Tnpsc

7th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

7th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

7th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. பரிசோதனை நோக்கங்களுக்காக கணவாய் மீன்குஞ்சுகளை விண்வெளிக்கு கொண்டு சென்றுள்ள விண்வெளி நிறுவனம் எது?

அ) ISRO

ஆ) ESA

இ) ROSCOSMOS

ஈ) NASA

  • அமெரிக்க விண்வெளி முகமையான NASA, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சில கணவாய் மீன்குஞ்சுகளை விண்வெளிக்கு கொண்டு சென்றுள்ளது. ஹவாய் பல்கலைக்கழகத்தின் – கெவாலோ கடல்சார் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இந்தக் கணவாய் மீன் குஞ்சசுகள், பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ்எக்ஸ் ஏவுகலம்மூலம் அனுப்பப்பட்டன.

2. வேளாண்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில், எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது?

அ) மலேசியா

ஆ) பிஜி

இ) ஆஸ்திரேலியா

ஈ) தென்னாப்பிரிக்கா

  • இந்தியா மற்றும் பிஜி நாடுகளுக்கிடையே வேளாண்மை மற்றும் அது சம்பந்தமான துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா அரசு கையெழுத்திட்டுள்ளது.
  • பால்வள மேம்பாடு, அரிசி மேம்பாடு, பன்முகத்தன்மை வாய்ந்த கிழங்குப் பயிர்கள், நீர்வள மேலாண்மை, தேங்காய் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இந்த ஒப்பந்தம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.

3. எந்த இந்திய மாநிலத்தில், உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட ரப்பரின் கள சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

அ) கேரளா

ஆ) கர்நாடகா

இ) அஸ்ஸாம்

ஈ) மத்திய பிரதேசம்

  • இந்திய இரப்பர் வாரியமானது உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட ரப்பரின் களசோதனைகளை கௌகாத்தியில் உள்ள ரப்பர் வாரியத்தின் சாருதாரி ஆராய்ச்சி பண்ணையில் தொடங்கியது.
  • இந்த இரப்பரை கேரளாவின் கோட்டயம் புதுப்பள்ளியில் உள்ள இரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. கேரள மாநிலத்தில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள சோதனைகளை நடத்த கேரள அரசு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

4. முவ்வகையான முதலைகளையும் கொண்ட ஒரே மாநிலம் எது?

அ) கேரளம்

ஆ) பீகார்

இ) ஒடிஸா

ஈ) மேற்கு வங்கம்

  • ஒடிசாவில் அண்மையில் சொம்புமூக்கு முதலைகளின் இயற்கையான கூடுகள் கண்டறியப்பட்டது. இதன்மூலம், நன்னீர் முதலைகள், சொம்பு மூக்கு முதலைகள் மற்றும் உவர்நீர் முதலைகள் ஆகிய மூன்று வகை முதலை இனங்களையும் கொண்ட ஒரே மாநிலமாக ஒடிஸா ஆனது.
  • சொம்புமூக்கு முதலைகள் முதன்முதலில் கடந்த 1975’இல் ஒடிஸா மாநிலத்தில் வளர்க்கப்பட்டன. உவர்நீர் முதலைகள் மற்றும் நன்னீர் முதலைகளுடன் ஒப்பிடும்போது சொம்புமூக்கு முதலைகள் மிகவும் அருகிவிட்ட இனமாகவும் மரபணு ரீதியாக பலவீனமான உயிரினமாகவும் கருதப்படுகின்றன.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘கோப்பர்நிக்கஸ் சென்டினல்-6 மைக்கேல் பிரீலிச்’ என்பது எவ்வகையான செயற்கைக்கோளாகும்?

அ) பெருங்கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள்

ஆ) தகவல்தொடர்பு செயற்கைக்கோள்

இ) தொலையுணரி செயற்கைக்கோள்

ஈ) வழிகாட்டும் செயற்கைக்கோள்

  • கோப்பர்நிக்கஸ் சென்டினல்-6 மைக்கேல் பிரீலிச் செயற்கைக்கோள் ஆனது 2020 நவம்பரில் ஏவப்பட்டது. இது ஒரு பெருங்கடல்-கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இது கடல்மட்டத்தின் உயர்வை அளவிடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • 6 மாதகால அளவுத்திருத்த பணிகளுக்குப்பிறகு, இச்செயற்கைக்கோள், அண்மையில், செயல்படத் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமான இதனை, ESA, NASA மற்றும் CNES பிரெஞ்சு முகமை ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன. கோப்பர்நிக்கஸ் சென்டினல்-6பி செயற்கைக்கோளானது 2025’இல் ஏவப்படவுள்ளது.

6. ஆண்டுதோறும் உலக ஒலிம்பிக் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.23

ஆ) ஜூன்.24

இ) ஜூன்.25

ஈ) ஜூன்.26

  • ஆண்டுதோறும் ஜூன்.23 அன்று உலக ஒலிம்பிக் நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நவீன ஒலிம்பிக் போட்டிகள், 1894ஆம் ஆண்டு ஜூன்.23 அன்று பாரிசில் உள்ள சோர்போனில் தொடங்கியதை நினைவுகூரும் வகையில் இந்நாள் முதன்முதலில் 1948ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • வயது, பாலினம் அல்லது தடகள திறனை பொருட்படுத்தாமல் மக்கள் விளையாட்டில் பங்கேற்பதை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. “Suicide Worldwide 2019” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) உலக நலவாழ்வு அமைப்பு

ஆ) ஐநா

இ) UNICEF

ஈ) பன்னாட்டு மன்னிப்பு அவை

  • சமீபத்தில், உலக நலவாழ்வு அமைப்பு “Suicide Worldwide 2019” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
  • அவ்வறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் 7 இலட்சம்பேர் தற்கொலை செய்துகொண்டு மரணிக்கின்றனர். உலகில் நடைபெறும் தற்கொலைகளில் கிட்டத்தட்ட 77% குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன எனவும் 15-19 வயதுடையவர்களின் இறப்புக்கான முக்கிய காரணங்களுள் தற்கொலை நான்காவது இடத்தில் உள்ளது என்றும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

8. குய்லின்-பார் நோய்க்குறியானது பின்வரும் எந்தத்தடுப்பூசியுடன் தொடர்புடையது எனத் தெரிவிக்கப்படுகிறது?

அ) அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு தடுப்பூசி

ஆ) கோவாக்ஸின்

இ) ஸ்புட்னிக்

ஈ) சினோவாக்

  • குய்லின்-பார் நோய்க்குறி என்பது ஓர் அரிய நரம்பியல் கோளாறு ஆகும். அதில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பானது நரம்பு இழைகளில் உள்ள அதன் சொந்த பாதுகாப்பு பூச்சுகளையே தாக்குகிறது. ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் உள்ள சில நோயாளிகளிடையே அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு COVID-19 தடுப்பூசி செலுத்தப்பட்டபின் இந்த நோய்க்குறி தோன்றியதாக முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த நோய்க்குறி, தீவிர பலவீனத்துடன் தொடங்கி இறுதியில் முழு உடலையும் செயலிழக்கச் செய்யலாம். இந்தத் தடுப்பூசி, இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதுபோன்ற சில பாதிப்புகள் தோன்றியுள்ளன.

9. நடுவண் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் வழங்கிய வரையறையின்படி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருவாய் வரம்பு என்ன?

அ) `50 கோடி

ஆ) `100 கோடி

இ) `250 கோடி

ஈ) `500 கோடி

  • மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருவாய் வரையறையை விரிவுபடுத்தியுள்ளது. புதிய வரையறையின்படி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்பவை வங்கிகள், நிதி நிறுவனங்கள் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் அல்லாத பட்டியலிடப்படாத நிறுவனங்களாகும். முந்தைய கணக்கியல் ஆண்டில் `250 கோடி வரை விற்று முதல் ஈட்டியும் `50 கோடி வரை கடன் பெற்ற நிறுவனங்களும் இதன்கீழ்வரும்.

10. நடப்பாண்டின் (2021) உலக போதைப்பொருள் அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) OECD

ஆ) IMF

இ) UNODC

ஈ) UNICEF

  • 2021 – உலக மருந்து அறிக்கையை ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் (UNODC) வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில், உலகளவில் 275 மில்லியன் மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகவும், 36 மில்லியன் மக்கள் போதைப்பொருள் நோய்க் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.
  • கடந்த 24 ஆண்டுகளில், கஞ்சா பயன்பாடு சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சேதி தெரியுமா?

ஜூன்.25: குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் தில்லியிலிருந்து கான்பூரில் உள்ள சொந்த ஊருக்கு இரயிலில் சென்றார். இதன்மூலம் 2006ஆம் ஆண்டில் அப்துல் கலாமுக்குப்பிறகு ரயிலில் சென்ற குடியரசுத் தலைவரானார் இராம்நாத் கோவிந்த்.

ஜூன்.25: தமிழ்நாட்டிலேயே 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய கிராமமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் தேர்வானது.

ஜூன்.26: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் உத்தர பிரதேச மாநிலம் உள்ளது.

ஜூன்.27: புதுச்சேரியில் N R காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசில் 40 ஆண்டுகளுக்குப்பிறகு பெண் சமஉ சந்திரபிரியங்கா அமைச்சரானார். கடைசியாக 1980’இல் திமுக அமைச்சரவையில் ரேணுகா அப்பாதுரை அமைச்சராக இருந்தார்.

ஜூன்.28: டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்குத் தேர்வான முதல் இந்தியர் என்னும் சிறப்பை இந்திய வீரர் சஜன் பிரகாஷ் பெற்றார்.

ஜூன்.29: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருபத்திரண்டு ஆண்டுகள் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்னும் பெருமைக்குரியவரானார் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிராஜ்.

ஜூலை.2: தமிழ்நாட்டில் வன்னியர் சமுதாயத்துக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

1. Which space agency launched Baby Squids into space for experimental purposes?

A) ISRO

B) ESA

C) ROSCOSMOS

D) NASA

  • American space agency NASA has sent a few numbers of squids into space for experimental and research purposes. These Hawaiian bobtail squids were raised at the University of Hawaii – Kewalo Marine Laboratory and have been sent to space in a SpaceX resupply mission to the International Space Station.

2. India has recently signed a MoU with which country, in the field of agriculture and allied sectors?

A) Malaysia

B) Fiji

C) Australia

D) South Africa

  • The Government of India has signed a Memorandum of Understanding (MoU) for cooperation in the field of agriculture and allied sectors with the government of Fiji, in a virtual mode.
  • The MoU aims to increase the cooperation of both the countries in Dairy Industry, Rice Industry, Root crop diversification, Water Resources Management, Coconut Industry, etc.

3. In which Indian state the field trials of the world’s first genetically modified (GM) rubber has commenced?

A) Kerala

B) Karnataka

C) Assam

D) Madhya Pradesh

  • The Rubber Board of India has launched the field trials of the world’s first genetically modified (GM) rubber in Rubber Board’s Sarutari research farm – Guwahati, Assam.
  • This variant has been developed by the Rubber Research Institute of India (RRII) in Puthuppally, Kottayam, Kerala. The Government of Kerala had earlier denied the field trials of GM crops in the state.

4. Which is the only state to have all three species of crocodiles?

A) Kerala

B) Bihar

C) Odisha

D) West Bengal

  • Odisha has recently witnessed the first natural nesting of gharials. With this, it has become the only state to have all the three species of the reptile: freshwater gharials, muggers, and saltwater crocodiles.
  • Gharials were first introduced in 1975 in Odisha. They are considered as the most critically endangered and genetically weak species, compared to saltwater crocodiles and muggers.

5. What type of satellite is ‘Copernicus Sentinel–6 Michael Freilich, which was making news recently?

A) Ocean Observing Satellite

B) Communication Satellite

C) Remote Sensing Satellite

D) Navigation Satellite

  • The Copernicus Sentinel–6 Michael Freilich was launched in November 2020. It is an Ocean–Observing Satellite, dedicated to measuring sea–level rise. After six months of calibration works, the satellite has recently started functioning.
  • It was a mission of the European Union, being implemented along with ESA, NASA and CNES French Agency. The Copernicus Sentinel–6B satellite will be launched in 2025.

6. When is the World Olympic Day celebrated every year?

A) June.23

B) June.24

C) June.25

D) June.26

  • Every year, the 23rd of June is celebrated as the World Olympic Day or International Olympic Day across the globe.
  • This day was first introduced in the year 1948, to commemorate the birth of the modern Olympic Games on June 23, 1894, at the Sorbonne in Paris. This day aims to promote participation in sport across the globe irrespective of age, gender, or athletic ability.

7. Which organization has released the “Suicide Worldwide 2019” report?

A) WHO

B) UN

C) UNICEF

D) Amnesty International

  • Recently, the World Health Organisation (WHO) has released a report titled “Suicide Worldwide 2019”. As per the report 7 lakh people die due to suicide every year. The report reveals that nearly 77% of global suicides occur in low– and middle–income countries and suicide is the fourth leading cause of death in 15–19–year–olds.

8. Guillain–Barre Syndrome is reported to be associated with which vaccine?

A) AstraZeneca–Oxford Vaccine

B) Covaxin

C) Sputnik

D) Sinovac

  • Guillain–Barre Syndrome is a rare neurological disorder, in which the body’s immune system attacks its own protective coatings on nerve fibres. This syndrome was first reported in Europe and the UK among some patients who undertook AstraZeneca–Oxford Covid–19 vaccine, but such a probability is found to be small.
  • The syndrome may start with extreme weakness that can eventually paralyse the entire body. The vaccine is traded as Covishield in India, which also reported some cases.

9. What is the turnover limit of small and medium companies, as per the definition issued by the Corporate Affairs Ministry?

A) Rs 50 crore

B) Rs 100 crore

C) Rs 250 crore

D) Rs 500 crore

  • The Union Ministry of Corporate Affairs has enlarged and expanded the definition of small and medium companies (SMC). As per the new definition, small and medium companies are unlisted entities which are not banks, financial institutions or insurance firms.
  • They should have a turnover of up to Rs 250 crore and borrowings up to Rs 50 crore in the immediately preceding accounting year.

10. Which organization has released the report titled World Drug Report 2021?

A) OECD

B) IMF

C) UNODC

D) UNICEF

  • World Drug Report 2021 has been released by the United Nations Office on Drugs and Crime (UNODC). The report states that 275 million people used drugs worldwide in the year 2020 and that 36 million people suffered from drug use disorders.
  • The report further reveals that, in the last 24 years, the cannabis potency has increased by about 4 times.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!