7th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2
7th Science Lesson 10 Questions in Tamil
10] செல் உயிரியல்
1) உயிரினத்தின் அடிப்படை செயல் அலகு என்று அழைக்கப்படுவது எது?
A) செல்
B) திசுக்கள்
C) உறுப்புகள்
D) உறுப்பு மண்டலம்
விளக்கம்: அனைத்து உயிரினங்களும் அடிப்படை அலகைப் பெற்றுள்ளது. அவை செல் என்று அழைக்கப்படுகிறது.
2) கூற்று: தாவரத்தில் வேர் அமைப்பில் முதன்மை வேர், இரண்டாம் நிலை வேர் மற்றும் மூன்றாம் நிலை வேர் ஆகியவை காணப்படுகின்றன.
காரணம்: இது நீர், கனிமம் போன்றவற்றைக் கடத்துவதற்கும் மற்றும் தாவரத்தை நிலத்தில் நிலைப்படுத்தவும் உதவுகிறது.
A) கூற்று சரி காரணமும் சரி
B) கூற்று தவறு காரணம் சரி
C) கூற்று சரி, காரணம் தவறு
D) கூற்று மற்றும் காரணம் தவறு
விளக்கம்: தாவரத்தின் வேர் அமைப்பில் முதன்மை வேர், இரண்டாம் நிலைவேர் மற்றும் மூன்றாம் நிலை வேர் ஆகியவை காணப்படுகின்றன. இது நீர், கனிமம் போன்றவற்றை கடத்துவதற்கு மற்றும் தாவரத்தை நிலத்தில் நிலைப்படுத்தவும் உதவுகிறது.
3) மனிதர்கள் மற்றும் விலங்குகளின் திசுக்களை எத்தனை வகைகளாய் பிரிப்பர்?
A) 3
B) 4
C) 5
D) 6
விளக்கம்: மனிதர்கள் மற்றும் பிற விலங்குகள் நரம்புத் திசு, எபிதீலியல் திசு ,இணைப்புத்திசு மற்றும் தசை திசுக்களால் உருவாக்கப்படுகின்றன.
4) பின்வரும் செல்களில் உட்கரு இன்றி காணப்படும் செல் எது?
A) நரம்பு செல்கள்
B) தசை செல்கள்
C) எபிதீலியல் செல்கள்
D) இரத்த சிவப்பு செல்கள்
விளக்கம்: சிவப்பு இரத்த செல்களில் உட்கரு இல்லை உட்கருவின்றி இந்த செல்கள் விரைவில் இறக்கின்றன. சுமார் இரண்டு மில்லியன் சிவப்பு செல்கள் ஒவ்வொரு நொடியும் இறக்கின்றன அதிர்ஷ்டவசமாக மனித உடம்பில் புதிய சிவப்பு ரத்த செல்கள் தினமும் தோன்றுகின்றன.
5) பின்வருவனவற்றில் தாவரங்களில் காணப்படும் திசு எது?
A) கடத்தும் திசு
B) புறத்தோல் திசு
C) A மற்றும் B
D) இவைஎதுவுமில்லை
விளக்கம்: தாவரங்களில் கடத்தும் திசு, புறத்தோல் திசு மற்றும் அடிப்படைத் திசுக்கள் உள்ளன.
6) ஒரு செல்லின் உள்ளே உள்ள உறுப்புகளில் மிகப்பெரியது எது?
A) சைட்டோபிளாசம்
B) எண்டோபிளாச வலைப்பின்னல்
C) செல் உட்கரு
D) கோல்கி உடலம்
விளக்கம்: உட்கரு,செல்லின் கட்டுப்பாட்டு மையம் மற்றும் செல்லின் பெரிய நுண்ணுறுப்பு உட்கரு ஆகும்.
7) பொதுவாக சைட்டோசால் எந்த நிறமுடையது?
A) நீலம்
B) பச்சை
C) சிவப்பு
D) நிறமற்றது
விளக்கம்: சைட்டோபிளாசம் சைட்டோசால் மற்றும் செல் நுண்ணுறுப்புகளால் ஆனது .சைட்டோசால் என்பது நீர் நிறைந்த, ஜெல்லி போன்ற 70%-90% அளவு நீராலானது பொதுவாக இது நிறமற்றது.
8) பின்வருவனவற்றுள் நுண்ணுறுப்புகளின் செயல்கள் எது?
A) உணவு வழங்குதல்
B) செல்லை சரி செய்தல்
B) கழிவுகளை அகற்றுதல்
D) இவையனைத்தும்
விளக்கம்: நுண்ணுறுப்புகள் தங்கள் செயலின் மூலம் உணவு வழங்குவதற்கும் ,கழிவுகளை அகற்றுவதற்கும், உயிரை பாதுகாப்பதற்கும், செல்லை சரி செய்வதற்கும், வளரவும் மற்றும் இனப்பெருக்கம் செய்யவும் உதவுகின்றன.
9) உட்கருவைத் தவிர செல்லின் அனைத்து பகுதிகளும் காணப்படும் பகுதி
A) எண்டோபிளாச வலைப்பின்னல்
B) சென்ட்ரியோல்
C) சைட்டோபிளாசம்
D) ரிபோசோம்
விளக்கம்: சைட்டோபிளாசம் என்பது செல் சவ்வு உள்ளடக்கிய செல்லின் அனைத்து பகுதிகள் கொண்ட, ஆனால் உட்கருவை தவிர்த்து உள்ள பகுதியாகும்.
10) செல்லின் சுவாச உறுப்பு எது?
A) கோல்கி உடலம்
B) மைட்டோகாண்ட்ரியா
C) சென்ட்ரியோல்
D) உட்கரு
விளக்கம்: மைட்டோகாண்ட்ரியா கோள அல்லது குச்சி வடிவிலான, இரட்டை சவ்விலான நுண்ணுறுப்பு ஆகும் காற்று சுவாச வினைகளில் ஈடுபட்டு ஆற்றல் வெளியீடு செய்யப்படுகின்றன.
11) செல் பகுப்பின் போது ஸ்பின்டில் நார்களைப் பெருக்கமடையச் செய்வது எது?
A) சென்ட்ரியோல்
B) எண்டோபிளாச வலைப்பின்னல்
C) சைட்டோபிளாசம்
D) உட்கரு
விளக்கம்: சென்ட்ரியோல் செல் பகுப்பின் போது ஸ்பிண்டில் நார்களை பெருக்கம் அடையச் செய்கிறது.
12) உடலின் செயல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் செய்தி பரிமாற்றம் போன்ற செயல்களைச் செய்யும் செல் எது?
A) தசை செல்கள்
B) எபிதீலியல் செல்கள்
C) நரம்பு செல்கள்
D) இரத்த சிவப்பு செல்கள்
விளக்கம்: நரம்பு செல்கள் உடலின் செயல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் செய்திப் பரிமாற்றம் போன்ற செயல்களைச் செய்கின்றன.
13) நீண்ட மற்றும் கதிர்கோல் வடிவம் கொண்ட செல் எது?
A) எபிதீலியல் செல்கள்
B) நரம்பு செல்கள்
C) இரத்த சிவப்பு செல்கள்
D) தசை செல்கள்
விளக்கம்: தசை செல்கள் நீண்ட மற்றும் கதிர் கோல் வடிவம் கொண்டதாகும்.
14) 1. வட்ட வடிவம்
2. இருபுற குழி
3. தட்டு வடிவம்
மேற்கூறிய பண்புகளைக் கொண்ட செல் எது?
A) நரம்பு செல்கள்
B) இரத்த சிவப்பு செல்கள்
C) தசைசெல்கள்
D) எபிதீலியல் செல்கள்
விளக்கம்: இரத்த சிவப்பு செல்கள் வட்ட வடிவம், இருபுற குழி மற்றும் தட்டு வடிவமானது.
15) கோள வடிவம் கொண்டு ஜோடியாக காணப்படும் நுண்ணுறுப்பு எது?
A) எண்டோபிளாசவலைப்பின்னல்
B) மைட்டோகாண்ட்ரியா
C) கோல்கி உடலம்
D) சென்ட்ரியோல்
விளக்கம்: சென்ட்ரியோல் என்பது கோள வடிவம் கொண்டு ஒரு ஜோடியாக காணப்படும். செல் பகுப்பின் போது ஸ்பின்டில் நார்களை பெருக்கம் அடைய செய்கிறது.
16) பின்வருவனவற்றுள் கோல்கை உறுப்புகளின் பணிகள் எது?
A) நொதிகளைச் சுரப்பது
B) உணவிலிருந்து புரதத்தை பிரித்தல்
C) உணவு செரிமானம் அடையச் செய்வது
D) இவையனைத்தும்
விளக்கம்: கோல்கை உறுப்புகள் நொதிகளைச் சுரப்பது ,உணவு செரிமானம் அடையச் செய்வது ,உணவிலிருந்து புரதத்தை பிரித்து செல்லுக்கும், உடலுக்கும் வலு சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றன.
17) விலங்கு செல்களில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு எது?
A) பசுங்கணிகம்
B) கோல்கை உறுப்புகள்
C) சென்ட்ரியோல்
D) லைசோசோம்
விளக்கம்: சென்ட்ரியோல் விலங்கு செல்களில் மட்டுமே உள்ளன மற்றும் தாவர செல்களில் காணப்படவில்லை.
18. பின்வருவனற்றுள் எண்டோபிளாச வலைப்பின்னல் எதன் தயாரிப்பிலும் கடத்தலிலும் பங்கு கொள்கிறது?
A) கொழுப்புகள்
B) ஸ்டீராய்டுகள்
C) A மற்றும் B
D) இவையெதுமில்லை
விளக்கம்: எண்ட்டோபிளாச வலைப்பின்னல் கொழுப்புகள், ஸ்டீராய்டுகள் ஆகியவற்றை தயாரிப்பதிலும், கடத்தலிலும் பங்கு கொள்வது இதன் பிரதான பணியாகும்.
19) செல்பிரிதலின் போது எந்த நுண்ணுறுப்பானது குரோமோசோமாக அமைக்கப்படுகிறது?
A) நியூக்ளியோலஸ்
B) குரோமேட்டின்
C) A மற்றும் B
C) இவையெதுமில்லை
விளக்கம்: செல் பிரிதலின் போது குரோமேட்டின் உடலானது குரோமோசோமாக அமைக்கப்படுகிறது.
20) செல் பகுப்பின் போது எந்த நுண்ணுறுப்பானது குரோமோசோம்களைப் பிரிக்க உதவுகிறது ?
A) மைட்டோகாண்ட்ரியா
B) கோல்கி உடலம்
C) உட்கரு
D) சென்ட்ரியோல்
விளக்கம்: சென்ட்ரியோல் செல் பகுப்பின் போது குரோமோசோம்களைப் பிரிக்க உதவுகிறது.
21) செல்லின் முதன்மையான செரிமான பகுதி எது?
A) கோல்கை உறுப்புகள்
B) லைசோசோம்
C) சென்ட்ரியோல்
D) உட்கரு
விளக்கம்: லைசோசோம் நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கக்கூடிய மிகவும் சிறிய அமைப்பாகும். இவை செல்லின் முதன்மையான செரிமான பகுதியாகும்.
22) பின்வருவனவற்றுள் தாவர செல்லிற்கான வடிவத்தை தருவது எது?
A) செல்லுலோஸ்
B) பிளாஸ்மோடெஸ்மாட்டா
C) சைட்டோசால்
D) உட்கரு
விளக்கம்: செல்லுலோஸ் தாவரசெல்லிற்கான வடிவத்தை தருகிறது. இது அதிக உயரத்திற்கு வளர்ந்து விட்டாலும் கூட தாவரங்கள் உறுதியாகவும் நேராகவும் இருக்க அனுமதிக்கிறது.
23) பின்வருவனவற்றுள் தாவரங்கள் அதிக உயரத்திற்கு வளர்ந்துவிட்டாலும் கூட உறுதியாகவும், நேராகவும் இருக்க உதவுவது எது?
A) பிளாஸ்மோடெஸ்மாட்டா
B) செல்லுலோஸ்
C) சைட்டோசால்
D) நியூக்ளியோஃப்பிளாசம்
விளக்கம்: தாவரங்கள் அதிக உயரத்திற்கு வளர்ந்து விட்டாலும் கூட உறுதியாகவும் நேராகவும் இருக்க அனுமதிப்பது செல்லுலோஸ் ஆகும்.
24) ஒவ்வொரு செல்லும் அதன் அருகில் உள்ள செல்களுடன் இணையும் சிறிய துவாரத்தின் பெயர்
A) சைட்டோசால்
B) நியூக்ளியோபிளாசம்
C) செல்லுலோஸ்
D) பிளாஸ்மோடெஸ்மாட்டா
விளக்கம்: பிளாஸ்மோடெஸ்மாட்டா என்றழைக்கப்படும் சிறிய துவாரத்தின் மூலம் ஒவ்வொரு செல்லும் அதன் அருகிலுள்ள செல்களுடன் இணைத்துக் கொள்கிறது.
25) பின்வருவனவற்றுள் புரோட்டோப்பிளாசம் என்றழைக்கப்படுவது எது?
A) நியூக்ளியோஃப்பிளாசம்
B) சைட்டோபிளாசம்
C) இவையனைத்தும்
D) இவை எதுவுமில்லை
விளக்கம்: உட்கருவின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருள் புரோட்டோபிளாசம் என்று அழைக்கப்படுகிறது.உட்கருவின் உள்ளே உள்ள திரவம் அணுக்கரு அல்லது நியூக்ளியோஃப்ளாசம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் உட்கருவுக்கு வெளியே சைட்டோபிளாசம் என்று அழைக்கப்படுகிறது.
26) செல்லின் ஆற்றல் மையம் என்றழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு
A) சைட்டோபிளாசம்
B) மைட்டோகாண்ட்ரியா
C) ரைபோசோம்
D) உட்கரு
விளக்கம்: செல் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுவது மைட்டோகாண்ட்ரியா ஆகும்.
27) தாவர செல்களில் மட்டும் காணப்படும் நுண் உறுப்பு எது?
A) மைட்டோகாண்ட்ரியா
B) பசுங்கணிகம்
C) சென்டரிமோல்
D) லைசோசோம்
விளக்கம்: பசுங்கணிகம் என்பது ஒரு வகை கணிகம். தாவர செல்களில் மட்டும் பசுமை நிற நுண்ணுறுப்பாக இருக்கின்றன.
28) சூரியனின் ஒளி ஆற்றலைப் பெற்று வேதி ஆற்றலாக மாற்றி உணவு தயாரிப்பது எது?
A) செல் சுவர்
B) குமிழ்கள்
C) பசுங்கணிகம்
D) உட்கரு
விளக்கம்: சூரிய ஆற்றலில் இருந்து உணவு தயாரிக்க கூடிய ஒரே நுண்ணுறுப்பு பசுங்கணிகம் ஆகும்.இது சூரியனின் ஒளி ஆற்றலை பெற்று வேதி ஆற்றலாக மாற்றி உணவு தயாரிக்கிறது.
29) கீழ்கண்டவற்றுள் கரிம, கனிம வேதி மூலக்கூறுகள் மற்றும் நீரால் செல் உறுப்புகளுக்குஆதரவு வழங்குவது எது?
A) உட்கரு
B) சென்ட்ரியோல்
C) குமிழ்கள்
D) செல் சவ்வு
விளக்கம்: கரிம, கனிம வேதியியல் மூலக்கூறுகள் மற்றும் நீர் செல் உறுப்புகளுக்கு ஆதரவு வழங்குகிறது.
30) சவ்வால் சூழப்பட்ட பைகள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு சுரப்பி குழல்களுடன் அமைந்துள்ள அமைப்பு எவ்வாறு அழைக்கப்படும்
A) கோல்கை உறுப்புகள்
B) சென்ட்ரியோல்
C) லைசோசோம்
D) எண்டோபிளாச வலைப்பின்னல்
விளக்கம்: சவ்வால் சூழப்பட்ட பைகள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு சுரப்பி குழல்களுடன் அமைந்துள்ள அமைப்பு கோல்கை உறுப்புகள் எனப்படும்.
31) பொருத்துக
தொகுதி-I தொகுதி-2
a) ஆற்றல் மையம் 1) பசுங்கணிகம்
b) உணவு தயாரிப்பாளர் 2) மைட்டோகாண்ட்ரியா
c) கட்டுப்பாட்டு அறை 3) லைசோசோம்
d) தற்கொலைப் பை 4) உட்கரு
A) a-2, B – 1, c-4, d-3
B) a-3, b – 1, c-2, d- 4
C) a-4, B – 3, c-1, d- 2
D) a-4, b – 1, c-3, d-2
விளக்கம்:
- ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுவது மைட்டோகாண்ட்ரியா
- உணவு தயாரிப்பாளர் என்று அழைக்கப்படுவது பசுங்கணிகம்
- கட்டுப்பாட்டு அறை என்று அழைக்கப்படுவது உட்கரு
- தற்கொலைப் பை என்று அழைக்கப்படுவது லைசோசோம்
32) கூற்று : திசு என்பது மாறுபட்ட செல்களை கொண்ட ஒரு குழு.
காரணம்: நரம்புத் திசு நரம்பு செல்களால் ஆனது.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை
B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானவை
C) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
D) கூற்று தவறு ஆனால் காரணம் சரியானது
விளக்கம்: ஒரு திசு என்பது குறிப்பிட்ட செயல்களை செய்வதற்காக உருவான செல்களின் குழுவாகும் .நரம்புத் திசு நரம்பு செல்களால் ஆனது.
33) பின்வருவனவறறில் உட்கருவின் உள்ளே அமைந்தவை?
A) நியூக்ளியோலஸ்
B) குரோமேட்டின் உடல்
C) இவை அனைத்தும்
D) இவை எதுவும் இல்லை
விளக்கம்: ஒன்று அல்லது இரண்டு நியூக்ளியோலஸ் மற்றும் குரோமேட்டின் உடல் ஆகியவை உட்கருவின் உள்ளே உள்ளன.
34) எண்டோபிளாச வலைப் பின்னல் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: எண்டோபிளாச வலைப்பின்னல் சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல் என இரண்டு வகைப்படும்.
35) சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் எந்த நுண்ணுறுப்பு உடன் இணைந்து இருப்பதால் புரத சேர்க்கைக்கு உதவுகிறது.
A) உட்கரு
B) லைசோசோம்
C) ரைபோசோம்கள்
D) சென்ட்ரியோல்
விளக்கம்: சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் என்பது ரைபோசோம்கள் இணைந்து இருப்பதால் புரத சேர்க்கைக்கு உதவுகிறது.
36) புரோட்டின் மற்றும் பாலிபெப்டைடுகளை ஒன்றிணைக்கும் நுண்ணுறுப்பு எது?
A) உட்கரு
B) ரிபோசோம்
C) சைட்டோபிளாசம்
D) எண்டோபிளாச வலைப்பின்னல்
விளக்கம்: ரிபோசோம்கள் ஆர்.என்.ஏ வைப் பெற்றுள்ளது புரோட்டின் மற்றும் பாலிபெப்டைடுகளை ஒன்றிணைக்கிறது.
37) கனிகளின் நிறம் மற்றும் சுவை மாற்றத்திற்கான காரணமான நுண்ணுறுப்பு எது?
A) கோல்கை உடலம்
B) சென்ட்ரியோல்
C) ரைபோசோம்கள்
D) லைசோசோம்
விளக்கம்: கனிகளின் நிறம் மற்றும் சுவை மாற்றத்திற்கான நுண்ணுறுப்பு கோல்கை உடலம் ஆகும்.
38) 1. உடலில் உள்ள எந்த ஒரு செல்லாகவும் மாறவல்லது.
2. சில நோய்களை குணப்படுத்தவும் தடுக்கவும் இந்த செல்களை பயன்படுத்தி வருகின்றனர்.
மேற்கூறிய பண்புகளை உடைய செல் எது?
A) இரத்த செல்கள்
B) மூலச் செல்கள்
C) தசை செல்கள்
D) சுரப்பி செல்கள்
விளக்கம்: மூலச்செல்கள் எந்த ஒரு வகை செல்லுக்குள் செல் பிரிதல் அடைந்து, பெருக்கம் அடைந்து, வளர்ச்சி அடையும் திறன் உடையது. ஆனால் மூலச் செல்கள் மிகவும் ஆச்சரியமானவை கருவில் இருந்து பெறப்படும் மூலச் செல்கள் மிகவும் சிறப்பானது ஏனெனில் உடலில் உள்ள எந்த ஒரு செல்லாகவும் அவை மாறக்கூடியது எனவே அறிவியல் அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் சில நோய்களை குணப்படுத்தவும் தடுக்கவும் மூலச் செல்களை பயன்படுத்தி வருகின்றனர் உதாரணமாக முதுகுத்தண்டில் ஏற்படும் காயம்.
39) பின்வருவனவற்றுள் எது செல்லை பாதுகாக்கவும் அதன் வடிவத்தை நிலைப்படுத்தவும் செய்கிறது.
A) பசுங்கணிகம்
B) கோல்கை உடலம்
C) சைட்டோபிளாசம்
D) செல்சுவர்
விளக்கம்: செல்சுவர் தாவர செல்லுக்கு பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கான சட்டகம் ஆக செயல்படுகிறது.
40) வெவ்வேறு திசுக்களின் தொகுப்பானது ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்களை செய்யக் கூடிய அமைப்பாகிறது. இந்த அமைப்பை எவ்வாறு அழைப்போம்.
A) உறுப்பு மண்டலம்
B) உறுப்பு
C) திசு
D) உயிரினம்
விளக்கம்: வெவ்வேறு திசுக்களின் தொகுப்பானது ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்களை செய்யக் கூடிய அமைப்பாகிறது. இது உறுப்பு என்று அழைக்கப்படுகிறது.
41) பின்வருவனவற்றில் ஒரு செல் உயிரினங்களை காண பயன்படுத்தபடுவது
A) தொலைநோக்கி
B) கெலிடோஸ்கோப்
C) பெரிஸ்கோப்
D) நுண்ணோக்கி
விளக்கம்: செல்கள் நுண்ணியவை இவற்றை நுண்ணோக்கியால் மட்டுமே காணமுடியும்.
42) உணவு நச்சாவதற்கு முக்கிய காரணியாக கருதப்படும் பாக்டீரியா
A) சால்மோனெல்லா
B) லாக்டோ பேசில்லஸ்
C) லாக்டோ காக்கஸ்
D) வெஸில்லா
விளக்கம்: சால்மோனெல்லா சிற்றினத்தைச் சார்ந்த பாக்டீரியா உணவு நச்சு ஆவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.
43) செல்லுக்கு சக்தியை வழங்கும் மூலக்கூறின் பெயர் என்ன?
A) அடினோசின் டிரை பாஸ்பேட்
B) குளுக்கோஸ்
C) அடினோசின் பை பாஸ்பேட்
D) ப்ரக்டோஸ்
விளக்கம்: மைட்டோகாண்ட்ரியா ஒருசெல் சுவாச உறுப்பு. இவை செல்லுக்கு அடினோசின் டிரை பாஸ்பேட் என்று மூலக்கூறினை வழங்குகிறது. இவை செல்லில் சக்தியை வழங்குவதற்கு உதவுகிறது.
44) பிளாஸ்மா சவ்வு என்று அழைக்கப்படுவது எது?
A) உட்கரு
B) செல் சவ்வு
C) உட்கரு உறைகள்
D) உட்கரு துளைகள்
விளக்கம்: விலங்கு செல்லினை சுற்றி எல்லையாக இருப்பது பிளாஸ்மா சவ்வு,இது செல் சவ்வு எனவும் அழைக்கப்படுகிறது.
45) கூற்று: செல் சவ்வுகள் அரிதி கடத்தியாகும்.
காரணம்: இவை அனைத்து பொருட்களையும் செல்லுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல அனுமதிக்கின்றன.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை
B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானவை
C) கூற்று சரி ஆனால் காரணம் தவறானது
D) கூற்று தவறு ஆனால் காரணம் சரியானது.
விளக்கம்: செல் சவ்வுகள் அரிதி கடத்தி ஆகும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை மட்டுமே செல்லிற்குள்ளேயும் வெளியேயும் செல்ல அனுமதிக்கின்றன.