TnpscTnpsc Current Affairs

7th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

7th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 7th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

7th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. UNESCO உலகளாவிய கற்றல் நகரங்களில் இணைந்துள்ள நகரங்கள் யாவை?

அ. வாரங்கல், திருச்சூர் மற்றும் நிலம்பூர்

ஆ. மைசூரு, வாரணாசி மற்றும் ஜெய்ப்பூர்

இ. கொச்சி, மைசூரு மற்றும் வாரணாசி

ஈ. காஞ்சிபுரம், தோலவிரா மற்றும் மைசூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. வாரங்கல், திருச்சூர் மற்றும் நிலம்பூர்

  • தெலுங்கானா மாநிலத்திலிருந்து வாரங்கல் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து திருச்சூர் மற்றும் நிலம்பூர் UNESCO உலகளாவிய கற்றல் நகரங்களில் சேர்ந்துள்ளன. 44 நாடுகளைச் சேர்ந்த 77 நகரங்கள் சமீபத்தில் இப்பட்டியலில் இணைந்தன; இதில் உலகம் முழுவதிலுமிருந்து 294 நகரங்கள் அடங்கும். கற்றலை மேம்படுத்துவதற்கான அந்த நகரங்களின் சிறந்த முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக அந்த நகரங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

2. எந்த நகரத்தில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தித் தொகுதியை அமைக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது?

அ. சென்னை

ஆ. புனே

இ. புது தில்லி

ஈ. பெங்களூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புனே

  • புனேயில் `500 கோடி மதிப்பீட்டில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தித் தொகுதியை அமைக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டம், `2000 கோடி வரை முதலீடுகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்னணுப் பொருட்கள் உற்பத்தித் தொகுதி ஆனது சுமார் 297 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.

3. ‘இந்திராகாந்தி ஷெஹாரி ரோஜ்கர் உத்தரவாத யோஜனா’ என்பது கீழ்க்காணும் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் முனைவாகும்?

அ. சத்தீஸ்கர்

ஆ. இராஜஸ்தான்

இ. பஞ்சாப்

ஈ. புது தில்லி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இராஜஸ்தான்

  • ‘இந்திராகாந்தி ஷெஹாரி ரோஜ்கர் உத்தரவாத யோஜனா’ என்ற பெயரிடப்பட்ட நகர்ப்புற ஏழைகளுக்கான நாட்டின் முதல் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை இராஜஸ்தான் மாநிலம் தொடங்கவுள்ளது. `800 கோடி மதிப்பீட்டில் செப்.9 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் நகர்ப்புற ஏழைகளுக்கு, குறிப்பாக COVID–19 தொற்றுகாலத்தின்போது வேலையிழந்தோர்க்கு 100 நாட்கள் உத்தரவாதமான வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. பெங்களூரு விண்வெளிக்கண்காட்சியின்போது, விண்வெளி தொழில்நுட்பத்திற்காக கீழ்க்காணும் எந்த நாட்டின் விண்வெளி நிறுவனத்துடன் ISRO கூட்டிணைந்தது?

அ. அமெரிக்கா

ஆ. ஜப்பான்

இ. ஆஸ்திரேலியா

ஈ. பிரான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஆஸ்திரேலியா

  • பெங்களூருவில் நடைபெற்ற விண்வெளிக் கண்காட்சியின்போது இந்திய மற்றும் ஆஸ்திரேலிய விண்வெளி துளிர் நிறுவனங்களுக்கு இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மற்றும் ஆஸ்திரேலிய விண்வெளி முகமை (ASA) ஆகியவை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்த சந்தைகளை உருவாக்க முடிவுசெய்துள்ளன. ASA என்பது ஆஸியின் வணிகரீதியிலான விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கு பொறுப்பான ஒரு நிறுவனமாகும்.

5. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘PM SHRI’ யோஜனா என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ. மின்னணுவியல்

ஆ. ஏற்றுமதி

இ. கல்வி

ஈ. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கல்வி

  • ரைசிங் இந்தியா (PM–SHRI) யோஜனாவுக்கான பிரதம மந்திரி பள்ளிகளை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தத்திட்டத்தின்கீழ், நாடு முழுவதுமுள்ள 14,500 பள்ளிகள் PM–SHRI பள்ளிகளாக தரமுயர்த்தப்படும். அப்பள்ளிகள் கல்வியைப் போதிப்பதற்கான நவீன முறைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும். ‘PM SHRI’ பள்ளிகள், தேசிய கல்விக்கொள்கை – 2020இன் அனைத்து கூறுகளையும் வெளிப்படுத்தும்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற குக்ரைல் வனப்பகுதி அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. கேரளா

ஆ. உத்தர பிரதேசம்

இ. மத்திய பிரதேசம்

ஈ. மகாராஷ்டிரா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உத்தர பிரதேசம்

  • லக்னௌ மாவட்டம் குக்ரைல் வனப்பகுதியில் இரவுநேர வனப்பயணத்தைத் தொடங்க உத்தர பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், வனப்பகுதியில் உள்ள 2,027 ஹெக்டேர் வனப்பகுதியில் விலங்கியல் பூங்கா மற்றும் இரவுநேர வனப்பயணத்தை அரசு அமைக்கும். சூழல் சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் உத்தர பிரதேச மாநில அரசு அதன் ‘ஒரு மாவட்டம், ஒரு தளம்’ திட்டத்தின்கீழ் மாநிலத்தின் 56 மாவட்டங்களில் 56 சூழல் சுற்றுலா தளங்களை அடையாளம் கண்டுள்ளது.

7. எல்லைப்புறச்சாலைகள் அமைப்பானது (BRO) எஃகுக் கழிவுப்பொருட்களைக்கொண்டு சோதனை முறையிலான சாலையை கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் அமைக்கவுள்ளது?

அ. அஸ்ஸாம்

ஆ. மேற்கு வங்கம்

இ. பீகார்

ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. அருணாச்சல பிரதேசம்

  • எல்லைப்புறச்சாலைகள் அமைப்பானது (BRO) அருணாச்சல பிரதேசத்தில் எஃகுக்கழிவுப்பொருட்களைக்கொண்டு சோதனை முறையிலான சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. கனமழை மற்றும் கடினமான வானிலை நிலைகளைத் தாங்கும் இந்த எஃகுக் கழிவு அடிப்படையிலான சாலை, BROஇன் முழுமுதல் திட்டமாகும். இந்தச் சாலைத்திட்டம், வடகிழக்கு இந்தியாவிலுள்ள உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்க உதவும்.

8. குஜராத் மாநிலத்தின் ஹசிராவில் புதிய பசுமை ஹைட்ரஜன் ஆலையைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. ONGC

ஆ. BHEL

இ. L&T

ஈ. BPCL

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. L&T

  • பொறியியல் நிறுவனமான லார்சன்&டூப்ரோ (L&T) குஜராத் மாநிலத்தின் ஹசிராவில் ஒரு புதிய பசுமை ஹைட்ரஜன் ஆலையைத் தொடங்கியது. இந்நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மற்றும் ‘ரெனியூ பவர்’ உடனான கூட்டு முனைவில் ஒப்பமிட்டது. இந்த ஆலை தினசரி 45 கிலோ பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும்; அது நிறுவனத்தின் ஹசிரா உற்பத்தி வளாகத்தில் நுகர்வுக்கு பயன்படுத்தப்படும்.

9. ‘மகாத்மா’ காந்தியடிகளின் மார்பளவுச்சிலையை கீழ்க்காணும் எந்த நாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்?

அ. பராகுவே

ஆ. ஈரான்

இ. ஓமன்

ஈ. கத்தார்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பராகுவே

  • இந்தியாவின் நடுவண் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘மகாத்மா’ காந்தியடிகளின் மார்பளவுச்சிலையை பராகுவேயில் திறந்துவைத்தார். இருநூற்றாண்டுகளுக்கு முன்னர் தென்னமெரிக்க நாட்டில் விடுதலை இயக்கம் தொடங்கப்பட்ட, ‘காசா டி லா இன்டிபென்டென்சியா’ என்ற இடத்தையும் அவர் பார்வையிட்டார்.

10. ஷாஹீத் பகத் சிங்கின் பெயர்சூட்டப்படவுள்ள இந்திய வானூர்தி நிலையம் எது?

அ. சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆ. புது தில்லி பன்னாட்டு வானூர்தி நிலையம்

இ. கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஈ. மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

  • சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு ஷாஹீத்–இ–ஆசம் பகத் சிங்கின் பெயரைச் சூட்ட பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் பெயரை மாற்றுவது தொடர்பாக இருமாநிலங்களுக்கும் பல தசாப்தங்களாக மோதல் இருந்து வந்தது. முன்னதாக, பஞ்சாப் விதான் சபா இந்த வானூர்தி நிலையத்திற்கு, ‘ஷாஹீத்–இ–ஆசம் சர்தார் பகத் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம், மொஹாலி’ எனப் பெயரிட தீர்மானம் நிறைவேற்றியது. ஹரியானா விதான் சபாவில், ‘சண்டிகர்’ என்ற பெயரைப் பயன்படுத்தி முனையத்தின் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மீண்டும் ‘சிவிங்கிப்புலி’ திட்டம்: செப்.17இல் பிரதமர் தொடக்கம்

இந்திய காடுகளில் மீண்டும் ‘சிவிங்கிப்புலி’யை (சீட்டா) அறிமுகப்படுத்தும் திட்டத்தை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி செப்.17இல் தொடக்கிவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தார்.

உலகிலேயே மிகவேகமாக ஓடக்கூடிய உயிரினமான சிவிங்கிப்புலிகள், ஒருகாலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்ட அரசர்கள், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் உள்ளிட்டோர் பொழுதுபோக்குக்காக அவற்றை பெருமளவில் வேட்டையாடியதால், சிவிங்கிப் புலிகளின் இனமே இந்தியாவில் அழிந்துபோனது. நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிவிங்கிப்புலி, இன்றைய சத்தீஸ்கர் பகுதியில் கடந்த 1947-இல் கண்டறியப்பட்டது. இந்தியாவில் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 7,000 சிவிங்கிப்புலிகளே உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளில் உள்ளன.

2. ரஷியாவில் இந்தியா பங்கேற்கும் ‘வாஸ்டாக்’ இராணுவ கூட்டுப்பயிற்சி

ரஷியாவில் இந்தியா பங்கேற்கும் ‘வாஸ்டாக்’ இராணுவ கூட்டுப்பயிற்சி தொடங்கியது. ரஷியாவின் தொலைதூர கிழக்குப் பகுதியிலும், ஜப்பான் கடற்பகுதியிலும் நடைபெறும் இந்தப்பயிற்சி, செப்.7 அன்று நிறைவடைகிறது. இதில் இந்தியா, சீனா, லாவோஸ், மங்கோலியா உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்றுள்ளன. 50,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 140 போர்விமானங்கள், 60 போர்க்கப்பல்கள், ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சியில் சீன முப்படைகள் சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அந்நாட்டின் 300 இராணுவ வாகனங்கள், 21 போர்விமானங்கள், 3 போர்க்கப்பல்கள் உள்ளிட்டவையும் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

3. யுனெஸ்கோ கல்வி நகரங்கள் பட்டியலில் திருச்சூர்!

பலதரப்பட்ட மக்களிடையே கல்வியைக் கொண்டுசேர்ப்பதில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக கேரளத்தின் திருச்சூர், நிலம்பூர் ஆகிய நகரங்களும் தெலங்கானாவின் வரங்கல் நகரமும் யுனெஸ்கோவின், ‘கல்வி நகரங்கள்’ பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் மக்களுக்கு சிறப்பான கல்வி வசதிகளை அளித்து வரும் நகரங்களை யுனெஸ்கோ கௌரவித்து வருகிறது. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் யுனெஸ்கோ சர்வதேச கல்வி நகரங்கள் பட்டியலை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலில் 44 நாடுகளைச் சேர்ந்த 77 நகரங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து 3 நகரங்கள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பலதரப்பட்ட மக்களுக்கு சிறப்பான கல்வி சேவைகளை வழங்கி வருவதற்காக திருச்சூர், நிலம்பூர், வரங்கல் ஆகிய நகரங்கள் யுனெஸ்கோவின் பட்டியலில் இணைந்துள்ளன. மக்களுக்கு கல்வி சேவைகளைக் கொண்டுசெல்லும் சிறப்பான நகரங்களைக் கண்டு மற்ற நகரங்கள் ஊக்கம்பெற இந்நடவடிக்கை உதவுவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. வரங்கலில் உள்ள இராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ கடந்த ஆண்டு அறிவித்தது. தற்போது வரங்கல் நகரம் கல்வி நகரங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகரம் கீவ், தென்னாப்பிரிக்காவின் டர்பன், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா ஆகிய நகரங்களும் யுனெஸ்கோ கல்வி நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அப்பட்டியலில் தற்போது 76 நாடுகளைச் சேர்ந்த 294 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் இணைக்கப்படும் நகரங்கள் ஐநாவின் நீடித்த வளர்ச்சிக்கான கல்வி சார்ந்த இலக்குகளை அடைவதற்கு யுனெஸ்கோ உதவ உள்ளது குறிப்பிடத்தக்கது.

7th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which cities have joined the UNESCO Global Network of Learning Cities?

A. Warangal, Thrissur and Nilambur

B. Mysuru, Varanasi and Jaipur

C. Kochi, Mysuru and Varanasi

D. Kanchipuram, Dolavira and Mysuru

Answer & Explanation

Answer: A. Warangal, Thrissur and Nilambur

  • Warangal from Telangana and Thrissur and Nilambur from Kerala have joined the UNESCO Global Network of Learning Cities (GNLC). 77 cities from 44 countries joined the list recently, which includes 294 cities from all around the world. The cities have been included in recognition of their outstanding efforts to promote lifelong learning across their communities at local level.

2. The Government has approved an Electronics Manufacturing Cluster (EMC) in which city?

A. Chennai

B. Pune

C. New Delhi

D. Bengaluru

Answer & Explanation

Answer: B. Pune

  • The government has approved an Electronics Manufacturing Cluster (EMC) in Pune at a cost of Rs 500 crore. The proposal, approved by the Ministry of Electronics and Information Technology, is expected to attract investments of up to Rs 2,000 crore. The cluster will be set up over an area of 297 acres.

3. ‘Indira Gandhi Shehari Rojgar Guarantee Yojana’ is an initiative of which state/UT?

A. Chhattisgarh

B. Rajasthan

C. Punjab

D. New Delhi

Answer & Explanation

Answer: B. Rajasthan

  • Rajasthan is set to launch the country’s first employment guarantee scheme for the urban poor named Indira Gandhi Shehari Rojgar Guarantee Yojana. It will start on September 9th with a budget of Rs 800 crore. The scheme aims to provide 100 days of guaranteed employment to the urban poor, especially those who lost their jobs during the CO VID–19 pandemic.

4. ISRO partnered with which country’s space agency in space technology during Bengaluru Space Expo?

A. USA

B. Japan

C. Australia

D. France

Answer & Explanation

Answer: C. Australia

  • Six MoUs signed between Indian and Australian space start–ups at Bengaluru Space Expo. Indian Space Research Organisation (ISRO) and Australian Space Agency (ASA), have decided to partner to develop space technology markets for both India and Australia. ASA is an entity responsible for the development of Australia’s commercial space sector.

5. PM SHRI Yojana, which was launched recently, is associated with which field?

A. Electronics

B. Export

C. Education

D. Research and Development

Answer & Explanation

Answer: C. Education

  • Prime Minister Narendra Modi announced the Pradhan Mantri Schools For Rising India (PM–SHRI) Yojana. Under the scheme, 14,500 schools from across the country will be upgraded as PM–SHRI schools. They will have a modern and transformational method of imparting education. The PM SHRI Schools will showcase all components of the National Education Policy 2020.

6. Kukrail forest area, which was seen in the news recently, is located in which state/UT?

A. Kerala

B. Uttar Pradesh

C. Madhya Pradesh

D. Maharashtra

Answer & Explanation

Answer: B. Uttar Pradesh

  • The Uttar Pradesh Cabinet has approved a night safari park in Lucknow district’s Kukrail forest area. Under the project, the government will establish a zoological park and night safari in the 2,027–hectare forest in the forest area. The Uttar Pradesh government has identified 56 ecotourism sites in the state’s 56 districts under its One District, One Destination scheme, to boost ecotourism and increase employment opportunities.

7. The Border Road Organization (BRO) pilot steel slag road is to be built in which state?

A. Assam

B. West Bengal

C. Bihar

D. Arunachal Pradesh

Answer & Explanation

Answer: D. Arunachal Pradesh

  • The Border Road Organization (BRO) has planned to build steel slag road in Arunachal Pradesh on a pilot project basis. The Steel Slag Road, which can survive heavy rain and difficult weather conditions, is the first of its kind project of the BRO. This Road project will help to connect the strategic locations in the Northeast India.

8. Which company has commissioned a new green hydrogen plant at Hazira, Gujarat?

A. ONGC

B. BHEL

C. L&T

D. BPCL

Answer & Explanation

Answer: C. L&T

  • Engineering major Larsen & Toubro (L&T) commissioned a new green hydrogen plant at Hazira in Gujarat. The company signed a joint venture with Indian Oil Corporation (IOC) and ReNew Power for the production of green hydrogen. The plant will produce 45 kg of green hydrogen daily, which will be used for consumption in the company’s Hazira manufacturing complex.

9. External Affairs Minister S Jaishankar has unveiled a bust of Mahatma Gandhi in which country?

A. Paraguay

B. Iran

C. Oman

D. Qatar

Answer & Explanation

Answer: A. Paraguay

  • India’s Union External Affairs Minister S Jaishankar has unveiled a bust of Mahatma Gandhi in Paraguay. He also visited a place called ‘Casa de la Independencia’ from where the South American country’s Independence movement started more than two centuries ago.

10. Which Indian airport is set to be named after Shaheed Bhagat Singh?

A. Chandigarh International Airport

B. New Delhi International Airport

C. Cochin International Airport

D. Mumbai International Airport

Answer & Explanation

Answer: A. Chandigarh International Airport

  • Punjab and Haryana have agreed to name Chandigarh International Airport after Shaheed–e–Azam Bhagat Singh. Both the states had a decade–old tussle for renaming the international airport. Earlier Punjab Vidhan Sabha had passed a resolution to name the airport as ‘Shaheed–E–Azam Sardar Bhagat Singh International Airport, Mohali’. The Haryana Vidhan Sabha passed a resolution on renaming the terminal, with the use of ‘Chandigarh’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!