Science Questions

7th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2

7th Science Lesson 16 Questions in Tamil

16] அன்றாட வாழ்வில் விலங்கியல்

1. கூற்று (A): இயற்கையின் மிகப் சிறிய கொடைகளுள் ஒன்று விலங்குகளாகும். அவை அன்றாட வாழ்வில் மனிதரோடு மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளன.

கூற்று (B): நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிக மேம்பாட்டிற்க்கும் ஊர்வனங்கள் மிகவும் உதவுகின்றன. நமக்கு உணவு உடை மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு ஊர்வனங்கள் பயன்படுகின்றன.

A) கூற்று A மற்றும் B இரண்டும் சரி

B) கூற்று A சரி B தவறு

C) கூற்று A தவறு B சரி

D) கூற்று A மற்றும் B இரண்டும் தவறு

விளக்கம்: இயற்கையின் மிகப் பெரிய கொடைகளுள் ஒன்று விலங்குகளாகும். அவை அன்றாட வாழ்வில் மனிதரோடு மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளன. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிக மேம்பாட்டிற்க்கும் விலங்குகள் மிகவும் உதவுகின்றன. நமக்கு உணவு உடை மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு விலங்குகள் பயன்படுகின்றன.

2. கீழ்க்கண்டவற்றுள் தவறானதை கண்டுபிடி.

1) பால் என்பது, வெண்மையான ஒரு திரவம். இது விலங்குளில் பாலூட்டிகளின் வியர்வை சுரப்பிலிருந்து உற்பத்தியாகிறது.

2) பாலானது தேநீர், காஃபி, ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்பு மற்றும் இவை போன்ற பால் சம்பந்தமான பொருள்களைத் தயாரிக்க உதவுகிறது.

3) பாலானது புரதம் மற்றும் கொழுப்புகள் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலாடைக்கட்டி, க்ரீம், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க உதவுகிறது.

A) 1 மற்றும் 3 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1 மற்றும் 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: பால் என்பது, வெண்மையான ஒரு திரவம். இது விலங்குளில் பாலூட்டிகளின் பால் சுரப்பிலிருந்து உற்பத்தியாகிறது. பாலானது புரதம் மற்றும் கால்சியம் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலாடைக்கட்டி, க்ரீம், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க உதவுகிறது.

3. கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) பெண் பறவைகளான கோழி, வாத்து, வான்கோழி மற்றும் நெருப்புக்கோழிகள் போன்றவை அவற்றின் இளம் உயிரிகள் உருவாவதற்கு முட்டையிடுகின்றன.

2) முட்டையானது கொழுப்பு நிறைந்த ஊட்டச்சத்து உடையதாகும்.

3) ஐந்து கிராம் எடையுள்ள முட்டை உயர்ந்தரகப் புரதத்தைக் கொண்டதாகும்.

4) முட்டையானது நம் உடலுக்குச் சக்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகின்றது.

A) 2 மற்றும் 3 சரி

B) 1, 3, 4 மட்டும் சரி

C) 1 மற்றும் 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: பல்வேறு வகையான பெண் பறவைகள் அதாவது கோழி, வாத்து, வான்கோழி மற்றும் நெருப்புக்கோழிகள் போன்றவை அவற்றின் இளம் உயிரிகள் உருவாவதற்கு முட்டையிடுகின்றன. முட்டையானது நம் உடலுக்குச் சக்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகின்றது. இது புரதம் நிறைந்த ஊட்டச்சத்து உடையதாகும். ஆறு கிராம் எடையுள்ள முட்டை உயர்ந்தரகப் புரதத்தைக் கொண்டுள்ளது.

4. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைக் கண்டுபிடி.

1) பாத்திரத்தில் உள்ள நீரினுள் முட்டையானது மூழ்கினால் அது அழுகிய முட்டையாகும்.

2) நீரில் இடப்பட்ட ஒரு துளித் தேன் கரையாமல் பாத்திரத்தின் அடிப்பகுதி வரை சென்றால் அது சுத்தமான தேனாகும்

3) பாத்திரத்தில் உள்ள நீரினுள் முட்டையானது மிதந்தால் அது நல்ல முட்டையாகும்.

4) நீரில் இடப்பட்ட ஒரு துளித் தேன் பாத்திரத்தின் அடிப்பகுதியை அடையும் முன்னரே அது கரைந்தால் அது சுத்தமான தேன் இல்லை.

A) 2 மற்றும் 4 தவறு

B) 2 மற்றும் 4 சரி

C) 1 மற்றும் 3 சரி

D) 1 மற்றும் 3 தவறு

விளக்கம்: பாத்திரத்தில் உள்ள நீரினுள் முட்டையானது மூழ்கினால் அது நல்ல முட்டையாகும். பாத்திரத்தில் உள்ள நீரினுள் முட்டையானது மிதந்தால் அது அழுகிய முட்டையாகும்.

5. கீழ்க்கண்டவற்றுள் சரியானதை கண்டுபிடி.

1) தேனீக்கள் மலர்களிலிருந்து, பெக்டார் என்ற இனிப்புச் சாற்றைச் சேகரித்து, அதைத் தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் உள்ள தேன் அறைகளில் சேமிக்கின்றன.

2) மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களால், அடர்ந்த காடுகளில் உள்ள தேன் கூடுகளிலிருந்து செயற்கையான மலைத் தேன் எடுக்கப்படுகிறது.

3) தேன் சிறந்த மருத்துவ குணம் மிக்கது, அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.

A) அனைத்தும் சரி

B) அனைத்தும் தவறு

C) 1 மற்றும் 2 மட்டும் சரி

D) 3 மட்டும் சரி

விளக்கம்: தேனீக்கள் மலர்களிலிருந்து, நெக்டார் என்ற இனிப்புச் சாற்றைச் சேகரித்து, அதைத் தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் உள்ள தேன் அறைகளில் சேமிக்கின்றன. மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களால், அடர்ந்த காடுகளில் உள்ள தேன் கூடுகளிலிருந்து இயற்கையான மலைத் தேன் எடுக்கப்படுகிறது.

6. கூற்று (A): வேலைக்காரத் தேனீக்களின் வேலை மலர்களில் உள்ள தேனைச் சேகரிப்பது மற்றும் இளந்தேனீக்களை அழிப்பது.

கூற்று (B): வேலைக்காரத்தேனீ தேன் கூடு சேதம் அடைந்தால் அதைச் சரி செய்யும், மேலும் தேன் கூட்டைப் பாதுகாக்கும்.

A) கூற்று A தவறு B சரி

B) கூற்று A, B இரண்டும் தவறு

C) கூற்று A சரி B தவறு

D) கூற்று A, B இரண்டும் சரி

விளக்கம்: வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்னவென்றால் மலர்களில் உள்ள தேனைச் சேகரிக்கும், மேலும் அவை இளந்தேனீக்களை வளர்க்கும்.

7. கூற்று (A): விலங்குகளின் உடலின் தசைப்பகுதி இறைச்சி ஆகும். பெரும்பாலும் இறைச்சி என்பது எலும்புத் தசையையும் அதில் உள்ள புரதத்தையும் குறிக்கும்.

கூற்று (B): இறைச்சியில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் அது முக்கிய உணவாகப் பயன்படுகிறது.

A) கூற்று அ தவறு ஆ சரி

B) கூற்று அ, ஆ இரண்டும் தவறு

C) கூற்று அ சரி ஆ தவறு

D) கூற்று அ, ஆ இரண்டும் சரி

விளக்கம்: விலங்குகளின் உடலின் தசைப்பகுதி இறைச்சி ஆகும். பெரும்பாலும் இறைச்சி என்பது எலும்புத் தசையையும் அதில் உள்ள கொழுப்பையும் குறிக்கும். மனிதர்களில் சிலர், கோழி, ஆடு, முயல், இறால் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றனர்.

8. பண்ணைகளில் பறவைகள் வளர்க்கப்படுவதற்கான காரணங்களுல் சரியானது___________

A) முட்டை

B) இறைச்சி

C) முட்டை மற்றும் இறைச்சி

D) விற்பனைக்காக

விளக்கம்: வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளான கோழி, வாத்து, வான்கோழி, போன்றவற்றை அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்ப்பது பண்ணை அமைத்தல் எனப்படும். இவற்றை நாம் இருவகைகளாகப் பிரிக்கலாம். அவை முட்டையிடுபவை, இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை(பிராய்லர்).

9. கோழிப்பண்ணைகள் அமைக்கப் தேவையான பாதுகாப்பான வாழ்விடங்கள்____________

A) கூடுகள், தேவையான நீர்

B) காற்றோட்டம், புரதம்

C) கொழுப்பு, வைட்டமின்கள்

D) மேற்க்கண்ட அனைத்தும்

விளக்கம்: கோழிப்பண்ணைகள் அமைக்கப் போதுமான பாதுகாப்பான இடம் தேவைப்படுகிறது. கோழிகளை அடைக்கக் கூடுகள், தேவையான நீர், காற்றோட்டம், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் நிறைந்த உணவுப்பொருள்கள் போன்றவை தேவைப்படுகின்றன.

10. பொருத்துக:

A) சால்மோனெல்-லோசிஸ் – 1. பூஞ்சை

B) ரானிக் கெட் நோய் – 2. பாக்டீரியா

C) ஆஸ்பர்ஜில்லஸ் நோய் – 3. வைரஸ்

D) நெக்டார் – 4. இனிப்புச் சாறு

A) 2 3 4 1

B) 2 3 1 4

C) 3 2 1 4

D) 1 2 3 4

விளக்கம்:

A) சால்மோனெல்-லோசிஸ் – 1. பாக்டீரியா

(வயிற்றுப்போக்கு)

B) ரானிக் கெட் நோய் – 2. வைரஸ்

(அம்மை நோய்)

C) ஆஸ்பர்ஜில்லஸ் நோய் – 3. பூஞ்சை

D) நெக்டார் – 4. இனிப்புச் சாறு

11. கூற்று (A): ஆடுகளின் உரோமத்தைக் கொண்டு கம்பளி ஆடைகள், சால்வைகள், போர்வைகள் போன்றவை தயாரிக்க உதவுகின்றன.

கூற்று (B): கரடிகளின் உரோமம், ஓவியம் தீட்டும் தூரிகையை உருவாக்கப் பயன்படுகிறது.

A) கூற்று A தவறு B சரி

B) கூற்று A சரி B தவறு

C) கூற்று A, B இரண்டும் தவறு

D) கூற்று A, B இரண்டும் சரி

விளக்கம்: ஆடுகளின் உரோமத்தைக் கொண்டு கம்பளி ஆடைகள், சால்வைகள், போர்வைகள், தலை முக்காடு மற்றும் காலுறைகள் போன்றவை தயாரிக்க உதவுகின்றன. குதிரையின் உரோமம், ஓவியம் தீட்டும் தூரிகையை உருவாக்கப் பயன்படுகிறது.

12. கீழ்க்கண்டவற்றுள் தவறானதை கண்டுபிடி.

1) பஞ்சு மற்றும் சணல் போன்றவை தாவர இழைகளால் தயாரிக்கப்படுகின்றன.

2) கம்பளி மற்றும் பட்டு இழைகள், விலங்கு இழைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

3) கம்பளி என்பது, ஆட்டின் கடின உரோமக் கற்றையிலிருந்து எடுக்கப்படும் இழையாகும்.

A) அனைத்தும் தவறு

B) அனைத்தும் சரி

C) 3 மட்டும் தவறு

D) 1, 2 மட்டும் தவறு

விளக்கம்: கம்பளி என்பது, ஆட்டின் மென் உரோமக் கற்றையிலிருந்து எடுக்கப்படும் இழையாகும். இதைத் தவிர முயல், யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றும் ஒட்டகத்திலிருந்து கம்பளி இழைகள் எடுக்கப்படுகின்றன. பட்டுப்புழுவின் கூட்டிலிருந்து எடுக்கப்படும் இழையே பட்டு இழையாகும்.

13. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைக் கண்டுபிடி.

1) கம்பளி என்ற இழை, கேப்ரினே என்ற குடும்பத்தைச் சார்ந்த விலங்குகளின் கடினமுடிக் கற்றையிலிருந்து பெறப்படுகிறது.

2) கம்பளி, ஆட்டின் அகத்தோல் பகுதியிலிருக்கும் உரோமத்தால் உருவாக்கப்படுவதாகும்.

3) பெரும்பாலும் கம்பளியானது ஆடு, செம்மறிஆடு, முயல், காட்டெருமையிலிருந்து பெறப்படுகிறது.

