Science Questions

7th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2

7th Science Lesson 12 Questions in Tamil

12] ஒளியியல்

1) தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நிகழ்வுக்கு மிகவும் அவசியமான ஒன்று?

a) சூரிய ஒளி

b) மணல்

c) சூரிய ஒளி மற்றும் மணல்

d) வைட்டமின்கள்

விளக்கம்: தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடு, பூமியிலுள்ள நீர் ஆகியவற்றை பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை என்னும் நிகழ்வு மூலம் உணவைத் தயாரிக்கின்றன.

2) தாவரங்கள் எந்த நிகழ்வு மூலம் உணவைத் தயாரிக்கின்றன?

a) ஒளிச்சேர்க்கை

b) ஒளி இணைவு

c) ஒளி பிளவு

d) ஒளி தூண்டல்

விளக்கம்: தாவரங்கள் ஒளிச்சேர்க்கை என்ற நிகழ்வின் மூலம் உணவைத் தயாரிக்கின்றன.

3) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரி என்று கண்டறிக?

ⅰ) இயற்கையாகவே ஒளியை உமிழும் பொருள்கள் இயற்கை ஒளி மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ⅱ) எரியும் மெழுகுவர்த்தி இயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) மேற்கூறிய எதுவும் இல்லை.

விளக்கம்: இயற்கையாகவே ஒளியை உமிழும் பொருள்கள் இயற்கை ஒளி மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எரியும் மெழுகுவர்த்தி செயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டாகும்

4) சந்திரன் எவ்வாறு ஒளியை உமிழும்?

a) தானாகவே ஒளியை உமிழும்

b) சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிறகு உமிழும்

c) நட்சத்திரங்களிடமிருந்து ஒளியைப் பெற்று உமிழும்

d) ஒளியை உமிலாது

விளக்கம்: சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று, பின் அதனை பூமிக்கு பிரதிபலிக்கிறது. நாம் சந்திரனை பார்க்கும் பொழுது சந்திரனின் ஒளிரும் ஒரு பகுதியை மட்டுமே காண்கிறோம். சந்திரனில் ஒரு பாதி எப்பொழுதும் சூரியனை நோக்கி அமைந்து, ஒளியைப் பெறுகிறது. இவ்வாறே சந்திரனிடமிருந்து நாம் ஒளியை பெறுகிறோம்.

5) இயற்கையாகவே ஒளியை உமிலும் உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டு?

a) மின்மினிப்பூச்சி

b) ஜெல்லி

c) மின்மினிப்பூச்சி மற்றும் ஜெல்லி

d) கரப்பான் பூச்சி.

விளக்கம்: மின்மினிப்பூச்சி மற்றும் செல்லி ஆகியவை இயற்கையாகவே ஒளியை உமிழும் உயிரினங்கள் ஆகும்.

6) வெப்ப ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு?

a) எரியும் மெழுகுவர்த்தி

b) வெண்சுடர் எரிவிளக்கு

c) எரியும் மெழுகுவர்த்தி மற்றும் வெண்சுடர் எரிவிளக்கு இரண்டும்

d) நியான் விளக்கு

விளக்கம்: எரியும் மெழுகுவர்த்தி மற்றும் வெண் சுடர் எரி விளக்கு இரண்டும் வெப்ப ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். நியான் விளக்கு வாயுவிறக்க ஒளி மூலம் ஆகும்.

7) வாயுவிறக்க ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு?

a) நியான் விளக்கு

b) சோடியம் ஆவி விளக்கு

c) நியான் விளக்கு மற்றும் சோடியம் ஆவி விளக்கு இரண்டும்

d) எரியும் மெழுகுவர்த்தி

விளக்கம்: நியான் விளக்கு மற்றும் சோடியம் ஆவி விளக்கு இரண்டும் வாயுவிறக்க ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். எரியும் மெழுகுவர்த்தி வெப்ப ஒளி மூலம் ஆகும்.

8) கூற்று(A): செயற்கையாகவே ஒளியை உமிழும் மூலங்கள் செயற்கை ஒளி மூலங்கள் ஆகும்

காரணம்(R): மின்மினிப்பூச்சி செயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

a) (A) மற்றும் (R) தவறு

b) (A) சரி (R) தவறு

c) (A) மற்றும் (R) இரண்டும், சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம்

d) (A) மற்றும் (R) இரண்டும், சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம் இல்லை

விளக்கம்: செயற்கையாகவே ஒளியை உமிழும் மூலங்கள் செயற்கை ஒளி மூலங்கள் ஆகும். மின்மினிப்பூச்சி இயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

9) நாம் வீட்டில் பயன்படுத்தும் குழல் விளக்கு __________ ஒளி மூலம் ஆகும்

a) வெப்ப

b) வாயு விறக்க

c) செயற்கை

d) இயற்கை

விளக்கம்: நாம் வீட்டில் பயன்படுத்தும் குழல்விளக்கு ஒரு வகையான வாயு விறக்க மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். குழாயின் வழியே செல்லும் மின்னோட்டம், பாதரச ஆவியை தூண்டி, குறைந்த அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர்களை உருவாக்குகிறது. இக்கதிர்கள் குழாயின் உட்புறத்தில் பூசப்பட்ட பாஸ்பரஸின் மேல் விழுந்து, குழல் விளக்கை ஒளிர செய்கின்றன.

10) கீழ்க்கண்டவற்றுள் எவை ஒளியின் அடிப்படை பண்புகள்?

ⅰ) நேர்கோட்டுப் பண்பு

ⅱ) எதிரொலித்தல் பண்பு

a)ⅰமட்டும்

b)ⅱமட்டும்

c)ⅰமற்றும்ⅱ

d) எதுவும் இல்லை

விளக்கம்: நேர்கோட்டுப் பண்பு, எதிரொலித்தல் பண்பு இரண்டும் ஒளியின் அடிப்படை பண்புகள் ஆகும். மேலும் ஒளியின் வேகம் மற்றும் ஒளி ஊடுருவும் தன்மையை பொருத்து பொருள்களின் வகைகள், நிழல்களின் உருவாக்கம், சமதள ஆடி மற்றும் பிம்பங்கள், நிறமாலை ஆகியவையும் ஒளியின் அடிப்படை பண்புகளாகும்.

11) ஒளி ___________________ இல் பயணிக்கிறது.

a) நேர்கோட்டில்

b) எதிர் கோட்டில்

c) வளைவு பாதையில்

d) சதுர பாதையில்

விளக்கம்: ஒளியானது நேர் கோட்டில் பயணிக்கிறது. அது தன்னுடைய பாதையை தன்னிச்சையாக மாற்ற இயலாது. இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படும். மரங்களின் கிளைகளின் வழியாக மற்றும் சிமெண்ட் கிரிலின் சிறுதுளை வழியாக சூரிய ஒளி செல்லுதல், லேசர் விளக்கின் ஒளி செல்லுதல் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

12) ஒளியின் நேர்கோட்டுப் பண்பினை கண்டறிந்த முதல் அறிஞர் யார்?

a) அல்-ஹரசன்-அயத்தம்

b) சர். சி. வி ராமன்

c) அல்-ஹரசன்-ரஹீம்

d) கலிலியோ

விளக்கம்: அல்-ஹரசன்-அயத்தம் என்பவர் ஒளியின் நேர்கோட்டுப் பண்பினை கண்டறிந்த முதல் அறிஞர், சிறுதுளை வழியாக வரும் ஒளி, நேர்கோட்டுப் பாதையில் பயணித்து, எதிரே உள்ள சுவரில் ஒரு பிம்பத்தை தோற்றுவிப்பதை கண்டறிந்தார்.

13) ஒளியின் நேர்கோட்டுப் அன்பினை அறிந்துகொள்ள உதவும் எளிமையான ஒரு கருவி யாது?

a) ஊசித்துளை கேமரா

b) புத்தகம்

c) மேசை

d) நாற்காலி

விளக்கம்: ஊசித்துளை கேமரா என்பது ஒளியின் நேர்கோட்டுப் அன்பினை அறிந்துகொள்ள உதவும் எளிமையான ஒரு கருவி.

14) ஊசித்துளை கேமராவை பயன்படுத்தி சூரியனின் இயக்கத்தை பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் முறையின் பெயர் என்ன?

a) சோனோகிராபி

b) சோலோகிராபி

c) மாக்ரோகிராபி

d) மைக்ரோ கிராபி

விளக்கம்: ஊசித்துளை கேமரா கேமிராவின் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடையாத காலத்தில் சூரியனின் இயக்கத்தை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்டது. இவ்வகையான புகைப்படம் எடுக்கும் முறைக்கு சோலோகிராபி என்று பெயர். சூரிய கிரகணத்தை காண்பதற்கும், பதிவு செய்வதற்கும் அது பயன்படுத்தப்பட்டது.

15) ஒளியின் எதிரொளிப்பு பண்பிற்கு எடுத்துக்காட்டு?

ⅰ) முகம் பார்க்கும் கண்ணாடி

ⅱ) அசைவில்லாத நீர்நிலையின் பரப்பு

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) எதுவும் இல்லை

விளக்கம்: முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் அசைவில்லாத நீர்நிலையின் பரப்பு ஒளியின் எதிரொளிப்பு பண்பிற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி நமது முகத்தை எதிரொலிக்கிறது. அசைவிலா நீர்நிலையின் பரப்பு, சுற்றியுள்ள காட்சிகளை பிரதிபலிக்கிறது.

16) படு கோணமும், எதிரொளிப்பு கோணமும்?

a) சமம்

b) சமம் இல்லை

c) வளைந்து இருக்கும்

d) மேற்கூறிய எதுவும் இல்லை

விளக்கம்: படு கோணமும், எதிரொளிப்பு கோணமும் சமம். (l=r)

17) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடுக்க?

ⅰ) படு கோணமும், எதிரொளிப்பு கோணமும் சமம். (l=r)

ⅱ) படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்பு கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) எதுவும் இல்லை

விளக்கம்: ஒளி எதிரொளிப்பு விதிகள் என்பது படு கோணமும், எதிரொளிப்பு கோணமும் சமம். (l=r) மற்றும் படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்பு கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.

18) எதிரொளிக்கும் பரப்பில் படும் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?

a) படுகதிர்

b) எதிரொளிப்புகதிர்

c) படுகோணம்

d) எதிரொளிப்புகோணம்

விளக்கம்: எதிரொளிக்கும் பரப்பில் படும் கதிர் படுகதிர் என்று அழைக்கப்படும்.

19) எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டுவரும் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?

a) படுகதிர்

b) எதிரொளிப்புகதிர்

c) படு கோணம்

d) எதிரொளிப்பு கோணம்

விளக்கம்: எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டுவரும் கதிர் எதிரொளிப்புகதிர் என்று அழைக்கப்படும்.

20) படத்தில், படுகதிர் AB, 27′ கோணத்தை குத்துக்கோட்டுடன் ஏற்படுத்துகிறது. எனில், எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு என்ன?

a) 54’

b) 27′

c) 0’

d) 180’

விளக்கம்: படுகோணம் (I)= 27, எதிரொளிப்பு விதியின் படி,

படுகோணம் = எதிரொளிப்புக்கோணம்

எனவே எதிரொளிப்புக்கோணம், (r=27).

21) ஒரு ஒளிக்கதிர் எதிரொளிப்பு தளத்தில் பட்டு, 430 கோணத்தை கிடைத்தளத்துடன் ஏற்படுத்துகிறது. எனில் படுகோணத்தின் மதிப்பு என்ன?

a) 430

b) 470

c) 00

d) 1800

விளக்கம்: படுகோணம் i=900-430=470

22) வளவளப்பான பகுதியில் ஏற்படும் எதிரொளிப்பு?

a) ஒழுங்கான எதிரொளிப்பு

b) ஒழுங்கற்ற எதிரொளிப்பு

c) இயற்கை எதிரொளிப்பு

d) செயற்கை எதிரொளிப்பு

விளக்கம்: வளவளப்பான பரப்பு ஏற்படும் எதிரொளிப்பு ஒழுங்கான எதிரொளிப்பு ஆகும். ஒழுங்கான எதிரொளிப்பில் படுகதிர்கள் இணைகதிர்கள் ஆக பரப்பின் மேல் விழுந்த்து, இணைகதிர்கள் ஆகவே எதிரொலிக்கப்படுகின்றன.

23) சொரசொரப்பான பகுதியில் ஏற்படும் எதிரொளிப்பு?

a) ஒழுங்கான எதிரொளிப்பு

b) ஒழுங்கற்ற எதிரொளிப்பு

c) இயற்கை எதிரொளிப்பு

d) செயற்கை எதிரொளிப்பு

விளக்கம்: சொரசொரப்பான பகுதியில் ஏற்படும் எதிரொளிப்பு ஒழுங்கற்ற எதிரொளிப்பு ஆகும். இவ்வகை நிகழ்வில் எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் வெவ்வேறு திசையில் செல்கின்றன.

24) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரி என்று கண்டறிக?

ⅰ) வெற்றிடத்தில் ஒளியானது 3 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்

ⅱ) ஒளியை விட வேகமாக எந்த ஒரு பொருளும் செல்வதில்லை.

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) மேற்கூறிய எதுவும் இல்லை

விளக்கம்:வெற்றிடத்தில் ஒளியானது 3 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஒளியை விட வேகமாக எந்த ஒரு பொருளும் செல்வதில்லை.

25) கீழ்கண்டவற்றுள் எவை ஒளி ஊடுருவும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டு?

ⅰ) கண் கண்ணாடிகள்

ⅱ) கல்

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) மேற்கூறிய எதுவும் இல்லை

விளக்கம்: கண் கண்ணாடிகள் ஒளி ஊடுருவும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

26) பகுதி ஊடுருவும் பொருட்களுக்கு எடுத்துக்காட்டு

ⅰ) சொரசொரப்பான கண்ணாடி

ⅱ) கல்

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) மேற்கூறிய எதுவும் இல்லை

விளக்கம்: சொரசொரப்பான கண்ணாடி பகுதி ஊடுருவும் பொருட்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

27) ஒளி ஊடுருவா பொருட்களுக்கு எடுத்துக்காட்டு?

ⅰ) சொரசொரப்பான கண்ணாடி

ⅱ) கல்

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) மேற்கூறிய எதுவும் இல்லை

விளக்கம்: கல் ஒளி ஊடுருவா பொருட்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

28) நிழல்கள் ஒளி மூலத்திற்கு எத்திசையில் உருவாகும்?

a) நேர்திசை

b) எதிர்திசை

c) மறைந்த திசை

d) வளைந்த திசை

விளக்கம்: நிழல்கள் எப்போதும் ஒளி மூலத்திற்கு எதிர்திசையில் உருவாகும். ஒளியானது நேர் கோட்டில் மட்டுமே பயணிக்கும். அது தன் பாதையில் உள்ள பொருளை சுற்றி வளைந்து செல்லாது. எனவே நிழல்கள் உருவாகின்றன.

29) கீழ்காணும் கூற்றுகளை எவை சரி என்று கண்டறிக?

ⅰ) பிளாஸ் ஒளியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விரிகதிர்கள் ஆகும்

ⅱ) லென்சை பயன்படுத்தி ஒளிக்கற்றையை குவிக்க முடியாது.

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) மேற்கூறிய எதுவும் இல்லை

விளக்கம்: பிளாஸ் ஒளியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விரிகதிர் ஆகும். லென்சை பயன்படுத்தி ஒளிக்கற்றையை குவிக்க முடியும்.

30) கூற்று(A): எல்லாப் பொருள்களும் நிழல்களை உருவாக்குவதில்லை.

விளக்கம்(R): ஒளி ஊடுருவா பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.

a) (A) மற்றும் (R) தவறு

b) (A) சரி (R) தவறு

c) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம்

d) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம் இல்லை.

விளக்கம்: எல்லாப் பொருள்களும் நிழல்களை உருவாக்குவதில்லை. ஒளி ஊடுருவா பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.

31) குரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஒளியின் ____________பண்பின் காரணமாக நிகழ்கின்றன?

a) நேர்கோட்டு

b) எதிர்கோட்டு

c) எதிரொளிப்பு

d) சிதறல்

விளக்கம்: ஒளியின் நேர்கோட்டிப் பண்பின் காரணமாகக் குரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன.

32) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரி என்று கண்டறிக?

ⅰ) சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் சுற்றி வரும்பொழுது சூரிய கிரகணம் தோன்றுகிறது.

ⅱ) சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் ஆனது புவியின் மேல் விழுவது இல்லை

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) மேற்கூறிய எதுவும் இல்லை

விளக்கம்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் சுற்றி வரும்பொழுது சூரிய கிரகணம் தோன்றுகிறது. சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் ஆனது புவியின் மேல் விழுகிறது. எனவே, புவியில் இருப்பவர்களால் சூரியனைக் காண இயலாது. இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

33) கீழ்காணும் கூற்றுகளில் எவனும் சரி என்று கண்டறிக?

ⅰ) சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி யானது இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

ⅱ) சூரியனிடம் இருந்து வரும் ஒளியை புவியால் தடுக்க முடிவதில்லை

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) மேற்கூறிய எதுவும் இல்லை

விளக்கம்: சந்திர கிரகணம் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவியானது இருக்கும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சூரியனிடமிருந்து வரும் ஒளியை புவியானது தடுத்து விடுகிறது எனவே, புவியின் நிழலானது சந்திரனின் மேல் விழுகிறது. இதனால் புவியிலிருப்பவர்களுக்கும் சந்திரனை முழுவதுமாகவோ பகுதியாகவோ காண இயலாது இதுவே சந்திர கிரகணம் எனப்படுகிறது.

34) முழு அக எதிரொளிப்பு தத்துவத்தின் படி செயல்படும் சாதனம்?

a) ஒளி இழை

b) துணி துவைக்கும் இயந்திரம்

c) ராட்டினம்

d) குழல் விளக்கு

விளக்கம்: முழு அக எதிரொளிப்புத்த்துவத்தின் படி செயல்படும் சாதனம் ஒளி இழை ஆகும். ஒளி இழை கேபிள் தொலைத்தொடர்பு, அகன்ற அலைவரிசை தொடர்புச்சாதனங்கள் போன்ற அதிவேக தொடர் அனுப்புகைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

35) திரையில் வீழ்த்தபடும் பிம்பங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) மெய்பிம்பம்

b) மாயபிம்பம்

c) சம்மான பிம்பம்

d) சம்மற்ற பிம்பம்

விளக்கம்: திரையில் வீழ்த்தபடும் பிம்பம் மெய் பிம்பம் என்று அழைக்கப்படுகின்றன.

36) திரையில் வீழ்த்த முடியாத பிம்பங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) மெய் பிம்பம்

b) மாய பிம்பம்

c) சம்மான பிம்பம்

d) சம்மற்ற பிம்பம்

விளக்கம்: திரையில் வீழ்த்த முடியாத பிம்பங்கள் மாய பிம்பம் என்று அழைக்கப்படுகின்றன.

37) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?

ⅰ) ஊசித்துளை கேமராவில் தோன்றும் பிம்பம் மெய் பிம்பம்

ⅱ) சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் மாய பிம்பம்

ⅲ) ஊசித்துளை கேமராவில் தோன்றும் பிம்பம் நேரான பிம்பம்

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) ⅲமட்டும்

விளக்கம்:

38) சமதள ஆடியின் எந்த பண்பு ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்தப்படுகிறது?

a) குவியும் பண்பு

b) இடவல மாற்ற பண்பு

c) வலஇட மாற்ற பண்பு

d) எதிரொலிக்கும் பண்பு

விளக்கம்: சமதள ஆடியின் இடவல மாற்றம் பண்பு ஆம்புலன்ஸ் களில் பயன்படுத்தப்படுகிறது. ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக “AMBULANCE” என நேராகத் தெரியும்.

39) வாகனங்களில் பின்புறம் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன?

ⅰ) சிவப்பு நிறம் அதிக தொலைவு பயணிக்கும்

ⅱ) சிவப்பு நிறம் குறைந்த தொலைவு பயணிக்கும்

ⅲ) சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅲ

d) எதுவும் இல்லை

விளக்கம்: சிவப்பு நிறமானது, காற்று மூலக்கூறுகளால் குறைவான அளவில் இதர அடிக்கப்படுகிறது மற்றும் மற்ற நிறங்களை விட அதிக அலைநீளம் கொண்டது. எனவே எனவே வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிறமானது பயன்படுத்தப்படுகிறது.

40) கண்ணுறு ஒளியின் அலை நீளநீள நெடுக்கம் மதிப்பு எவ்வளவு?

a) 400 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை

b) 500 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை

c) 600 நேனோ மீட்டர் முதல் 600 நேனோ மீட்டர் வரை

d) 0

விளக்கம்: கண்ணுறு ஒளியின் அலை நீளநீள நெடுக்கம் மதிப்பு 400 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை ஆகும்.

41) கீழ்க்கண்டவற்றுள் எந்த நிறம் குறைந்த அலை நீளம் கொண்டது?

a) சிவப்பு

b) ஊதா

c) பச்சை

d) வெள்ளை

விளக்கம்: ஊதா நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது, சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது.

42) கூற்று(A): சிவப்பு நிறமானது காற்றில் அதிக தொலைவு பயணிக்கும்.

காரணம்(R): சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை விட அதிக அலைநீளம் கொண்டது.

a) (A) மற்றும் (R) தவறு

b) (A) சரி (R) தவறு

c) (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) வுக்கு (A) சரியான விளக்கம்

d) (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) வுக்கு (A) சரியான விளக்கம் இல்லை.

விளக்கம்: சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் சிதறடிக்க படுகின்றன சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை விட அதிக அலைநீளம் கொண்டது. சிவப்பு நிறமானது காற்றில் அதிக தொலைவு பயணிக்கும்.

43) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?

ⅰ) வெண்மை என்பது கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களின் கலவை ஆகும்.

ⅱ) கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் இல்லாத இடம் கருமை நிறமாக அமையும்

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) எதுவும் இல்லை

விளக்கம்: வெள்ளை என்பது ஒரு நிறம் அல்ல. ஆனால் வெண்மை என்பது கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களின் கலவை ஆகும். கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் இல்லாத இடம் கருமை நிறமாக அமையும்.

44) கீழ்காணும் கூற்றுகளில் எவை முப்பட்டகம் பற்றிய தவறான ஒன்று?

ⅰ) இரண்டு சமதளப் பரப்புகளுக்கு இடையே விரிகோணத்தை கொண்டுள்ளது

ⅱ) கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருள்.

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅱமட்டும்

d) எதுவும் இல்லை

விளக்கம்: முப்பட்டகம் இரண்டு சமதளப் பரப்புகளுக்கு இடையே குறுங்கோணத்தை உருவாக்குகிறது.

45) கீழ்கண்டவற்றுள் எந்த நிறம் முப்பட்டகத்தில் வானவில்லை தோற்றுவிக்கிறது?

a) சிவப்பு

b) ஊதா

c) பச்சை

d) வெள்ளை

விளக்கம்: வெள்ளை நிறம் மூலமாக முப்பட்டகத்தில் வானவில் தோற்றுவிக்கப்படுகிறது.

46) நியூட்டனின் வட்டு பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை தவறானவை?

ⅰ) நியூட்டனின் வட்டு ஏழு சமம்மற்ற வட்டக்கோணப்பகுதி களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ⅱ) நியூட்டனின் வட்டு மூலம் வெண்மை நிறம் ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடியும்.

a) ⅰமட்டும்

b) ⅱமட்டும்

c) ⅰமற்றும்ⅱ

d) எதுவும் இல்லை

விளக்கம்: நியூட்டனின் வட்டு ஏழு சம வட்டக்கோணப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு வட்ட வடிவ அட்டை ஒன்றினை, ஏழு சமவட்டகோணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முறையே சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், கருநீலம் மற்றும் ஊதா வண்ணங்கள் இடப்பட்டிருக்கும். நியூட்டன் வட்டினை அதன் மையம் வழியேச் செல்லும் அச்சினைப் பொருத்து வேகமாகச் சுழற்றும் போது, நம் கண்ணின் ரெட்டினா வெண்மை நிறத்தை உணர்த்துகிறது. நியூட்டன் வட்டு மூலம், வெண்மை நிறம், ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடியும்.

47) கீழ்க்கண்டவற்றுள் எது முதன்மை நிறம்?

a) சிவப்பு

b) கருப்பு

c) வெள்ளை

d) மஞ்சள்

விளக்கம்: சிவப்பு, பச்சை, நீலம் ஆகியன முதன்மை நிறங்கள் ஆகும்.

48) கூற்று(A): ஏதேனும் இரண்டு முதன்மை நிறங்களை விகிதத்தில் கலக்கும் போது, இரண்டாம் நிலை நிறம் கிடைக்கும்.

காரணம்(R): மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.

a) (A) மற்றும் (R) தவறு

b) (A) சரி (R) தவறு

c) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம்

d) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம் இல்லை

விளக்கம்: ஏதேனும் இரண்டு முதன்மை நிறங்களை விகிதத்தில் கலக்கும் போது, இரண்டாம் நிலை நிறம் கிடைக்கும். மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.

49) முதன்மை நிறங்களைச் சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும் போது ______ நிறம் கிடைக்கிறது?

a) சிவப்பு

b) கருப்பு

c) வெள்ளை

d) மஞ்சள்

விளக்கம்: முதன்மை நிறங்களைச் சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும் போது வெள்ளை நிறம் கிடைக்கிறது.

50) கீழ்கண்டவற்றுள் எவை இரண்டாம் நிலை நிறம் இல்லை?

a) மெஜந்தா

b) சையான்

c) வெள்ளை

d) மஞ்சள்

விளக்கம்: வெள்ளை முதன்மை நிறம், மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin