிறது.

35) சேமிப்பின் அடிப்படையில் தாவரத்தின் வேர்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: சேமிப்பின் அடிப்படையில் தாவரத்தின் வேரானது 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது, அவையாவன கூம்பு வடிவ வேர், பம்பர வடிவ வேர் மற்றும் கதிர் வடிவ வேர்

36) சில தாவரத்தின் வேர்கள் தண்டிலோ அல்லது இலைகளிலோ காணப்படுகிறது இவ்வாறு காணப்படும் வேர்கள் எவ்வாறு அழைக்கிறோம்?

A) வேர் முட்டுகள்

B) சல்லி வேர்கள்

C) சுவாச வேர்கள்

D) மாற்றிட வேர்கள்

விளக்கம்: சில தாவரத்தின் வேர்கள் தண்டிலோ அல்லது இலைகளிலோ காணப்படுகிறது இவ்வாறு காணப்படும் வேர்கள் மாற்றிட வேர்கள் என அழைக்கப்படுகிறது, மாற்றிட வேருக்கு உதாரணம் வாண்டா

37) தரையொட்டிய தண்டானது எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: தரையொட்டிய தண்டானது 4 வகையாக பரிக்கப்பட்டுள்ளது, அவையாவன ஓடு தண்டு, ஸ்டோலைன், தரைக்கீழ் ஓடு தண்டு மற்றும் குட்டையான ஓடு தண்டு

38) குமிழத்தில் எத்தனை வகையான இலைகள் காணப்படுகிறது?

A) 1

B) 2

C) 3

D) 4

விளக்கம்: குமிழத்தில் தண்டு மிகவும் குறுகியது, இதன் சதைப்பற்றுள்ள இலையானது 2 வகையாக பரிக்கப்பட்டுள்ளது. அவைகள் சதைப்பற்றுள்ள இலை மற்றும் செதில் இலைகள்

39) இலையின் மாற்றுறுக்கள் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இலையின் மாற்றுறுக்கள் 4 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது அவையானவ முட்கள், பற்றுக்கம்பிகள், பில்லேடுகள் மற்றும் கொல்லிகள்

40) இலைகளின் மூலம் இனப்பெருக்கத்தை செய்யும் தாவரம் எது?

A) பிரையோபில்லம்

B) பூஞ்சை

C) வைரஸ்

D) பாக்டீரியா

விளக்கம்: பிரையோபில்லம் தாவரமானது இலையின் மூலம் இனப்பெருக்கத்தை மேற்கொள்கிறது, இத்தாவரமானது உடல இனப்பெருக்கத்தின் மூலம் மற்றொரு தாவரத்தை தோற்றுவிக்கிறது.

41) ஈஸ்டின் பாலிலா இனப்பெருக்கமுறை நடைபெறும் முறை?

A) துண்டாதல்

B) ஸ்போர்களை உருவாக்கதல்

C) மகரந்த சேர்க்கை

D) மொட்டு விடுதல்

விளக்கம்: ஈஸ்ட் ஆனது பாலிலா இனப்பெருக்க முறைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்கிகறது மேலும் ஈஸ்ட் ஆனது மொட்டு விடுதல் முறையின் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது

42) ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு எது?

A) வேர்

B) தண்டு

C) மலர்

D) இலை

விளக்கம்: தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பானது மலர் ஆகும். மலரே மகரந்த சேர்க்கைக்கு உதவும் முக்கியமான உறுப்பாகும்

43) பற்றுவேர் காணப்படும் தாவரம் கீழ்கண்டவற்றில் எது?

A) வெற்றிலை

B) பருத்தி

C) மிளகு

D) A & C

விளக்கம்: பற்றுவேர் என்பது வேரின் மாற்றுரு ஆகும், இது வெற்றிலை மற்றும் மிளகு ஆகிய தாவரத்தில் காணப்படுகிறது.

44) வெங்காயம் மற்றும் பூண்டு எவ்வகை தண்டிற்கு உதாரணமாகும்?

A) மட்டநிலத்தண்டு

B) கந்தம்

C) குமிழம்

D) கிழங்கு

விளக்கம்: வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டும் குமிழத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

45) 1. முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களை கொண்டது.

2. அல்லி இதழ் சூலக வட்டத்தை வந்தடையும் நிகழ்ச்சிக்கு மகரந்த சேர்க்கை எனப்படும்.

3. கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும்.

4. இஞ்சி என்பது தரைகீழ் தண்டாகும்.

A) 1 3 4 சரி

B) 1 2 4 சரி

C) 1 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களை கொண்டது.

2. மகரந்த தூள் சூலகத்தை வந்தடையும் நிகழ்ச்சிக்கு மகரந்த சேர்க்கை எனப்படும்.

3. கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும்.

4. இஞ்சி என்பது தரைகீழ் தண்டாகும்.

46) 1. அல்லி – சப்பாத்திகள்ளி

2. பெரணி – கிரைசாந்தியம்

3. இலைத்தொழில் தண்டு – பூச்சிகளை ஈர்க்கிறது

4. கொக்கி – ஸ்போர்கள்

5. தரைகீழ் ஓடுதண்டு – பிக்னோனியா

A) 5 2 1 3 4

B) 2 5 1 4 3

C) 3 4 1 5 2

D) 4 5 3 2 1

விளக்கம்: அல்லி – பூச்சிகளை ஈர்க்கிறது

பெரணி – ஸ்போர்கள்

இலைத்தொழில் தண்டு – சப்பாத்திகள்ளி

கொக்கி – பிக்னோனியா

தரைகீழ் ஓடுதண்டு – கிரைசாந்தியம்

47) கூற்று: பூவில் நடக்கும் மகரந்தசேர்க்கையும் கருவுருதலும், கனிகளையும் விதைகளையும் உருவாக்கும்

காரணம்: கருவுருதலுக்கு பின் சூற்பை கனியாக மாறும், சூலானது விதையாக மாறும்

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று சரி

C) காரணம் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: பூவில் நடக்கும் மகரந்தசேர்க்கையும் கருவுருதலும், கனிகளையும் விதைகளையும் உருவாக்கும், கருவுருதலுக்கு பின் சூற்பை கனியாக மாறும், சூலானது விதையாக மாறும்.

48) ஹாஸ்டோரியா அல்லது உறிஞ்சி வேர்கள் என அழைக்கப்படும் வேர்கள் காணப்படும் தாவரம் எது?

A) இஞ்சி

B) பூண்டு

C) சப்பாத்திகள்ளி

D) கஸ்குட்டா

விளக்கம்: ஹாஸ்டோரியா என அழைக்கப்படும் உறிஞ்சி வேர்கள் கஸ்குட்டா எனும் ஒட்டுண்ணித்தாவரத்தில் காணப்படுகிறது இதில் ஓம்புயிரி தாவரத்தின் திசுக்களை துளைத்து உணவினை பெறுகிறது.

49) பெரணிகள் சாதகமற்ற சூழலில் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறது?

A) துண்டாதல்

B) மொட்டு விடுதல்

C) ஸ்போர்களை உருவாக்குதல்

D) அரும்புதல்

விளக்கம்: பெரணிகள் சாதகமற்ற சூழலில் ஸ்போர்களை உருவாக்குகிறது, பெரணி ஒரு பூவா தாவரம் ஆகும்.

50) கூற்று: கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும்

காரணம்: இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று சரி

C) காரணம் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும், இது ஆணி வேரின் மாறுபாடாகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin