Science Questions

7th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2

7th Science Lesson 11 Questions in Tamil

11] வகைப்பாட்டியலின் அடிப்படை அலகுகள்

1) பின்வருவனவற்றுள் எவைகளை கொண்டு வகைப்படுத்துதல் செய்யப்படுகிறது?

A) கண்டுபிடித்தல்

B) பிரித்தல்

C) தொகுத்தல்

D) இவை அனைத்தும்

விளக்கம்: வகைப்படுத்துதல் என்பது கண்டுபிடித்தல், பிரித்தல், தொகுத்தல் வழியாக செய்யப்படுகிறது.

2) வகைப்பாட்டியல் பின்வரும் எவற்றை அடிப்படையாகக் கொண்டது?

A) உயிரினங்களின் பண்புகள்

B) உயிர்களின் ஒற்றுமை

C) உயிரினங்களின் வேற்றுமை

D) இவை அனைத்தும்

விளக்கம்: வகைப்பாட்டியல் என்பது உயிரினங்களின் பண்புகள், ஒற்றுமை மற்றும் வேற்றுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

3) தற்கால வகைப்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

A) பிளேட்டோ

B) விட்டேக்கர்

C) அரிஸ்டாட்டில்

D) கரோலஸ் லின்னேயஸ்

விளக்கம்: கரோலஸ் லின்னேயஸ் “தற்கால வகைப்பாட்டின் தந்தை” ஆவார்.

4) வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது?

A) பேருலகம்

B) தொகுதி

C) வகுப்பு

D) சிற்றினம்

விளக்கம்: வகைப்பாட்டியலில் பேருலகம் பெரும் பிரிவாகவும், சிற்றினம் அடிப்படை அலகாகவும் கருதப்படுகிறது.

5) ஏறத்தாழப் புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை

A) 8.8 மில்லியன்

B) 8.5 மில்லியன்

C) 8.6 மில்லியன்

D) 8.7 மில்லயன்

விளக்கம்: இதுவரையில் சுமார் 8.7 மில்லியன் உயிரினங்கள் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன. இருப்பினும் உலகில் உள்ள மொத்த உயிரினங்களில் குறைந்த எண்ணிக்கையிலான உயிரினங்கள் மட்டும கண்டறியப்பட்டுள்ளதாக பல அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள்.

6) நுண்ணோக்கி மூலம் பார்க்கக்கூடிய ஒரு செல் உயிரி, போலிக்கால்கள் உடையவை, கசையிழை, குறு இழை மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன. மேற்கூறிய பண்புகளை உடைய தொகுதி எது?

A) புரோட்டோசோவா

B) பொரிபெரா

C) சிலிண்டரேட்டா

D) பிளாட்டிஹெல்மின்தஸ்

விளக்கம்:

7) பின்வருவனவற்றுள் புரோடோசோவா தொகுதியைச் சேர்ந்தது எது?

A) யூக்ளினா

B) ஜெல்லி மீன்கள்

C) ஸ்பான்ஜில்லா

D) இவை அனைத்தும்

விளக்கம்: புரோட்டோசோவா (எ.கா) அமீபா, யூக்ளினா, பாரமீசியம்

8) பொருத்துக

தொகுதி – எடுத்துக்காட்டு

a) புரோட்டோசோவா 1] சைகான்

b) பொரிபெரா 2] பாரமீசியம்

c) சீலென்டிரேட்டா 3] பிளானேரியா

d) பிளாட்டிஹெல்மின்தஸ் 4] பவளங்கள்

A) a-2, b-1, c-4, d-3

B) a-4, b-1, c-3, d-2

C) a-2, b-3, c-1, d-4

D) a-4, b-3, c-1, d-2

விளக்கம்:

9) பின்வருவனவற்றுள் கணுக்காலிகள் தொகுதியைச் சேர்ந்தது எது?

A) நண்டு

B) மண்புழு

C) நாடாப்புழு

D) பவளங்கள்

விளக்கம்: கணுக்காலிகள் எ.கா நண்டு, இறால், மரவட்டை, பூச்சிகள், சிலந்தி, தேள்.

10) 1) கடலில் மட்டுமே வாழ்பவை

2) உடற்சுவர் முட்களை கொண்டவை

3) நீர் குழல் மண்டலமும், குழாய் கால்களும், உணவு ஓட்டத்திற்கும், சுவாசத்திற்கும் மற்றும் இடப்பெயர்ச்சிக்கும் உதவுகிறது.

மேற்கூறிய பண்புகளை உடைய தொகுதி எது?

A) மெல்லுடலிகள்

B) முட்தோலிகள்

C) கணுக்காலிகள்

D) சீலெண்டிரேட்டா

விளக்கம்:

11) தொகுதி – பண்புகள்

a) துளையுடலிகள் 1] இரைப்பை குருதிக் குழி

b) குழியுடலிகள் 2] சுடர் செல்கள்

c) தட்டைப் புழுக்கள் 3] துளை தாங்கிகள்

d) உருளைப் புழுக்கள் 4] நூல் போன்ற புழுக்கள்

A) a-4, b-1, c-3, d-2

B) a-3, b-1, c-2, d-4

C) a-2, b-3, c-1, d-4

D) a-4, b-3, c-1, d-2

விளக்கம்:

12) பின்வருவனவற்றுள் தவறான இணையை தேர்ந்தெடு.

A) முட்தோலிகள் 1] உடல் சுவற்றில் முட்கள் காணப்படும்

B) மெல்லுடலிகள் 2] மென்மையான மற்றும் பாதுகாப்பான ஓடு

C) கணுக்காலிகள் 3] கால்கள் இணைப்புகளால் ஆனது

D) வளைத்தசை புழுக்கள் 4] உடற்கண்டங்கள் அற்றவை

விளக்கம்:

13) பொருத்துக

தாவரங்கள் – எ.கா

a) பெரணிகள் – காரா

b) மாஸ்கள் – பைனஸ்

c) ஆல்காக்கள் – அடியாண்டம்

d) ஜிம்னோஸ்பெர்ம்கள் – பியூனேரியா

A) a-4, b-3, c-1, d-2

B) a-2, b-1, c-3, d-4

C) a-3, b-4, c-1, d-2

D) a-4, b-1, c-3, d-2

விளக்கம்:

  • ஆல்காக்கள் (எ.கா) காரா
  • மாஸ்கள் (எ.கா) பியூனேரியா
  • பெரணிகள் (எ.கா) அடியாண்டம்
  • ஜிம்னோஸ்பெர்ம்கள் (எ.கா) பைனஸ் , சைகஸ்

14) அனைத்து புரோகேரியோட் உயிரினங்களும் எந்த உலகத்தில் அடங்கும்?

A) புரோட்டிஸ்டா உலகம்

B) பூஞ்சைகள் உலகம்

C) தாவர உலகம்

D) மொனிரா உலகம்

விளக்கம்: அனைத்து ப்ரோகேரியோட்டு உயிரினங்களும் மொனிரா உலகத்தில் அடங்கும். இவற்றில் உண்மையான உட்கரு இல்லை .நியூக்ளியார் சவ்வு மற்றும் சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் எதுவும் கிடையாது.

15) பின்வருவனவற்றில் மொனிரா உலகத்தில் இடம் பெறாதது எது?

A) அமீபா

B) பாரமீசியம்

C) யூக்ளினா

D) பாக்டீரியா

விளக்கம்: பாக்டீரியாக்கள் மற்றும் நீலபசும்பாசிகள் மொனிரா வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

16) பின்வருவனவற்றுள் தனக்குத் தேவையான ஊட்டப் பொருள்களை, உணவுப் பொருட்களின் மீது செரிமான நொதியைச் சுரந்து உட்கொள்வது எது?

A) ஈஸ்ட்கள்

B) யூக்ளினா

C) பாக்டீரியா

D) பாரமீசியம்

விளக்கம்: பூஞ்சைகள் தனக்குத் தேவையான ஊட்டப் பொருள்களை உணவுப் பொருள்களின் மீது செரிமான நொதியைச் சுரந்து அவற்றைச் செரித்து உறிஞ்சுதல் மூலம் பெறுகின்றன. பூஞ்சைகள் சாறுண்ணிகளாகவும் சிதைப்பான்களாக (சிதைவைச் செய்யும் பூஞ்சைகள்) அல்லது ஒட்டுண்ணிகளாகவும் காணப்படுகின்றன. மோல்டுகள், மில்டீயூஸ், நாய்க்குடைக் காளான்கள், ஈஸ்டுகள் போன்றவை பூஞ்சை உலகத்தைச் சார்ந்தவை.

17) பின்வருவனவற்றுள் தற்சார்பு அல்லது பிற ஊட்ட முறையில் வராத உலகம் எது?

A) மொனீரா உலகம்

B) புரோட்டிஸ்டா உலகம்

C) பூஞ்சைகள் உலகம்

D) பிளாண்ட்டே

விளக்கம்: தனக்கு தேவையான ஊட்டப் பொருள்களை உணவுப் பொருள்களின் மீது செரிமான நொதியைச் சுரந்து அவற்றைச் செரித்து உறிஞ்சுதல் மூலம் பெறுகின்றன. பூஞ்சைகள் சாறுண்ணிகளாகவும் சிதைப்பான்களாக (சிதைவைச் செய்யும் பூஞ்சைகள்) அல்லது ஒட்டுண்ணிகளாகவும் காணப்படுகின்றன. ஆதலால் இது தற்சார்பு அல்லது பிற ஊட்ட முறையில் வராது.

18) முதுகெலும்பற்றவை எத்தனை தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன

A) 7

B) 8

C) 9

D) 10

விளக்கம்: முதுகெலும்புஅற்றவை ஒன்பது தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன அவை ஒருசெல்உயிரிகள், குழியுடலிகள், துளையுடலிகள், தட்டைப்புழுக்கள், உருளைப்புழுக்கள், வளைதசைப்புழுக்கள், கணுக்காலிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள்

19) முதுகெலும்பு உடையவை எத்தனை வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: முதுகெலும்பு உடையவை ஐந்து வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள் பாலூட்டிகள் ஆகும்.

20) பின்வரும் எந்த வகுப்பு முதுகுநாண் உடையவை தொகுதியில் வராது?

A) பிஸ்ஸஸ்

B) அனலிடா

C) ஏவ்ஸ்

D) மாமெலியா

விளக்கம்: முதுகு நாண் உடையவைகள் மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள்

21) புறாவின் அறிவியல் பெயர் என்ன?

A) கட்லா கட்லா

B) ஃபோனிக்ஸ் டாக்டைலிஃபெரா

C) ராணா ஹெக்சா டாக்டைலா

D) கொலம்பா லிவியா

விளக்கம்:

22) பொருத்துக.

a) பேரிச்சை 1] காக்கஸ் நியூசிபெரா

b) வேப்பமரம் 2] சிட்ரஸ் அருண்டிஃபோலியா

c) எலுமிச்சை 3] அசாடிரேக்டா இண்டிகா

d) தேங்காய் 4] ஃபோனிக்ஸ் டாக்டைலிஃபெரா

A) a-4, b-3, c-2, d-1

B) a-3, b-4, c-1, d-2

C) a-4, b-1, c-3, d-2

D) a-4, b-3, c-1, d-2

23) கூற்று: இருசொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு வட்டார அளவில் பெயரிடும் முறையாகும்.

காரணம்: புதிய உயிரினங்களை இனம் கண்டு அதனை குறிப்பிட்ட படிநிலையில் வைப்பதற்கு இரு சொல் பெயரிடும் முறையும் வகைப்படுத்தலும் உதவுகிறது.

A) கூற்று சரி, காரணமும் சரி

B) கூற்று சரி, காரணம் தவறு

C) கூற்று தவறு, காரணம் சரி

D) கூற்று மற்றும் காரணம் தவறு

விளக்கம்: இரு சொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு உலக அளவில் பெயரிடும் முறையாகும்.