A) 3 மட்டும் சரி

B) 1, 2 இரண்டும் தவறு

C) மூன்றும் தவறு

D) 1 மட்டும் தவறு

விளக்கம்: கம்பளி என்ற இழை, கேப்ரினே என்ற குடும்பத்தைச் சார்ந்த விலங்குகளின் மென்முடிக் கற்றையிலிருந்து பெறப்படுகிறது. கம்பளி, ஆட்டின் புறத்தோல் பகுதியிலிருக்கும் உரோமத்தால் உருவாக்கப்படுவதாகும்.

14. கம்பளியானது கீழ்க்கண்ட எத்தனை படிநிலைகளில் உருவாக்கப்படுகின்றன.

A) நான்கு

B) ஐந்து

C) ஆறு

D) எட்டு

விளக்கம்: கம்பளியை உருவாக்க ஐந்து படிநிலைகள் உள்ளன. அவை: கத்தரித்தல், தரம் பிரித்தல், கழுவுதல், சிக்கெடுத்தல், நூற்றல் ஆகியவையாகும்.

15. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததை தேர்ந்தெடு.

A) கத்தரித்தல்: ஆடுகளின் உடலில் உள்ள சதைப்பகுதியிலிருந்து உரோமங்களை மட்டும் பிரித்தெடுக்கும் நிகழ்வாகும்.

B) தரம் பிரித்தல்: வெவ்வேறு ஆட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்து எடுக்கப்படும் உரோமங்களை பின்னர் தனித்தனியாக பிரித்தெடுக்கப்படும் நிகழ்வாகும்.

C) கழுவுதல்: தோலின் உரோமங்களில் உள்ள தூசி, அழுக்கு, மற்றும் எண்ணெய் பிசின் போன்றவற்றை சலவைத்தூள் கொண்டு கழுவுதல் நிகழ்வாகும்

D) சிக்கெடுத்தல்: காய வைத்த கம்பெளி இழைகளை பிரித்து மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்றுதல்.

விளக்கம்: தரம் பிரித்தல் – ஒரே ஆட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் எடுக்கப்படும் உரோமங்கள் வெவ்வேறானவை. இவை பின்னர் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்படும்.

16. கீழ்க்கண்டவற்றுள் கம்பளியுடன் தொடர்பில்லாதது எது?

1) வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது மற்றும் இவை கிழிவதில்லை.

2) ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையற்றது.

3) கம்பளியானது சிறந்த வெப்பக் கடத்தியாகக் கருதப்படுகிறது.

4) இது எளிதில் சுருங்கும் தன்மையுடையது.

A) 1, 2, 3 தவறு

B) 2, 3, 4 தவறு

C) 2 மற்றும் 4 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது மற்றும் இவை கிழிவதில்லை. ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது. கம்பளியானது சிறந்த வெப்பக் கடத்தியாகக் கருதப்படுகிறது. இது எளிதில் சுருங்காது.

17. கூற்று (A): கம்பளி என்பது, பல்வேறு வகையான பொருள்கள் செய்ய உதவும் இழையாகும். இந்த இழைகளின் விட்டம் ஆடைகள், வீட்டிற்குத் தேவையான துணிகள் மற்றும் தொழிற்சாலைக்கு தேவையான பொருள்கள் செய்ய உதவுகின்றன.

கூற்று (B): மூன்றில் ஒரு பங்கு கம்பளி இழைகள், ஸ்வெட்டர், ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன.

A) கூற்று A தவறு B சரி

B) கூற்று A சரி B தவறு

C) கூற்று A, B இரண்டும் தவறு

D) கூற்று A, B இரண்டும் சரி

விளக்கம்: மூன்றில் இரண்டு பங்கு கம்பளி இழைகள், ஸ்வெட்டர், ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன.

18. கீழ்க்கண்டவற்றுள் பட்டுப் பற்றிய கூற்றுகளில் தொடர்பில்லாதது எது?

1) பட்டு என்பது பட்டுப் பூச்சியின் கூடுகளில் சுரக்கும் இழையாகும்.

2) மல்பரி இலைகளை உணவாக உண்ணும் பட்டுப்புழுக்களிலிருந்து பட்டு இழைகள் பெறப்படுகின்றன.

3) பட்டுப் புழுக்கள் குறுகிய காலமே வாழும் தன்மையுடையது. அதாவது மூன்று மாதங்கள் மட்டுமே வாழும்.

4) பட்டுப் புழுக்கள் தன் வாழ்க்கைசுழற்சியில் ஐந்து வளர்ச்சி நிலைகளைக் கடக்க வேண்டும்.

A) அனைத்தும் தவறு

B) 1, 2 மட்டும் தவறு

C) 3, 4 மட்டும் தவறு

D) 1, 2, 3 தவறு

விளக்கம்: பட்டுப் புழுக்கள் குறுகிய காலமே வாழும் தன்மையுடையது. அதாவது இரண்டு மாதங்கள் மட்டுமே வாழும். பட்டுப் புழுக்கள் தன் வாழ்க்கைசுழற்சியில் நான்கு வளர்ச்சி நிலைகளைக் கடக்க வேண்டும். அவை முட்டை, லார்வா, நிலை(கம்பளிப்பூச்சி), கூட்டுப்புழு(குக்கூன்) மற்றும் பட்டுப்பூச்சியாகும்.

19. பொருத்துக:

A) பட்டுப்பூச்சி வளர்ப்பு 1. ஆறு வாரங்கள்

B) முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி 2. ஐந்து நாள்

C) குளிர் வெப்பநிலை 3. செரிகல்சர்

D) பட்டு இழை உற்பத்தி 4. 500 முட்டைகள்

A) 4 3 1 2

B) 3 4 1 2

C) 4 3 2 1

D) 1 2 3 4

விளக்கம்:

A) பட்டுப்பூச்சி வளர்ப்பு – செரிகல்சர்

B) முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி – 500 முட்டைகள்

C) குளிர் வெப்பநிலை – ஆறு வாரங்கள்

D) பட்டு இழை உற்பத்தி – ஐந்து நாள்

20. பட்டுப்பூச்சியின் சரியான வாழ்க்கைசுழற்சி முறையினை தேர்ந்தெடு.

A) லார்வா – முட்டை – கூட்டுப்புழு – வளர்ந்து வரும் பூச்சி – வளரச்சியடைந்த பூச்சி.

B) முட்டை – லார்வா – கூட்டுப்புழு – வளர்ந்து வரும் பூச்சி – வளரச்சியடைந்த பூச்சி.

C) முட்டை – லார்வா – கூட்டுப்புழு – வளரச்சியடைந்த பூச்சி – வளர்ந்து வரும் பூச்சி

D) முட்டை – கூட்டுப்புழு – லார்வா – வளரச்சியடைந்த பூச்சி – வளர்ந்து வரும் பூச்சி

விளக்கம்:

IMG_20210206_204456.JPG

21. கூட்டுப்புழுக்களை எளிதில் பிரித்தெடுக்க பயன்படுத்தப்படும் நீர்_________

A) குளிர் நீர்

B) நன்னீர்

C) கொதிநீர்

D) கடின நீர்

விளக்கம்: கூட்டுப்புழுக்களைக் கொதிநீரில் இட்டால் அதிலிருந்து பட்டு இழைகளை மிக எளிதாகச் சிக்கலின்றி பிரித்துவிடலாம். ஆனால் அவை பட்டு இழைகளை உருவாக்கட்டும் என்று விட்டு விட்டால் கூட்டுப்புழு உடையும் போது நீண்ட பட்டு இழைகளும் கிழியும். இதனால் தான் கூட்டுப்புழுக்களைக் கொதி நீரில் இட்டு, மிக நீளமான பட்டு நூலை எடுத்து அதைச் சுத்தமாக்கி, சாயமேற்றி ஆடையாக நெய்கிறார்கள்.

22. கீழ்க்கண்டவற்றுள் பட்டின் சிறப்பம்சங்களுல் பொருந்தாதது எது.

1) கவரச்சியாகவும், மிகவும் மென்மையாகவும், அணிவதற்கு வசதியானதாகவும், பலதுறைகளில் பயன்படுகிறது.

2) இதை எளிதில் சாயமேற்ற இயலாது.

3) இயற்கை இழைகளிலேயே பட்டு இழைதான் வலிமை குன்றிய இழையாகும்.

4) இது சூரிய ஒளியை எளிதில் கடத்துவதில்லை.

A) 1 மட்டும்

B) 1, 2, 3 மட்டும்

C) 2, 3, 4 மட்டும்

D) 4 மட்டும்

விளக்கம்: இதை எளிதில் சாயமேற்றலாம். இயற்கை இழைகளிலேயே பட்டு இழைதான் வலிமையான இழையாகும். இது சூரிய ஒளியை எளிதில் கடத்தும்.

23. கீழ்க்கண்டவற்றுள் பட்டின் பயன்களுள் பொருந்தாதது எது.

1) பட்டு இயற்கை அழகுடையதாகும். இது கோடை காலத்தில் அதிக வெப்பத்தைத் தரக் கூடியதாக அமையும்.

2) பட்டானது குளிர்காலத்தில் உடலுக்கு மிகவும் இதமானதாக அமையும்.

3) நாகரிகமான நவீன உடைகள் தயாரிக்கவும், அழகிய பட்டாடைகள் தயாரிக்கவும், வீட்டு உபயோகப் பொருள்களான சுவர் அலங்காரப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றது.

4) பட்டு இழையானது, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.

A ) 3 மற்றும் 4 தவறு

B) 1 மற்றும் 2 தவறு

C) 1 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: பட்டு இயற்கை அழகுடையதாகும். இது கோடை காலத்தில் இதமானதாகவும், குளிர் காலத்தில் வெப்பத்தைத் தரக் கூடியதாகவும் உள்ளது.

24. கூற்று (A): பட்டு உற்பத்தியில் உலகிலேயே மூன்றாவது இடத்தைப் பெறுவது நம் இந்திய நாடு.

கூற்று (B): தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், திருபுவனம், மற்றும் ஆரணி போன்ற இடங்கள் பட்டு உற்பத்திக்குப் புகழ் பெற்றவை ஆகும்.

A) கூற்று A தவறு B சரி

B) கூற்று A சரி B தவறு

C) கூற்று A, B இரண்டும் தவறு

D) கூற்று A, B இரண்டும் சரி

விளக்கம்: பட்டு உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது நம் இந்திய நாடு.

25. கூற்று (A): பட்டுப்பூச்சிகள், அவற்றின் ஆரம்ப எடையை விட 60,000 மடங்கு எடையுள்ள மல்பரி இலைகளை உண்டு வளர்கின்றன.

கூற்று (B): குக்கூன்களை கொதிநீரில் விட்டால் கூட்டுப்புழுக்கள் இறந்து விடுவதால், சிட்ரசின் இலைகள் தளர்ந்து விடுகின்றன.

A) கூற்று A தவறு B சரி

B) கூற்று A சரி B தவறு

C) கூற்று A, B இரண்டும் தவறு

D) கூற்று A, B இரண்டும் சரி

விளக்கம்: பட்டுப்பூச்சிகள், அவற்றின் ஆரம்ப எடையை விட 50,000 மடங்கு எடையுள்ள மல்பரி இலைகளை உண்டு வளர்கின்றன. குக்கூன்களை கொதிநீரில் விட்டால் கூட்டுப்புழுக்கள் இறந்து விடுவதால், செரசின் இலைகள் தளர்ந்து விடுகின்றன.

26. பட்டாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் பொருந்தாததை கண்டுபிடி.

A) மூட்டு மற்றும் முதுகு வலி

B) பார்வைக் கோளாறு மற்றும் சுவாச நோய்கள்

C) ஆஸ்துமா மற்றும் மார்புச்சளி

D) புற்றுநோய்

விளக்கம்: பட்டாலைகளில் பணிபுரிபவர்கள் நின்றுகொண்டே பட்டுநூலை நூற்பதால் அவர்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். மேலும் இவர்கள் முதுகு வலியினாலும், பார்வைக் கோளாறுகள் மற்றும் தோல் காயங்களாலும் துன்புறுகிறார்கள். குறைந்த காற்றோட்டமுள்ள பகுதிகளில் அவர்கள் பணிபுரிவதால் சில சமயம், சுவாச சம்பந்தமான நோய்களான ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் அவதிப்படுகிறார்கள்.

27. கம்பளி ஆலைப் பணியாளர்கள் இறந்த விலங்குகளைக் கையாள்வதால் கீழ்க்கண்ட எந்த தொற்றால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

A) ஆந்தராக்ஸ்

B) ஆந்தோசெரசிஸ்

C) ஆந்தராக்ஸ் பாக்டீரியா

D) ஆந்தராக்ஸ் பூஞ்சை

விளக்கம்: இறந்த விலங்குகளைக் கையாள்வதால் கம்பளி ஆலைப் பணியாளர்கள் ஆந்தராக்ஸ் பாக்டீரியா தொற்றால் அவதிப்படுகிறார்கள். இது பிரித்தெடுப்போர் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.

28. கூற்று (A): பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆந்தோசெரசிஸ்.

கூற்று (B): இந்நோயின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், மூச்சுவிடுதலில் சிரமம் போன்ற நிமோனியாவை ஒத்த அறிகுறிகள் தோன்றும்.

A) கூற்று A தவறு B சரி

B) கூற்று A சரி B தவறு

C) கூற்று A, B இரண்டும் தவறு

D) கூற்று A, B இரண்டும் சரி

விளக்கம்: பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆந்தராக்ஸ். இந்நோயின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், மூச்சுவிடுதலில் சிரமம் போன்ற நிமோனியாவை ஒத்த அறிகுறிகள் தோன்றும். சில சமயம் இவர்களுக்கு வாந்தி எடுக்கும் சூழ்நிலையும் மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகின்றன.

29. ஆந்த்ராக்ஸ் நோயைக் குணப்படுத்தும் மருந்துப்பொருள்_________

A) பெனிசிலின்

B) பைரிடாக்ஸின்

C) சிப்ரோஃப்ளோக்சாசின்

D) A மற்றும் C இரண்டும்

விளக்கம்: பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின் போன்ற சிறந்த மருந்துகள் ஆந்த்ராக்ஸ் நோயைக் குணமாக்க உதவுகின்றன. ஆகையால் விலங்குகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போட வேண்டும்.

30. 1992-ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களை அழிக்காமல், அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் எனக் கண்டறிந்த குசுமா ராஜய்யா கீழ்க்கண்ட எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்.

A) தமிழ்நாடு

B) கர்நாடகா

C) தெலுங்கானா

D) ஆந்திரப் பிரதேசம்

விளக்கம்: இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர் 1992-ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களை அழிக்காமல், அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். ஆனால், மென்மையான முறை ஒன்றை உருவாக்கினார். இந்தப் பட்டு, மனித நேயத்தின் அடிப்படையில் பாரம்பரிய முறைகளைத் தாண்டி உருவாக்கப்பட்டதாகும். எனவே இது அகிம்சைப்பட்டு அல்லது அமைதிப்பட்டு என்று அழைக்கப்படுகிறது.

31. கீழ்க்கண்டவற்றுள் கம்பளியின் வகைகளுல் பொருந்தாதது எது?

A) ஆல்பக்கா

B) பைபர்

C) மோகிர்

D) டசார்

விளக்கம்: ஆல்பக்கா, பைபர், மோகிர், கேஸ்மீரே, மற்றும் ஆட்டுக்குட்டிக் கம்பளி போன்றவை கம்பளியின் வகைகளாகும்.

32. கீழ்க்கண்டவற்றுள் பட்டின் வகைகளுல் பொருந்தாதது எது.

A) எரிப்பட்டு

B) முகா பட்டு

C) பைபர் பட்டு

D) சிலந்திப்பட்டு

விளக்கம்: எரிப்பட்டு, முகா பட்டு, சிலந்திப்பட்டு போன்றவை பட்டின் வகைகளாகும். பட்டுப் பூச்சிகளை வளர்த்து பட்டு நூலை உருவாக்கும் முறை பட்டுப்புழு வளர்ப்பு எனப்படும். இது அதிகப் பட்டு இழைகளைப் பெறுவதற்காக ஏராளமான பட்டுப்பூச்சிகளை வளர்க்கும் முறை ஆகும்.

33. விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றிப் படிக்கும் பிரிவு_________

A) அனிமல் ஹஸ்பன்ட்ரி

B) அனிமாலஜி

C) விலங்கு வளர்ப்பு

D) A மற்றும் C

34. விலங்குகளைத் துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்க 1960-ஆம் ஆண்டு நான்கு புதிய சட்டங்களை கொண்டுவந்த அமைச்சகம்.

A) உலக சுகாதார நிறுவனம்

B) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்

C) உலக வேளாண் ஆராய்ச்சி கழகம்

D) காடு மற்றும் தட்ப வெப்பநிலை மாற்றம் சார்ந்த அமைச்சகம்

Previous page 1 2 3 4 5 6 7 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin