Science Questions

7th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2

7th Science Lesson 15 Questions in Tamil

15] அன்றாட வாழ்வில் வேதியியல்

1. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) 1972 ஆம்ஆண்டு மேற்கு வங்காள மக்கள் காலராவினால் பாதிக்கப்பட்டனர்.

b) அவர்களுக்கு வாய்வழி நீரேற்று கரைசல் Oral Rehydration Solution (ORS) உட்கொள்ள செய்ததினால் அவர்களின் இறப்புவிகிதம் 3% லிருந்து 50% சதவீதமாக அதிகரித்தது.

A) a சரி b தவறு

B) a, b சரி

C) a தவறு b சரி

D) a, b தவறு

விளக்கம்: 1971 ஆம்ஆண்டு வங்கதேசத்தில் மக்கள் காலராவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வாய்வழி நீரேற்று கரைசல் Oral Rehydration Solution (ORS) உட்கொள்ள செய்ததினால் அவர்களின் இறப்புவிகிதம் 50% லிருந்து 3% சதவீதமாக குறைந்தது.

2. எந்த இந்திய மருத்துவர் ORS இன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார்?

A) திலீப் மஹாலபாபைஸ்

B) ராமகிருஷ்ணன் மூர்த்தி

C) திலீப் மல்லையா

D) திலீப் கிருஷ்ணன்

விளக்கம்: இந்திய மருத்துவரான திலீப் மஹாலபாபைஸ் என்பவர், 1971 – 72 ஆம் ஆண்டு ORS இன் முக்கியத்துவத்தை மக்களுக்குக் எடுத்துரைத்தார்.

3. எங்கு ஏற்பட்ட காலரா தொற்றின் போது திலீப் மஹாலபாபைஸ் செய்த களச்சோதனையில் ORS சிகிச்சை முக்கிய பங்கு வகித்தது?

A) நாகலாந்து

B) மேகாலயா

C) மணிப்பூர்

D) மகாராஷ்டிரா

விளக்கம்: மணிப்பூரில் ஏற்பட்ட காலரா தொற்றின் போது திலீப் மஹாலபாபைஸ் செய்த களச்சோதனையில் ORS சிகிச்சை முக்கிய பங்கு வகித்தது.

4. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) நல்ல ஆரோக்கியமாக உள்ள மனிதனின் குடலில், சாதாரணமாக 30 லிட்டர் தண்ணீரானது குடல்சுவர் வழியாகச் சென்று தொடர் பரிமாற்றம் நிகழ்கின்றது.

b) கிட்டத்தட்ட ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் நீரானது மீண்டும் உறிஞ்சப்படுகிறது.

c) இந்த வழிமுறையின் மூலம் செறிக்கப்பட்ட உணவிலிருந்து கரையக்கூடிய உயிரினக் கழிவுகள் (metabolites) இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.

A) a, b சரி c தவறு

B) a, b, c சரி

C) a, b தவறு c சரி

D) a தவறு b, c சரி

விளக்கம்: நல்ல ஆரோக்கியமாக உள்ள மனிதனின் குடலில், சாதாரணமாக 20 லிட்டர் தண்ணீரானது குடல்சுவர் வழியாகச் சென்று தொடர் பரிமாற்றம் நிகழ்கின்றது. கிட்டத்தட்ட ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் நீரானது மீண்டும் உறிஞ்சப்படுகிறது. இந்த வழிமுறையின் மூலம் செறிக்கப்பட்ட உணவிலிருந்து கரையக்கூடிய உயிரினக் கழிவுகள் (metabolites) இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.

5. கூற்று(A): வயிற்றுப்போக்கு காரணமாக, ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, நீர் வெளியேற்றப்பட்டு உடலானது திரவ சமநிலையை இழக்கின்றது.

காரணம்(R): இது நீர்ப்போக்கு என்று அழைக்கப்படுகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R விளக்கம்

விளக்கம்: வயிற்றுப்போக்கு காரணமாக, ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, நீர் வெளியேற்றப்பட்டு உடலானது திரவ சமநிலையை இழக்கின்றது. இது நீர்ப்போக்கு என்று அழைக்கப்படுகிறது.

6. ஒரு மனிதன் இறப்பது ____________ அன்று மாறாக, அதிக ____________ இறப்பு ஏற்படுகிறது.

A) வயிற்றுப்போக்கினால், நீர்ப்போக்கினால்தான்

B) நீர்ப்போக்கினால், வயிற்றுப்போக்கினால்தான்

C) வயிற்றுப்போக்கினால், நீரிழப்பினால்தான்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு மனிதன் இறப்பது வயிற்றுப்போக்கினால் அன்று மாறாக, அதிக நீர்ப்போக்கினால்தான் இறப்பு ஏற்படுகிறது.

7. உடலின் திரவத்தில் ____________ க்கும் அதிகமாக நீர் இழப்பு ஏற்பட்டால், மனிதனுக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

A) 20%

B) 30%

C) 10%

D) 15%

விளக்கம்: உடலின் திரவத்தில் 10% க்கும் அதிகமாக நீர் இழப்பு ஏற்பட்டால், மனிதனுக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

8. பொருத்துக

a) சோடியம் குளோரைடு – 1] 13.5 கிராம்/ லிட்டர்

b) குளுக்கோஸ் – 2] 2.9 கிராம்/ லிட்டர்

c) பொட்டாசியம் குளோரைடு – 3] 2.6 கிராம்/ லிட்டர்

d) ட்ரைசோடியம் சிட்ரேட் ஷட்ரோட் – 4] 1.5 கிராம்/ லிட்டர்

a b c d

A) 3 1 2 4

B) 4 1 2 4

C) 2 4 3 1

D) 3 1 4 2

9. ORS – ன் விரிவாக்கம் _________________.

A) Oral Rehydration Solution

B) Oxygen Reduction System

C) Office of Research Support

D) Oral Reduction System

விளக்கம்: ORS – Oral Rehydration Solution வாய்வழி நீரேற்று கரைசல்

10. பொருத்துக

a) சோடியம் – 1] 20 mno/ லிட்டர்

b) குளோரைடு – 2] 65 mno/ லிட்டர்

c) சிட்ரேட் – 3] 10 mno/ லிட்டர்

d) பொட்டாசியம் – 4] 75 mno/ லிட்டர்

a b c d

A) 4 2 3 1

B) 4 1 2 4

C) 2 4 3 1

D) 3 1 4 2

11. வாய்வழி நீரேற்று கரைசல் என்பது ______________, _____________,மற்றும் _____________ ஆகியவற்றின் கலவையாகும்.

A) நீர், சர்க்கரை, உப்பு

B) சர்க்கரை, நீர், உப்பு

C) உப்பு, சர்க்கரை, நீர்

D) நீர், உப்பு, சர்க்கரை

விளக்கம்: வாய்வழி நீரேற்று கரைசல் என்பது உப்பு, சர்க்கரை மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையாகும்.

12. கூற்று(A): வயிற்றுப் போக்கின்போது, உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.

காரணம்(R): நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரைச் சுரந்து வெளியேற்றுகின்றது. இதனல் வழக்கமானதை விட ஒரு நாளைக்குப் பல லிட்டர் நீர் இழப்பு ஏற்படுகின்றது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R விளக்கம்

விளக்கம்: வயிற்றுப் போக்கின்போது, உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரைச் சுரந்து வெளியேற்றுகின்றது. இதனல் வழக்கமானதைவிட ஒரு நாளைக்குப் பல லிட்டர் நீர் லிட்டா் நீா் இழப்பு ஏற்படுகின்றது.

13. ORS உடலில் அதிக வியர்வை, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை _________________ மற்றும் _________________, மூலம் மீட்டெடுத்து நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றது.

A) எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர்

B) நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள்

C) நீர் மற்றும் புரோஸ்டிடுகள்

D) எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் புரோஸ்டிடுகள்

விளக்கம்: ORS உடலில் அதிக வியர்வை, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் மூலம் மீட்டெடுத்து நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றது.

14. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) நமது குடலில் சரியான அளவு பொட்டாசியம் இருந்தால்தான் நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் நீரை உறிஞ்ச முடியும்.

b) குடல் சுவரில் போதிய அளவு உப்பு இல்லையெனில், குடல் உறிஞ்சிகளால் நமக்குத் தேவையான நீரை உறிஞ்ச முடியாது.

A) a சரி b தவறு

B) a, b சரி

C) a தவறு b சரி

D) a, b தவறு

விளக்கம்: நமது குடலில் சரியான அளவு சோடியம் இருந்தால்தான் நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் நீரை உறிஞ்ச முடியும். குடல் சுவரில் போதிய அளவு உப்பு இல்லையெனில், குடல் உறிஞ்சிகளால் நமக்குத் தேவையான நீரை உறிஞ்ச முடியாது.

15. நமது உடல் சரியாக இயங்குவதற்குச் _________________ போன்ற தாது உப்புகள் தேவைப்படுகின்றன.

A) பொட்டாசியம்

B) சோடியம்

C) குளோரைடு

D) சிட்ரேட்

விளக்கம்: நமது உடல் சரியாக இயங்குவதற்குச் சோடியம் போன்ற தாது உப்புகள்தேவைப்படுகின்றன.

16. வயிற்றுப் போக்கின்போது, நீரோடு சேர்ந்து _________________ மற்றும் _________________ போன்ற தாதுஉப்புகளையும் நமது உடல் இழக்கின்றது.

A) சோடியம், பொட்டாசியம்

B) சோடியம், குளோரைடு

C) பொட்டாசியம், குளோரைடு

D) பொட்டாசியம், சோடியம்

விளக்கம்: வயிற்றுப் போக்கின்போது, நீரோடு சேர்ந்து சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுஉப்புகளையும் நமது உடல் இழக்கின்றது.

17. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) செயற்கையான உப்பு நீர்க்கரைசலை (Saline Solution) நமது உடலில் செலுத்தும்போது தண்ணீர் மற்றும் சோடியம் ஆகியவை நேரடியாக இரத்த ஒட்டத்திற்கு மாற்றப்படுகின்றன.

b) சர்க்கரை நீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையோ, சோடியம் உப்பையோ உறிஞ்ச முடியாது.

c) குளுக்கோசுடன் உப்பைச் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை, சோடியம், குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் நமது உடல் எடுத்துக் கொள்ளும் என்பதை டாக்டர் திலீப் மஹாலபாபைஸ் கண்டுபிடித்தார்.

A) a சரி b, c தவறு

B) a, b, c சரி

C) a, c தவறு b சரி

D) a, b, c தவறு

விளக்கம்: செயற்கையான உப்பு நீர்க்கரைசலை (Saline Solution) நமது உடலில் செலுத்தும்போது தண்ணீர் மற்றும் சோடியம் ஆகியவை நேரடியாக இரத்த ஒட்டத்திற்கு மாற்றப்படுகின்றன. உப்பு நீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையோ, சோடியம் உப்பையோ உறிஞ்ச முடியாது. குளுக்கோசுடன் உப்பைச் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது நீர், உப்பு, குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் நமது உடல் எடுத்துக் கொள்ளும் என்பதை டாக்டர் திலீப் மஹாலபாபைஸ் கண்டுபிடித்தார்.

18. கூற்று(A): சோடியம் அயனியானது, செறிவின் அடிப்படையில் நமது உடல் செல்லிற்குள் செல்கின்றது.

காரணம்(R): வயிற்றுப் போக்கின்போது நமது குடல் குளுக்கோஸ் மற்றும் நீர் மூலக்கூறுகளை உறிஞ்ச முடியும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R விளக்கம்

விளக்கம்: சோடியம் அயனியானது, செறிவின் அடிப்படையில் நமது உடல் செல்லிற்குள் செல்கின்றது. வயிற்றுப் போக்கின்போது நமது குடல் குளுக்கோஸ் மற்றும் உப்பு மூலக்கூறுகளை உறிஞ்ச முடியும்.

19. கூற்று(A): சோடியம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை நம் சிறுகுடலுடன் இணைந்து இடம் பெயர்கின்றன

காரணம்(R): இது குளுக்கோஸ் தட்டுப்பாட்டைப் போக்கி, நீர் உறிஞ்சும்தன்மையை துரிதப்படுத்துகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R விளக்கம்

விளக்கம்: சோடியம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை நம் சிறுகுடலுடன் இணைந்து இடம் பெயர்கின்றன. இது குளுக்கோஸ் தட்டுப்பாட்டைப் போக்கி, நீர் உறிஞ்சும்தன்மையை துரிதப்படுத்துகிறது. இந்தச் செயல்பாடானது, இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவ முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

20. அமிலத்தன்மை என்பது _________________ அதிகமாகச் சுரக்கும் அமிலத்தின் காரணமாக ஏற்படும் அறிகுறிகளாகும்.

A) கல்லீரல்

B) மண்ணீரல்

C) சிறுநீரகம்

D) இரைப்பை

விளக்கம்: அமிலத்தன்மை என்பது இரைப்பையில் அதிகமாகச் சுரக்கும் அமிலத்தின் காரணமாக ஏற்படும் அறிகுறிகளாகும்.

21. கூற்று(A): நமது வயிறு இயற்கையாகவே இரைப்பை நீர் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் (HCl) சுரந்து, உணவைச் சிறிய துகள்களாக்கி, செரிமானம் செய்ய உதவுகின்றது.

காரணம்(R): அமில உணவுகள், கார உணவுகள், குடிப்பழக்கம், நீரிழிவு மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றின் காரணமாக அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரக்கின்றது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: நமது வயிறு இயற்கையாகவே இரைப்பை நீர் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் (HCl) சுரந்து, உணவைச் சிறிய துகள்களாக்கி, செரிமானம் செய்ய உதவுகின்றது. அமில உணவுகள், கார உணவுகள், குடிப்பழக்கம், நீரிழிவு மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றின் காரணமாக அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரக்கின்றது.

22. நமது வயிற்றுப் புறணிச் செல்கள் _________________ முதல் _________________ வரையிலான pH கொண்ட அமிலத்தைத் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

A) 1 முதல் 5

B) 2 முதல் 4

C) 1 முதல் 3

D) 1 முதல் 2

விளக்கம்: நமது வயிற்றுப் புறணிச் செல்கள் ஒன்று முதல் மூன்று வரையிலான pH கொண்ட அமிலத்தைத் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

23. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) நமக்கு அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகும்போது எடுத்துக்கொள்ளும் மருந்திற்கு ஆன்டாசிட் என்று பெயர்

b) இவை ஒரு வலுவற்ற காரங்களாகும்

c) ஆண்டாசிட் மருந்துகளை உட்கொள்ளும்போது வேதிவினை நிகழ்ந்து குறைந்த அரிக்கும் தன்மைவாய்ந்ததாக மாறுகின்றது.

A) a சரி b, c தவறு

B) a, b, c சரி

C) a, c தவறு b சரி

D) a, b, c தவறு

விளக்கம்: நமக்கு அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகும்போது எடுத்துக்கொள்ளும் மருந்திற்கு ஆன்டாசிட் என்று பெயர். இவை ஒரு வலுவற்ற காரங்களாகும்ஆண்டாசிட் மருந்துகளை உட்கொள்ளும்போது வேதிவினை நிகழ்ந்து குறைந்த அரிக்கும் தன்மைவாய்ந்ததாக மாறுகின்றது.

24. கீழ்க்கண்டவற்றுள் அமில நீக்கிகள் எவை

A) சோடியம் பை கார்பனேட் (NaHCO3)

B) கால்சியம் கார்பனேட் (CaCO3)

C) மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு (Mg(OH)2)

D) இவை அனைத்தும்

விளக்கம்: பெரும்பாலான அமில நீக்கிகள், சோடியம் பை கார்பனேட் (NaHCO3), கால்சியம் கார்பனேட் (CaCO3), மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு (Mg(OH)2), மெக்னீசியம் கார்பனேட் (MgCO3) மற்றும் அலுமினியம் ஹைட்ராக்ஸைடு Al(OH)3 ஆகியவை ஆகும்.

25. Mg (OH)2 + 2 HCl —–>

A) MgCl2 + 2 H2O

B) MgCl + 2 H2O

C) MgCl + H2O

D) MgCl2 + H2O

விளக்கம்: மெக்னீசியம் ஹைட்ராக்சைடு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நடுநிலையாக்கும்பொழுது ஏற்பட்ட வினையானது; Mg (OH)2 + 2 HCl —–> MgCl2 + 2 H2O

26. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை.

a) ப்ளம்பிங் தம்முடைய பரிசோதனையில் ஸ்ட்ரிப்டோகாக்கஸ், மெனிங்கோகாக்கஸ், டிப்தீரியா பேசிலஸ் போன்ற பரவலான தீங்கு விளைவிக்க கூடிய பாக்ட்ரியாக்களை ஈடுபடுத்தினார்.

b) உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்து பென்சிலியம்நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து கண்டறியப்பட்டது

c) பண்டைய சீனர்கள் காயமடைந்த இடத்திற்கு ரொட்டி பூஞ்சை பயன்படுத்தினர்

d) பிளம்பிங் பென்சிலின் மருந்து கண்டுபுடித்த பிறகு முதலாம் உலக போரில் காயமடைந்த வீரர்களுக்கு பென்சிலின் பயன்படுத்தப்பட்டது.

A) a சரி b, c, d தவறு

B) a, b, c, d சரி

C) a, c தவறு b சரி

D) a, b, சரி c, d தவறு

விளக்கம்: ப்ளம்பிங் தம்முடைய பரிசோதனையில் ஸ்ட்ரிப்டோகாக்கஸ், மெனிங்கோகாக்கஸ், டிப்தீரியா பேசிலஸ் போன்ற பரவலான தீங்கு விளைவிக்க கூடிய பாக்ட்ரியாக்களை ஈடுபடுத்தினார். உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்து பென்சிலியம்நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து கண்டறியப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் காயமடைந்த இடத்திற்கு ரொட்டி பூஞ்சை பயன்படுத்தினர். ப்ளம்பிங் பென்சிலின் மருந்து கண்டுபுடித்த பிறகு இரண்டம் உலக போரில் காயமடைந்த வீரர்களுக்கு பென்சிலின் பயன்படுத்தப்பட்டது.

27. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) சில தாவரங்களும் நுண்ணுயிரிகளும் நச்சு தன்மையுள்ள பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இந்த பொருள்கள் மற்ற உயிரினங்களை அழிக்க உதவுகின்றன.இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என அழைக்கப்படுகின்றன

b) இன்று பல மருந்து தொழிற்சாலைகள் ஆண்டிபயாடிக் மருந்துகளை செயற்கையாக உற்பத்தி செய்கின்றன.

c) உதாரணம்: குளோரபினிகால், v ஆண்டிபயாடிக்

A) a, b சரி c தவறு

B) a, b, c சரி

C) a, c தவறு b சரி

D) a, b, c தவறு

விளக்கம்: சில தாவரங்களும் நுண்ணுயிரிகளும் நச்சு தன்மையுள்ள பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இந்த பொருள்கள் மற்ற உயிரினங்களை அழிக்க உதவுகின்றன.இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என அழைக்கப்படுகின்றன. இன்று பல மருந்து தொழிற்சாலைகள் ஆண்டிபயாடிக் மருந்துகளை செயற்கையாக உற்பத்தி செய்கின்றன. உதாரணம்: குளோரபினிகால், டெட்ராசைக்ளின்

28. ________ ஆன்டிபயாட்டிக்குகள் தவிர செயற்கை முறையில் பல ஆண்டிபயாடிக்குகளை நம்மால் உருவாக்க முடியும்.

A) B ஆன்டிபயாட்டிக்குகள்

B) v ஆன்டிபயாட்டிக்குகள்

C) T ஆன்டிபயாட்டிக்குகள்

D) P ஆன்டிபயாட்டிக்குகள்

விளக்கம் : v ஆண்டிபையோட்டிக்கள் தவிர செயற்கை முறையில் பல ஆண்டிபயாடிக்குகளை நம்மால் உருவாக்க முடியும்.

29. ஆஸ்பிரின் ஒரு _________

A) ஆண்டிபயாடிக்

B) ஆண்டிபைரடிக்

C) மயக்க மருந்து

D) சைக்கீடெலிக்

விளக்கம்: நன்கு அறியப்பட்ட ஆன்டிபைரடிக் ஆஸ்பிரின்

30. _________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது

A) அமிலநீக்கி

B) ஆண்டிபைரடிக்

C) வலிநிவாரணி

D) ஆண்டிஹிஸ்டமின்

31. கூற்று(A): ஒரு நபர் தொடர்ந்து ஆன்டிசெப்டிக் எடுத்துக்கொள்ளும் பொது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாடு அதிகரிக்கும்

காரணம்(R): இதற்கு மாற்றாக அவர் வீரியம் மிகுந்த மருந்துகளை உட்கொள்ள நேரிடும்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: ஒரு நபர் தொடர்ந்து ஆண்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் பொது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாடு குறைகிறது. இதற்கு மாற்றாக அவர் வீரியம் மிகுந்த மருந்துகளை உட்கொள்ள நேரிடும்

32. சளி மற்றும் புளு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரசுகளுக்கு _________ மருந்துகள் வேலை செய்வதில்லை

A) ஆன்டிசெப்டிக்

B) பென்சிலின்

C) ஆண்டிபயாடிக்

D) வலி நிவாரணி

விளக்கம்: சளி மற்றும் புளு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரசுகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்வதில்லை

33. கூற்று(A): வலி உணரப்படும் புள்ளியிலிருந்து வரும் தகவலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக மூளையும் தகவல் தர தொடங்கும் முறையே நிவாரணத்தின் தொடக்கம் ஆகும்

காரணம்(R): வலியை அடக்கும், குறைக்கும் வேதிப்பொருளை வெளியேற்றுவது மற்றும் கூடுதலான வெள்ளை ரத்த அணுக்களையும் ரத்த தட்டுகளையும் காயம் பட்ட இடத்திற்கு ஆகிய செயல்கள் மூலம் நிவாரண முறை தொடங்கும்

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: வலி உணரப்படும் புள்ளியிலிருந்து வரும் தகவலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக மூளையும் தகவல் தர தொடங்கும் முறையே நிவாரணத்தின் தொடக்கம் ஆகும். வலியை அடக்கும், குறைக்கும் வேதிப்பொருளை வெளியேற்றுவது மற்றும் கூடுதலான வெள்ளை ரத்த அணுக்களையும் ரத்த தட்டுகளையும் காயம் பட்ட இடத்திற்கு ஆகிய செயல்கள் மூலம் நிவாரண முறை தொடங்கும்.

34. கூற்று(A): வலிநிவாரணிகள் அல்லது வலிநீக்கிகள் என்பன நமது உடலிருந்து வெளியாகும் வலிகுறைக்கும் உயிரிப்பொருளாகும்

காரணம்(R): மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டோ அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் அதிக மாற்றம் இல்லாத, நிலையில் குறிப்பாக வலிநீக்கிகள் செயல்படுகின்றன

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A தவறு மற்றும் R சரி

விளக்கம்: வலிநிவாரணிகள் அல்லது வலிநீக்கிகள் என்பன நமது உடலிருந்து வெளியாகும் வலிகுறைக்கும் வேதிப்பொருளாகும். மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டோ அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் அதிக மாற்றம் இல்லாத, நிலையில் குறிப்பாக வலிநீக்கிகள் செயல்படுகின்றன

35. கூற்று(A): காய்ச்சலில் அவதியுறும்பொழுது நாம் பாராசிட்டாமால் உட்கொள்கிறோம்

காரணம்(R): பாராசிட்டமால் நமது உடலில் ஏற்பிகளுடன் தொடர்பு கொண்டு, மூளைக்கு அனுப்பப்படும் வலியின் தீவிரத்தைக் குறைத்தும், வலி மற்றும் உடல்வெப்பநிலையை அதிகரிக்கும் புரோஸ்டாகிளான்டின்களின் அளவைக் கட்டுப்படுத்தியும் செயல்படுகின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: காய்ச்சலில் அவதியுறும்பொழுது நாம் பாராசிட்டாமால் உட்கொள்கிறோம். பாராசிட்டமால் நமது உடலில் ஏற்பிகளுடன் தொடர்பு கொண்டு, மூளைக்கு அனுப்பப்படும் வலியின் தீவிரத்தைக் குறைத்தும், வலி மற்றும் உடல்வெப்பநிலையை அதிகரிக்கும் புரோஸ்டாகிளான்டின்களின் அளவைக் கட்டுப்படுத்தியும் செயல்படுகின்றன.

36. முதல் மயக்கமூட்டும் மருந்தினை கண்டறிந்தவர்

A) ஆல்பர்ட் நீம்மானின்

B) எட்வர்ட் ஜென்னர்

C) ராபர்ட் கோச்

D) ராபர்ட் நீல்

விளக்கம்: 1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்

37. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) போதைத் தன்மையற்ற (சேர்த்திகள் அற்ற) வலி நீக்கிகள், எடுத்துக்காட்டாக, கோடீன்

b) போதைத்தன்மை வாய்ந்த வலிநீக்கிகள் எடுத்துக்காட்டாக, ஆஸ்பிரின்

A) a, b சரி

B) a சரி b தவறு

C) a தவறு b சரி

D) a, b தவறு

விளக்கம்: போதைத் தன்மையற்ற (சேர்த்திகள் அற்ற) வலி நீக்கிகள், எடுத்துக்காட்டாக, ஆஸ்பிரின். போதைத்தன்மை வாய்ந்த வலிநீக்கிகள் எடுத்துக்காட்டாக, கோடீன்

38. சாதாரணமாக மனித உடலின் வெப்பநிலையானது _________முதல் _________ டிகிரி பாரன்ஹீட்வரை இருக்கும்.

A) 98.6, 98.7

B) 98.4, 98.6

C) 98.5, 98.6

D) 98.3, 98.4

விளக்கம்: சாதாரணமாக மனித உடலின் வெப்பநிலையானது 98.4 முதல் 98.6 டிகிரி பாரன்ஹீட்வரை இருக்கும்.வெப்பமானது இந்த நிலைக்கு மேலே சென்றால் அது காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

39. கூற்று(A): காய்ச்சல் வருவதற்கு பொதுவான காரணம் நோய்த்தொற்றாகும்.

காரணம்(R): நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வளர முடியாது. எனவே படையெடுக்கும் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச்செய்திறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: காய்ச்சல் வருவதற்கு பொதுவான காரணம் நோய்த்தொற்றாகும். நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வளர முடியாது. எனவே படையெடுக்கும் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச்செய்திறது.

40. நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது _________ என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது.

A) பைரோஜன்

B) புரோஸ்டாகிளான்டின்

C) ஹைப்போதாலமஸ்

D) வெள்ளை அணுக்கள்

விளக்கம்: நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது.

41. நம் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது எது?

A) புரோஸ்டாகிளான்டின்

B) பைரோஜன்கள்

C) ஹைப்போதாலமஸ்

D) வெள்ளை அணுக்கள்

விளக்கம்: ஹைப்போதாலமஸின் பணி நம் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதாகும்.

42. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது ஹைப்போதாலமஸ் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இரத்த ஓட்டத்தின் மூலமாக இந்த ஹைப்போதாலமஸ் மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பைரோஜனை சென்றடைகின்றன

b) பைரோஜன்கள் ஹைப்போதாலமஸை சென்றடைந்தவுடன் புரோஸ்டாகிளான்டின் என்ற வேதிப்பொருளை வெளியிடுகின்றது, இது நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்க காரணமாகின்றது

A) a, b சரி

B) a சரி b தவறு

C) a தவறு b சரி

D) a, b தவறு

விளக்கம்: நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இரத்த ஓட்டத்தின் மூலமாக இந்த பைரோஜன்கள் மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் ஹைப்போதாலமஸை சென்றடைகின்றன. பைரோஜன்கள் ஹைப்போதாலமஸை சென்றடைந்தவுடன் புரோஸ்டாகிளான்டின் என்ற வேதிப்பொருளை வெளியிடுகின்றது, இது நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்க காரணமாகின்றது

43. உடல் வெப்பநிலை _________ பாரன்ஹீட்டைவிட அதிகரிக்கும்போது புரதம் மற்றும் மூளையை தாக்கி நடுக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது

A) 106 டிகிரி

B) 105 டிகிரி

C) 107 டிகிரி

D) 104 டிகிரி

விளக்கம்: உடல் வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட்டைவிட அதிகரிக்கும்போது புரதம் மற்றும் மூளையை தாக்கி நடுக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்டநாள் காய்ச்சலானது சில நேரங்களில் மரணத்தைகூட உண்டாக்கும்.

44. கூற்று(A): ஆன்டிபைரடிக்ஸ் என்பது காய்ச்சலை குறைக்கும் ஒரு வேதிப் பொருளாகும்.

காரணம்(R): இவை புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை ஒடுக்கி காய்ச்சலை குறைக்கின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: ஆன்டிபைரடிக்ஸ் என்பது காய்ச்சலை குறைக்கும் ஒரு வேதிப் பொருளாகும். இவை புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை ஒடுக்கி காய்ச்சலை குறைக்கின்றன.

45. கீழ்க்கண்டவற்றுள் எவை ஆன்டிபைரடிக் ஆகும்.

A) ஆஸ்பிரின்

B) இபுருஃபன்

C) டைக்ளோபினாக்

D) இவை அனைத்தும்

விளக்கம்: பாரசிட்டமால் மிகவும் பொதுவான, நன்கு அறியப்பட்ட ஆன்டிபைரடிக் ஆகும். இது தவிர ஆஸ்பிரின், இபுருஃபன், டைக்ளோபினாக் ஆகியவை உடல் வெப்பம் தனிப்பி மற்றும் அழற்சி நீக்கியாகும்.

46. தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேல்புறம் பயன்படுத்தப்படும் மருந்து எது?

A) ஆண்டிசெப்டிக்

B) ஆன்டிபயாடிக்

C) அனலகேசிஸ்

D) கிருமிநாசினி

விளக்கம்: தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேல்புறம் பயன்படுத்தப்படும் மருந்து ஆண்டிசெப்டிக் என்று அழைக்கப்படுகின்றது.

47. கூற்று(A): ஆண்டிசெப்டிக் பாக்டீரியாக்களின் கூட்டமைப்புகள், பூஞ்சைகள், வைரஸ்கள் அல்லது பிற நுண்ணுயிரிகளின் கலவைகளைத் தீவிரமாக எதிர்க்கும் ஆற்றலைப்பெற்றுள்ளது.

காரணம்(R): குளியல் சோப், ஐயோடோபார்ம், பினாலிக்நீர்மங்கள், எத்தனால், போரிக்அமிலம் ஆகியன ஆண்டிசெப்டிக்கு உதாரணங்களாகும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: ஆண்டிசெப்டிக் பாக்டீரியாக்களின் கூட்டமைப்புகள், பூஞ்சைகள், வைரஸ்கள் அல்லது பிற நுண்ணுயிரிகளின் கலவைகளைத் தீவிரமாக எதிர்க்கும் ஆற்றலைப்பெற்றுள்ளது. குளியல் சோப், ஐயோடோபார்ம், பினாலிக்நீர்மங்கள், எத்தனால், போரிக்அமிலம் ஆகியன ஆண்டிசெப்டிக்கு உதாரணங்களாகும்.

48. கீழ்க்கண்டவற்றுள் எவை இயற்கை ஆண்டிசெப்டிக் ஆகும்

a) சோற்றுகற்றாலை

b) மஞ்சள்

c) முள்ளங்கி

d) வெங்காயம்

A) a, b சரி c, d தவறு

B) a, b, c தவறு d சரி

C) a, c, d தவறு b சரி

D) a, b, c, d சரி

விளக்கம்: இயற்கை ஆண்டிசெப்டிக் 1. பூண்டு, 2. மஞ்சள், 3. சோற்றுகற்றாலை 4. வெங்காயம், 5. முள்ளங்கி

49. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) கிருமி நாசினி ஐயோடஃபார்ம் டெர்பென்கள் ஆகியவை சேர்ந்த கலவையாகும்

b) அயோடின் (Tincture) அயோடின் + 2 to 3% ஆல்ஹகால் – நீர்கலந்த சோப்பு கரைச ல் , ஐயோடஃபார்ம், பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்

A) a, b சரி

B) a சரி b தவறு

C) a தவறு b சரி

D) a, b தவறு

விளக்கம்: கிருமி நாசினி குளோரோசைலெனோல் மற்றும் டெர்பென்கள் ஆகியவை சேர்ந்த கலவையாகும். அயோடின் (Tincture) அயோடின் + 2 to 3% ஆல்ஹகால் – நீர்கலந்த சோப்பு கரைசல், ஐயோடஃபார்ம், பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்.

50. ஒவ்வாமை பாதிப்புகளை ஏற்படுத்துவதற்குச் சில எடுத்துக்காட்டுகள் எவை?

A) நமது நாசியில் நுழையும் தாவரங்களின் மகரந்தத் தூள்

B) எரியும் தாவர இலை

C) சில கரிம பொருள்களின் வாசனை போன்ற பொருள்கள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: நமது நாசியில் நுழையும் தாவரங்களின் மகரந்தத் தூள், எரியும் தாவர இலை மற்றும் சில கரிம பொருள்களின் வாசனை போன்ற பொருள்கள் ஒவ்வாமை பாதிப்புகளை ஏற்படுத்துவதற்குச் சில எடுத்துக்காட்டுகளாகும்.

51. கூற்று(A): ஒவ்வாமை என்பது, உடலின் எதிர்வினையாகும்.

காரணம்(R): இது, பாதகமான விளைவுகளான வாய் வறட்சி மற்றும் தூக்கத்தை ஏற்படுத்துகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: ஒவ்வாமை என்பது, உடலின் எதிர்வினையாகும். இது, பாதகமான விளைவுகளான வாய் வறட்சி மற்றும் தூக்கத்தை ஏற்படுத்துகிறது.

52. கீழ்க்கண்டவற்றுள் ஒவ்வாமைக்கு எடுத்துக்காட்டு எது?

a) டிஃபென்ஹைட்ரமைன்

b) குளோர்பெனிரமைன்

c) சிமெடிடின்

d) மெனிங்கோகாக்கஸ்

A) a, b, c சரி

B) a சரி b, c தவறு

C) a, b தவறு b சரி

D) a, b, c சரி d தவறு

விளக்கம்: டிஃபென்ஹைட்ரமைன், குளோர்பெனிரமைன், சிமெடிடின். ஆண்டிஹிஸ்டமினிக்ஸின் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.

53. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) ஆண்டிசெப்டிக் அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் அல்ல

b) இது நேரடியாக உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தப்படுகிறது.

c) எ.கா. தோல் / சளி

A) a, b, c சரி

B) a, c சரி b தவறு

C) a தவறு b, c சரி

D) a, b, c தவறு

விளக்கம்: அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் ஆகும். இது நேரடியாக உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தப்படுகிறது. எ.கா. தோல் / சளி

54. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை.

a) அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் அல்ல.

b) இது உயிருள்ள பொருள் மீது தெளிக்கலாம்.

c) எ.கா. மேற்பரப்பு, ஆய்வக மேசை, தரைகள்.

A) a, b, c சரி

B) a, b சரி c தவறு

C) a தவறு b, c சரி

D) a, b, c தவறு

விளக்கம்: அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் அல்ல. இது உயிரற்ற பொருள் மீது தெளிக்கலாம். எ.கா. மேற்பரப்பு, ஆய்வக மேசை, தரைகள்

55. மருந்தை உட்கொள்ளும் வழிகள் யாவை?

A) வாய்வழி பயன்பாடு

B) வெளிப்புற பயன்பாடு

C) ஊசி மருந்துகள் (உள் தசை / உள் சிரை)

D) இவை அனைத்தும்

விளக்கம்: மருந்தை உட்கொள்ள பல வழிகள் உள்ளன. அவையாவன 1. வாய்வழி பயன்பாடு, 2. வெளிப்புற பயன்பாடு, 3. ஊசி மருந்துகள் (உள் தசை / உள் சிரை). நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் நம் நோய்க்கு சிகிச்சையளித்து நல்ல உடல்நலத்தைக் கொடுக்கினறன

56. ஹிஸ்டாமைன் என்பது _________

A) ஒவ்வாமை பாதிப்பு

B) படர்தாமரை

C) அலர்ஜி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: சில நேரங்களில் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் தீங்கான பொருள் என்று அவற்றை உடலில் ஏற்றுக்கொள்வது கிடையாது. இந்த வகையான நோய் எதிர்ப்பு அமைப்பு ஒவ்வாமை பாதிப்பு (ஹிஸ்டாமைன்) என்றழைக்கப்படும்.

57. கூற்று(A): எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும்.

காரணம்(R): இவற்றில் வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளியும் வெளியிடப்படும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும். இவற்றில் வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளியும் வெளியிடப்படும்

58. கூற்று(A): எரிதல் மனிதர்களால் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட முதல் இயற்பியல் வினைகளில் ஒன்றாகும்.

காரணம்(R): ஆக்ஸிஜனுடன் வினை புரியும் எந்த நிகழ்வும் ஆக்ஸிஜனேற்ற வினை என்று அழைக்கப்படுகிறது

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: எரிதல் மனிதர்களால் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட முதல் இரசாயன வினைகளில் ஒன்றாகும். ஆக்ஸிஜனுடன் வினை புரியும் எந்த நிகழ்வும் ஆக்ஸிஜனேற்ற வினை என்று அழைக்கப்படுகிறது

59. CH4+2O2

A) CO2+2H2O + வெப்ப ஆற்றல்

B) CO+ H2O + வெப்ப ஆற்றல்

C) CO2 + H2 + நீர்

D) CO2+ 2H2O + நீர்

விளக்கம்: ஆக்ஸிஜனுடன் ஹைட்ரோகார்பனை எரிப்பதில், பொதுவாகக் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் உற்பத்தி செய்யப்படுகின்றன

60. அனைத்து எரிதல் வினையின்போது, வெப்பம் வெளியிடப்படுவதால் அவை _________ எனப்படும்

A) வெப்ப உமிழ்வினை

B) வெப்ப கொள்வினை

C) வெப்பவினை

D) உமிழ்வினை

விளக்கம்: அனைத்து எரிதல் வினையின்போது, வெப்பம் வெளியிடப்படுவதால் இது வெப்ப உமிழ்வினை எனப்படுகிறது.

61. கூற்று(A): மிகக் குறைந்த எரிவெப்பநிலையைக் கொண்ட பொருள்கள் எளிதில் தீபிடிக்கக்கூடியவை

காரணம்(R): இவை எரியக்கூடிய பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: மிகக் குறைந்த எரிவெப்பநிலையைக் கொண்ட பொருள்கள் எளிதில் தீபிடிக்கக்கூடியவை. இவை எரியக்கூடிய பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.

62. தீப்பிடித்தலின் வேதிவினை எது?

A) ஆக்ஸிஜன் + வெப்பம் + எரிபொருள் = தீ

B) வெப்பம்+ ஆக்ஸிஜன்+ எரிபொருள்= தீ

C) ஆக்ஸிஜன்+ எரிபொருள்+ வெப்பம்= தீ

D) எரிபொருள்+ ஆக்ஸிஜன்+ வெப்பம்= தீ

விளக்கம்: தீப்பிடித்தலின் வேதிவினை ஆக்ஸிஜன் + வெப்பம் + எரிபொருள் = தீ

63. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான அதிகபட்ச வெப்பநிலை, அதன் எரி வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது. எ.கா. மத்தாப்பு எரிதல்

b) ஒரு பொருள் அதன் எரி வெப்பநிலையைவிடக் குறைவாக இருந்தால் தீ பிடிக்காது

A) a, b சரி

B) a சரி b தவறு

C) a தவறு b சரி

D) a, b தவறு

விளக்கம்: ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலை, அதன் எரி வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது. எ.கா. மத்தாப்பு எரிதல். ஒரு பொருள் அதன் எரி வெப்பநிலையைவிடக் குறைவாக இருந்தால் தீ பிடிக்காது

64. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) சுடர் என்பது, ஒரு வேதிவினை மற்றும் வாயுக்களின் கலவையாகும்.

b) சுடரானது ஒளி மற்றும் வெப்பத்தைத் தருகிறது.

c) இது பருப்பொருள்

A) a, b சரி c தவறு

B) a சரி b, c தவறு

C) a, b, c சரி

D) a, b, c தவறு

விளக்கம்: சுடர் என்பது, ஒரு வேதிவினை மற்றும் வாயுக்களின் கலவையாகும். சுடரானது ஒளி மற்றும் வெப்பத்தைத் தருகிறது. இது பருப்பொருள் அன்று ஆனால், நெருப்பு ஒரு இது பருப்பொருள்

65. சுடரின் வேதிவினையாக கருதப்படுபவை எவை?

A) ஆவி நிலையிலுள்ள எரிபொருள்

B) ஆக்ஸிஜன்

C) கார்பன் டை ஆக்சைடு

D) இவை அனைத்தும்

விளக்கம்: ஆவி நிலையிலுள்ள எரிபொருள் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நீராவி மற்றும் பல எளிதில் ஆவியாகிற பொருள்கள் ஆகியவை சுடரின் வேதிவினையாக்க் கருதப்படுகின்றன.

66. பொருத்துக

a) வெண்மை சுடர் – 1] லித்தியம் உப்பு

b) ஊதா சுடர் – 2] எப்சம் உப்பு

c) இண்டிகோ சுடர் – 3] பிளீச்சிங்பவுடர்

d) நீல சுடர் – 4] பொட்டாசியம் குளோரைடு

a b c d

A) 4 2 3 1

B) 4 1 2 3

C) 2 1 4 3

D) 3 1 4 2

67. பொருத்துக

a) பச்சை சுடர் – 1. போராக்ஸ் பவுடர்

b) மஞ்சள் சுடர் – 2. சமையல் உப்பு

c) ஆரஞ்சு சுடர் – 3. கால்சியம் குளோரைடு

d) சிவப்பு சுடர் – 4. ஸ்டிரான்ஸ்யம் குளோரடு

a b c d

A) 4 2 3 1

B) 1 4 2 3

C) 2 1 4 3

D) 3 1 4 2

68. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) சுடர் என்பது, எரியக்கூடிய பொருளின் எரிதல் மண்டலமாகும்.

b) எரியும்போது ஆவியாகும் பொருள்கள் சுடரை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டு: .நிலக்கரி

c) சில பொருள்கள் சுடரை உருவாக்காது, ஏனெனில், அவை ஆவியாகாத பொருள்களைக் கொண்டுள்ளன. எ.கா மெழுகு, மண்ணெண்ணெய் போன்றவை ஆகும்.

A) a, b சரி c தவறு

B) a சரி b, c தவறு

C) a, b, c சரி

D) a, b, c தவறு

விளக்கம்: சுடர் என்பது, எரியக்கூடிய பொருளின் எரிதல் மண்டலமாகும். எரியும்போது ஆவியாகும் பொருள்கள் சுடரை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டு: மெழுகு, மண்ணெண்ணெய் போன்றவை ஆகும்.சில பொருள்கள் சுடரை உருவாக்காது, ஏனெனில், அவை ஆவியாகாத பொருள்களைக் கொண்டுள்ளன. எ.கா. நிலக்கரி

69. மெழுகு சுடரின் அமைப்பை அடையாளம் காணவும்

a) எரிபொருள் முழுமையான எரிதல் நடைபெறும் பகுதியாகும்.

b) இது நீலநிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும்.

c) இது சுடரின் ஒளிராத பகுதியாகும்.

A) சுடரின் உட்புற பகுதி

B) சுடரின் வெளிப்புறப் பகுதி

C) சுடரின் நடுப்பகுதி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: சுடரின் வெளிப்புறப் பகுதி: எரிபொருள் முழுமையான எரிதல் நடைபெறும் பகுதியாகும். இது நீலநிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும். இது சுடரின் ஒளிராத பகுதியாகும்.

70. மெழுகு சுடரின் அமைப்பை அடையாளம் காணவும்

a) எரிபொருள் குறைவாக எரிதல் நடைபெறும் பகுதியாகும்

b) இது மஞ்சள் நிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும்.

c) இது சுடரின் ஒளிரும் பகுதி

A) சுடரின் உட்புற பகுதி

B) சுடரின் வெளிப்புறப் பகுதி

C) சுடரின் நடுப்பகுதி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: சுடரின் நடுப்பகுதி: எரிபொருள் குறைவாக எரிதல் நடைபெறும் பகுதியாகும். இது மஞ்சள் நிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும். இது சுடரின் ஒளிரும் பகுதி

71. மெழுகு சுடரின் அமைப்பை அடையாளம் காணவும்

a) எரிபொருள் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதியாகும்

b) இது கருமை நிறம் கொண்ட

c) மிக குறைந்த வெப்பப்பகுதியாகும்

A) சுடரின் உட்புற பகுதி

B) சுடரின் வெளிப்புறப் பகுதி

C) சுடரின் நடுப்பகுதி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: எரிபொருள் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதியாகும். இது கருமை நிறம் கொண்ட மிக குறைந்த வெப்பப்பகுதியாகும்

72. கூற்று(A): மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது

காரணம்(R): வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல் எரியக்கூடிய காற்றின் அடா்த்தியானது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடா்த்தியைவிட குறைவாக இருப்பதால் சுடரானது எப்போழுதும் மேல்நோக்கி இருக்கின்றது

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது. வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல் எரியக்கூடிய காற்றின் அடா்த்தியானது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடா்த்தியைவிட குறைவாக இருப்பதால் சுடரானது எப்போழுதும் மேல்நோக்கி இருக்கின்றது

73. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

a) ஒரு கிலோ எரிபொருளானது முழுமையாக எரிதல் நடைபெற்று வெளியிடப்படும், வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரிஃபிக் மதிப்பு என்று அழைக்கப்படுகிறது.

b) கலோரிஃபிக் மதிப்பு = உற்பத்தி செய்யப்படும் வெப்பம் / எரிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு kg/ kJ

A) a சரி b தவறு

B) a, b தவறு

C) a, b சரி

D) a தவறு b சரி

விளக்கம்: ஒரு கிலோ எரிபொருளானது முழுமையாக எரிதல் நடைபெற்று வெளியிடப்படும், வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரிஃபிக் மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. கலோரிஃபிக் மதிப்பு = உற்பத்தி செய்யப்படும் வெப்பம் / எரிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு KJ/Kg

74. 4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து, உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 1, 80,000 கி.ஜே. என அளவிடப்படுகிறது என்றால் அதன் கலோரிஃபிக் மதிப்பு என்ன?

A) 45,000 KJ/Kg

B) 40,000 KJ/Kg

C) 50,000 KJ/Kg

D) 55,000 KJ/Kg

விளக்கம்: கலோரிஃபிக் மதிப்பு = 1, 80,000 / 4.5 = 40,000 KJ / Kg

75. பொருத்துக

a) மாட்டுச்சாணம் – 1] 17000-22000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)

b) மரக்கட்டை – 2] 6000-8000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)

c) நிலக்கரி – 3] 25000-33000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)

d) பெட்ரோல் – 4] 45000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)

a b c d

A) 4 2 3 1

B) 1 4 2 3

C) 2 1 3 4

D) 3 1 4 2

76. பொருத்துக

a) மண்எண்ணெய் – 1] 45000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)

b) டீசல் – 2] 450000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)

c) மீத்தேன் – 3] 500000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)

d) சி.என்.ஜி – 4] 50000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)

a b c d

A) 4 2 3 1

B) 1 2 3 4

C) 2 1 3 4

D) 3 1 4 2

விளக்கம்: எல்.பி.ஜி- 55000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg), பயோகேஸ்- 35000-40000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg), ஹைட்ரஜன்- 150000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)

77. சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதற்கு வழிவகுக்கிறது?

A) சுவாச பிரச்சனைக்கு வழிவகுக்கிறது

B) உலக வெப்பமயமாதல்

C) அமிலமழை

D) இவை அனைத்தும்

விளக்கம்: சுற்றுச்சூழல் பாதிப்புகள்: CO- சுவாச பிரச்சனைக்கு வழிவகுக்கிறது, CO2– உலக வெப்பமயமாதல், SO2/ NO2 – அமிலமழை

78. வேகமாக எரிதல் என்பது

A) சுவாசித்தல்

B) எல். பி. ஜி எரிதல்

C) பாஸ்பரஸ் எரிதல்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: வெளிப்புற வெப்பத்தின் உதவியுடன் பொருளானது வேகமாக எரிந்து வெப்ப ஆற்றலையும் ஒளியையும் உருவாகிறது

79. பாஸ்பரஸ் அறைவெப்பநிலையில் தன்னிச்சையாக எரிதல் என்பது

A) வேகமாக எரிதல்

B) தன்னிச்சையாக எரிதல்

C) மெதுவாக எரிதல்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: வெளிப்புற வெப்பத்தின் உதவியின்றி பொருளானது தன்னிச்சையாக எரிந்து வெப்பத்தையும் ஒளியையும் உருவாக்குகிறது

80. சுவாசித்தல் என்பது

A) மெதுவாக எரிதல்

B) வேகமாக எரிதல்

C) தன்னிச்சையாக எரிதல்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: பொருளானது குறைந்த வேகத்தில் எரிதல் மெதுவாக எரிதல் என்று பெயர்.

81. ஒரு நல்ல எரிபொருளின் பண்புகள்

a) சுற்றுசூழலை மாசுபடுத்ததாக இருத்தல் வேண்டும்

b) விரும்பத்தகுந்த எந்த ஒரு பொருளையும் வெளியிடுவதாக இருத்தல் வேண்டும்

c) அதிகமான வேகத்தில் எரிதல் வேண்டும்

d) குறைந்த அளவு வெப்பாற்றல் வழங்குவதாக இருத்தல் வேண்டும்

A) a, b சரி c, d தவறு

B) a சரி b, c, d தவறு

C) a, b, c, d சரி

D) a, b, c, d தவறு

விளக்கம்: சுற்றுசூழலை மாசுபடுத்ததாக இருத்தல் வேண்டும், விரும்பத்தகாத எந்த ஒரு பொருளையும் வெளியிடுவதாக இருத்தல் கூடாது, மிதமான வேகத்தில் எரிதல் வேண்டும், அதிகளவு வெப்பாற்றல் வழங்குவதாக இருத்தல் வேண்டும்.

82. நெருப்பை கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?

A) எரிபொருள்

B) காற்று (ஆக்ஜிஸன் வழங்க)

C) எரிதல் வெப்பநிலை

D) இவை அனைத்தும்

விளக்கம்: ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை அகற்றுவதன் மூலம் நெருப்பை கட்டுப்படுத்தலாம். எரிபொருள், காற்று (ஆக்ஜிஸன் வழங்க), எரிதல் வெப்பநிலை

83. கூற்று(A): ஒரு தீயணைப்பு கருவியானது காற்று அல்லது எரிபொருளின் வெப்பநிலையைக் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் விநியோகத்தையும் துண்டித்துவிடுகிறது.

காரணம்(R): ஆக்ஸிஜனை வினைபுரியாமல் தடுத்தல் அல்லது அகற்றுதல் மற்றும் வேதிவினை நிகழாமல் தடுத்தல் போன்ற விளைவுகளைச் செய்கிறது. அதனால், தொடர்ந்து எரிய முடியாமல் தீ தடுக்கப்படுகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A சரி மற்றும் R விளக்கம்

D) A மற்றும் R தவறு

விளக்கம்: ஒரு தீயணைப்பு கருவியானது காற்று அல்லது எரிபொருளின் வெப்பநிலையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் விநியோகத்தையும் துண்டித்துவிடுகிறது. தீயை அணைக்கும் கருவிகள், எரியும் எரிபொருளை குளிர்விக்கின்றது. ஆக்ஸிஜனை வினைபுரியாமல் தடுத்தல் அல்லது அகற்றுதல் மற்றும் வேதிவினை நிகழாமல் தடுத்தல் போன்ற விளைவுகளைச் செய்கிறது. அதனால், தொடர்ந்து எரிய முடியாமல் தீ தடுக்கப்படுகிறது.

84. ஒரு தீ அணைப்பான் _________ கருவிபோல செயல்படுகிறது.

A) பரிசோதனை கருவி

B) மருந்து அகற்றும் கருவி

C) மருந்து தெளிப்பான்

D) எதுவுமில்லை

விளக்கம்: ஒரு தீ அணைப்பான் மருந்து, தெளிப்பான் கருவிபோல செயல்படுகிறது.

85. தீயனைப்பான் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?

A) 1

B) 3

C) 2

D) 5

86. நிமோனியா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து எது?

A) ஸ்ட்ரெப்டோமைசின்

B) குளோரோம்பெனிகால்

C) பென்சிலின்

D) சல்பாகுனிடின்

87. உலக ORS தினம் _________

A) ஜூலை 29

B) ஜூலை 27

C) ஜூன் 29

D) ஜூன் 28

விளக்கம்: தீயனைப்பான் ஐந்து வகையாக வகைப்படுத்தப்டுகிறது.

88. தீயனைப்பானின் வகைகள் யாவை?

A) உலர்ந்த வேதித்துகள்கள்

B) நீர்ம இரசாயனங்கள்

C) நீர்

D) இவை அனைத்தும்

விளக்கம்: தீயனைப்பான் ஐந்து வகையாக வகைப்படுத்தப்டுகிறது அவை 1. நீர் 2. நுரை 3. உலர்ந்த வேதித்துகள்கள் 4. CO2 5. நீர்ம இரசாயனங்கள்

89. தீயை அணைக்கும் பொருள்களின் வகைகள் யாவை?

A) காற்று அழுத்த நீர் அணைப்பான்கள்

B) கார்பன்-டை-ஆக்சைடு அணைப்பான்

C) உலர் ரசாயன தூள் அணைப்பான்கள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: தீயை அணைக்கும் பொருள்களின் பொதுவான வகைகள்: காற்று அழுத்த நீர் அணைப்பான்கள், கார்பன்-டை-ஆக்சைடு அணைப்பான், உலர் ரசாயன தூள் அணைப்பான்கள்.

90. பொருத்துக

a) வகுப்பு A – 1] பெட்ரோல், டர்பெண்டைன் அல்லது பெயிண்ட் போன்ற எரியக்கூடிய திரவப்பொருட்களால் ஏற்படுகிறது

b) வகுப்பு B – 2] மரம், காகிதம் மற்றும் துணி போன்ற எரியக்கூடிய திடப்பொருட்களால் ஏற்படுகிறது

c) வகுப்பு C – 3] எண்ணெய்யால் ஏற்படும் தீ

d) வகுப்பு D – 4] ஹைட்ரஜன், பியூட்டேன் அல்லது மீத்தேன் போன்ற எரியக்கூடிய வாயுப்பொருட்களால் ஏற்படுகிறது

a b c d

A) 4 2 3 1

B) 2 1 4 3

C) 2 1 3 4

D) 3 1 4 2

விளக்கம்: வகுப்பு E – மின்சார தீ விபத்துகள்- மின்சார உபகரணங்களால் ஏற்படும் தீ, மின்சார நெருப்பு – மின் உபகரணங்கள்: மின் பொருள் அகற்றப்பட்டதும், நெருப்பு வகுப்பை மாற்றுகிறது

91. எரிதல் என்பது ஒருவேதிவினை, இதில்பொருள் _________ உடன் வினைபுரிகிறது

A) வெப்பம்

B) நீர்

C) ஆக்ஜினேற்ற காரணி

D) ஆக்ஜிஸன்

விளக்கம்: எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும்.

92. நீரில் நனைந்த காகிதத்தின் எரிவெப்பநிலை

A) 451°F 

B) 452°F

C) 453°F

D) 454°F

93. எண்ணெய்யால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை _________ ஆல் கட்டுப்படுத்த முடியாது

A) தண்ணீர்

B) மண்ணெண்ணெய்

C) பெட்ரோல்

D) இவற்றில் எதுவுமில்லை

94. பொருத்துக

a) அமிலநீக்கி – 1] கோகைன்

b) ஆண்டிபயாடிக் – 2] பாராசிட்டமால்

c) வலி நிவாரணி – 3] சோடியம் பை கார்பனேட்

d) மயக்கமூட்டி – 4] பென்சிலின்

a b c d

A) 4 2 3 1

B) 2 1 4 3

C) 2 1 3 4

D) 3 4 2 1

95. பொருத்துக

a) ஆன்டிசெப்டிக் – 1] எல். பி. ஜி

b) கிருமிநாசினி – 2] சி. என். ஜி

c) திரவ பெட்ரோலிய வாயு – 3] குளியல் சோப்பு

d) அழுத்தப்பட்ட இயற்கை வாயு – 4] டெட்டால்

a b c d

A) 4 2 3 1

B) 2 1 4 3

C) 3 4 1 2

D) 3 4 2 1

96. மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ் நோய்

A) மஞ்சள் காமாலை

B) காலரா

C) பெரியம்மை

D) HIV

விளக்கம்: மஞ்சள் காமாலை 1901 ல் மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ் நோய் ஆகும்

97. 1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் _________ இலைகளிலிருந்து கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்.

A) கோகா

B) கோகோ

C) போகோ

D) கோமா

விளக்கம்: 1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் கோகோ இலைகளிலிருந்து கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்.

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin