TnpscTnpsc Current Affairs

7th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

7th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 7th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

7th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. 2022 – தழுவல் இடைவெளி அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. WEF

ஆ. UNEP

இ. UNFCCC

ஈ. NITI ஆயோக்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. UNEP

  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டமானது (UNEP) ‘Adaptation Gap Report 2022: Too Little, Too Slow – Climate Adaptation Failure Puts World at Risk’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கேற்ப உலகம் தனது முனைவுகளை விரைவுப்படுத்தவேண்டும் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. திட்டமிடல், நிதியளித்தல் மற்றும் தழுவல் செயல்களைச் செயல்படுத்துதல் ஆகியவற்றிலுள்ள முன்னேற்றத்தையும் இந்த அறிக்கை பட்டியலிடுகிறது.

2. ‘ஸ்வச் சர்வேக்ஷன் கிராமப்புறம் – 2023 கருவித்தொகுப்பை’ அறிமுகப்படுத்திய நடுவண் அமைச்சகம் எது?

அ. ஜல்சக்தி அமைச்சகம்

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஜல்சக்தி அமைச்சகம்

  • நடுவண் ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை 7ஆவது இந்திய நீர் வாரத்தின் இரண்டாவது நாளில், ‘கிராமப்புற WASH கூட்டாண்மை – முன்னோக்கிச் செல்லும்வழி’ குறித்த தொழினுட்ப அமர்வை நடத்தியது. ‘WASH’ என்பது நீர், தூய்மை மற்றும் நலவாழ்வு (WASH) என்பதைக் குறிக்கிறது. நடுவண் ஜல்சக்தி அமைச்சர் ஸ்வச் சர்வேக்ஷன் கிராமீன் (SSG) 2023–க்கான கருவித்தொகுப்பையும், ‘Twinpit to Retrofit’ அபியான் என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

3. 2022 – ‘உலகப் பயணச் சந்தையை’ நடத்தும் நகரம் எது?

அ. லண்டன்

ஆ. பாரிஸ்

இ. நியூயார்க்

ஈ. லொசன்னே

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. லண்டன்

  • லண்டனில் நவம்பர் 07 முதல் 09 வரை நடைபெறும் உலகப் பயணச்சந்தை பொருட்காட்சி 2022இல் நடுவண் சுற்றுலா அமைச்சகம் பங்கேற்கிறது. இது மிகப்பெரிய சர்வதேச பயணக் கண்காட்சிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு கண்காட்சியின் கருப்பொருள், “பயணத்தின் எதிர்காலம் இப்போது தொடங்குகிறது” என்பதாகும். கடந்த 2019ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பயணம் மற்றும் சுற்றுலாவின் பங்களிப்பு மொத்தப் பொருளாதாரத்தில் 5.19 சதவீதமாகும். கடந்த 2019ஆம் ஆண்டில், இந்திய சுற்றுலாத்துறை 79.86 மில்லியன் வேலைவாய்ப்புகளைப் (நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு) பெற்றுள்ளது.

4. ‘உலக ஆழிப்பேரலை விழிப்புணர்வு நாளைக்’ கடைப்பிடிக்க முதலில் பரிந்துரைத்த நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. சீனா

இ. சுவிச்சர்லாந்து

ஈ. சுவீடன்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஜப்பான்

  • இயற்கைப் பேரிடர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.5ஆம் தேதி அன்று உலக ஆழிப்பேரலை (சுனாமி) விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக ஆழிப்பேரலை விழிப்புணர்வு நாளானது முதலில் ஜப்பானால் பரிந்துரைக்கப்பட்டது. கடந்த 2015 டிசம்பரில், ஐநா பொதுச்சபை நவம்பர்.5ஆம் தேதியை உலக ஆழிப்பேரலை விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
  • கடந்த 2004ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலைக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு, உலகநாடுகள் ஜப்பானின் கோபியில் ஒன்றுகூடி, 10 ஆண்டுகால ஹியோகோ செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டன. கடந்த 100 ஆண்டுகளில், சுமார் 58 ஆழிப்பேரலைகள் 260,000 உயிர்களைப் போக்கியுள்ளன.

5. சமீபத்தில் குரோஷியாவின் ஒசிஜெக்கில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ISSF) உலக சாம்பியன்ஷிப் ஷாட்கன் போட்டியில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. முதலாவது

ஆ. நான்காவது

இ. மூன்றாவது

ஈ. ஐந்தாவது

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஐந்தாவது

  • சமீபத்தில், குரோஷியாவின் ஒசிஜெக்கில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ISSF) உலக சாம்பியன்ஷிப் ஷாட்கன் போட்டியில் இந்தியா ஒரு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்து போட்டியை நிறைவு செய்தது.

6. வடகிழக்குப் பிராந்தியத்தின் விரைவான மற்றும் ஆற்றல்வாய்ந்த மீத்திறன் கணினியான பரம்–இஷானுக்கு மாற்றாக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மீத்திறன் கணினி எது?

அ. பரம மேகா

ஆ. பரம காமரூபா

இ. பரம தேகா

ஈ. பரம்பொருள்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பரம காமரூபா

  • அண்மையில், இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இந்தியாவின் அண்மைய மீத்திறன் கணினியான பரம–காமரூபாவை அறிமுகப்படுத்தினார். இது அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள வரலாற்று ரீதியாக புகழ்பெற்ற அரசான காமரூபாவின் பெயரைத்தாங்கிய உயர் செயல்திறன்கொண்ட மீத்திறன் கணினியாகும். இந்த மீத்திறன் கணினி வடகிழக்குப் பிராந்தியத்தின் விரைவான மற்றும் ஆற்றல்வாய்ந்த மீத்திறன் கணினியாக உள்ள பரம்–இஷானுக்கு மாற்றாக உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு கௌஹாத்தி ஐஐடியில் பரம்–இஷான் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தேசிய மீத்திறன் கணினி திட்டத்தின்கீழ் IIT கௌகாத்தியில் பரம்–காமரூபா நிறுவப்பட்டது; இது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கூட்டு முயற்சியாகும். நாடு முழுவதும் இதுபோன்ற 15 மீத்திறன் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன.

7. வியட்நாமில் நடைபெற்ற ஆறாவது கிழக்காசிய உச்சிமாநாட்டின் கல்வியமைச்சர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்ட முக்கிய முனைவுகள் யாவை?

அ. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, 2022

ஆ. அறிவு மற்றும் வேலைவாய்ப்புச் சட்டக்கொள்கை, 2022

இ. தேசிய கல்விக் கொள்கை, 2020

ஈ. மேலே உள்ள அனைத்தும்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தேசிய கல்விக் கொள்கை, 2020

  • வியட்நாமின் ஹனோய் நகரத்தில் நடந்த 6ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டின் கல்வியமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது. கல்வியமைச்சகத்தின் இணைச்செயலாளர் (சர்வதேச ஒத்துழைப்பு) நீதா பிரசாத் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். தேசிய கல்விக் கொள்கை, 2020இன் முக்கிய முனைவுகள் மற்றும் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையில் இந்தியா மற்றும் கிழக்காசிய உச்சிமாநாடு நாடுகளின் முயற்சிகள் பற்றியும் அவர் தெரிவித்தார்.

8. சரக்குப் போக்குவரவு குறியீடு – 2022இல், ‘சாதனையாளர்கள்’ பிரிவில் வைக்கப்பட்டுள்ள மாநிலங்கள் எவை?

அ. கேரளா

ஆ. குஜராத்

இ. கர்நாடகா

ஈ. ஹரியானா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. குஜராத்

  • நடுவண் வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகமானது நான்காவது LEADS (மாநிலங்களிடையே சரக்குப் போக்குவரவை எளிதாக்குதல்)–2022 அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் குஜராத் ஆகியவை சரக்குப் போக்குவரவு குறியீடு – 2022இல், ‘சாதனையாளர்கள்’ பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.

9. 3ஆவது உலக குச்சிப்புடி நாட்டியோத்சவமானது கீழ்க்காணும் யாரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நடத்தப்படுகிறது?

அ. பிர்ஜு மகராஜ்

ஆ. மைதிலி சந்தேல்கர்

இ. கஜனேந்திர மகாபதி

ஈ. வேம்படி சின்ன சத்தியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. வேம்படி சின்ன சத்தியம்

  • மூன்றாவது உலக குச்சிப்புடி நாட்டியோத்சவமானது விஜயவாடாவில் அக்டோபர்.14 அன்று தொடங்கியது. புகழ்பெற்ற குச்சிப்புடி நடனக்கலைஞர் வேம்படி சின்ன சத்யத்தின் 93ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் மூன்று நாள் நடக்கும் விதமாக இந்த நடன விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10. ஆந்திர பிரதேசத்தில் Dr சோபா நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றவர் யார்?

அ. மேனகா பாணிக்ரஹி

ஆ. வெங்கடேஷ் கிரி

இ. மஹதூர் ரெட்டி

ஈ. பத்மஜா ரெட்டி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. பத்மஜா ரெட்டி

  • 3ஆவது உலக குச்சிப்புடி நாட்டியத் திருவிழாவின்போது, டாக்டர் வேம்படி சின்ன சத்தியம் வாழ்நாள் சாதனையாளர் விருது பால கொண்டலா இராவுக்கும், குமரி லங்கா அன்னபூமா தேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வனஜா உதய்க்கும் வழங்கப்படும். பத்மஜா ரெட்டிக்கு டாக்டர் சோபா நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதும், வேம்படி வெங்கட் சேவா புரஸ்கார் ஸ்ரீகாந்த் இரகுபத்ருனிக்கும் வழங்கப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2021ஆம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங் கேல் (கைவிளக்கேந்திய காரிகை) விருதுகளை இந்தியக் குடியரசுத்தலைவர் வழங்கினார்

செவிலியர்கள் மற்றும் செவிலிப்பணிகளில் ஈடுபடுவோர் சமூகத்திற்கு ஆற்றிய சிறந்த சேவைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் கடந்த 1973ஆம் ஆண்டு தேசிய புளோரன்ஸ் நைட்டிங் கேல் விருதுகளை ஏற்படுத்தியது.

2. அதிகரிக்கும் காச நோய் பரவல்… பாதிப்பு விகிதம் 13% உயர்வு

தமிழ்நாட்டில் நிகழாண்டு 77,000 பேர் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு மேம்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84% பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடர் சிகிச்சைகள்மூலம் மீதமுள்ளவர்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிகழாண்டில் தனியார், அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வுசெய்தபோது நாடு முழுவதும் 10.28 இலட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகவே நிகழாண்டின் புள்ளி விவரங்களும் அமைந்துள்ளன. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மட்டும் 4.27 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 77,019 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 13% குறைவாக இருந்தது. அதாவது, அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் 69,171 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். காசநோய்க்கும், கரோனா தொற்றுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், பலர் முன்கூட்டியே பரிசோதனை செய்துகொண்டதுகூட அந்நோய் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

3. இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி: ரஷியா முதலிடம்

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகள் பட்டியலில் ரஷியா முதலிடம் பிடித்துள்ளது. பல ஆண்டுகாலமாக இந்தப் பட்டியலில் முன்னணியில் இருந்த சவூதி அரேபியா, இராக் ஆகிய நாடுகள் பின்தங்கியுள்ளன.

கடந்த 2022 மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 0.2 சதவீதம் மட்டுமே இருந்து வந்தது. இதுவே அக்டோபரில் ஒரு நாளைக்கு 9,35,556 பேரல் இறக்குமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 22 சதவீதம் ரஷியாவில் இருந்து வந்துள்ளது. இதற்கு அடுத்து இராக்கில் இருந்து 20.5 சதவீதம், சவூதி அரேபியாவில் இருந்து 16 சதவீதம் இறக்குமதியாகியுள்ளது.

4. சண்டீகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர்: நடுவண் அரசு அறிவிப்பு வெளியீடு

சண்டீகர் சர்வதேச விமான நிலையத்தை, ‘ஷாஹித் பகத் சிங் சர்வதேச விமான நிலையம்’ எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பெயர்மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which institution released the Adaptation Gap Report 2022?

A. WEF

B. UNEP

C. UNFCCC

D. NITI Aayog

Answer & Explanation

Answer: B. UNEP

  • The United Nations Environment Program (UNEP) launched a report titled ‘Adaptation Gap Report 2022: Too Little, Too Slow – Climate adaptation failure puts world at risk’. The report finds that the world must urgently increase efforts to adapt to these impacts of climate change. The report also lists the progress in planning, financing, and implementing adaptation actions.

2. Which Union Ministry launched the ‘Swachh Survekshan Grameen 2023 Toolkit’?

A. Ministry of Jal Shakti

B. Ministry of Rural Development

C. Ministry of Housing and Urban Affairs

D. Ministry of Agriculture and Farmers Welfare

Answer & Explanation

Answer: A. Ministry of Jal Shakti

  • The Department of Drinking Water & Sanitation (DDWS), Ministry of Jal Shakti held Technical Session on ‘Rural WASH Partnerships – the way forward’ on the second day of the 7th India Water Week. ‘WASH’ stands for Water, Sanitation and Hygiene (WASH). Union Jal Shakti Minister also launched the toolkit for Swachh Survekshan Grameen (SSG) 2023 and the web portal for the ‘Twinpit to Retrofit Abhiyan’

3. Which city is the host of the ‘World Travel Market’ 2022?

A. London

B. Paris

C. New York

D. Lausanne

Answer & Explanation

Answer: A. London

  • India’s Union Ministry of Tourism is set to participate in World Travel Market (WTM) 2022, to be held in London. WTM is one of the largest international travel exhibitions. The theme of this year`s exhibition is ‘The Future of Travel Starts Now’. During 2019, the contribution of travel and tourism to India’s GDP was 5.19% and it accounted for 79.86 million direct and indirect jobs.

4. Which country first suggested the observance of ‘World Tsunami Awareness Day’?

A. Japan

B. China

C. Switzerland

D. Sweden

Answer & Explanation

Answer: A. Japan

  • World Tsunami Awareness Day is observed every year on November 5 to raise awareness about the natural disaster. World Tsunami Awareness Day was first suggested by Japan and in December 2015, the UN General Assembly (UNGA) declared November 5 as World Tsunami Awareness Day. Three weeks after the tsunami in the Indian Ocean in 2004, the international community gathered in Kobe, Japan, and adopted the 10–year Hyogo Framework for Action.  In the past 100 years, about 58 tsunamis have claimed over 260,000 lives.

5. What was India’s rank in the International Shooting Sport Federation (ISSF) World Championship Shotgun held in in Osijek, Croatia recently?

A. First

B. Fourth

C. Third

D. Fifth

Answer & Explanation

Answer: D. Fifth

  • Recently, India finished fifth with one gold, one silver and two bronze medals at the International Shooting Sport Federation (ISSF) World Championship Shotgun in Osijek, Croatia.

6. Which supercomputer recently has replaced Param–Ishan as the northeast region’s fastest and most powerful supercomputer?

A. Param Megha

B. Parama Kamarupa

C. Param Deka

D. Param Porul

Answer & Explanation

Answer: B. Parama Kamarupa

  • Recently, President Draupadi Murmu launched India’s latest super computer Param–Kamrupa, a high–performance computing cluster named after Assam’s historic kingdom of Kamrupa. This supercomputer facility has replaced Param–Ishan as the northeast region’s fastest and most powerful supercomputer. Param–Ishan was inaugurated in IIT Guwahati in 2016.
  • Param–Kamrupa was set up at IIT Guwahati under the National Supercomputing Mission (NSM) – a joint initiative of the ministry of electronics and information technology (MeitY) and the department of Science and Technology (DST). There were 15 such super computers that were deployed across the country.

7. Which is the key initiatives presented in 6th East Asia Summit Education Minister’s Meeting in Vietnam?

A. Research and Development Policy, 2022

B. Knowledge and Employment Act Policy, 2022

C. National Educational Policy, 2020

D. All of the Above

Answer & Explanation

Answer: C. National Educational Policy, 2020

  • India participated in the 6th East Asia Summit Education Minister’s Meeting in Hanoi, Vietnam. Ms Neeta Prasad, Joint Secretary (International Cooperation) Ministry of Education virtually addressed the meeting. She also informed about the key initiatives of National Education Policy 2020 and the efforts of India and East Asia Summit countries in the field of education and research.

8. Which of these states has been kept in the ‘achievers’ category of the logistics index chart 2022?

A. Kerala

B. Gujarat

C. Karnataka

D. Haryana

Answer & Explanation

Answer: B. Gujarat

  • The Ministry of Commerce and Industry has released the fourth LEADS (Logistics Ease Across Different States) 2022 report. Andhra Pradesh, Assam and Gujarat have been kept in the ‘achievers’ category of the logistics index chart 2022.

9. 3rd World Kuchipudi Natyotsavam is held to celebrate the birth anniversary of:

A. Birju Maharaj

B. Maithili Sandelkhar

C. Gajanendra Mahapati

D. Vempati Chinna Satyam

Answer & Explanation

Answer: D. Vempati Chinna Satyam

  • 3rd World Kuchipudi Natyotsavam started from October 14 in Vijayawada. It is a three–day dance festival that is being organized to commemorate the 93rd birth anniversary of renowned Kuchipudi dance artist Vempati Chinna Satyam.

10. Who received Dr Sobha Naidu Lifetime Achievement Award in Andhra Pradesh?

A. Menaka Panigrahi

B. Venkatesh Giri

C. Mahatur Reddy

D. Padmaja Reddy

Answer & Explanation

Answer: D. Padmaja Reddy

  • During the festival of 3rd World Kuchipudi Natyotsavam, Dr Vempati China Satyam Lifetime Achievement Award would be presented to Bala Kondala Rao, and Kumari Lanka Annapooma Devi Lifetime Achievement Award would be given to Vanaja Uday. Padmaja Reddy will receive the Dr. Sobha Naidu Lifetime Achievement Award, while Vempati Venkat Seva Puraskar will be presented to Srikant Raghupatruni.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!