24) உயிரினங்களை இரு சொல் கொண்ட பெயரில் அழைப்பதை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) காஸ்பார்டு பாஹின்

B) கரோலஸ் லின்னேயஸ்

C) அரிஸ்டாட்டில்

D) விட்டேக்கர்

விளக்கம்: காஸ்பார்டு பாஹின் 1623 ஆம் ஆண்டு உயிரினங்களை இரண்டு சொல் கொண்ட பெயர்களோடு அழைப்பதை அறிமுகப்படுத்தினார் இதற்கு இரு சொல் பெயரிடும் முறை என்று பெயர். இதனை 1753 ஆம் ஆண்டு கரோலஸ் லின்னேயஸ் என்பவர் செயல்படுத்தினார் இவரே நவீன வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

25) விலங்குகள் இரத்தம் உடைய விலங்குகள் மற்றும் இரத்தம் அற்ற விலங்கு என பிரித்த கிரேக்க தத்துவ அறிஞர் யார்?

A) சாக்ரடீஸ்

B) பிளாட்டோ

C) அரிஸ்டாட்டில்

D) அலெக்சாண்டர்

விளக்கம்: அரிஸ்டாட்டில் என்பவர் ஒரு கிரேக்க தத்துவ மற்றும் சிந்தனையாளர். இவர் 2400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் இவர் உருவாக்கிய தொகுப்பு அமைப்பு இவர் இறந்து இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வந்தது. இவர் அனைத்து உயிரினங்களையும் தாவரங்கள் அல்லது விலங்குகள் என பிரித்தார்.. இவர் விலங்குகளை இரத்தம் உடைய விலங்குகள் மற்றும் ரத்தம் மற்ற விலங்குகள் என பிரித்தார்.

26) கீழ்க்கண்ட தொகுதியில் நெமடோடா என்று அழைக்கப்படுவது எது?

A) அனிலிடா

B) அஸ்செல்மின்த்ஸ்

C) பிளாட்டைஹெல்மின்தஸ்

D) சீலன்டிரேட்டா

விளக்கம்:

27) கீழ்க்கண்டவற்றில் உடற்குழி அற்ற உயிரினம் எது?

A) மண்புழு

B) அட்டை

C) கல்லீரல் புழு

D) அஸ்காரில் லும்பிரிக்காய்ட்டஸ்

விளக்கம்:

28) பின்வருவனவற்றுள் கால்சியத்தால் ஆன ஓடு காணப்படும் உயிரினம்?

A) நண்டு

B) இறால்

C) தேள்

D) நத்தை

விளக்கம்:

:

29) தடித்த கைட்டினை புறச்சட்டகமாக கொண்ட உயிரினம்?

A) நண்டு

B) நத்தை

C) ஆக்டோபஸ்

D) கணவாய் மீன்கள்

விளக்கம்:

30) பின்வரும் ஏவ்ஸ் (பறவைகள்) தொடர்பான கூற்றுகளில் தவறானது எது?

A) குளிர் இரத்தப் பிராணிகள்

B) சிறப்பான பார்வைத்திறன்

C) பறப்பதற்கு ஏற்ற தகவமைப்பு

D) முட்டையிடுபவை

விளக்கம்

:

31) சைலத்திசுக்கள் சைலக்குழாய்கள் அற்றும் மற்றும் புளோயத் திசுக்கள் துணை செல்கள் அற்றும் உள்ள தாவரங்கள் எதில் வகைப்படுத்தப்படும்?

A) மாஸ்கள்

B) பெரணிகள்

C) ஜிம்னோஸ்பெர்ம்கள்

D) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

விளக்கம்:

ஜிம்னோஸ்பெர்ம்கள்:

பல்லாண்டு வாழ் தாவரங்கள், கட்டைத் தன்மை உடையவை, பசுமை மாறாதவை மற்றும் உண்மையான வேர், தண்டு மற்றும் இலைகளை உடையவை. வாஸ்குலார் கற்றைகள் உடையவை, சைலத் திசுக்கள் சைலக் குழாய்கள் மற்றும் புளோயத் திசுக்கள் துணை செல்கள் இன்றியும் காணப்படுகின்றன.

32) பூக்கும் தாவரங்கள் உருவாக்கும் மலர்களில் எவையெல்லாம் இடம்பெறும்?

A) புல்லி வட்டம், அல்லி வட்டம்

B) மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்

C) இவை அனைத்தும்

D) இவை எதுவும் இல்லை

விளக்கம்:

ஆஞ்சியோஸ்பெர்ம்கள்:

தாவர உடலானது உண்மையான வேர், தண்டு மற்றும் இலைகள் என வேறுபாடு அடைந்து காணப்படுகிறது. புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம் என நான்கு அடுக்குகளைக் கொண்ட மலர்களை உருவாக்குவதால் இவை பூக்கும் தாவரங்கள் எனப்படுகின்றன.

33) கூற்று: இரு சொல் பெயரிடும் முறை படி ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரின பெயரும் இரண்டாவதாக சிற்றின பெயரும் கொண்டிருக்கும்.

காரணம்: பேரின பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்து பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்திலும் எழுதப்படவேண்டும்.

A) கூற்று சரி காரணமும் சரி

B) கூற்று சரி காரணம் தவறு

C) கூற்று தவறு காரணம் சாரி

D) கூற்று மற்றும் காரணம் தவறு

விளக்கம்: இரு சொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு உலக அளவில் பெயரிடும் முறை ஆகும். இந்த முறைப்படி ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரினப் பெயரும், இரண்டாவதாக சிற்றினப் பெயருமாக இரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். ஆங்கிலத்தில் எழுதும் போது பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்திலும், சிற்றினப் பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்திலும் எழுதப்பட வேண்டும்.

34) பின்வருவனவற்றுள் பிஸ்ஸஸ் வகுப்பில் இடம் பெறாதது எது?

A) சுறா

B) கட்லா

C) திலேப்பியா

D) நீலத்திமிங்கலம்

விளக்கம்: நீலத்திமிங்கலம் பாலூட்டி வகையைச் சார்ந்தது.

35) பின்வருவனவற்றுள் ஆம்பீபியா (அ) இருவாழ்விகள் வகுப்பில் இடம்பெறாதது எது?

A) தவளை

B) சாலமாண்டர்

C) தேரை

D) கடல் ஆமை

விளக்கம்:

  • இருவாழ்விகள் அல்லது ஆம்பீபியா

(எ.கா) தவளை, தேரை, சாலமாண்டர், சிசிலியன்

  • ஊர்வன அல்லது ரெப்டைல்ஸ்

(எ.கா) தோட்டத்துப்பல்லி, வீட்டுப் பல்லி, கடல் ஆமை, நில ஆமை, பாம்புகள், முதலை

36) பின்வருவனவற்றுள் எந்த விலங்கு குளிர் இரத்த விலங்கு வகைப்பாட்டை சேர்ந்தது?

A) கரடி

B) புலி

C) நெருப்புக்கோழி

D) முதலை

விளக்கம்: முதுகெலும்புள்ள விலங்குகளை வெப்ப இரத்த விலங்கு மற்றும் குளிர் இரத்த விலங்கு என வகைப் படுத்துகிறோம் .மேலும் வெப்ப இரத்த விலங்குகளை பாலூட்டிகள், பறப்பன எனவும், குளிர் இரத்த விலங்குகளை மீன்கள், ஊர்வன, இருவாழ்விகள் எனவும் பிரிக்கின்றோம் . இதன்படி

  • கரடி, புலி -பாலூட்டிகள்
  • நெருப்புக்கோழி -பறப்பன
  • முதலை –ஊர்வன.

37) தாலஸ் என்று அழைக்கப்படுவது எது?

A) ஆல்காக்கள்

B) மாஸ்கள்

C) பெரணிகள்

D) ஜிம்னோஸ்பெர்ம்கள்

விளக்கம்: ஆல்காக்கள் தாலஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை தாவர உடலானது வேர், தண்டு மற்றும் இலை என வேறுபாடற்று காணப்படுகிறது.

38) ஜிம்னோஸ்பெர்ம்கள் ஏன் கனிகளை உண்டாக்குவதில்லை?

A) வாஸ்குலார் கற்றைகள் உடையவை

B) உண்மையான வேர், தண்டு மற்றும் இலைகளை உடையவை

C) சூல்கள் திறந்தவை மற்றும் சூற்பை அற்றவை

D) சூலகம் உடையவை

விளக்கம்: ஜிம்னோஸ்பெர்ம்களின் சூல்கள் திறந்தவை மற்றும் சூற்பை அற்றவை. எனவே இவை கனிகளை உண்டாக்குவதில்லை.

39) ஐந்து உலக வகைப்பாட்டு முறை யாரால் முன்மொழியப்பட்டது?

A) V.S.வக்காங்கர்

B) R.H.விட்டேக்கர்

C) காஸ்பார்டு பாஹின்

D) கரோலஸ் லின்னேயஸ்

விளக்கம்: ஐந்து உலக வகைப்பாடு முறை R.H.விட்டேகர் என்பவரால் 1969 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. இந்த ஐந்து உலகங்கள் செல் அமைப்பு, உணவு ஊட்ட முறை, உணவு மூலம் மற்றும் உடல் அமைப்பு போன்ற குணாதிசயங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

40) பின்வருவனவற்றுள் உட்கரு, நியூக்ளியார் சவ்வு போன்றவை இல்லாத உலகம் எது?

A) புரோடிஸ்டா உலகம்

B) பூஞ்சைகள் உலகம்

C) ப்ளாண்ட்டே உலகம்

D) மொனிரா உலகம்

விளக்கம்: மொனிராவில் உண்மையான உட்கரு இல்லை. நியூக்ளியர் சவ்வு மற்றும் சவ்வினால் சூழப்பட்ட நுண்ணுறுப்புகள் எதுவும் கிடையாது.

41) ஐந்துலக வகைப்பாட்டில் வைரஸ் எந்த உலகத்தில் சேர்ந்தவை?

A) மொனிரா

B) புரோடிஸ்டா

C) அனிமேலியா

D) மேற்கூறிய எதுவும் இல்லை

விளக்கம்: வைரஸ்களுக்கு இந்த வகைப்பாட்டில் முறையான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

42) இருவாழ்வி தாவரங்களின் என்று அழைக்கப்படுவது எது?

A) ஆல்காக்கள்

B) பெரணிகள்

C) மாஸ்கள்

D) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

விளக்கம்: மாஸ்கள் நீரை விரும்புபவை, வாழ்க்கை சுழற்சியினை நிறைவு செய்ய இவற்றிற்கு ஈரப்பதம் அவசியமாகிறது. எனவே இவை இருவாழ்வி தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.

43) கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது

பெயர் – அறிவியல் பெயர்

A) தவளை – ராணா ஹெக்சா டாக்டைலா

B) ஆரஞ்சு – சிட்ரஸ் அருண்டிஃபோலியா

C) மீன் – கட்லா கட்லா

D) பேரிச்சை – போனிக்ஸ் டாக்டைலிபெரா

விளக்கம்:

  • ஆரஞ்சு – சிட்ரஸ் சைனன்ஸிஸ்
  • எலுமிச்சை – சிட்ரஸ் அருண்டிஃபோலியா

44) கீழ்கண்டவற்றுள் எந்த இணை தவறாக பொருத்தப்பட்டுள்ளது

தொகுதி – உயிரினம்

A) மெல்லுடலிகள் – கணவாய் மீன்கள்

B) கணுக்காலிகள் – இறால்

C) பிஸ்ஸஸ் – திலேப்பியா

D) ஏவ்ஸ் – மனிதன்

விளக்கம்: ஏவ்ஸ் – பறப்பதற்கு ஏற்ற தகவமைப்பு , எலும்புகள் மிருதுவானதாகவும் காற்றறைகள் நிரம்பியதாகவும் காணப்படும்.

எ.கா-சிட்டுக்குருவி, கிவி, நெருப்புக்கோழி

45) தொகுதி-1 தொகுதி-2

a) கனி 1] சூல்கள்

b) விதை 2] இலை

C) மரம் 3] தண்டு

d) ஸ்டார்ச் 4] சூற்பை

A) a-2, b – 1, C-3, d -4

B) a-4, b – 1, C-3, d – 2

C) a-2, b – 3, C-1, d – 4

D a-4, b – 3, C-1, d – 2

விளக்கம்: பெண் இனப்பெருக்க உறுப்பான சூலகம் கனியாகவும், சூல்கள் விதையாக உருவாகின்றன.

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin